நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC தேர்வுகளுக்கான நடப்பு நிகழ்வுகள் – 4,5 மார்ச் 2018


TNPSC Current Affairs 4th, 5th March 2018 

தமிழகம்

v  தமிழகத்தில் பச்சிளம் குழந்தைகள் இறப்பு விகிதம் (Infant Mortality Rate) ஆயிரம் குழந்தைகளுக்கு 17 ஆகக் குறைந்துள்ளது. தமிழகத்தில் 2015-ஆம் ஆண்டு பச்சிளம் குழந்தைகள் இறப்பு விகிதம் ஆயிரத்துக்கு 19 ஆக இருந்தது. இது தற்போது ஆயிரத்துக்கு 17 ஆகக் குறைந்துள்ளது. இது தேசிய சராசரி அளவான 34-ஐ விட 50 சதவீதம் குறைவானதாகும்.
v  மாவட்ட ஆட்சியர்கள் காவல்துறை அதிகாரிகள்  மாநாடு 5-7 மார்ச் 2018 தினங்களில் சென்னையில் நடைபெறுகிறது.  2013 ஆம் ஆண்டிற்கு பின்னர் (ஐந்து ஆண்டுகளுக்கு) பின்னர் இந்த ஆண்டில் தான் மாவட்ட ஆட்சியர்கள் காவல்துறை அதிகாரிகள்  மாநாடு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

இந்தியா

v  சர்வதேச இராணுவக் கண்காட்சி 2018” ( DefExpo 2018)   : இந்திய அரசினால் நடத்தப்படும், இரண்டாவது  சர்வதேச இராணுவக் கண்காட்சி,  11-14 ஏப்ரல் 2018 ஆகிய தினங்களில் காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் தாலுக்காவிலுள்ள திருவிடந்தையில் அமைந்திருக்கும் அருள்மிகு நித்யகல்யாண பெருமாள் கோயிலின் அருகில் நடைபெறவுள்ளது. 
v  சீதவ்வா ஜோதாட்டி  - 'பத்ம ஸ்ரீ' விருது 2018 பெற்ற முன்னாள் தேவதாசி. தற்போது தேவதாசி முறையை முற்றிலும் ஒழிப்பதற்காகவும்,  பாதிக்கப்பட்ட பெண்களின் மறுவாழ்விற்காகவும் பாடுபட்டுவரும் இவர் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவராவர்.
v  ஆம் காவோன், ஆம் விகாஸ்” (Ama Gaon, Ama Vikas) (our village, our development / நமது கிராமம் நமது முன்னேற்றம்) -  எனப்படும் திட்டத்தை ஒடிஷா அரசு துவங்கியுள்ளது.
v  மஹாராஷ்டிர அரசின் கட்சிரோலி புத்தக வாசிப்பு நிகழ்ச்சி கின்னஸ் சாதனையில் இடம் பெற்றது. மார்ச் 3, 2018 அன்று,  கட்சிரோலி (Gadchiroli) மாவட்டத்தில் அம்மாநில காவல்துறையினால் நடத்தப்பட்ட பிரமாண்டமான புத்தக வாசிப்பு நிகழ்ச்சியில் 7000 பேர் ஒரே நேரத்தில் புத்தகங்களைப் படித்த நிகழ்வு கின்னஸ் சாதனையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.  இதற்கு முன்னர் 2017 ஆம் ஆண்டு மே மாதத்தில் துருக்கியில் 5754 பேர் பங்கேற்ற புத்தக வாசிப்பு நிகழ்ச்சியே சாதனையாக இருந்தது. தற்போது அச்சாதனையை கட்சிரோலி புத்தக வாசிப்பு நிகழ்ச்சி முறியடித்துள்ளது.
v  ஒடிஷா அரசின் குஷி (‘Khushi’) திட்டம் :  பிப்ரவரி 2018 ல் அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டத்தின் மூலம் ஒடிஷா மாநிலத்திலுள்ள 17 இலட்சம் மாணவிகளுக்கு இலவசமாக சானிட்டரி பேட்கள் (sanitary pads) வழங்கப்படவுள்ளது. 

