நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC Current Affairs 1st August 2018 | நடப்பு நிகழ்வுகள் - ஆகஸ்டு - 1


TNPSC Current Affairs  1st August 2018

v  இ-அக்‌ஷராயன்” (E-Aksharayan) என்ற பெயரில்  ஸ்கேன் செய்யப்பட்ட ஆவணங்களில் இருக்கும் எழுத்துக்களை திருத்துவதற்கான   மென்பொருளை  மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த மென்பொருளின் மூலம், இந்தி, வங்காளம், மலையாளம், குர்முகி, தமிழ், கன்னடம் மற்றும் அஸ்ஸாம் மொழிகளிலுள்ள  ஆவணங்களை திருத்த இயலும்.
v  ஐக்கிய நாடுகளவையின் மின் - அரசு பட்டியல் 2018’ (UN’s E-Government index 2018) ல் இந்தியா  96 வது இடத்தைப் பெற்றுள்ளது.    கடந்த 2014 ஆம் ஆண்டில் இந்தியா 118 வது இடத்திலிருந்தது குறிப்பிடத்தக்கது.  இப்பட்டியலில்  டென்மார்க் நாடு முதலிடத்தில் உள்ளது.
v  சிவாங்கி பாதக்’ (Shivangi Pathak) எனும் 17 வயது இந்திய பெண், ஆப்பிரிக்காவின் மிக உயரமான சிகரமான கிளிமாஞ்சாரோவை ஏறி சாதனை படைத்துள்ளார்.
கூ.தக. : இவர் சமீபத்தில்  எவரஸ்ட் சிகரத்தின்உச்சியை எட்டிய மிக இளவயது இந்திய பெண் எனும் சாதனையை படைத்ததால், ‘மலைகளின் கழுகு’ (‘The Eagle of Mountain’) பட்டத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. 
v  “Gaofen-11” என்று பெயரிடப்பட்ட உயர் திறன் கொண்ட புவி கூர்நோக்கு செயற்கைக் கோளை (high-resolution Earth observation satellite) சீனா வெற்றிகரமாக தனது Long March 4B ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தியுள்ளது.
v  ‘pp’ அல்லது ‘P null’ வகையிலான மிக அரிய இரத்த வகை மங்களூருவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ‘P null’ இரத்த வகை இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.
v  பின்லாந்தில் நடைபெற்ற சாவோ விளையாட்டுகளில்’ (Savo Games) ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றுள்ளார்.
v  லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பில் ஜம்மு-காஷ்மீர் பிராந்திய தளபதியாக செயல்பட்டு வரும் அப்துல் ரஹ்மான் அல் தாஹிலை சர்வதேச பயங்கரவாதியாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
v  சிறந்த நாடாளுமன்றவாதி விருதுகள் (2013-2017) 01-08-2018 அன்று வழங்கப்படுகின்றன. விருது பெறுவோர் விபரம் வருமாறு,
o   2013ஆம் ஆண்டுக்கான சிறந்த நாடாளுமன்றவாதி விருது   - ஹெப்துல்லா
o   2014ஆம் ஆண்டுக்கான சிறந்த நாடாளுமன்றவாதி விருது   - நாராயண் யாதவ்
o   2015ஆம் ஆண்டுக்கான சிறந்த நாடாளுமன்றவாதி விருது   - குலாம் நபி ஆஸாத்
o   2016ஆம் ஆண்டுக்கான சிறந்த நாடாளுமன்றவாதி விருது   - தினேஷ் திரிவேதி
o   2017ஆம் ஆண்டுக்கான சிறந்த நாடாளுமன்றவாதி விருது   - மகதாப்
v  பெண் பயணிகளின் பாதுகாப்பை அதிகரிப்பதற்காக, சென்னையிலுள்ள ஷெனாய் நகர், கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலையங்களை நிர்வகிக்கும் பொறுப்பு முழுமையாக பெண் ஊழியர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
v  கோபால கிருஷ்ண காந்திக்கு ராஜீவ் காந்தி சத்பாவனா விருது : சமூக நல்லிணக்கத்துக்கான  ராஜீவ்காந்தி சத்பாவனா விருது 2018” க்கு , மகாத்மா காந்தியின் பேரனான கோபாலகிருஷ்ண காந்தி,  தேர்வு செய்யப்பட்டு உள்ளார். காங்கிரஸ் கட்சி சார்பில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் பெயரில் 1995-ம் ஆண்டு முதல் தேசிய விருது வழங்கப்பட்டு வருகிறது. சமூக நல்லிணக்கம், அமைதி, வன்முறைக்கு எதிராக போராடுதல் ஆகியவற்றில் சிறப்பாக சேவையாற்றுவோருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.
v  இந்தியாவுக்கு அமெரிக்கா எஸ்.டி.ஏ-1’ ( STA-1 ) சிறப்பு அந்தஸ்து வழங்கியுள்ளது.  தெற்கு ஆசிய நாடுகளில் முதல் நாடாக இந்தியாவுக்கு எஸ்.டி.ஏ-1’ என்ற சிறப்பு அந்தஸ்தை அமெரிக்கா வழங்கி உள்ளது.  ஆசியா கண்டத்தில் ஜப்பானுக்கும், தென்கொரியாவுக்கு மட்டுமே இந்த அந்தஸ்தை அமெரிக்கா தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  வர்த்தக கட்டுப்பாட்டு பட்டியலில் வைத்து உள்ள குறிப்பிட்ட பொருட்களை, அங்கீகாரமற்ற, குறைவான அபாயத்தை கொண்டு உள்ள நாடுகளுக்கு ஏற்றுமதி, மறு ஏற்றுமதி, பரிமாற்றம் செய்து கொள்ள எஸ்.டி.ஏ-1 அந்தஸ்து அங்கீகாரம் அளிக்கிறது. அமெரிக்க தேசிய பாதுகாப்பு கட்டுப்பாட்டுக்கு உரித்தான ரசாயன ஆயுதங்கள் அல்லது உயிரி ஆயுதங்கள், குற்ற கட்டுப்பாடு பொருட்களை எஸ்.டி.ஏ-1 அந்தஸ்து நாடுகள் மட்டுமே அமெரிக்காவிடம் இருந்து வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
v  உலக தாய்ப்பால் வாரம் -  ஆகஸ்ட் 1 முதல் 7 -ஆம் தேதி வரை


Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!