நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC Current Affairs 10,11 February 2019

நடப்பு நிகழ்வுகள் 10,11 பிப்ரவரி 2019
Click Here for Previous Day Current Affairs

தமிழ்நாடு

  • பூமிக்கு அடியில் கட்டப்பட்டுள்ள நிலையங்களில், ஆசியாவிலேயே மிகப்பெரிய நிலையம் என்ற சிறப்பை சென்னை செண்ட்ரல் மெட்ரோ ரயில்  பெற்றுள்ளது. இந்நிலையம், பூமிக்கு அடியில், 400 மீட்டர் நீளம், 30.5 மீட்டர்ஆழத்திலும் கட்டடப்பட்டுள்ளது.

இந்தியா

  • அபுதாபியில் நீதிமன்ற அலுவல் மொழியானது ஹிந்தி :  ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் நீதிமன்ற அலுவல் மொழிகளில் ஒன்றாக ஹிந்தி சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு அரபு மொழி, ஆங்கிலம் ஆகியவை அபுதாபி நீதிமன்றத்தில் அலுவல் மொழிகளாக இருந்தன.  முக்கியமாக வெளிநாட்டுத் தொழிலாளர் தொடர்பான வழக்குகளில் ஹிந்தி மொழி பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது.
  • பெட்ரோடெக்-2019’ (PETROTECH - 2019) என்ற பெயரில் 13 வது சர்வதேச எண்ணை மற்றும் எரிவாயு மாநாடு மற்றும் கண்காட்சி உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் 10-12 பிப்ரவரி 2019 தினங்களில் நடைபெறுகிறது.
  • ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் மூன்றாவது நிர்வாகப் பிரிவாக (administrative division) , லடாக் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிர்வாகப்பிரிவு  லேக் மற்றும் கார்கில் மாவட்டங்களை உள்ளடக்கியதாக இருக்கும். ஏற்கனவே, காஷ்மீர் மற்றும் ஜம்மு ஆகியவை நிர்வாகப்பிரிவுகளாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
  • ஹருண் இந்தியா கொடை வள்ளல்கள் பட்டியல் 2018” ல் (Hurun India Philanthropy list 2018)  முகேஷ் அம்பானி முதலிடத்தைப் பெற்றுள்ளார்.   2,3,4 மற்றும் ஐந்தாம் இடங்களை முறையே அஜய் பிரமால், ஆஷிஸ் பிரேம்ஜி, ஆதி கோத்ரஜ் மற்றும் யூசுஃ அலி எம்.ஏ ஆகியோர் பெற்றுள்ளனர்.
  • சேலா சுரங்கபாதை திட்டத்திற்கு (Sela Tunnel Project) அருணாச்சல் பிரதேச மாநிலத்தில் பிரதமர் மோடி அவர்கள் 9-2-2019 அன்று அடிக்கல் நாட்டினார்கள். ரூ.687 கோடி செலவில் அமைக்கப்படும் இந்த சுரங்கப்பாதை ’எல்லை சாலைகள் நிறுவனத்தின்’ (Border Roads Organisation (BRO) ) மூலம்  04 கி.மீ. தூரத்திற்கு அமைக்கப்படுகிறது.
  • டி.டி. அனுபிரபா (DD Arunprabha) என்ற அருணாச்சலப்பிரதேச மாநிலத்திற்கான 24 மணிநேர செயற்கைக்கோள் தொலைக்காட்சி  சானலை  பிரதமர் மோடி அவர்கள் 9-2-2019 அன்று தொடங்கி வைத்தார்.
  • 13 வது ஐக்கிய நாடுகளவையின் இடம்பெயரும் உயிரினங்கள் பாதுகாப்பு மாநாட்டின்(Conference of Parties (COP) of the UN Convention on the Conservation of Migratory Species) இலச்சினையாக  ‘கிரேட் இந்தியன் பஸ்டார்ட் (Great Indian Bustard (GIB)) பறவை அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த கூடுகையானது வரும் 15-22 பிப்ரவரி  2020 தினங்களில்  குஜராத்திலுள்ள காந்திநகரில்  நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

உலகம்

  • ஆமான் - 19’ (AMAN-19) என்ற பெயரில் 46 நாடுகள் பங்கேற்ற சர்வதேச கூட்டு கடற்படை ஒத்திகை பாகிஸ்தான் நாட்டிலுள்ள கராச்சியில்  நடைபெற்றது.

வெளிநாட்டு உறவுகள்

  • கட்லாஸ் எக்ஸ்பிரஸ் 2019’ (‘Cutclass Express 2019’) என்ற பெயரில் 27 ஜனவரி 2019 முதல் 6 பிப்ரவரி 2019 வரையில் நடைபெற்ற பன்னாட்டு கடற்படைகளின் ஒத்திகையில் இந்திய கடற்படையின் சார்பாக "ஐ.என்.எஸ். திரிகாண்ட்” (INS Trikand)   கலந்துகொண்டது.  இந்த பன்னாட்டு இராணுவ ஒத்திகையில் Canada, Comoros, Djibouti, France, India, Kenya, Madagascar, Mauritius, Mozambique, Portugal, Seychelles, Somalia, Tanzania, The Netherlands மற்றும்  the United States ஆகிய நாடுகள் கலந்துகொண்டன.  இந்த ஒத்திகைக்கு ‘அமெரிக்கா - ஆப்பிரிக்கா கமாண்ட்’ (U.S. Africa Command (USAFRICOM))  நிதியுதவி வழங்கி   ‘ஆப்பிரிக்க கடற்படைகள் (Naval Forces Africa ) நடத்தின.
  • பிரவரி 9, 2019 அன்று இந்தியா மற்றும் அமெரிக்க நிறுவனங்களுக்கான கூட்டு ஆராய்ச்சி ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது.

முக்கிய தினங்கள்

  • உலக தானியங்கள் தினம் (World Pulses Day) - பிப்ரவரி 10   | ஐக்கிய நாடுகளவையினால் 2016 ஆம் ஆண்டு ‘சர்வதேச தானியங்கள் ஆண்டாக’ (International Year of Pulses (IYP) அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

விளையாட்டுக்கள்  

  • தேசிய சீனியர் ஆடவர் ஹாக்கி (ஏ டிவிசன்) சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியன் பஞ்சாபை 3-2 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி ரயில்வே அணிபட்டம் வென்றது.
  • ஈரோட்டில் நடைபெற்ற அகில இந்திய மின்வாரிய பெண் ஊழியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் அதிகப் புள்ளிகள் குவித்த குஜராத் அணி ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை வென்றது.
Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!