நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC Current Affairs 9 February 2019

நடப்பு நிகழ்வுகள் 9 பிப்ரவரி 2019
Click Here for Previous Day Current Affairs

தமிழ்நாடு

  • தமிழக பட்ஜெட் 2019 -2020: (நன்றி: தினமணி). நிதியமைச்சராக 8 வது முறையாக, தமிழ்நாடு அரசின் 2019- 2020 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் 8-2-2019 அன்று தாக்கல் செய்தார்.  அவற்றில் முக்கிய அம்சங்கள் வருமாறு.
முக்கிய நிதி ஒதுக்கீடுகள்
  • சுகாதார துறைக்கு ரூ.12,563 கோடி
  • பள்ளிக் கல்வி துறைக்கு ரூ.28,757 கோடி
  • வேளாண் துறைக்கு ரூ.10,551 கோடி
  • நெடுஞ்சாலை துறைக்கு ரூ.13,605 கோடி
  • குடியிருப்புகள் அமைக்க ரூ.4,648 கோடி
  • போக்குவரத்து துறைக்கு ரூ.1,297 கோடி
  • மின்சார வாரியத்துக்கு ரூ.18,560 கோடி
  • சிறுபான்மையினர் நலத்துறைக்காக ரூ.14.99 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
தமிழகப் பொருளாதாரம்
  • மாநிலத்தின் மொத்த கடன்சுமை மார்ச் 31, 2020-இல் ரூ.3,97,495.96 கோடியாக இருக்கும் என்றாலும் இது கடன் விகித வரம்பான 25 சதவீதத்துக்கும் குறைவாகவே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரூ.3.55 லட்சம் கோடியாக இருந்தது.
  • தமிழக தனி நபர் வருமானம் 2017-18 ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 267 ரூபாயாக உயர்ந்துள்ளது.
  • தமிழக பொருளாதாரத்தில் சேவைத் துறையின் பங்கு 51.86% ஆக உள்ளது.
  • தமிழக அரசின் நிதி பற்றாக்குறை 2019-20ம் ஆண்டில் ரூ.44,176 கோடியாக இருக்கும் என பட்ஜெட்டில் தகவல்
  • வரும் நிதி ஆண்டில் அரசின் வருவாய் ரூ.1,97,117 கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
  • தமிழகத்தின் வளர்ச்சி வரும் நிதியாண்டில் 8.16 சதவீதமாக இருக்கும்.
  • வரிகள் மூலம் அரசுக்கு ரூ.1,37,964 கோடி வருவாய் கிடைக்கும்.
  • வரும் நிதியாண்டில் தமிழக அரசின் செலவு ரூ.2,10,240 கோடியாக இருக்கும்.
  • தமிழக அரசுக்கு வரும் நிதியாண்டில் சுமார் ரூ.48 ஆயிரம் கோடி பற்றாக்குறையாக இருக்கும்.
  • வரும் நிதியாண்டில் மத்திய அரசிடம் இருந்து மானியமாக சுமார் ரூ.22 ஆயிரம் கோடி கிடைக்கும்.
  • 2018-19 ஆம் ஆண்டு கணிக்கப்பட்ட வருவாய் பற்றாக்குறை ரூ.19,319 கோடியாக இருந்தது.
  • திருமங்கலத்தை தலையிடமாக கொண்டு கள்ளிக்குடி, திருப்பரங்குன்றம் ஆகிய வட்டங்களை உள்ளடக்கி புதிய வருவாய் கோட்டம் அமைக்கப்படும்.
  • வரும் ஆண்டில் நிதிப்பற்றாக்குறை ரூ.14,314 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நிகழாண்டில் கணக்கிடப்பட்ட ரூ.19,319 கோடியைவிட சுமார் ரூ.5,000 கோடி குறைவாகும்.
  • 2017-18-இல் மாநிலத்தின் வரி வருவாய் 9.07 சதவீதமாக இருந்தது. இது நடப்பு நிதியாண்டில் 14 சதவீதத்தைத் தாண்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விவசாயிகள் நலன்
  • விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு பயிர்க்கடன் வழங்க இலக்கு.
  • இடி மின்னல், திடீர் மழை, இயற்கை தீயால் ஏற்படும் பாதிப்புகளுக்கு காப்பீடு கிடைக்க நடவடிக்கை.
  • பயிர் காப்பீடு திட்டத்திற்கு வரும் நிதி ஆண்டில் ரூ.621.59 கோடி ஒதுக்கீடு.
  • ஆசிய வளர்ச்சி வங்கி போன்ற பன்னாட்டு வங்கிகளிடம் நிதியுதவி கோருவதற்கான விரிவான திட்டத்தை அரசு தயாரித்து வருகிறது. மேலும் 2 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் நுண்ணீர் பாசன திட்டம் செயல்படுத்தப்படும் ரூ.1361 கோடி ஒதுக்கீடு.
  • வரும் நிதி ஆண்டில் 90 சதவீத மானிய விலையில் விவசாயிகளுக்கு 10 குதிரை திறன் கொண்ட 2000 பம்பு செட்டுகள் வழங்கப்படும். சூரிய சக்தியால் இயங்கும் 2000 பம்பு செட்டுகள் மூலம் நீர் மேலாண்மை மேம்படும்.
