நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC தேர்வுகளுக்கான நடப்பு நிகழ்வுகள் – 3 மார்ச் 2018


TNPSC Current Affairs in Tamil - 3rd March 2018

தமிழகம்

v  காஞ்சி சங்கர மடத்தின், 70வது மடாதிபதியாக, விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்  02-03-2018 அன்று பொறுப்பேற்றுள்ளார்.  
v  தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் மீனவர்கள் -  சென்னை உயர் நீதிமன்றம்  உத்தரவு:  மண்டல் கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள மீனவர்களை, தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பது தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியா

v  ஐ.என்.எஸ்.வி தாரிணி (INSV Tarini) கப்பல் 2.03.2018 அன்று தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரை அடைந்தது. முழுவதும் பெண் மாலுமிகளுடன், உலகைச்சுற்றிவரும் தனது முதலாவது பயணத்தை மேற்கொண்டுள்ள  இக்கப்பலுக்கு  லெப்டினன்ட் கமாண்டர் வர்டிகா ஜோஷி தலைமையேற்றுள்ளார். லெப்டினன்ட் கமாண்டர்கள் பிரதிபா ஜம்வால், பி சுவாதி மற்றும் லெப்டினன்ட்கள் எஸ் விஜயாதேவி, பி ஐஸ்வர்யா, பாயல் குப்தா ஆகியோர் இக்கப்பலின் இதர மாலுமிகளாவர்.   2017 செப்டம்பர் 10-ம்தேதி கோவா கடற்கரையிலிருந்து ஐ என் எஸ் வி தாரிணி பாய்மரப்படகை பாதுகாப்புத்துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 
v  நிர்பயா நிதி  (Nirbhaya Fund) மூலம், தில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், ஆமதாபாத் மற்று லக்னோ ஆகிய  எட்டு இந்திய நகரங்களில் பெண்கள் பாதுகாப்பிற்கான திட்டங்களுக்காக, மத்திய அரசு ரூ.2919.55 கோடியை வழங்கியுள்ளது.
v  உலகின் மிகப்பெரிய சூரிய சக்தி பூங்காவான சக்தி ஸ்தாலா  (Shakti Sthala) கர்நாடகாவிலுள்ள துமாகுரு மாவட்டத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதன் மின் உற்பத்தி திறன் 2000 மெகாவாட் ஆகும்.

வெளிநாட்டு உறவுகள்

v  வியட்நாம் அதிபர் தரன் டாய் குயாங்க், 3 நாள் அரசு பயணமாக வியட்நாம் அதிபர்  02-03-2018 அன்று இந்தியா வந்துள்ளார்.

சர்வதேச நிகழ்வுகள்

v  அமெரிக்காவிலுல்ள டெக்சாஸ் கேன்சர் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திடமிருந்து (Cancer Prevention & Research Institute of Texas (CPRIT).)  கேன்சர் ஆராய்ச்சிக்காக, 1 மில்லியன் டாலர் உதவித்தொகையை அமெரிக்க வாழ் இந்தியர் நவின் வரதராஜன் (Navin Vardarajan) பெற்றுள்ளார்.
v  அதிக எண்ணிக்கையில் பணக்காரர்களைக் (Highest Number Of Billionaires) கொண்ட நாடுகளின் பட்டியலில் (Hurun Global Rich List 2018) இந்தியா மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது.  முதலிட்த்தை சீனாவும், இரண்டாமிடத்தை அமெரிக்காவும் பெற்றுள்ளன. இந்தியாவிலிருந்து, இப்பட்டியலில் இடம்பெற்ற பணக்கார்ர்களில், முகேஷ் அம்பானி 19 வது இட்த்தையும், கவுதம் அதானி 98 வது இடத்தையும் உலகளவில் பெற்றுள்ளனர். இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள உலகின் முதல் ஐந்து பணக்காரர்கள் விவரம்,
1.ஜெஃப் பெஷோஸ் (Jeff Bezos) - அமேசான்
2.வாரன் பப்பட் (Warren Buffet) - Berkshire Hathaway
3.பில் கேட்ஸ் - மைக்ரோ சாப்ட்
4. மார்க் சக்கர்பர்க்  - ஃபேஸ்புக்
5. பெர்னார்ட் அர்னால்ட் (Bernard Arnault) - LVMH

பொருளாதாரம்

v  பாமாயில் இறக்குமதி வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதன் படி, கச்சா பாமாயில் (crude palm oil) எண்ணைக்கான இறக்குமதி வரி 30% திலிருந்து 44 சதவீதமாகவும், சுத்திகரிக்கப்பட்ட பாமாயிலின் ( refined palm oil) இறக்குமதி வரியானது 40% திலிருந்து 54 % ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

முக்கிய தினங்கள்

v  பூஜ்ஜிய வேறுபாடுகள் தினம் ( Zero Discrimination Day) -  மார்ச் 1 , 2018 ஆம் ஆண்டின் நோக்கம் என்ன?” (What if )

விளையாட்டுகள்

v  ஆசிய மல்யுத்தம்: இந்தியாவுக்கு முதல் தங்கம்: கிர்கிஸ்தானின் பிஷ்கெக்கில் நடைபெற்ற  சீனியர் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிருக்கான 65 கிலோ பிரிவில் இறுதிச்சுற்றில் நவ்ஜோத் 9-1 என்ற கணக்கில் ஜப்பானின் மியா இமாயை வீழ்த்தி, இந்தியாவின்,  நவ்ஜோத் கெளர்   தங்கம் வென்றார். இது, ஆசிய சாம்பியன்ஷிப்பில் இந்தியா வெல்லும் முதல் தங்கப் பதக்கமாகும்.

tamil current affairs march 2018

படியுங்கள் !     பகிருங்கள் !         வெற்றி பெறுங்கள் !

Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!