நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC Current Affairs 5th, 6th August 2018 | நடப்பு நிகழ்வுகள் - 05 , 06 ஆகஸ்டு


TNPSC Current Affairs   05-06 August 2018

தமிழகம்

v  சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக விஜயா கே. தஹில்ரமணி  நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
o   மேலும்,  புது தில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த கீதா மிட்டல் (பொறுப்பு), ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம், ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள முதல் பெண் நீதிபதி என்னும் பெருமையை அவர் பெறுகிறார்.
o   தில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக, பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன் நியமிக்கப்பட்டுள்ளார்.
o   ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதி கல்பேஷ் சத்யேந்திர ஜாவேரிக்கு, ஒடிஸா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
o   கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி அனிருத்தா போஸ், ஜார்க்கண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
o   குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி எம்.கே. ஷாவுக்கு, பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
o   கேரள உயர் நீதிமன்ற நீதிபதி ரிஷிகேஷ் ராய்க்கு, அந்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி உயர்வு வழங்கப்பட்டிருக்கிறது.
v  முதலீட்டுக்கு உகந்த மாநிலங்களின் பட்டியல் 2018  (N-SIPI - NCAER State Investment Potential Index) -ல் புது தில்லி முதலிடத்தையும் தமிழ்நாடு இரண்டாமிடத்தையும் பெற்றுள்ளது. NCAER எனும் பொருளாதார ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த பட்டியலில்  மூன்றாம் இடத்தை குஜராத் மாநிலமும், நான்காம் இடத்தை ஹரியானா மாநிலமும், ஐந்தாம் இடத்தை  மஹாராஷ்டிரா மாநிலமும் பெற்றுள்ளது.

இந்தியா

v  உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள முக்ஹல்சரை ரயில்வே ஸ்டேஷனின் பெயர், தீன்தயாள் உபாத்யாயா என மாற்றப்பட்டுள்ளது.
கூ.தக:  ஜன சங்கத் தலைவர், தீன்தயாள் உபாத்யாயா 1968 ஆம் ஆண்டு இந்த இரயில் நிலயத்தின் அருகில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது நினைவாகவே இந்த இரயில் நிலயத்தின் பெயர் சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
v  பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்யும் திருநங்கைகளுக்கு ரூ. 2 லட்சம் உதவித் தொகை வழங்கும் முன்னோடி திட்டத்தை கேரள மாநில அரசு அறிவித்துள்ளது.  கேரளாவில் பல்கலைக்கழக கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகத்தை சேர்ந்த உறுப்பு கல்லூரிகளில் அனைத்து பாட பிரிவுகளிலும் திருநங்கைகளுக்காக கூடுதலாக இரண்டு இடங்கள் ஒதுக்கப்படும் என ஏற்கனவே அறிவித்துள்ளது.  மேலும் பல்வேறு துறையிலும் திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் முதன்மை மாநிலமாக கேரளா செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
v  ஸ்வச்ச மேவ ஜயதே” (‘Swachha Meva Jayate’) என்னும்  பெயரில் தூய்மை பிரச்சாரத்தை கர்நாடகா அரசு துவங்கியுள்ளது.
v  மக்களாட்சி திருவிழா (Festival of Democracy) என்ற பெயரில் கேரள  சட்டமன்றத்தின் வைரவிழா ஆண்டு நிறைவு நிகழ்ச்சியை குடியரசுத்தலைவர் 5-8-2018 அன்று துவங்கி வைத்தார்.
கூ.தக. : கேரள மாநிலத்தின் முதல் சட்டமன்றம் 5 ஏப்ரல் 1957 அன்று  உருவாக்கப்பட்டது.

வெளிநாட்டு உறவுகள்

v  ஆசிய - பசுபிக் அலைபரப்பு வளர்ச்சி நிறுவனத்தின்’ (Asia-Pacific Institute for Broadcasting Development) தலைமைப் பொறுப்பிற்கு இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.  இப்பொறுப்பில் இந்தியா அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கும்.
கூ.தக :UNESCO வின் கீழ் செயல்படும்  ஆசிய - பசுபிக் அலைபரப்பு வளர்ச்சி நிறுவனம்’ 1977 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதன்  தலைமையிடம் மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் உள்ளது.

உலகம்

v  சவுதி அரேபியாவில் இருந்து கனடா தூதரை அந்த நாடு வெளியேற்றியுள்ளது.  மேலும், கனடாவுடனான அனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் முடக்க இருப்பதாகவும், புதிதாக இனி எந்த வர்த்தக உறவும் கனடாவுடன் இல்லை எனவும் சவுதி அரேபியா அறிவித்துள்ளது.
பின்னணி : சவுதி-அமெரிக்க பெண்கள் உரிமைகள் பிரச்சாரகர் சமர் பேடாவி கைது செய்யப்பட்டதையடுத்து ,  கனடாவின் வெளிவிவகார அலுவலகம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையை வெளியிட்டதைத் தொடர்ந்து சவுதி அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
v  இந்தோனேசியாவில் மிக மோசமான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு, அந்நாட்டின்   மிகவும் முக்கியமான சுற்றுலாத்தலங்களான  பாலி மற்றும் லாம்பாக் நகரங்களில்  பெருமளவு உயிர் சேதமும் பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளது.  இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் முதல் நிலநடுக்கம் 7 ஆக பதிவாகி இருக்கிறது
v  உலகின் முதல் அலைஏற்ற கலை கலை காட்சி கூடம்' (Intertidal Art Gallery)  மாலத்தீவு நாட்டில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரம்