  • வரும் நிதி ஆண்டில் மேலும் 5000 ஒருங்கிணைந்த பண்ணை அலகுகள் அமைக்கப்படும் ரூ.101.62 கோடி ஒதுக்கீடு
  • ரூ.100 கோடி செலவில் உழவர் உற்பத்தியாளர் குழுக்களும், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளும் உருவாக்கப்படும்.
  • உழவர் உற்பத்தியாளர்களை ஒருங்கிணைக்க உழவர் உற்பத்தியாளர் அமைப்பு கொள்கை உருவாக்கப்பட்டு வருகிறது
  • வேளாண் இயந்திரயமமாக்கலுக்காக ரூ.172 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  • 128 வட்டார அளவிலான வேளாண் இயந்திரங்கள் வாடகை மையம் 360 கிராம அளவிலான வேளாண் இயந்திர வாடகை மையம் அமைக்க உத்தேசம்.
  • பழங்கள் மற்றும் காய்கறி சாகுபடியை ஊக்குவிக்க ரூ.50 கோடி ஒதுக்கீடு
  • இயற்கை வேளாண்மை சான்று அளிக்கும் மையங்கள் அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்படும்
  • வேளாண்மை தோட்டக்கலை கல்லூரிகளை மேம்படுத்த ரூ.79.73 கோடி ஒதுக்கீடு
  • வேளாண்மைத்துறைக்கு மட்டும் பட்ஜெட்டில் ரூ.10,550 கோடி ஒதுக்கீடு
  • வரும் நிதி ஆண்டில் ரூ.10 ஆயிரம் கோடி பயிர்க்கடன் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது
  • பயிர் கடன் மீதான வட்டி தள்ளுபடிக்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு
  • மரபுத் திறன் மிக்க நாட்டின மற்றும் கலப்பின காளைகளை கொண்டு ரூ.100 கோடி திட்ட மதிப்பீட்டில் உறைவிந்து உற்பத்தி நிலையம்
  • உழவர் பாதுகாப்பு திட்டத்திற்காக ரூ.169.81 கோடி நிதி ஒதுக்கீடு.
  • பாசன மேலாண்மை நவீனமயமாக்குதலுக்கு ரூ.235.02 கோடி நிதி ஒதுக்கீடு.
  • காவிரி பாசன பகுதிகளில் பருவ நிலை மாற்ற தழுவல் திட்டத்தை ஆசிய வளர்ச்சி வங்கியின் கடன் உதவியுடன் ரூ.1560 கோடிமதிப்பீட்டில் அரசு செயல்படுத்தி வருகிறது.
  • 2019-20இல் நெல் கொள்முதல் ஊக்கத்தொகைக்காக ரூ.180 கோடி ஒதுக்கீடு
  • 2000 உழவர் உற்பத்தியாளர்கள் குழுக்கள் அமைக்கப்படும்.
  • 100 உழவர் உற்பத்தியாளர் அமைப்புக்கான கொள்கைகள் உருவாக்கப்படும்.
  • சாதாரண நெல் கொள்முதல் குவிண்டாலுக்கு ரூ.1,800, சன்ன ரக நெல்லுக்கு ரூ.1,830 வழங்கப்படும்.
  • கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்டப்படும்.
  • நுண்ணீர் பாசனத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும். இதற்காக ரூ.1361 கோடி செலவில் 2 லட்சம் ஹெக்டேர் செலவில் நுண்ணீர் பாசன திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்.
  • பயிர் கடனை உரிய காலத்தில் செலுத்தும் நபருக்கு வட்டி தள்ளுபடி செய்யப்படும்.
  • விலையில்லா மாடு, ஆடு வழங்கும் திட்டம் வரும் நிதியாண்டிலும் தொடரும். இந்த திட்டத்திற்காக 198.75 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • நிகழ் நிதியாண்டில் விவசாயிகளுக்கான பயிர்க்கடன் இலக்கு ரூ.8 ஆயிரம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அது வரும் நிதியாண்டில் ரூ.10 ஆயிரம் கோடியாக அதிகரிக்கும்.
நகர்புற மேம்பாடு
  • குடிசைப் பகுதிகளை மேம்படுத்தும் குறிக்கோளை அடையும் வகையில், மாநில நகர்ப்புற வீட்டு வசதி மற்றும் குடியிருப்புக் கொள்கையை தமிழக அரசு விரைவில் வெளியிடும். இதன்மூலம், ஏழை-நடுத்தர மக்கள் வீட்டு வசதிச் சந்தையை எளிதில் அணுகி அவர்கள் வாங்கக் கூடிய விலையில் வீட்டுவசதி பெற வழி வகை செய்யப்படும்.
  • வங்கிக்கடன் மூலம் தொழில்களைத் தொடங்கி வருவாயை ஏற்படுத்துவது போன்ற வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்காக நிதிநிலை அறிக்கையில் ரூ.1,031.53 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
வீட்டுவசதி
  • வீட்டுவசதி மற்றும் நகரப்புற மேம்பாட்டுத் துறைக்காக 6,265.52 கோடி ரூபாய் ஒதுக்கீடு
  • சென்னை தவிர்த்து இதர நகரங்களில் வீட்டு வசதியை உருவாக்க ரூ. 5000 கோடி மதிப்பில் ஆசிய வங்கிக் கடன் கோரப்பட்டுள்ளது.
