நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website
 "தமிழ்நாடு சுற்றுலா கொள்கை - 2023" வெளியீடு

"தமிழ்நாடு சுற்றுலா கொள்கை - 2023" வெளியீடு

 சுற்றுலாத் துறையில் தமிழ்நாட்டை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்ட "தமிழ்நாடு சுற்றுலா கொள்கை - 2023"   தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 26.9.2023 அன்று வெளியிட்டார்.  

"தமிழ்நாடு சுற்றுலா கொள்கை" - 2023ன் சிறப்பம்சங்கள் 

 • தொழில் அந்தஸ்து: இந்தக் கொள்கையானது சுற்றுலாத் திட்டங்களுக்கு தொழில் அந்தஸ்தை வழங்குகிறது, இதன்மூலம் இதுவரை தொழில்துறை திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட அதே பலன்களை சுற்றுலாத் துறைக்கும் விரிவுபடுத்தி, சுற்றுலாத்துறையில் ஈடுபட்டு வரும் பல்வேறு நிலையிலான பங்குதாரர்களின் நீண்டகால கோரிக்கையை சுற்றுலா கொள்கை பூர்த்தி செய்கிறது. 
 • முன்னுரிமை சுற்றுலா பிரிவுகள்: சாகச சுற்றுலா, பொழுதுபோக்கு சுற்றுலா, கேரவன் சுற்றுலா, கிராமப்புற மற்றும் தோட்ட சுற்றுலா, கடலோர சுற்றுலா, கலாச்சார சுற்றுலா, மருத்துவம் மற்றும் ஆரோக்கிய சுற்றுலா, ஆன்மீக சுற்றுலா, சுற்றுச்சூழல் சுற்றுலா, கூட்டங்கள், ஊக்கத்தொகைகள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள் (MICE) சுற்றுலா, பாரம்பரிய சுற்றுலா மற்றும் திரைப்படச் சுற்றுலா ஆகிய 12 முன்னுரிமை சுற்றுலாப் பிரிவுகளின் வளர்ச்சியினை நோக்கமாக கொண்டுள்ளது. நிலைப்படுத்தப்பட்ட சுற்றுலா தலங்கள் மற்றும் வழித்தடங்கள் ஆகியவற்றின் மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, இந்த பகுதிகளில் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் மானியங்கள் அளிக்கப்படும். 
 • சுற்றுலாத் திட்டங்களுக்கு ஒற்றைச் சாளர அனுமதி: அனைத்து தகுதியான சுற்றுலா திட்டங்களுக்கும் ஒற்றை சாளர அனுமதியுடன் கூடிய நெறிப்படுத்தப்பட்ட ஒப்புதல் செயல்முறை மேற்கொள்ளப்படும். தனியார் முதலீட்டை ஊக்குவிப்பதற்கு தகுதியான சுற்றுலாத்திட்டங்கள்: தனியார் முதலீட்டை ஊக்குவிப்பதற்காக முக்கிய கவனம் செலுத்தும் அடிப்படையில் பொழுதுபோக்கு பூங்காக்கள், பாரம்பரிய ஹோட்டல்கள், அனுபவமிக்க ஓய்வு விடுதிகள், சுற்றுச்சூழல்-குடிசைகள்/ முகாம்கள், ரோப்வேகன்கள், ஆரோக்கிய ஓய்வு விடுதிகள், ஓசியானேரியம் / மீன்வளம், கோல்ஃப் மைதானம், தோட்டம் பண்ணை சுற்றுலா திட்டங்கள், அருங்காட்சியகங்கள், சாகச சுற்றுலா திட்டம், குரூஸ் சுற்றுலா திட்டம் மற்றும் கேரவன் சுற்றுலா திட்டம் ஆகிய 13 தகுதியான சுற்றுலாத் திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. 