v  இந்திய அஞ்சலக பேமெண்ட் வங்கியை  ஆகஸ்டு 21-ல்  பிரதமர் மோடி தொடங்கி வைக்கவுள்ளார்.
o   இந்த வங்கியின் கீழ் ஏற்கெனவே இரண்டு கிளைகள் செயல்பட்டு வருகின்றன. மேற்கொண்டு, நாடெங்கிலும் உள்ள ஒவ்வொரு மாவட்டத்தையும் உள்ளடக்கிய வகையில், 648 கிளைகள் திறக்கப்படவுள்ளன .மேலும், கிராமப்புற பகுதிகளில் வங்கிச் சேவைகளை கொண்டு சேர்க்கும் வகையில், நாடெங்கிலும் உள்ள 1.55 லட்சம் அஞ்சல் நிலையங்களையும்  இந்த ஆண்டு இறுதிக்குள் அஞ்சலக பேமெண்ட் வங்கிகளுடன் இணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
o   பேமெண்ட் வங்கி சேவைகள்: கிராமப்புற மக்களுக்கும் டிஜிட்டல் வங்கி சேவைகளை கொண்டு சேர்க்கு வகையில், அஞ்சலக பேமெண்ட் வங்கி அறிமுகம் செய்யப்படுகிறது. இது பேடிஎம், ஏர்டெல் வங்கி போன்ற வங்கி சேவைகளை போன்று செயல்படும்.
o   தனிநபர்கள் அல்லது தொழில் நிறுவனங்கள் அதிக அளவாக ரூ.1 லட்சம் இருப்புத் தொகை வைத்துக் கொள்ள முடியும். ஆர்டிஜிஎஸ், என்இஎஃப்டி, ஐஎம்பிஎஸ் உள்ளிட்ட வசதிகளை பயன்படுத்தி எந்தவொரு வங்கிக் கணக்கும் பணம் பரிமாற்றம் செய்ய முடியும். ஊரக வேலை உறுதித்திட்ட ஊதியம், மானியம், ஓய்வூதியம் உள்ளிட்டவற்றை பயனாளர்களுக்கு கிடைக்கச் செய்ய அஞ்சலக பேமெண்ட் வங்கிக் கணக்குகளை பயன்படுத்திக் கொள்வது என அரசு திட்டமிட்டுள்ளது.
o   இதுதவிர, செல்லிடப்பேசி ரீசார்ஜ், மின் கட்டணம், கல்லூரி கட்டணம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட சேவைகளுக்கு அஞ்சல பேமெண்ட் வங்கி மூலம் பணம் செலுத்துவதற்கான வசதிகள் மக்களுக்கு கிடைக்கவுள்ளன.
v  ஆன்லைனில் பொருள் வாங்கினால் ஜி.எஸ்.டி சலுகை :  ஆன்லைனில் வாங்கும் பொருட்களுக்கு ஆன்லைனில் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ஜிஎஸ்டி.,யில் இருந்து 20 சதவீதத்தை திருப்பித் தர மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
v  தலைமறைவு நிதி மோசடியாளர்கள் சட்ட மசோதா” (Fugitive Economic Offenders Bill 2018) விற்கு  குடியரசுத் தலைவர் 05-08-2018 அன்று ஒப்புதல் வழங்கியுள்ளார்.  இந்த மசோதா, மக்களவையில் கடந்த ஜூலை மாதம் 19-ஆம் தேதியும், மாநிலங்களவையில் நிதியமைச்சர் பியூஸ் கோயல் அவர்களால் அறிமுகம் செய்யப்பட்டு,  ஜூலை மாதம் 25ஆம் தேதியும் நிறைவேற்றப்பட்டது. 
o   இந்திய வங்கிகளில் ரூ.100 கோடி அல்லது அதற்கு அதிக மதிப்பிலான தொகையை கடன் வாங்கி விட்டு, அதைத் திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்யும் நபர், வழக்கு விசாரணையைத் தவிர்ப்பதற்காக, வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதை தடுப்பதற்கு இந்த மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், நிதி மோசடியாளர்களின் சொத்துகளை முடக்கவும், பறிமுதல் செய்யவும் வங்கிகளுக்கும், பிற நிதி நிறுவனங்களுக்கும் அதிகாரம் அளிக்கும் வகையிலான அம்சங்களும் மசோதாவில் இடம்பெற்றுள்ளன.
o   இந்த மசோதா, கடந்த ஏப்ரல் மாதம் கொண்டுவரப்பட்ட நிதி மோசடியாளர் அவசரச் சட்டத்துக்கு மாற்றாக அமையும்.
o   இந்த மசோதாவில், விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெஹூல் சோக்ஸி போன்ற மோசடியாளர்களின் சொத்துகளை பறிமுதல் செய்யவும், எதிர்காலத்தில் இத்தகைய மோசடியில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு மோசடியாளர்கள் தப்பிச் செல்வதை தடை செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
o   இதுபோன்ற வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம், அமலாக்கத் துறைக்கு இந்த மசோதா மூலம் அளிக்கப்பட்டுள்ளது.
v  பாரத ஸ்டேட் வங்கி (ரத்து மற்றும் திருத்தம்) சட்ட மசோதா,  சிறப்பு நிவாரண சட்ட (திருத்தம்) மசோதா, 2018 க்கு 5-8-2018 அன்று  குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த மசோதாவானது, 1959ஆம் ஆண்டைய பாரத ஸ்டேட் வங்கி (கிளை வங்கிகள்) சட்டம், 1956ஆம் ஆண்டைய ஹைதராபாத் ஸ்டேட் வங்கி சட்டம் ஆகியவற்றுக்கு மாற்றாகவும், 1955ஆம் ஆண்டைய பாரத ஸ்டேட் வங்கி சட்டத்தை திருத்தும் வகையிலும் கொண்டு வரப்பட்டது. இந்த மசோதாவில், தொழில் தொடர்பாக இருதரப்பினரால் செய்து கொள்ளப்படும் ஒப்பந்தத்தை ஒருசாரார் மீறும்பட்சத்தில், அதன்மூலம் ஏற்படும் பாதிப்புகளுக்கு மறுசாரார் இழப்பீடு கோருவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
v  செலாவணி முறிச் சட்ட (திருத்தம்) மசோதா (காசோலை மோசடி சட்டத் திருத்த மசோதா) 2018 க்கு 5-8-2018 அன்று  குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த மசோதாவானது, காசோலை மோசடி தொடர்பான வழக்கை விரைந்து விசாரிக்கவும், காசோலையில் குறிப்பிடப்பட்டுள்ள 20 சதவீத தொகையை இடைக்கால நிவாரணமாக அளிக்கும்படி காசோலை அளிப்போருக்கு உத்தரவிடவும் நீதிமன்றங்களுக்கு அனுமதியளிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டது.
v  உலகின் இரண்டாவது பெரிய பங்கு சந்தை எனும் பெருமையை,    ஜப்பான் நாட்டின் பங்கு சந்தை பெற்றுள்ளது. கடந்த 05-08-2018 அன்று  சீன பங்கு சந்தையை வீழ்த்தி ஜப்பான் இந்த சாதனையைப் படைத்துள்ளது. உலகளவில் மிகப்பெரிய பங்கு சந்தையாக  31 டிரில்லியன் டாலர் மதிப்புடன் அமெரிக்க பங்கு சந்தை விளங்குகிறது குறிப்பிடத்தக்கது. 


