நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொதுத்தமிழ் - ஒன்பதாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 13


  1. பொருத்துக
    (1) குருசு (a) ஏளனம்
    (2) தொழும்பர் (b) சிலுவை
    (3) ஆகடியம் (c) சினம்
    (4) செற்றம் (d) அடியார்
    1. a b c d
    2. d b a c
    3. b a c d
    4. b d a c

  2. H.A கிருட்டினார் பிள்ளை பற்றி தவறான கூற்று
    1. H.A. கிருட்டினார் பிள்ளை திருநெல்வேலி மாவட்டத்தில் கரையிருப்பு என்னும் ஊரில் 1827 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 நாள் பிறந்தார்
    2. கிருட்டினார் தந்தையிடம் இலக்கணங்களையும் மாணிக்கவாசகத்தேவரிடம் தமிழிலக்கியங்களையும் பிலவணச் சோதிடரிடம் வடமொழியையும் கற்றார்
    3. இவரை கிறித்துவக் கம்பர் என அழைப்பர்
    4. இவர் எழுதிய நூல்கள் இரட்சணிய மனோகரம், இரட்சணிய குறள் இரட்சணிய சமய நிர்ணயம்

  3. அன்புநான் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு ஐந்து சால்(பு) ஊன்றிய தூண் என்ற குறளில் பயின்று வரும் அணி.
    1. நிரல் நிறை அணை
    2. உவமையணி
    3. ஏகதேச உருவக அணி
    4. பிறிது மொழிதல் அணி

  4. “நம்பிக்கைதான் அவரது ஆயுதம்“ என்று தில்லையாடி வள்ளியம்மை குறித்து, காந்தியடிகள் எந்த இதழில் எழுதியுள்ளார்.
    1. இந்தியன் ஒப்பீனியன்
    2. தென்னாப்பிரிக்கா சத்தியாக்கிரகம்
    3. சத்திய சோதனை
    4. யங் இந்தியா

  5. ஒவ்வொருவரும் தாம் சிறந்ததாகக் கருதும் சமயத்தைக் கைக்கொண்டு வாழ விடுவதே தருமம் என்ற கொள்ளையை பின்பற்றி வாழ்ந்தவர்
    1. ராணிமங்கம்மாள்
    2. வேலுநாச்சியார்
    3. மீனாட்சி
    4. விவேகானந்தர்

  6. ”ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மாணவனுக்கு வகுப்பது பரணி”
    1. வெண்பா பாட்டியல்
    2. பன்னிருபாட்டியல்
    3. கலிங்கத்து பரணி
    4. தக்கையக பரணி

  7. “கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்தகுடி“ என தமிழினத்தின் தொன்மையை கூறும் நூல்
    1. அகத்தியம்
    2. தொல் காப்பியம்
    3. புறப்பொருள் வெண்பாமாலை
    4. சிலப்பதிகாரம்

  8. தமிழ் ஆட்சி மொழியாக திகழும் நாடுகளில் தவறாக இடம் பெற்ற நாடு
    1. மொரிசியசு
    2. மலேசியா
    3. சிங்கப்பூர்
    4. இலங்கை

  9. “இளைஞர்களே ! தமிழுலகின் இழிந்த நிலையை ஒருங்கள், எண்ணி உங்கள் பொறுப்பை உணருங்கள். தமிழ்தாயைப் புதுப்போர்வையில் ஒப்பனை செய்து அரியாசனத்தமர்த்த சூள்கொண்டெழுங்கள்“ என்று தமிழ் இளைஞர்களுக்கு அறைகூவல் விடுத்தவர்
    1. காமராசர்
    2. அறிஞர் அண்ணா
    3. மு. வரதராசனர்
    4. திரு.வி.க

  10. “பைந்தமிழ் ஆசான்“ எனப் போற்றப்படுபவர்
    1. சுரதா
    2. கா. நமச்சிவாயனார்
    3. பாரதிதாசன்
    4. கவிமணி



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!