 • ஊக்கத்தொகை வகை A திட்டப்பணிகள் செயல்படுத்தப்படும் திட்டங்கள்)  (ரூ.50 கோடி வரையிலான முதலீட்டில் 25% அதிகபட்சமாக ரூ.1.50 கோடி வரை மூலதன மானியம் வழங்கப்படும். 
 • பெண்கள் / எஸ்சி / எஸ்டி / திருநங்கைகள் / மாற்றுத்திறனாளி (திவ்யாங்) நபர்களால் ஊக்குவிக்கப்படும் திட்டங்களுக்கு 5% அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை கூடுதல் மூலதன மானியம் வழங்கப்படும். 
 • நிறுவனங்களின் விரிவாக்கத்திற்கு 5% அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை கூடுதல் மூலதன மானியம் வழங்கப்படும். 
 • குறு நிறுவனங்களுக்கு 10% அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை கூடுதல் மூலதன மானியம் வழங்கப்படும்.
 •  20 நபர்களுக்கு மேல் வேலை வழங்கும் நிறுவனங்களில் உள்ள பணியாளர்களுக்கு ஊதிய ஊக்கத்தொகை ஆண்டொன்றுக்கு ரூ.24,000 வீதம் ஒரு பணியாளருக்கு 3 ஆண்டுகள் வரை வழங்கப்படும். 
 • குறு/சிறு நிறுவன, புதிய மற்றும் விரிவாக்க சுற்றுலாத் திட்டங்களுக்கான வட்டி மானியத்தை திரும்ப பெறுவதற்கும், தேசிய மற்றும் பன்னாட்டு தரச்சான்றிதழ்கள் பெறுவதற்கான மானியமும் வழங்கப்படும். 
 • வகை B திட்டப்பணிகள் (ரூ.50 கோடி முதல் 200 கோடி வரையிலான முதலீட்டில் செயல்படுத்தப்படும் திட்டங்கள்) .  5% அதிகபட்சமாக ரூ. 3 கோடி வரை மூலதன மானியம் வழங்கப்படும். 
 • 20 பேருக்கு மேல் வேலை வழங்கும் நிறுவனங்களில் உள்ள பணியாளர்களுக்கு ஊதிய ஊக்கத்தொகை ஆண்டொன்றுக்கு ரூ.24,000 வீதம் ஒரு பணியாளருக்கு 3 ஆண்டுகள் வரை வழங்கப்படும். தேசிய தரச்சான்றிதழ்கள் பெறுவதற்கு ரூ.2 இலட்சம் வரையிலான மானியமும், பன்னாட்டு தரச்சான்றிதழ்கள் பெறுவதற்கு ரூ.10 இலட்சம் வரையிலும் மானியம் வழங்கப்படும்.
 •  நிறுவனங்களில் பசுமை முன் முயற்சி திட்டங்களுக்கான ஊக்கத்தொகையாக 25 சதவீதம், அதிகபட்சமாக ரூ.25 இலட்சம் வரை வழங்கப்படும். 
 • வகை C திட்டப்பணிகள் (ரூ.200 கோடிக்கு மேலான முதலீட்டில் செயல்படுத்தப்படும் திட்டங்கள்) நிறுவனங்களின் திட்டங்கள் அடிப்படையில் கட்டமைப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும்.
 •  நிறுவன பயன்பாட்டிற்கான மின்கட்டணம் • முக்கிய சுற்றுலாத்தலங்களில் புதிய விடுதிகளுக்கு வணிக மின் கட்டணம் மற்றும் நிறுவன மின் கட்டண வித்தியாச தொகை முதலீட்டுத் தொகையில் 10% வரை அதிகபட்சமாக 3 ஆண்டுகளுக்கு திரும்ப வழங்கப்படும். 
 •  ரூ.200 கோடிக்கு மேல் முதலீடு செய்யப்பட்டுள்ள மற்றும் குறைந்தபட்சம் 50 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் புதிய திட்டங்களுக்கு, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி செலுத்திய சான்றிதழ் ஆய்வு அடிப்படையில், மின் பயன்பாட்டில் கட்டணச் சலுகைகள் அதிகபட்சமாக 3 ஆண்டுகளுக்கு திரும்ப வழங்கப்படும்.  


