logo blog

சமசீர்கல்வி | ஆறாம் வகுப்பு | தமிழ் பாட குறிப்புகள் - 3

இயல் - 6

புறநானூறு

புறநானூறு - எட்டுத்தொகை நுல்ல்களில் ஒன்று , இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையானது.

ஒளவையார் - சங்க கால பெண் கவிஞர், மிகிதியான பாடல்களைப் பாடிய சங்க காலப்பெண் புலவர்.

சங்ககால பாடல்கள் பாடிய ஒளவையாரும், 'ஆத்திச்சூடி' பாடிய ஒளவையாரும் ஒருவர் அல்லர், வெவ்வேறானவர்கள்.

"நாடாகு ஒன்றோ, காடாகு ஒன்றோ ..." எனப்பாடியவர் ஒளவையார் .

புதிய சொற்கள்

நாடாகு ஒன்றோ -நாடாக இருந்தால் என்ன
அவல் - பள்ளம்
மிசை - மேடு
நல்லை - நன்றாக இருப்பாய்


புதிய விடியல்கள் , இது எங்கள் கிழக்கு, தாராபாரதி கவிதைகள் - போன்ற நூல்களை எழுதியவர் - கவிஞர் தாராபாரதி.
------
உரைநடை : பசும்பொன் முத்துராமலிங்கதேவர்


பசும்பொன் -என்பது இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஊர் பெயர் (முத்துராமலிங்கதேவர் பிறந்த இடம்)

சிறுவயதில் தாயை இழந்த முத்துராமலிங்கதேவருக்கு பாலூட்டி வளர்த்தவர் ஒரு இஸ்லாமிய பெண்மணி. வளர்த்தவர் பாட்டியார்.

 முத்துராமலிங்கதேவருக்கு கற்பித்த ஆசிரியரின் பெயர் - குறைவற வாசித்தான் பிள்ளை.

தெரிந்த மொழிகள் - தமிழ், ஆங்கிலம்

குற்றப்பரம்பரைச் சட்டத்திற்கு எதிராக போராடியவர்.

"சாதியையும் நிறத்தையும் பார்த்து மனிதனை தாழ்வு படுத்துவது பெருங்கொடுமை, ஆண்டவன் மனித குலத்தை படைத்தானே தவிர சாதியையும் நிறத்தையும் அல்ல, சாதிக்கும் அரசியலுக்கும், ஆன்மிகத்திற்கும் இல்லை" எனக்கூறியவர் -  முத்துராமலிங்கதேவர்

வங்க சிங்கம் என அழைக்கப்பட்ட நேதாஜி சுபாஸ் சந்திரபோஸை அரசியல் வழிகாட்டியாகக்கொண்டார்

"தேசியம் காத்த செம்மல் " என திரு.வி.க அவர்களால் பாராட்டப்பட்டவர் .

விடுதலைப் போராட்ட பணிகளுக்கு தடையாக இருக்கும் எனக்கருதி திருமண வாழ்வைத்தவிர்தவர்.

தெய்வீகம், தேசியம் - இரண்டையும் இரு கண்களாகப் போற்றினார்.

"வீரமில்லாத வாழ்வும், விவேகமில்லாத வீரமும் வீண்" - என்று கூறினார்.

பிற பெயர்கள் : வேதாந்த பாஸ்கர், பிரணவ கேசரி, சன்மார்க்க சண்டமாருதம், இந்து புத்த சமய மேதை

இவர் முருக பக்தர்.

"பனை மரத்திலிருந்து விழுந்து பிழைத்தவனும் உண்டு, வரப்பில் வழுக்கி விழுந்து இறந்தவனும் உண்டு" எனக் கூறியவர் -  முத்துராமலிங்கதேவர்

1963 ஆம் ஆண்டு இறந்தார்.

தமிழக அரசு சென்னை மாநகரில் முத்துராமலிங்கதேவருக்கு சிலையை நிறுவியுள்ளது.  அந்த சாலைக்கு முத்துராமலிங்கதேவர் சாலை எனப் பெயரிட்டுள்ளது.

முத்துராமலிங்கதேவரின் விருப்பத்தை ஏற்று 1939 ஆம் ஆண்டு நேதாஜி  மதுரைக்கு வருகை தந்தார்.

1995 முத்துராமலிங்கதேவர் பெயரில் மத்திய அரசு அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது.

தனது மொத்த சொத்துக்களையும் 17 பாகங்களாகப் பிரித்து, 1 பாகத்தை தனக்கும் 16 பாகங்களை 16 பேர்களுக்கு இனாமாக வழங்கினார்.


-----------

இயல் 7

திருக்குறள் - இனியவை கூறல்

கற்க வேண்டிய சொற்கள்


ஈரம் - அன்பு , அளைஇ-கலந்து, படிறு - வஞ்சம்
அகன் - உள்ளம், அமர் - விருப்பம், அமர்ந்து - விரும்பி, முகன் - முகம்

அகத்தானாம் - உள்ளம் கலந்து, இன்சொலினதே - இனிய சொற்களைப் பேசுதலே

துன்புறூஉம்-துன்பம் தரும், இன்புறூஉம்-இன்பம் தரும், யார்மாட்டும் - யாரிடத்தும், துவ்வாமை - வறுமை

அல்லவை - பாவம்

நயன்ஈன்று - நல்ல பயன்களைத்தந்து, தலைப்பிரியாச்சொல் - நீங்காத சொற்கள்

இன்மை - இப்பிறவி

எவன்கொலோ - என்ன காரணமோ? / ஏனோ ?

