நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC பொதுத் தமிழ் -18.தன் வினை, பிற வினை , செய்வினை, செயப்பாட்டுவினை

பகுதி அ.18.தன் வினை, பிற வினை , செய்வினை, செயப்பாட்டுவினை

இவ்வகை வினாக்களில் ஒரு சொற்றொடர் கொடுக்கப்பட்டு அதற்கான விடைகளிலிருந்து அது தன்வினை/பிற வினை/செய்வினை/செயப்பாட்டுவினை வாக்கியமா என தெரிவுசெய்ய வேண்டும்.

தன்வினை வாக்கியம்

தன்வினை வாக்கியத்தில் ஒரு  நபர் தானே ஒரு செயலைச் செய்வது. உதாரணமாக. அவள் கற்பித்தாள், இலக்கணம் கற்பித்தாள், ராமன் பாட படித்தான்.

பிறவினை வாக்கியம்

ஒரு நபர் ஒரு செயலை பிறரைக் கொண்டு செய்வது. உதாரணமாக. ராமன் பாடம் படிப்பித்தான், கோதை நடனம் ஆட்டுவித்தாள், ஆசிரியர் பாடம் பயிற்றுவித்தார்

செய்வினை வாக்கியம்

எழுவாய் + செயப்படுபொருள் + பயனிலை என்றவாறு வரும்.

உதாரணம் : கம்பர் ராமாயணத்தை இயற்றினார் . இதில்  கம்பர் (எழுவாய்) ராமாயணத்தை (செயப்படுபொருள்)  இயற்றினார் (பயனிலை)

பொதுவாக செய்வினை வாக்கியத்தில்  செயப்படு பொருளுடன் "ஐ"  நேராகவோ, மறைந்தோ வரலாம்.

செயப்பாட்டு வினை வாக்கியம்

செயப்படு பொருள் + எழுவாய் + பயனிலை

உதாரணம் : ராமாயணம் கம்பரால் இயற்றப்பட்டது.

பொதுவாக செயப்பாட்டு வினையில் எழுவாயுடன் ஆல், ஆன் இவற்றில் ஒன்று நேராகவோ, மறைந்தோ வரலாம்.

-தொடரும்
Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!