 தமிழ்ப் பரப்புரைக் கழகத் திட்டத்தின் கீழ், தமிழ் கற்பிக்கும் தன்னார்வலர்களுக்கான ஆசிரியர் பட்டயப் பயிற்சி

தமிழ்ப் பரப்புரைக் கழகத் திட்டத்தின் கீழ், தமிழ் கற்பிக்கும் தன்னார்வலர்களுக்கான ஆசிரியர் பட்டயப் பயிற்சி

 தமிழ்ப் பரப்புரைக் கழகத் திட்டத்தின் கீழ், தமிழ் கற்பிக்கும் தன்னார்வலர்களுக்கான ஆசிரியர் பட்டயப் பயிற்சி பதிவு செய்வதற்கான http://tva.reg.payil.app என்ற இணையதளத்தை  முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் 26.09.2023 அன்று தொடங்கி வைத்தார். 

தமிழ்ப் பரப்புரைக் கழகம் பற்றி …

 அயலக மாணவர்களின் தமிழ்க்கற்றல் கற்பித்தலுக்காக தமிழ்ப் பரப்புரைக் கழகத்தை செப்டம்பர் 2022-இல் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார். 

இத்திட்டத்தின் பணிகளைத் தமிழ் இணையக் கல்விக்கழகம் செயல்படுத்தி வருகிறது. இதில் திறன்கள் அடிப்படையிலான பாடப்புத்தகங்கள், கற்றல் துணைக்கருவிகள், கட்டணமில்லா இணையவழி வகுப்புகள் முதலான பல வசதிகள் 34 நாடுகளிலும் 16 இந்திய மாநிலங்களிலும் தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் 160 தொடர்பு மையங்கள் வாயிலாக வழங்கப்பட்டு வருகின்றன. 

இந்தத் தொடர்பு மையங்களில், மாணவர்களுக்குத் தன்னார்வலர்கள் தமிழ் பயிற்றுவித்து வருகின்றனர். 

 இணையவழி ஆசிரியர் பட்டயப் பயிற்சி பற்றி…

தமிழ் மொழியின் அடிப்படைகளையும் முறையான கற்பித்தல் பயிற்சியையும் இவர்களுக்கு வழங்கினால் தமிழ் மொழிக் கற்பித்தலை இன்னும் மேம்படுத்த முடியும் எனப் பல அயலகத் தமிழ்ச்சங்கங்களும் பள்ளிகளும் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், தமிழ் பரப்புரைக்கழகத்தின் மற்றொரு முக்கியமான முன்னெடுப்பாகத் தமிழ் கற்பிக்கும் தன்னார்வலர்களுக்கான இணையவழி ஓராண்டு ஆசிரியர் பட்டயப்பயிற்சி வழங்கத் திட்டமிடப்பட்டது.

இந்தப் பட்டயப்பயிற்சியைத் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்துடன் இணைந்து வழங்க 12.01.2023 அன்று நடைபெற்ற அயலகத் தமிழர் தினவிழாவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 

தற்போது இந்தப் பட்டயப்பயிற்சியைத் தொடங்குவதற்கான பணிகள் முடிவடைந்து, இந்தக் கல்வித்திட்டத்தில் பதிவு செய்வதற்கான இணைய இணைப்பை (http://tva.reg.payil.app/)  தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார்.


கிராம ஊராட்சிக்கு பொதுமக்கள் வரி செலுத்துவதற்கான TNPASS ( vptax.tnrd.tn.gov.in ) என்ற புதிய இணையதளம் தொடக்கம்

கிராம ஊராட்சிக்கு பொதுமக்கள் வரி செலுத்துவதற்கான TNPASS ( vptax.tnrd.tn.gov.in ) என்ற புதிய இணையதளம் தொடக்கம்

 கிராம ஊராட்சிக்கு பொதுமக்கள் வரி செலுத்துவதற்கான  TNPASS என்ற  புதிய இணையதளத்தை முதலமைச்சர் 26.9.2023 அன்று தொடங்கி வைத்தார். அதன்படி, பொதுமக்கள் கிராம ஊராட்சிகளுக்கு செலுத்த வேண்டிய வீட்டுவரி, தொழில்வரி, குடிநீர்க் கட்டணம், வரியல்லாத கட்டணங்கள் போன்றவற்றை  https://vptax.tnrd.tn.gov.in/  என்ற இணையதளத்தின் மூலம் செலுத்தலாம். இந்த இணையதளத்தை  தேசிய தகவலியல் மையம் (National Informatics centre) வடிவமைத்துள்ளது. 