  • வரும் நிதி ஆண்டில் சூரிய மின் சக்தியுடன் கூடிய 20 ஆயிரம் பசுமை வீடுகள் கட்டித் தரப்படும் 420 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  • கஜாபுயல் பாதித்த மாவட்டங்களில் சேதமடைந்த குடிசைகளுக்கு மாற்றாக ஒரு வீட்டுக்கு ரூ.1.70 லட்சம் அலகு தொகை வீதம் ரூ.1700 கோடி திட்ட மதிப்பீட்டில் ஒருலட்சம் வீடுகள் கட்டுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.720 கோடி மத்திய அரசின் பங்காகவும், ரூ.980 கோடி மாநில அரசின் பங்கு தொகையாகவும் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி
  • பள்ளிக் கல்வித்துறைக்காக ரூ.28,757.62 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • தமிழகத்தில் 2018-19 ஆம் நிதியாண்டில் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை 33,519 ஆக குறைந்துள்ளது.
  • மாநிலத்தின் முதன்மை பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகத்தில் கற்பித்தலுக்குத் தேவையான கருவிகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளுக்காக ரூ.100 கோடி நிதியுதவி அளிக்கப்படும்.
  • வரும் நிதியாண்டில் ராமேஸ்வரத்தில் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பெயரில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிறுவப்படும்.
  • பட்ஜெட்டில் உயர்கல்வித் துறைக்கு ரூ.4,584.21 கோடி ஒதுக்கீடு.
  • மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் உலகத்தரம் வாய்ந்த நீச்சல் குளம் உருவாக்கப்படும்.
  • மடிக்கணினி வழங்கும் திட்டத்துக்காக ரூ. 1362.27 கோடி ஒதுக்கீடு.
  • 10,11,12 வகுப்பு மாணவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் சிறப்பு உதவித் தொகை தொடர்ந்து வழங்கப்படும். இதற்காக 313.58 கோடி ஒதுக்கீடு.
  • மாணவர்களுக்கான விலையில்லா புத்தகப்பைகள், நோட்டுப்புத்தகங்கள் வழங்க ரூ. 1656.90 கோடி ஒதுக்கீடு.
  • பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்துக்கு ரூ. 140.11 கோடி ஒதுக்கீடு.
  • மாணவ மாணவிகளுக்கான போக்குவரத்து பயண கட்டண சலுகைக்காக ரூ. 766 கோடி ஒதுக்கீடு.
  • பள்ளிகளில் 3 முதல் 8ஆம் வகுப்பு வரை பெண்குழந்தைகள் கல்வி ஊக்கத் திட்டத்திற்கு ரூ.47.7 கோடி ஒதுக்கீடு
சுகாதாரம் :
  • சுகாதாரத்துறைக்கு ரூ.12,563 கோடி ஒதுக்கீடு.
  • அரசு மருத்துவமனைகள் மூலம் கிடைக்கும் மருத்துவ வசதிகள் ஏழை-எளிய மக்களுக்கு கிடைக்கப்படுவதை உறுதி செய்ய தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.
  • மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப துறைக்கு ரூ.12,563.83 கோடி நிதி ஒதுக்கீடு.
  • அரசு மருத்துவமனைகளில் முக்கிய உடற்பரிசோதனைகள் தொகுப்பாக கிடைக்க உறுதி செய்ய திட்டம்.
  • உலக வங்கி கடனுதவியுடன் ரூ.2,685.91 கோடி செலவில் தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.
  • அனைத்து நிலை மருத்துவமனைகளிலும் முக்கிய உடற்பரிசோதனைகள் தொகுப்பாகக் கிடைப்பதை உறுதிசெய்யும் திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்திற்கு தேவையான உபகரணங்கள், கருவிகள், பொருட்கள் வழங்கப்படும் சிகிச்சை நெறிமுறைகளும் உருவாக்கப்படும். இத்திட்டத்திற்கு 3 ஆண்டுகளில் ரூ.247 கோடி ரூபாய் செலவிடப்படும்.
மின்சாரம்
  • தேனி, சேலம், ஈரோடு மாவட்டங்களில் ரூ.1,125 கோடி மதிப்பீட்டில் 250 மெ.வா. திறன்கொண்ட மிதக்கும் சூரியசக்தி மின்திட்டங்கள்
  • ரூ.2,350 கோடி மதிப்பீட்டில் 500 மெ.வா. திறன்கொண்ட கடலாடி மிகஉய்ய சூரிய மின்னழுத்த பூங்கா திட்டம்
  • சாகுபடிக்கு பயன்படாத சமுதாய மற்றும் பட்டா நிலங்களில் புதுப்பிக்கத்தக்க மின்னுற்பத்தியை ஊக்குவிக்கும் திட்டம்
