நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

சமசீர்கல்வி | ஆறாம் வகுப்பு | தமிழ் பாட குறிப்புகள் - 1


இயல் 1

இராமலிங்க அடிகள்

19 ஆம் நூற்றாண்டை சார்ந்தவர்

திருவருட்பிரகாச வள்ளலார் என சிறப்பு பெயருடையவர்

நூல்கள் - ஜீவ காருண்ய ஒழுக்கம், மனுமுறைகண்ட வாசகம்  (பாடல்களனைத்தும் 'திருவருட்பா' என்ற பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன.

சம்ரச சன்மார்க்க நெறியை உருவாக்கியவர் - அனைத்து மதங்களின் ஒற்றுமை

அறச்சாலைகள் அமைத்தவர் - பசித்துயர் நீக்க

ஞான சபையை நிறுவினார் - அறிவு நெறி விளங்க

"வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய கருணை உள்ளம் உடையவர் "

"கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான் " என்ற பாடலை பாடியவர்.

---------------

திருக்குறள் - அன்புடைமை

இவ்வதிகாரத்தில் படிக்க வேண்டிய வார்த்தைகளும் அவற்றின் பொருள்களும்

ஆர்வலர் - அன்புடையவர்
புன்கணீர் - துன்பம் கண்டு பெருகும் கண்ணீர்
பூசல் தரும் -வெளிப்பட்டு நிற்கும்
என்பு - எலும்பு (இந்த குறளில் உடல், பொருள், ஆவியைக் குறிக்கிறது)
வழக்கு - வாழ்க்கை நெறி
நண்பு - நட்பு
வற்றல் மரம் - வாடிய மரம்
எவன் செய்யும் - என்ன பயன் ?
அகத்துறுப்பு - மனதின் உறுப்பு, அன்பு

திருவள்ளுவர் வாழ்ந்த காலம் கி.மு 31

மறுபெயர்கள் - சென்னாப்போதார், நாயனார்

திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுதல்

கிறிஸ்து பிறப்பு ஆண்டு (கி.பி) + 31 = திருவள்ளுவர் ஆண்டு

எ.கா., 2013 + 31 = 2044 (திருவள்ளுவர் ஆண்டில் 2013  என்பதை 2044 என்று கருத வேண்டும் )


------------------

தமிழ் தாத்தா உ.வெ.சாமிநாதய்யர்

பிறந்த ஊர் - உத்தமநாதபுரம், திருவாரூர் மாவட்டம்
இயற்பெயர் - வேங்கடரத்தினம்
இவருடைய ஆசிரியர் மீனாட்சி சுந்தர்ம்பிள்ளை இவருக்கு சூட்டிய பெயர் - சாமிநாதன்
தந்தை பெயர் - வேங்கடசுப்பையர்
உ.வே.சா - உத்தமநாதபுரம் வேங்கடசுப்பையர் மகனான சாமிநாதன்
தனது வாழ்க்கை வரலாற்றை 'ஆனந்த விகடன்' இதழில் "என் சரிதம் " என்ற பெயரில் தொடராக எழுதினார்
உ.வே.சா. நூல்நிலையம் 1942 ல் சென்னை பெசண்ட் நகரில் துவங்கப்பட்டது
இவரின் தமிழ்ப் பணிகளை வெளிநாட்டு அறிஞர்களான ஜி.யு.போப், சூலியன் வின்சோன் ஆகியோர் பெரிதும் பாராட்டியுள்ளனர்.
மத்திய அரசு  உ.வே.சா பெயரில் அஞ்சல் தலை வெளியிட்ட ஆண்டு - 2006
உ.வே.சா நினைவு இல்லம அமைந்துள்ள இடம் - உத்தமநாதபுரம்
குறிஞ்சிப்பாட்டு நூலில் காணப்படும் பூக்களின் வகைகள்  - 99 பூ வகைகள்

உ.வே.சா பதிப்பித்த நூல்கள் : எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, புராணங்கள் -12, உலா-9, கோவை - 6, தூது - 6, வெண்பா நூல்கள் - 13, அந்தாதி -3, பரணி -2, மும்மணிகோவை - 2, இரட்டை மணி மாலை -2, இதர ப்ரபந்தங்கள் - 4

பழங்கால ஓலைச்சுவடி எழுத்துகளில் 'புள்ளி' இருக்காது, காரணம் ஓலையில் ஆணியால் எழுதுகையில் ஓட்டை விழாமல் இருக்க.

இதர குறிப்பு :  '10 Little Fingers' என்ற நூலை எழுதியவர் - அரவிந்த் குப்தா

---------------

இயல் 2


நாலடியார்

பதினெண் மேல்கணக்கு நூல்கள் எனப்படுபவை சங்க நூல்கள் - எட்டுத்தொகை மற்றும் பத்து பாட்டு ஆகிய 18 நூல்கள்.

பதினெண்கீழ் கணக்கு நூல்கள் எனப்படுபவை  சங்க நூல்களுக்கு பின் தோன்றியவை. இவற்றில் பெரும்பாலானவை அறம் சார்ந்த நூல்களே.

நாலடியார் பதினெண்கீழ்கணக்கு நூல்களில் ஒன்று
400 பாடல்கள் கொண்டது
சமண முனிவர்கள் பலர் பாடிய பாடல்களின் தொகுப்பாகும்

மனப்பாடம் செய்ய வேண்டிய வார்த்தைகள் : ஈக்கால் - ஈயின் கால், நன்கணியர் = நன்கு + அணியர் (நெருங்கி இருப்பவர்), என்னாம் - பயன் என்ன ?, சேய் -தூரம், செய் -வயல் , அனையார் -போன்றவர்

--------------
'வலசை போதல் '  என்பதன் பொருள் - பறவைகள் வெயில் காலங்களில் இடம்பெயர்வது.

தமிழ்நாட்டில் உள்ள பறவைகள் சரணாலயங்கள்

1.வேடந்தாங்கல்
2.கரிக்கிளி (காஞ்சிபுரம் மாவட்டம்)
3.கஞ்சிரங்குளம்
4.சித்திரங்குடி
5.மேல்செல்வனூர் (ராமநாதபுரம்)
6.பழவேற்காடு (திருவள்ளூர்)
7.உதயமார்த்தாண்டம் (திருவாரூர்)
8.வடுவூர் (தஞ்சாவூர்)
9. கரைவெட்டி (பெரம்பலூர் )
10.வேட்டங்குடி (சிவகங்கை )
11.கூந்தன்குளம் (திருநெல்வேலி)
12.கோடியக்கரை (நாகப்பட்டினம்)
Announcement !
உரையாடலில் சேர் (8)
8 கருத்துகள்
  1. Profile
    பெயரில்லா
    Said: Thank u nice to study
    Thank u nice to study
  2. Unknown
    Unknown
    Profile
    Unknown
    Unknown
    Said: thank u so much
    thank u so much
  3. Puvanesh
    Profile
    Puvanesh
    Puvanesh
    Said: Thank u. .admin
    Thank u. .admin
  4. Unknown
    Unknown
    Profile
    Unknown
    Unknown
    Said: Thanks for sharing....
    Thanks for sharing....
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!