இவ்விணையதளத்தின் மூலமாக இணைய வழி கட்டணம் (Online Payment), ரொக்க அட்டைகள் (Debit / ATM Cards Payment), கடன் அட்டைகள் (Credit Card Payment), யுபிஐ கட்டணம் (UPI Payment) மூலம் பணத்தினை செலுத்திட முடியும். இதன் மூலம் பொதுமக்கள் எளிதாக 24x7 முறையில் எந்த நேரத்திலும் வரி/ கட்டணம் செலுத்திட இயலும். இந்த நடவடிக்கையின் மூலம் ஊராட்சி பணியாளர்களின் பணிச்சுமை பெருமளவு குறையும்.


தமிழ்நாடு மாநில சட்ட ஆட்சி மொழி ஆணையத்தின் தலைவர் - நீதியரசர் திருமதி ஆர். தரணி

தமிழ்நாடு மாநில சட்ட ஆட்சி மொழி ஆணையத்தின் தலைவர் - நீதியரசர் திருமதி ஆர். தரணி

 தமிழ்நாடு மாநில சட்ட ஆட்சி மொழி ஆணையத்தின் தலைவர் நீதியரசர் திருமதி ஆர். தரணி

லோக் அயுக்தா உறுப்பினர்கள் தேடுதல் குழுவின் தலைவர் - நீதியரசர் திருமதி கே.பி.கே. வாசுகி

லோக் அயுக்தா உறுப்பினர்கள் தேடுதல் குழுவின் தலைவர் - நீதியரசர் திருமதி கே.பி.கே. வாசுகி

 தமிழ் நாட்டின் லோக் அயுக்தா உறுப்பினர்கள் தேடுதல் குழுவின் தலைவர்  நீதியரசர் திருமதி கே.பி.கே. வாசுகி அவர்கள் தேடுதல் குழுவின் அறிக்கையை 26.9.2023 அன்று முதலமைச்சரிடம் சமர்ப்பித்தார். 


வஹீதா ரஹ்மானுக்கு (Waheeda Rehman) 53 வது தாதா சாகேப் பால்கே வாழ்நாள் சாதனையாளர் விருது (Dadasaheb Phalke Lifetime Achievement Award)

வஹீதா ரஹ்மானுக்கு (Waheeda Rehman) 53 வது தாதா சாகேப் பால்கே வாழ்நாள் சாதனையாளர் விருது (Dadasaheb Phalke Lifetime Achievement Award)

 2021-ம் ஆண்டுக்கான 53 வது தாதா சாகேப் பால்கே வாழ்நாள் சாதனையாளர் விருது (Dadasaheb Phalke Lifetime Achievement Award) பிரபல நடிகை வஹீதா ரஹ்மானுக்கு (Waheeda Rehman) வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் அறிவித்துள்ளார்.


தென்கிழக்கு ஆசியாவில் நீண்ட தூரப் பயிற்சியில் முதல் பயிற்சிப் படையின் (First Training Squadron (1TS)) கப்பல்கள்

தென்கிழக்கு ஆசியாவில் நீண்ட தூரப் பயிற்சியில் முதல் பயிற்சிப் படையின் (First Training Squadron (1TS)) கப்பல்கள்

 முதல் பயிற்சிப் படையின் (First Training Squadron (1TS)) கப்பல்கள் - INS Tir, INS சுஜாதா,  பயிற்சிக் கப்பல் சுதர்ஷினி (Sail Training Ship Sudarshini) மற்றும் CGS சாரதி (CGS Sarathi) ஆகியவை  தென்கிழக்கு ஆசியாவில் நீண்ட தூரப் பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 