  • பசுமைச் சூழல் நிதி மூலம் 5 மெ.வா திறன்கொண்ட சிறிய அளவிலான ஊரக புதுப்பிக்கத்தக்க மின்பூங்காவுடன் அம்மா பசுமை கிராமம்.
  • அம்மா பசுமை கிராமம் என்ற நிலையான மின்கிராமங்களை, தமிழ்நாடு மின் மேம்பாட்டு முகமை ஏற்படுத்தும்
  • சூரிய ஒளி மின்சக்தி கொள்கை 2019, மாநிலத்தின் சூரியஒளி மின்சக்தி உற்பத்தி திறனை 2023-க்குள் 9,000 மெகாவாட் அளவுக்கு உயர்த்த வழிவகை செய்யும்
  • எரிசக்தி துறைக்கு ரூ.18,560.77 கோடி ஒதுக்கீடு
மீனவர் நலன்
  • மீன்பிடி தடை காலத்தில் வழங்கப்படும் நிதி உதவி திட்டத்திற்காக 170.13 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இதில் முதல் கட்டமாக 500 இழுவலை படகுகளை மேம்படுத்தப்படும்.
  • பாக் விரிகுடா பகுதியில் ரூ.1600 கோடி திட்ட மதிப்பில் மீன்பிடி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
  • மீன்பிடி துறைமுகங்களை கட்ட தரங்கம்பாடி உள்ளிட்ட இடங்களில் அனுமதி வழங்ப்பட்டுள்ளதாகவும், இதற்காக ரூ.420 கோடி ஒதுக்கீடு.
  • 160 ஐசாட் - 2 செயற்கைக்கோள் தொலைபேசிகள், நேவ்டெக்ஸ் கருவிகள் வழங்கப்படும்.
  • ரூ.420 கோடியில் வெள்ளப்பள்ளம், தரங்கம்பாடி மற்றும் திருவொற்றியூர் குப்பத்தில் மீன் பிடி துறைமுகம் அமைக்க அனுமதி.
காவல்துறை
  • காவல்துறையை நவீனமயமாக்கும் திட்டத்திற்கு ரூ.111.57 கோடி ஒதுக்கீடு.
  • தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறைக்கு நடப்பாண்டில் ரூ.403.76 கோடி ஒதுக்கீடு.
மாற்றுத்திறனாளிகள் நலன்
  • மாற்றுத் திறனாளிகளுக்கான ஊக்கத்தொகை ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
  • மாற்றுத்திறனாளிகளுக்கு 3000 சிறப்பு நாற்காலிகள் மற்றும் 3 ஆயிரம் இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும்.            
பெண்கள் நலன்
  • டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பெயரிலான மகப்பேறு உதவித் தொகை திட்டத்திற்கு ரூ.959.21 கோடி ஒதுக்கீடு.
இளைஞர் நலன்
  • முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கான கல்விக்கட்டணத்தை திருப்பியளிக்க ரூ.460.25 கோடி
மது ஒழிப்பு
  • தமிழகத்தில் 2,698 டாஸ்மாக் கடைகள் மூடப்படும். தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை 7,896ல் இருந்து 5,198ஆக குறைக்கப்பட்டுள்ளது.
நெசவாளர் நலன்
  • நெசவாளர் கூட்டுறவு சங்க மானியங்களுக்காக 150 கோடி ஒதுக்கீடு.
  • கைத்தறி உதவி திட்டத்துக்கு 40 கோடி ஒதுக்கீடு.
  • விலையில்லா வேட்டிகள் வழங்கும் திட்டத்துக்கு ரூ.490 கோடி ஒதுக்கீடு .
தனி தொழில் மின்பாதை:
  • தொழில் துறையின் பிரதான அங்கமாக விளங்கும், சிறு-குறு-நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தடையற்ற தரமான மின்சாரத்தைப் பெறுவதற்காக தனி தொழில் மின்பாதை அமைக்கப்பட்டு தொழிற்பேட்டைகளுக்கு சீரான மின்விநியோகம் செய்யப்படும்.
  • சிறு தொழில் நிறுவனங்களுக்கு உதவும் வகையில், வர்த்தக மற்றும் முதலீட்டு மேம்பாட்டு மையம் என்ற புதிய அமைப்பு உருவாக்கப்படும்.
வேலை வாய்ப்பு பயிற்சி
  • ஆண்டுக்கு 10 ஆயிரம் பொறியியல் பட்டதாரிகளுக்கு உயர்நிலை தொழில்நுட்ப பயிற்சி 5 மாவட்டங்களில் அளிக்கப்படும்.
  • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்துக்கு மாநில அரசின் பங்காக ரூ.250 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
மிதக்கும் சூரியசக்தி மின்திட்டம்
  • தேனி, சேலம், ஈரோடு மாவட்டங்களில் மிதக்கும் சூரியசக்தி மின்திட்டம் செயல்படுத்தப்படும்.
காப்பீட்டுத்துறை