வெளிநாட்டு உறவுகள்

v  "நமஸ்தே சாலோம்” (“Namaste Shalom”) என்ற  பெயரில் இந்தியா - இஸ்ரேல் நாடுகளுக்கிடையேயான நல்லுறவிற்கான பருவ இதழை (magazine) மத்திய வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சர் ஜிதேந்திர சிங்  வெளியிட்டுள்ளார்.
v  இஸ்ரேல் நாட்டின் ஒத்துழைப்புடன் கூடிய “உணவு பதப்படுத்துதல் மையம்” ( food processing centre ) மிஷோராம் மாநிலத்தின் ஐஸ்வால் (Aizwal) நகரில் 07-03-2018 அன்று துவங்கப்படவுள்ளது.  இது வடகிழக்கு மாநிலங்களில் அமைக்கப்படும் முதல் உணவு பதப்படுத்துதல் மையமாகும். ஏற்கனவே, இந்தியா முழுவதும் 22 மையங்கள் செயல்பட்டுவருகின்றன. முதல்  உணவு பதப்படுத்துதல் மையம் 2018 ஆம் ஆண்டு ஹரியானாவில் துவங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
v  இந்தியா -வியட்நாம் நாடுகளுக்கிடையே மூன்று ஒப்பந்தங்கள் கையெழுத்து : வியட்நாம் அதிபர் டிரான் டாய் குவாங் இந்தியாவிற்கு அரசுமுறைப் பயணமாக வந்துள்ளதையொட்டி, இந்தியா மற்றும் வியட்நாம் நாடுகளுக்கிடையே,  அணுசக்தி, வர்த்தகம், வேளாண்மை ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது, எண்ணெய் அகழாய்வு பணியில் நட்புறவை வலுப்படுத்துவது, எரிவாயு அகழாய்வு பணியில் உறவை வலுப்படுத்துவது ஆகியவை தொடர்பாக மூன்று ஒப்பந்தங்கள் கையழுத்தாகின.
v  அமெரிக்க அரசின் அரசுப் பிணைய பத்திரங்களைக் (US government securities) கொண்டுள்ள வெளி நாடுகளின் பட்டியலில் இந்தியா 12 வது இடத்தைப் பெற்றுள்ளது. 2017 ஆம் ஆண்டின் இறுதி, நிலவரப்படி இந்தியா 144.7 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான அரசு பிணயப் பத்திரங்களைக் கொண்டுள்ளது. இப்பட்டியலில் முதல் மூன்று இடங்களை முறையே, சீனா, ஜப்பான், அயர்லாந்து ஆகிய நாடுகள் பெற்றுள்ளன.

சர்வதேச நிகழ்வுகள்

v  அர்மேனியா  (Armenia) நாட்டின் அதிபராக அர்மென் சர்கீஷியன்  (Armen Sarkisian) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
v  பாகிஸ்தானில் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள முதல் தலித் பெண் எம்.பி கிருஷ்ணகுமாரி. இவர் பாகிஸ்தானின், சிந்து மாநிலத்தில் இருந்து பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில்  நாடாளுமன்ற எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

முக்கிய தினங்கள்

v  உலக வனவிலங்குகள் தினம் (World Wild Life Day) -  மார்ச் 3  | நோக்கம் : Big cats: predators under threat

விருதுகள் / மரியாதைகள்

v  சத்ருகன் சின்காவிற்கு  இங்கிலாந்து பத்திரிக்கையின் வாழ்நாள் விருது :  பீகாரைச் சேர்ந்த பாரதியா ஜனதா கட்சி எம்.பி யான  சத்ருகன் சின்காவிற்கு இங்கிலாந்திலுள்ள ஏசியன் வாய்ஸ்(Asian Voice) எனப்படும் வாராந்திரப் பத்திரிக்கை வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கியுள்ளது.
v  சுகாதாரத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்திய 9 ..எஸ். அதிகாரிகளுக்கு விருது : ஒவ்வொரு ஆண்டும் மருத்துவர் தினம் ஜூலை 1-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சுகாதாரத் துறையின் திட்டங்களை சிறப்பாகச் செயல்படுத்தும் மாவட்ட ஆட்சியர்களுக்கு விருதுகள் அளிக்கப்படும்.   கடந்த 2013-14-ஆம் நிதியாண்டு முதல் 2015-16-ஆம் நிதியாண்டுகளில் ஒவ்வொரு ஆண்டுக்கும் தலா 3 மாவட்ட ஆட்சியர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
விருது பெற்றோர் விவரம் பின்வருமாறு,
o    2013-14-ஆம் ஆண்டில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக இருந்த எஸ்.நாகராஜன், ராமநாதபுரம் ஆட்சியர் கே.நந்தகுமார், காஞ்சிபுரம் ஆட்சியர் கே.பாஸ்கரன் ஆகியோர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
o    2014-15-ஆம் ஆண்டில் கரூர் ஆட்சியர் எஸ்.ஜெயந்தி, நாமக்கல் ஆட்சியர் வி.தட்சணாமூர்த்தி, தூத்துக்குடி ஆட்சியர் எம்.ரவிக்குமார்,
o    2015-16-ஆம் ஆண்டில் சிவகங்கை ஆட்சியர் எஸ்.மலர்விழி, திருப்பூர் ஆட்சியர் சி.கோவிந்தராஜ், கிருஷ்ணகிரி ஆட்சியர் டி.பி.ராஜேஷ் ஆகியோர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
v  பிரணாப் முகர்ஜிக்கு கெளரவ டாக்டர் பட்டம்: முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு மேற்கு வங்கத்தில் உள்ள இந்திய பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம்(IIEST) கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது.