இந்த பயிற்சியின்  போது, கப்பல்கள் தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்குச் செல்லும். அப்போது, அந்நாடுகளில்  பல்வேறு பயிற்சி நடவடிக்கைகள், தொழில்முறை தொடர்புகள் மற்றும் கூட்டு கடல்சார் கூட்டாண்மை பயிற்சிகள் ஆகியவை அந்நாடுகளின்  கடற்படைகளுடன் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது, நட்பு நாடுகளான பங்களாதேஷ், மாலத்தீவுகள், மொரீஷியஸ் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயிற்சியாளர்கள் 1TS கப்பலில் அனுப்பப்பட்டுள்ளனர். 


 66-வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் கலந்துகொள்ளும் சட்டப்பேரவைத் தலைவர் திரு.மு.அப்பாவு அவர்கள்

66-வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் கலந்துகொள்ளும் சட்டப்பேரவைத் தலைவர் திரு.மு.அப்பாவு அவர்கள்

 2023 அக்டோபர் மாதம் 03 முதல் 05 வரை கானா நாட்டின் தலைநகர் அக்ராவில் நடைபெறவிருக்கும் 66-வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் தமிழக கிளையின் பிரதிநிதியாக மாண்புமிகு பேரவைத் தலைவர் திரு. மு.அப்பாவு அவர்கள் கலந்து கொள்கிறார். முனைவர். கி.சீனிவாசன், சட்டமன்ற செயலாளர் அவர்கள் இம்மாநாட்டில் இந்திய வட்டார பிரதிநிதிகளின் செயலாளராக கலந்து கொள்கிறார்.  


இந்தியாவில் விற்கப்படும் மின்சார வாகனங்களில் 40% தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டவை

இந்தியாவில் விற்கப்படும் மின்சார வாகனங்களில் 40% தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டவை

சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் வாகன் இணையதளத்தின் தரவுகளின்படி, 2023 ஆம்  நிதியாண்டில் செப்டம்பர் 2023 வரையில் விற்பனை செய்யப்பட்ட மின்சார வாகனங்களின்  மிகப்பெரிய உற்பத்தியாளர்களில் ஒன்றாக தமிழ்நாடு மாறியுள்ளது. இந்த ஆண்டில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட 1 மில்லியன் (10,00,000) மின் வாகனங்களில், 400,000க்கும் அதிகமான மின் வாகனங்கள் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள உற்பத்தி நிலையங்களில் இருந்து முறையே 175,608 யூனிட்கள் மற்றும் 112,949 யூனிட்களை விற்ற ஓலா எலக்ட்ரிக் மற்றும் டிவிஎஸ் மோட்டார் உள்ளிட்ட பத்து நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் ஆகியவை முக்கிய வகை வாகனங்களாகும்.

 • ஜனவரி 2023 இல் தமிழ்நாடு அரசு, மின்சார வாகனக் கொள்கையை வெளியிட்டது. இந்த கொள்கையின் முக்கிய நோக்கம், 
 • சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை மற்றும் சேலம் ஆகிய ஐந்து நகரங்களை மின்சார வாகன மையங்களாக மேம்படுத்துவதாகும்.
 • இந்த கொள்கையின்படி, புதிய ஸ்டார்ட்அப்கள் மற்றும் விரிவாக்கத்தை விரும்புபவர்கள் SGST, விற்றுமுதல் அடிப்படையிலான மானியம், மூலதனம் மற்றும் மேம்பட்ட வேதியியல் செல் மானியங்கள் போன்ற பல்வேறு சலுகைகளைப் பெறலாம்.
 • 2025 ஆம் ஆண்டிற்குள் மின்சார வாகன உற்பத்தித் துறையில் ₹50,000 கோடிக்கும் அதிகமான முதலீட்டை தமிழ்நாடு எதிர்பார்க்கிறது. 
 • 2030 ஆம் ஆண்டளவில், இந்தியாவில் விற்கப்படும் அனைத்து மின்சார வாகனங்களில் 30% உற்பத்தி செய்து, உலகளாவிய ஏற்றுமதியில் கணிசமான பங்களிப்பை வழங்குவதை தமிழ்நாடு இலக்காகக் கொண்டுள்ளது.