  • விரிவான விபத்துக் காப்பீடு திட்டம் அறிமுகம் : தமிழகத்தில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வரும் குடும்பங்களுக்கு விரிவான விபத்துக் காப்பீடு திட்டம் அறிமுகம் செய்யப்படவுள்ளது. புதிய திட்டம் மூலம் காப்பீட்டுத் தொகை இரண்டு லட்சம் ரூபாயில் இருந்து 4 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் . நிரந்தர ஊனத்துக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.   இந்த புதிய விரிவான காப்பீடு திட்டத்திற்கு ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • ஆயுள் காப்பீடு திட்டத்தின் மூலம் இயற்கை மரணத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணத் தொகை..
தொழிலாளர் நலன்
  • அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்க 148.83 கோடி ஒதுக்கீடு.
  • மத்திய அரசின் ஒய்வூதிய திட்டமானது அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.
  • சுற்றுலா திட்டங்களை மேம்படுத்த ரூ 100 கோடி ஒதுக்கீடு.
  • மத்திய அரசு புதிதாக அறிவித்துள்ள ஓய்வூதியத் திட்டத்தின் பயனை அமைப்புசாரா தொழிலாளர்கள் பெறும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்கப்படும்.
  • நவீன உயர்நிலை தொழிற்பிரிவுகளுக்கான பயிற்சிகள், 20 அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்களில் ரூ.38 கோடி செலவில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.
போக்குவரத்துத்துறை
  • போக்குவரத்து துறைக்காக ஒட்டுமொத்தமாக ரூ.1297.83 கோடி ஒதுக்கீடு.
  • ஜெர்மன் வங்கி கடனுதவியில் ரூ.5,890 கோடி செலவில் 12,000 பி.எஸ். தர பேருந்துகளும், 2 ஆயிரம் மின்சார பேருந்துகளும் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக சென்னை, மதுரை, கோவையில் 500 மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தமிழகத்தில் முதல் முறையாக 500 மின்சார பேருந்துகளை சென்னை, கோவை, மதுரையில் இயக்க நடவடிக்கை.
  • மீனம்பாக்கம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் திட்ட வழித்தடம் நீட்டிப்பதற்கான சாத்தியக் கூறுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன
  • சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ஆம் கட்டத்தின் கீழ் 118.90 கி.மீ நீளமுள்ள 3 மெட்ரோ ரயில் வழித்தடங்கள் அமைக்கப்படவுள்ளன. மாதவரம்-சோழிங்கநல்லூர், மாதவரம்-கோயம்பேடு பேருந்து நிலையம் வரை 52.01 கி.மீ நீளமுள்ள வழித்தடங்களில் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக, ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை ரூ.20,196 கோடி நிதியுதவி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது
  • வரும் நிதியாண்டில், 1,986 கி.மீ. நீளமுள்ள சாலைகளில் ரூ.1142 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
  • நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறைக்காக ரூ.13,605.19 கோடி ஒதுக்கீடு.
  • அரசு-தனியார் பங்களிப்பு முறையில், நிலத்தடியில் 2 லட்சம் நான்கு சக்கர வாகனங்கள், 4 லட்சம் இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கான, ரூ.2000 கோடி செலவில் சென்னையில், விரிவான ஒருங்கிணைக்கப்பட்ட வாகன நிறுத்த மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும்.
  • செயல்பாட்டு அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்த முறையின் கீழ் இதுவரை ரூ.3,074.84 கோடி மதிப்பீட்டில் 1,768 கி.மீ. சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. செயல்பாட்டு அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்த முறை மாநிலம் முழுவதும் படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு வருகிறது
  • வரும் நிதியாண்டில் சிவகங்கை கோட்டத்திற்கு விரிவுபடுத்தப்பட்டு 622 கி.மீ. சாலைப் பணிகள் ரூ.715 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.
கால்நடை வளர்ப்பு