அறிவியல் தொழில்நுட்பம்

v  GOES-S  :  மார்ச் 2018 இல் அமெரிக்காவின் நாசாவினால் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ள  அதி நவீன காலநிலை நிலை செயற்கைக் கோள்.
v  உலகின் முதல் நட்சத்திரம் எனக் கருதப்படும் காஸ்மிக் டான்(Cosmic Dawn) எனும் நட்சத்திரத்திலிருந்து முதல் முறையாக ஒளி வெளிப்படுவதை அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

விளையாட்டுகள்

v  கத்தார் நாட்டின், தோகா நகரில், சர்வதேச பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னூக்கர் கூட்டமைப்பால் (International Billiards & Snooker Federation (IBSF)) நடத்தப்பட்ட  IBSF ஸ்னூக்கர் டீம் உலகக் கோப்பை போட்டியில், பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
v  ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் அணியின் கேப்டன், 19 வயதான,  ராஷிட் கான் (Rashid Khan) மிகக் குறைந்த வயதான சர்வதேச கிரிக்கெட் கேப்டன் (youngest International Cricket Captain) எனும் பெருமையைப் பெற்றுள்ளார். இவர் தலைமையிலான கிரிக்கெட் அணி தற்போது ஷிம்பாவே நாட்டில் நடைபெறும் ஐ.சி.சி உலகக் கோப்பை தகுதி சுற்றில் ஸ்காட்லாந்து நாட்டிற்கெதிராக விளையாடி வருகிறது குறிப்பிடத்தக்கது.
v  உலக கோப்பை ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற ஹைதராபாத்தை சேர்ந்த அருணா புத்தா ரெட்டி (22) ரூ.2 கோடி பரிசு வழங்குவதாக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.
v  கைர்ஜிஸ்தானில் நடைபெறும் சீனியர் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கம் மற்றும் பிற வெற்றிகள்:
o    மகளிருக்கான 65 கிலோ பிரிவில் இந்தியாவின் நவ்ஜோத் கெளர், ஜப்பானின் மியா இமாயை வீழ்த்தி  தங்கம் வென்றுள்ளார். இது, ஆசிய சாம்பியன்ஷிப்பில் இந்தியா வெல்லும் முதல் தங்கப் பதக்கமாகும்.
o    மகளிருக்கான 62 கிலோ பிரிவில் சாக்ஷி மாலிக் 10-7 என்ற கணக்கில் கஜகஸ்தானின் அயாலைம் காஸைமோவாவை வீழ்த்தி வெண்கலம் வென்றார்.
o    50 கிலோ பிரிவில் வினேஷ் போகத் வெள்ளியும், 59 கிலோ பிரிவில் சங்கீதா வெண்கலமும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
o    பஜ்ரங் பூனியா (65 கிலோ பிரிவு) , வினோத் குமார் (70 கிலோ பிரிவு) ஆகியோர்  வெண்கலப் பதக்கம் வென்றனர்.
v  மெக்ஸிகன் ஓபன்: டெல் போட்ரோ சாம்பியன் : மெக்ஸிகன் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில், தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆன்டர்சனை வீழ்த்தி,  ஆர்ஜென்டீனாவின் ஜுவான் மார்டின் டெல் போட்ரோ சாம்பியன் ஆனார்.
v  உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி இந்திய வீரர்கள் சாதனை :
o    மெக்ஸிகோவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் ஷாஸார் ரிஸ்வி ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் 242.3 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றுள்ளார். மற்றொரு இந்தியரான ஜிது ராய் 219 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் வென்றார். 
o    மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைஃபிள் போட்டியில் இந்தியாவின் மெஹுலி கோஷ் 228.4 புள்ளிகளுடன் வெண்கலம் வென்றார்.
v  மாநிலங்களுக்கிடையேயான தேசிய டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி 2018 (interstate national tennis championship 2018) இல் மஹாராஷ்டிரா மாநில பெண்கள் அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. சட்டிஸ்கர் மாநில டென்னிஸ் சங்கத்தினால் இந்த போட்டிகள் நடத்தப்பட்டன.



படியுங்கள் !     பகிருங்கள் !         வெற்றி பெறுங்கள் !
-------------------------------
www.tnpscportal.in   இணையதளம் வழங்கும்
Group II & I  2018 Prelims Test Batch
For Registration and More Details Visit  www.tnpscportal.in/p/testbatch.html
8778799470 / 9385632216

Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!