 2023-ம் ஆண்டுக்கான தேசிய அளவில் சிறந்த சுற்றுலா கிராமம் ”உல்லாடா”

2023-ம் ஆண்டுக்கான தேசிய அளவில் சிறந்த சுற்றுலா கிராமம் ”உல்லாடா”

2023-ம் ஆண்டுக்கான தேசிய அளவில் சிறந்த சுற்றுலா கிராமமாக தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் கேத்தி பள்ளத்தாக்கில் உள்ள உல்லாடா கிராமம் மத்திய சுற்றுலா அமைச்சகத்தினால் தேர்வு செய்யப்பட்டுள்ளது.  

கீழடி  9-ம் கட்ட அகழாய்வில்  கார்னிலியன் கல் வகையை சார்ந்த  உயர்வகை சிவப்பு கல்மணிகள் கண்டெடுப்பு

கீழடி 9-ம் கட்ட அகழாய்வில் கார்னிலியன் கல் வகையை சார்ந்த உயர்வகை சிவப்பு கல்மணிகள் கண்டெடுப்பு

 கீழடியில் நடைபெறும், ஒன்பதாம் கட்ட அக ழாய்வில், முதன்முறையாக வேலைபாடுடன் கூடிய கார்னிலியன் கல் வகையை  சார்ந்த  சூதுபவளங்கள் எனப்படும் உயர்வகை சிவப்பு கல்மணிகள்  கண்டெடுக்கப்பட்டன. 

சிவகங்கை மாவட்டம், கீழடியில் தமிழக தொல்லியல் துறை சார்பில், ஒன்பதாம் கட்ட அகழாய்வு, கீழடி, கொந்தகை ஆகிய இரு - தளங்களில் நடந்து வருகிறது. கொந்தகை தளத்தில் கண்டறியப்பட்ட  முதுமக்கள் தாழியில்,  ஆய்வு செய்த போது, 1.4 செ.மீ., நீளம், 2 செ.மீ., விட்டம் கொண்ட இரண்டு சூது பவளங்கள் கண்டறியப்பட்டுள்ளன. 

கீழடியில் ஏற்கனவே வராஹி உருவம் பதித்த சூதுபவளம் கண்டறியப்பட்டது. அதன் பின், கடந்த 2022 ஆம் ஆண்டின் அகழாய்வில், 80வது முதுமக் கள் தாழியினுள்,  சூதுபவளங்கள் கண்டறி யப்பட்டன. இவை எல்லாம் ஒரே மாதிரியா னவை என அறியப்பட்ட நிலையில், தற்போது கிடைத்த இரண்டு சூதுபவளங்களில் ஒன்றில் மேலும், கீழும் தலா இரண்டு கோடுகளும், நடு வில் அலைகள் போன்ற குறியீடும் வெண்மை நிறத்தில் காணப்படுகின்றன. 

குஜராத், மஹாராஷ்டிரா மாநிலங்களில் தான் அதிகமாக சூதுபவளங்கள் காணப்படும். கீழடி அகழாய்விலும் இது கிடைத்திருப்பது வணிக தொடர்புக்கான அடையாளமாக காணப்படுகிறது. 2,500 ஆண்டுகள் பழமையானது வழக்கமாக அகழாய்வில் கண்டெடுக்கப்படும் கண் ணாடி மணிகள், பாசி மணி கள், கல் மணிகள் வரிசையில் சூதுபவள மணிகளும் கிடைத்து வருகின்றன. ஏற்க னவே கொந்தகையில் 3-ம் கட்ட அகழாய்வில் அகழ்ந் தெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியில் இதேபோல் 74 சூது பவளம் மணிகள் கண்டெடுக் கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

சங்க காலத்தில் சூதுபவளம் மணிகள் அழகு பொருட் கள் மற்றும் அணிகலன்களில் அதிக அளவில் பயன்படுத் தப்பட்டதாகவும், குறிப்பாக பொருளாதாரத்தில் மேம்பட்டவர்கள்தான் இதை பெரும்பாலும் பயன்படுத்தி இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.  தற்போது கண்டெடுக்கப் பட்ட சூதுபவளம் மணிகள் ஏறத்தாழ 2 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில் பயன்படுத்தப் பட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது.