  • மரபு திறன் மிக்க கலப்பின காளைகளின் விந்துகளை கொண்டு புதிய உறை விந்து உற்பத்திய நிலையம் அமைக்கப்படும்.
விளையாட்டு
  • சர்வதேச போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு ஊக்கத்தொகை வழக்கும் திட்டத்துக்காக ரூ 7.48 கோடி ஒதுக்கீடு.
ஊரக வளர்ச்சி
  • ஊரக வளர்ச்சித்துறைக்கு ரூ. 18,273 கோடி ஒதுக்கீடு.
  • பிரதமரின் ஊரக வீட்டு வசதி திட்டத்திற்கு ரூ. 2,276 கோடி.
தமிழ் வளர்ச்சி
  • தமிழ் மொழி வளர்ச்சிக்காக ரூ.54.76 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. யுனெஸ்கோ தயாரித்துள்ள செல்வாக்குள்ள மொழி பட்டியலில் தமிழ் 14வது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் தமிழை 10வது இடத்திற்கு கொண்டுவர முயற்சி  எடுக்கப்பட்டுள்ளது.
  • ஹார்வார்டு பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை நிறுவப்பட்டுள்ளது. பிற சர்வதேச பல்கலைக்கழகங்களிலும் தமிழ் இருக்கை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
இதர நிதி ஒதுக்கீடுகள் / திட்டங்கள்
  • தூய்மை இந்தியா திட்டத்திற்காக ரூ 400 கோடி ஒதுக்கீடு.
  • சொத்து பரிமாற்றங்களுக்கான பதிவு கட்டணம் 30 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்படும்
  • கல்வி, பாலின சமத்துவம் உள்ளிட்ட குறியீடுகளில் தனிக்கவனம் செலுத்த மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியத்திற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு.
  • வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்காக ரூ.1031 கோடி நிதி ஒதுக்கீடு
  • ஸ்ரீபெரும்பதூர் அருகே ஒரத்தூரில் அடையாற்றில் நீர்தேக்கம்.
  • சமூக பாதுகாப்பு உதவித் தொகை வழங்க ரூ.3958 கோடி ஒதுக்கீடு.
  • நகராட்சிகளில் குடிநீர் தேவைக்காக ரூ.18,700 கோடி ஒதுக்கீடு .
  • நிரந்தர வெள்ள தடுப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.284.70 ஒதுக்கீடு.
  • நபார்ட் திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளை மேற்கொள்ள ரூ.811 கோடி நிதி ஒதுக்கீடு.
  • மாநில பேரிடர் நிவாரண நிதிக்காக 825 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  • மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறைக்கு ரூ. 12,563.83 கோடி நிதி ஒதுக்கீடு.
  • அத்திக்கடவு அவினாசி திட்டம் விரைவில் தொடங்கப்படும். அந்த திட்டத்திற்காக ரூ.1000 கோடி ஒதுக்கீடு. அத்திக்கடவு அவினாசி திட்டத்தின் ஒரு பகுதியாக சுய பயன்பாட்டிற்கு ரூ.132.80 கோடி செலவில் சூரிய ஒளி மின்திட்டம்.
  • மாற்றுத்திறனாளிகளுக்கு 3,000 ஸ்கூட்டர்கள் வழங்கப்படும்.
  • சென்னையில் விரிவான திடக்கழிவு மேலாண் திட்டத்தை ரூ.1546 கோடி ரூபாயில் செலவில் மேற்கொள்ள நிர்வாக அனுமதி.
  • கொடுங்கையூர் பெருங்குடி குப்பை கிடங்கில் மின்சாரம் தயாரிக்கும் அலகினை தனியார் பங்களிப்புடன் ரூ.5259 கோடியில் செயல்படுத்த பரிசீலனை.
  • நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ.18,700 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  • அரவக்குறிச்சி உள்ளிட்ட இடங்களில் கூட்டுகுடிநீர் திட்டங்களை மேற்கொள்ள ரூ.1558.87 கோடி ஒதுக்கீடு.
  • 2030 ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீட்டு வசதி கிடைக்கும் நகர்ப்புர வீட்டுவசதி மற்றும் குடியிருப்பு கொள்ளை விரைவில் வெளியிடப்படும்.
  • ரூ.116 கோடி செலவில் நீரோடி, மார்த்தாண்டத்துறை ஆகிய இடங்களில் கடலரிப்பு தடுப்பான்கள் அமைக்க அனுமதி.
  • 80 ஆழ்கடல் மீன் பிடி குழுக்களுக்கு 240 நேவிக் தகவல் பெறும் கருவிகள், 160 ஐசாட்-2 தொலைபேசிகள் வழங்கப்படும்.
  • நீர்நிலைகளை பொதுமக்கள் பங்களிப்புடன் புனரமைக்கும் குடிமராமத்து திட்டத்திற்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு.