கவர்தல் - நுகர்தல், அற்று -அது போன்றது

------------

"செய்யும் தொழிலே தெய்வம் - அந்தத் திறமைதான் நமது செல்வம் " எனப்பாடியவர் - பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பட்டுக்கோட்டை அருகே செங்கப்படுத்தான்காடு எனும் ஊரில் பிறந்தார்.

---

தாராசுரம் ஐராவதீசுவரர் கோயில்  சிற்பங்கள்

கும்பகோணம் நகரின் தென்புறம் பாயும் ஆறு - அரிசிலாறு (தற்போது 'அரசலாறு')

ஐராவதீசுவரர் கோயில்  - அரிசிலாற்றின் தென்புறம் உள்ள தாராசுரம் என்ற ஊரில் அமைந்துள்ளது.

ஐராவதீசுவரர் கோயிலைக் கட்டியவர் - ராஜராஜ சோழன்

ஐராவதீசுவரர் கோயிலில் - புப்புரம் எரித்தவன் (திரிபுராந்தகன்) கதை , யானை உரி போர்த்தவர் (கஜசம்ஹாரமூர்த்தி) கதை, அடிமுடி தேடவைக்கும் அண்ணாமலையார் ( லிங்கோத்பவர்) கதை போன்றவை சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன.

கோயிலின் நுழைவாயிலில் ஏழு கருங்கற்படிகள் 'சரிகமபதநி' எனும் ஏழு நாதப்படிகளாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

"தாராசுரம் ஐராவதீசுவரர் கோயில் விமானத்தின் தோற்றம் வான்வெளி ரகசியத்தைக் காட்டுகிறது" என்று கூறியவர் - கார்ல் சேகன் என்ற வானவியல் அறிஞர்

இந்த கோயில் தஞ்சை அரண்மனைக்கு சொந்தமானது, தற்போது "இந்திய தொல்பொருள் துறையினர்" பாதுகாத்து வருகின்றனர்.

UNESCO மரபு அடையாளச் சின்னமாக அறிவித்துள்ளது.

--------------

துணைப்பாடம் : சாதனைப் பெண்மணி மேரிகியூரி

கியூரி அம்மையார் பிறந்த இடம் - போலந்து  நாடு

கணவர் பெயர் - பியூரி கியூரி

கியூரி-பியூரி தம்பதியினர் "பொலொனியம்", "ரேடியம்" போன்றவற்றை கண்டு பிடித்தனர்.

1903 ஆம் ஆண்டு இக்கண்டுபிடிப்புகளுக்காக நோபல் பரிசு இருவருக்கும் வழங்கப்பட்டது

பிரெஞ்சு அரசாங்கம் கொடுத்த நிதியுதவியை மறுத்தார்.

'ரேடியத்தின் அணு எடை" யை கண்டுபிடித்ததற்காக 1911 ஆம் ஆண்டு மேரிகியூரிக்கு இரண்டாம் முறையாக நோபல் பரிசு வழங்கப்பட்டது.

1934 ஆம் ஆண்டு மேரிகியூரி மரணமடைந்தார்.

1935 ஆம் ஆண்டு "செயற்கை கதிர்வீச்சு" பற்றிய ஆய்வுக்காக மேரிகியூரியின் மகள்  ஐரின் மற்றும் மருமகன் ஜோலியட் கியூரி ஆகியோருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

(ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது இதுவரை மேரிகியூரி குடும்பத்துக்கு மட்டுமே)

--------------
இலக்கணம்

ஒரு பெண்ணைப்பார்த்து 'மான் கொல்?" , "மயில் கொல்?" என்றால், இவள் மானோ மயிலோ என அர்த்தம்.

அள்பெடை :

உப்போஓஓஓ உப்பு  - மாஅஅஅனம்பழம் - என கூவி விற்பதைப்போல் கடைசி எழுத்து நீண்டு ஒலிப்பது அளபெடை.

உப்போஓஓ - இதில் உயிரெழுட்த்து நீண்டு ஒலிப்பதால் - "உயிர் அளபெடை"

பொய்ய்ய் - இதில் ஒற்றெழுத்து நீண்டிருப்பதால் - ஒற்றளபெடை


திணை

திணை இருவகைப்படும். உயர்திணை, அஃறிணை

மனிதர் மட்டும் உயர்திணை (அம்மா, நடிகன்,வினோத்)
மனிதரல்லாத பிற உயிருள்ளவையும், உயிர் அற்றவையும் அஃறிணை ( பூனை, பூ, மரம்)

----------------------

(இந்த பதிவுகளை copy செய்ய வேண்டாம் - மொத்த பதிவுகளும் pdf  வடிவில் ஒவ்வொரு பாட முடிவிலும் அளிக்கப்படும் )

Share this

1 comment

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.


Join via Email Facebook @tnpscportalTwitter @tnpscportal