உயிரி எரிபொருளில் இந்திய தரநிலைகள் (Indian standards on biofuels) உருவாக்கம்

உயிரி எரிபொருளில் இந்திய தரநிலைகள் (Indian standards on biofuels) உருவாக்கம்

  இந்திய தரநிலைகளின் பணியகம் (Bureau of Indian Standards (BIS)) உயிரி எரிபொருளில் (biofuels) பின்வரும் ஒன்பது இந்திய தரநிலைகளை(Indian standards on biofuels) உருவாக்கியுள்ளது:

IS 15464 : 2022  - நீரற்ற எத்தனால் மோட்டார் பெட்ரோலில் கலக்கும் கூறுகளாகப் பயன்படுத்தப்படுகிறது (Anhydrous Ethanol for Use as Blending Component in Motor Gasoline - Specification)

IS 15607 : 2022 - பயோடீசல் B-100 - ஃபேட்டி ஆசிட் மெத்தில் எஸ்டர்ஸ் FAME (Biodiesel B-100 - Fatty Acid Methyl Esters FAME – Specification)

IS 16087 : 2016  -  உயிர்வாயு (பயோமீத்தேன்) -  (முதல் திருத்தம்)(Biogas (Biomethane) - Specification (First Revision))

IS 16531 : 2022  - பயோடீசல் டீசல் எரிபொருள் கலப்பு B8 முதல் B20 வரையிலான   (Biodiesel Diesel Fuel Blend B8 to B20 Specification)

IS 16629 : 2017 -  ED95 வாகன எரிபொருளில் பயன்படுத்த ஹைட்ரஸ் எத்தனால் (Hydrous ethanol for use in ED95 automotive fuel – Specification)

IS 16634 : 2017  - E85 எரிபொருள் (நீரற்ற எத்தனால் மற்றும் பெட்ரோலின் கலவை) (E85 fuel (Blend Of Anhydrous Ethanol And Gasoline) – Specification)

IS 17021 : 2018  -  E 20 எரிபொருள் - நீரற்ற எத்தனால் மற்றும் பெட்ரோலின் கலவை - தீப்பொறி பற்றவைக்கப்பட்ட இயந்திரத்தால் இயங்கும் வாகனங்களுக்கான எரிபொருளாக (E 20 fuel - Admixture of anhydrous ethanol and gasoline - As fuel for spark ignited engine powered vehicles – Specification)

IS 17081 : 2019  - ஏவியேஷன் டர்பைன் எரிபொருள் (மண்ணெண்ணெய் வகை, ஜெட் ஏ - 1) செயற்கை ஹைட்ரோகார்பன்கள் (Aviation turbine fuel (Kerosene Type, Jet A - 1) containing synthesized hydrocarbons - Specification) 

IS 17821 : 2022  - நேர்மறை பற்றவைப்பு இயந்திரத்தில் இயங்கும் வாகனங்களில் பயன்படுத்துவதற்கான எரிபொருளாக எத்தனால் - விவரக்குறிப்பு (Ethanol as a Fuel for Use in Positive Ignition Engine Powered Vehicles - Specification) 


இந்த தரநிலைகளின் உதவியுடன், உயிரி எரிபொருள் உற்பத்தியின் அதிகரித்த திறனை அடைய முடியும். இது 2070-க்குள் நிகர பூஜ்ஜிய இலக்கை அடையவும், புதுப்பிக்கத்தக்க ஆதாரங்கள் மூலம் 50% ஆற்றலைப் பெறவும் உதவுவது மட்டுமல்லாமல், மேக் இன் இந்தியா, ஆத்மநிர்பர் பாரத், வேஸ்ட் டு வெல்த் போன்ற பல நோக்கங்களை அடைவதில் பங்களிக்கும்.  