விருதுகள்

v  அமெரிக்காவிலிருந்து செயல்படும்    கல்வி  தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப சங்கத்தின்’ (Association for Educational Communications and Technology (AECT)) சர்வதேச பங்களிப்பு விருது” (International Contributions Award)   இந்தியரான அன்வர் சதாத்திற்கு ( K.Anvar Sadath) வழங்கப்பட்டுள்ளது. இவ்விருதைப் பெறும் முதல் இந்தியர்  இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

நியமனங்கள்

v  எக்குவடோரியல் கினியா (Equitorial Guinea) நாட்டிற்கான இந்திய தூதராக மன் மோகன் பானோட் (Man Mohan Bhanot) நியமிக்கப்பட்டுள்ளார்.

அறிவியல் தொழில்நுட்பம்

v  உலகின் முதல் ஒற்றை குரோமோசோம் ஈஸ்ட்   சீன ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். 

விளையாட்டு

v  உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில்   பி.வி.சிந்து தொடர்ந்து 2-ஆவது முறையாக வெள்ளிப்பதக்கத்தை வென்றுள்ளார்.  சீனாவில்  நான்ஜிங்  நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து மகளிர் ஒற்றையர் இறுதிப்போட்டியில்  ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினை எதிர்கொண்டு தோல்வியுற்றதனால்  சாம்பியன் பட்டம் வெல்லும்  வாய்ப்பை இழந்து வெள்ளி வென்றுள்ளார்.
v  ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடித்தார் விராட் கோலி : புதிதாக வெளியிடப்பட்டுள்ள பேட்ஸ்மேன்களுக்கான ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் மொத்தம் 934 புள்ளிகளுடன் முதலிடம் விராட் கோலி பிடித்துள்ளார். ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 929 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்துக்கு சரிந்தார்.

புத்தகம்

v  தர்மயுத்தத்தில் கர்ம யோகியும் ஞான யோகியும்  என்ற பெயரில் டாக்டர் பிரியா ராமச்சந்திரன் எழுதிய புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!