இந்தியா

  • ‘கட்லாஸ் எக்ஸ்பிரஸ் - 19’ (‘CUTLASS EXPRESS – 19’) என்ற பெயரில் 27 ஜனவரி 2019 முதல் 06 பிப்ரவரி 2019 வரையில் நடைபெற்ற பன்னாட்டு கடற்படைப் பயிற்சியில் இந்தியாவின் சார்பாக ‘ஐ.என்.எஸ்.திரிகாண்ட்’ (INS Trikand) போர்க்கப்பல் பன்கேற்றது.
  • மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் ஒப்புகை சீட்டு வழங்கும் (Voter Verification and Information Programme (VVIP)) முறையை வரும் மக்களவைத் தேர்தலில் முழுமையாக அமல்படுத்தவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
  • இந்தியாவில் ‘பொது நலன் வழக்கின்’ (public interest litigation) தந்தை என அழைக்கப்படுபவர் - நீதியரசர் P.N. பக்வதி(Justice P.N. Bhagwati)
  • ’செண்டினல் பழங்குடியினர்கள்’ (Sentinelese Tribe) : வங்காள விரிகுடாவில் காணப்படும் , வடக்கு செண்டினல் தீவில் வசிக்கும் இந்த பழங்குடியினரின் எண்ணிக்கை 2011 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி  50 ஆகும்.  இந்த தீவைச் சுற்றியுள்ள 5 கி.மீ. கடற்கரைப் பகுதிகள்  பழங்குடிகள் சிறப்புப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
  • இரண்டாவது, ’ஏசியான் - இந்தியா இளைஞர்கள் கூடுகை’ (ASEAN – India Youth Summit) 7 பிப்ரவரி 2019 அன்று அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் ‘தொடர்பு ; பங்களிப்புடன் கூடிய வளத்திற்கான வழி’ ( ‘Connectivity : Pathway to Shared Prosperity) எனும் தலைப்பில்  நடைபெற்றது.
  • விவசாயிகளை அவர்கள் கைவசம் வைத்துள்ள நிலத்தின் அளவைப் பொறுத்து மத்திய வேளாண் அமைச்சகம் வகைப்படுத்தியுள்ளது. இந்த வகைப்பாடு,  இனி நடத்தப்படும் விவசாய கணக்கெடுப்பில் பயன்படுத்தப்படும். கடைசியாக கடந்த 2015-16 ஆண்டுகளில் விவ்சாய கணக்கெடுப்பு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போதைய  விவசாயிகளின் வகைப்பாட்டின்  விவரம் வருமாறு, 
    • குறு (Marginal) - 00 ஹெக்டேருக்கு (hectare) குறைவாக நிலம் உடையவர்கள்
    • சிறு (Small) - 00 முதல் 2.00 ஹெக்டேர்
    • அரை - நடுத்தர (Semi-medium) - 2.00 முதல் 4.00 ஹெக்டேர்
    • நடுத்தர (Medium) - 4.00 முதல் 10.00 ஹெக்டேர்
    • பெரிய (Large) - 10.00 ஹெக்டேர் மற்றும் அதற்கும் மேல்
  • 'ஹெலினா' ஏவுகணை : எதிரிகளின் ராணுவ டாங்க்குகளை, ஹெலிகாப்டரில் இருந்து ஏவி தாக்கவல்ல, அதிநவீன, 'ஹெலினா' ஏவுகணை, 8-2-2019 அன்று ஒடிசா மாநிலம், பாலசோர் மாவட்டத்தில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை மையம் அருகே  வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.ஹெலினா ஏவுகணை, 7 - 8 கி.மீ., பாய்ந்து சென்று, எதிரிகளின் ராணுவ டாங்க்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கக் கூடியவை.  ஹெலினா ஏவுகணை, டி.ஆர்.டி.ஓ., எனப்படும், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் தயாரிக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள, அதிநவீன, டாங்கிகள் அழிப்பு ஏவுகணைகளில் ஒன்றாக, ஹெலினா கருதப்படுகிறது.