கூ.தக. :  புதுதில்லியில் இந்தியாவின் தலைமையில் நடைபெற்ற 18வது G20 உச்சி மாநாட்டின் போது, G20 தலைவர்கள், 30 நாடுகள் மற்றும் சர்வதேச நிறுவனங்கள் அடங்கிய Global Biofuel Alliance (GBA) எனும்  ஒரு மன்றம் உருவாக்கப்பட்டது. நிலைத்தன்மை மற்றும் தூய்மையான எரிசக்தி இலக்கை நோக்கிய இந்தியா தலைமையிலான முயற்சியே Global Biofuel Alliance (GBA) ஆகும்.  தேசியக் கொள்கையை உருவாக்குதல், சந்தையின் மேம்பாடு, தொழில்நுட்பத் திறனின் பரிணாமம் மற்றும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தரநிலைகள் மற்றும் நடைமுறைக் குறியீடுகளை ஏற்றுக்கொண்டு செயல்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் உலகளாவிய வளர்ச்சி மற்றும் நிலையான உயிரி எரிபொருளைப் பயன்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.


அறிக்கையின்படி, அமெரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியா ஆகியவை உயிரி எரிபொருளின் முக்கிய உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர்களாக உள்ளன. உலகளவில் 85% உற்பத்தி மற்றும் 81% எத்தனால் நுகர்வுக்கு இந்த மூன்று நாடுகளும் கூட்டாக பங்களிக்கின்றன. 

உலகளாவிய எத்தனால் சந்தை 2022 இல் 99 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டது மற்றும் 2032 ஆம் ஆண்டில் 5% கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தில் வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது இந்திய தொழில்களுக்கு ஒரு பெரிய வாய்ப்பை உருவாக்குகிறது மற்றும் விவசாயிகளின் வருமானம், வேலை உருவாக்கம் மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு பங்களிக்கிறது. 

தற்போது, இந்தியாவில் போக்குவரத்துத் துறைக்கான எரிபொருள் தேவையில் 98% புதைபடிவ எரிபொருட்களாலும், மீதமுள்ள 2% உயிரி எரிபொருள்களாலும் பூர்த்தி செய்யப்படுகிறது என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2020-2021 ஆம் ஆண்டில் இந்தியாவின் பெட்ரோலியம் இறக்குமதியால் கருவூலத்திற்கு சுமார் 55 பில்லியன் டாலர்கள் செலவானது. சமீபகாலமாக, ரஷ்யா-உக்ரைன் போர் உலக அளவில் எண்ணெய் விலையை உயர்த்தியது மற்றும் எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதி விலை ஏற்றப்பட்ட விலையுடன் இந்திய பொருளாதாரத்தை மேலும் சுமையாக ஆக்கியுள்ளது. எத்தனாலை 20% வரை பெட்ரோலுடன் கலப்பதால் சுமார் 4 பில்லியன் டாலர்கள் சேமிக்கப்படும்.

எனவே, இந்திய எண்ணைய் உற்பத்தி நிறுவனங்கள் 1G மற்றும் 2G எத்தனால் உற்பத்திக்கான புதிய டிஸ்டில்லரிகளை வழங்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளன, மேலும் இந்திய வாகன உற்பத்தியாளர்கள் எத்தனால் கலந்த எரிபொருளுடன் இணக்கமான இயந்திரங்களை உருவாக்கி வருகின்றனர். எத்தனால் உற்பத்தியை ஊக்குவிக்க வெல்லப்பாகு மற்றும் தானிய அடிப்படையிலான டிஸ்டில்லரிகளுக்கான வட்டி மானியத் திட்டத்தையும் அரசாங்கம் தொடங்கியுள்ளது. 85% வரை எத்தனால் கலந்த பெட்ரோலைப் பயன்படுத்தும் திறன் கொண்ட ஃப்ளெக்ஸ் எரிபொருள் வாகனங்கள், ஏற்கனவே அமெரிக்கா மற்றும் பிரேசிலில் இயங்கி வருகின்றன, விரைவில் இந்தியாவில் நுழையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Link copied to clipboard