9/03/2013

பொதுத் தமிழ் மாதிரித் தேர்வு - 6 | ஆறாம் வகுப்பு

Posted by: D Kessal on 9/03/2013 Categories:|||||
பொதுத் தமிழ் பாடத்தில் நீங்கள் பெறும் மதிப்பெண்கள் தான் TNPSC தேர்வுகளில் உங்கள் வெற்றியை தீர்மானிப்பதாக இருக்கும். எனவே தமிழ் தொடர்பான எந்த தகவல் கிடைத்தாலும் தேடி வாசியுங்கள் . குறிப்பாக 6 முதல் 10 வரையிலான தமிழ் பாடப்பகுதிகளை ஒரு வரி கூட விடாமல் படியுங்கள் , புதிய வார்த்தைகளின் பொருள்களை மனனம் செய்யுங்கள். இந்த மாதிரி தேர்வு ஆறாம் வகுப்பு தமிழ் பாடப்பகுதியிலிருந்து எடுக்கப்பட்டது.

 1. ஜீவ  காருண்ய ஒழுக்கம் - நூலின் ஆசிரியர் யார் ?
  1. திரு.வி.க
  2. சங்கராச்சாரியார்
  3. இராமலிங்க அடிகளார் 
  4. மேற்கண்ட எவருமில்லை

 2. திருக்குறளில் "ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும்" என்ற அடியில் குறிப்பிடப்பட்டுள்ள 'ஆர்வலர்' என்றவார்த்தையின்  பொருள் என்ன ?
  1. ஆர்வமுடையவர்
  2. தோழர்
  3. உறவினர்
  4. அன்புடையவர் 

 3. 2013 - ஆங்கில வருடத்திற்கு  சமமான திருவள்ளுவர் ஆண்டு எது ?
  1. 2044
  2. 2041
  3. 2034
  4. 2013

 4. "என் சரிதம்"  - யாருடைய வாழ்க்கை வரலாறு ?
  1. கண்ணதாசன்
  2. ஜி.யு.போப்
  3. தேவநேய  பாவாணர்
  4. உ.வே.சாமிநாதய்யர்

 5. நாலடியார் - எவ்வகை நூல்தொகுப்பைசார்ந்தது ?
  1. பத்துப் பாட்டு
  2. எட்டுத்தொகை
  3. பதினெண் மேல்கணக்கு
  4. பதினெண் கீழ்கணக்கு

 6. "சாதி இரண்டொழிய வேறில்லை" - எனப்பாடியவர் ?
  1. திரு.வி.க
  2. ஒளவையார் 
  3. பாரதிதாசன்
  4. கண்ணதாசன்

 7. உதயமார்த்தாண்டம்  பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளமாவட்டம் எது ?
  1. கன்னியாகுமரி
  2. திருநெல்வேலி
  3. திருவாரூர்
  4. தஞ்சாவூர்

 8. நான்மணிக்கடிகை நூலின்ஆசிரியர்  யார் ?
  1. ஒளவையார்
  2. கபிலர்
  3. சீத்தலை சாத்தனார்
  4. விளம்பி நாகனார்

 9. "தகைசால்"  என்பதன் பொருள்  என்ன ?
  1. கொடைகளில் சிறந்த
  2. ஈகையில் சிறந்த
  3. பண்பில்  சிறந்த 
  4. பொறுமையுடைய

 10. "நாடாகு ஒன்றோ, காடாகு ஒன்றோ" - என்கிற புறநானூற்று பாடலைப்  பாடியவர் யார்?
  1. மாங்குடி மருதனார்
  2. கபிலர்
  3. பிசிராந்தையார்
  4. ஒளவையார்9 comments:

 1. HELLO SIR EXCELLENT SUPER SIR,THANK U

  ReplyDelete
  Replies
  1. THANK YOU FOR YOUR COMMENT

   Delete
 2. pls check q.no 6 and the answer is avvaiyar i think so and pls reply me

  ReplyDelete
  Replies
  1. thank you friend corrected....actually both bharathi and Avvaiyar said that...but avvaiyar was the earliest to say

   Delete
  2. Yes, Q.No.6 answer this Avvaiyar

   Delete
 3. I like it. Thanks. I was struggling to test the studied lessons. But this way makes me to check the remembered items. Also in this page itself we are getting answers, and comments. Also I can able to see the wrongly answered items. Its really helpful to us. Thanks ah Ton. ☺

  ReplyDelete
 4. மிக்க நன்றி சார்

  ReplyDelete

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.