வெளிநாட்டு உறவுகள்

  • வங்காளதேசத்தின் 1800 குடிமைப்பணி பணியாளர்களுக்கு இந்தியாவின் புது தில்லியில் அமைந்துள்ள ‘தேசிய நல்லாட்சி மையத்தில்’ பயிற்சி வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியா மற்றும் வங்காள தேச நாடுகளுக்கிடையே 8-2-2019 அன்று செய்துகொள்ளப்பட்டது.
  • Large Aircraft Infrared Countermeasures (LAIRCAM) மற்றும் Self-Protection Suites (SPS) ஆகிய இரண்டு அதிநவீன ஏவுகணைகளை இந்தியாவிற்கு விற்பனை செய்வதற்கு அமெரிக்கா ஒப்புதல் வழங்கியுள்ளது.  இந்த இரு ஏவுகணைகளும் பிரதமர் மற்றும் குடியரசுத்தலைவர் பயணிக்கும் விமானங்களின் பாதுகாப்பை மேம்படுத்தப் பயனுள்ளதாக இருக்கும்.
  • இந்தியாவில் பெண்கள் முன்னேற்றத்துக்கு இரு திட்டங்களை செயல்படுத்த இருப்பதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
    • பெண்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்குவதன் மூலம், அவர்களது பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகை செய்வதற்கான இரண்டு திட்டங்களை இந்தியாவில் செயல்படுத்தப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
    • உலக பெண்கள் முன்னேற்றம் மற்றும் பொருளாதார வளர்ச்சி (டபிள்யூ-ஜிடிபி) என்ற பெயரிலான இந்த திட்டம் அதிபர் டிரம்ப்பின் மகளும், அவரு மூத்த ஆலோசகருமான இவாங்கா டிரம்ப்பின் தலைமையில் செயல்படுத்தப்படும்.
    • அந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் பெண்கள் முன்னேற்றத்துக்கான ஒரு திட்டத்தை அமெரிக்கா செயல்படுத்தவிருக்கிறது. தனியார் குளிர்பான நிறுவனத்துடன் இணைந்து, அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு அமைப்பு இந்தத் திட்டத்தை செயல்படுத்தும். இந்தத் திட்டத்தின்படி, பெண்களுக்கு வேளாண் பொருள்களுக்கான விநியோக வசதிகளை வழங்குவதன் மூலம் அவர்களது பொருளாதார முன்னேற்றத்துக்கு வழிவகை செய்யப்படும். மேலும், பெண் தொழில் முனைவோருக்கு இந்தியாவின் இண்டஸ்இண்ட் சிறுதொழில் கடன் வங்கியின் மூலம் கடன் வழங்கப்படும். இதற்காக அமெரிக்காவின் வெளிநாட்டு தனியார் முதலீட்டு அமைப்பின் (ஓபிஐசி) மூலம் 10 கோடி டாலர் (சுமார் ரூ.712 கோடி) அந்த வங்கியில் முதலீடு செய்யும்.
    • இந்தியாவில் செயல்படுத்தப்படவுள்ள மற்றோர் திட்டத்தில், இந்திய பெண் தொழில்முனைவோர் தங்களது தயாரிப்புகளை ஆப்பிரிக்கா, ஆசியா, மத்திய அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான அவர்களது திறன் மேம்படுத்தப்படும்.

பொருளாதாரம்

  • ‘துணைப் பிணையம் இல்லாமல் பெறும் விவசாயக்கடன் ’ (collateral-free agriculture loans) தொகையை ரூ.1 இலட்சத்திலிருந்து ரூ.1.6 இலட்சம் தொகையாக மத்திய ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது.
  • இந்தியாவில் 61 பேரிடம் ரூ.100 கோடிக்கு மேல் சொத்து : நாட்டில் உள்ள, 130 கோடி பேரில், 61 பேர் தான், தங்களிடம், 100 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து உள்ளதாக மத்திய நிதித் துறை இணை அமைச்சர், பொ.ன் ராதாகிருஷ்ணன், லோக்சபாவில்  தெரிவித்துள்ளார்.

முக்கிய தினங்கள்

  • தேசிய ‘ குடற்புழு நீக்க ‘ தினம் (national deworming day) - பிப்ரவரி 8
  • ’உஜ்வாலா உத்சவ்’ தினம் (Ujjwala Utsav) - பிப்ரவரி 7 | பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா (Pradhan Mantri Ujjwala Yojana) - திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியதில் எண்ணைய் நிறுவனங்களின் பங்களிப்பை பாராட்டும் வகையிலான நிகழ்வு.
    • கூ.தக. : பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா - திட்டத்தை பிரதமர் மோடி அவர்கள் உத்தரப்பிரதேச மாநிலம் , பாலி (Balli) பகுதியில்  1 மே 2016 அன்று தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.
  • சர்வதேச பெண் உருச் சிதைப்பு எதிர்ப்பு தினம் (International Day of Zero Tolerance for Female Genital Mutilation) - பிப்ரவரி 6

விளையாட்டுக்கள்  

  • தாய்லாந்தில் நடைபெற்ற ‘EGAT Cup’ பழுதூக்கும் போட்டியில் 49 கிலோ பிரிவில் இந்தியாவின் சாய்கோம் மீராபாய் சானு (Saikhom Mirabai Chanu) தங்கம் வென்றுள்ளார்.

புத்தகங்கள் / ஆசிரியர்கள்

  • சமீபத்தில் (பிப்ரவரி8, 2019) உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி  ரஞ்சன் கோகாய் வெளியிட  குடியரசுத்தலைவர்  ராம் நாத் கோவிந்த் பெற்றுக்கொண்ட, “Law, Justice and Judicial Power: Justice P.N. Bhagwati’s Approach” என்ற புத்தகத்தின் ஆசிரியர் - மூல் சந்த் சர்மா (Mool Chand Sharma) 

Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!