Need anything? Search here.

குரூப் II, IIA 2020 (New Syllabus) Test Batch

30 தேர்வுகள் (ஒவ்வொரு தேர்விலும் 200 வினாக்கள்)

Join Now - Tamil Medium | English Medium

TNPSC Current Affairs 15 January 2020

TNPSC Current Affairs 15 January 2020

தமிழ்நாடு

 • தமிழ் வளர்ச்சி விருதுகள் 2019 :
  • தமிழ்த்தாய் விருது -  சிகாகோ தமிழ் சங்கம்
  • கபிலர் விருது -  புலவர் வெற்றியழகன்
  • உவே.சா., விருது - வெ. மகாதேவன்
  • கம்பர் விருது -  சரஸ்வதி ராமநாதன்
  • சொல்லின் செல்வர்' விருது - சிந்தனை கவிஞர் கவிதாசன்
  • மறைமலை அடிகளார் விருது - முத்துக்குமாரசாமி
  • ஜி.யு.போப் விருது - மரிய ஜோசப் சேவியர்
  • உமறுப்புலவர் விருது - லியாகத் அலிகான்
  • இளங்கோவடிகள் விருது - கவிக்கோ திருஞானசம்பந்தர்
  • அம்மா இலக்கிய விருது - உமையாள் முத்து
  • சிங்காரவேலர் விருது -அசோகா சுப்பிரமணியன்
  • மறைமலையடிகளார் விருது - புலவர் முத்து குமாரசுவாமி
  • அயோத்திதாச பண்டிதர் விருது -புலவர் வே.பிரபாகரன்
  • முதலமைச்சர் கணினி தமிழ் விருது 2018 -நாகராஜன்
  • சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது - முகமது யூசுப், மஸ்தான் அலி, முருகேசன், கடிகாசலம், மரபின் மைந்தன், வத்சலா, முருகுதுரை, மாலன், கிருசாங்கினி, மதிவாணன்
 • உலக தமிழ் சங்க விருதுகள்
  • இலக்கிய விருது - ராஜேந்திரன் (மலேசியா)
  • இலக்கண விருது - முத்து கஸ்துாரிபாய் (பிரான்ஸ்)
  • மொழியியல் விருது - சுபதினி ரமேஷ் (இலங்கை)
 • தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில் திருவள்ளுவா் திருநாள் விருதுகள் 2020 அறிவிக்கப்பட்டுள்ளன. விருது பெற்றோர் விவரம் வருமாறு,
  • திருவள்ளுவா் விருது 2020 - ந.நித்தியானந்த பாரதி
  • பேரறிஞா் அண்ணா விருது 2019 - முனைவர் கோ.சமரசம்
  • பெருந்தலைவா் காமராசா் விருது 2019 - முனைவர் மா.சு.மதிவாணன்
  • மகாகவி பாரதியாா் விருது 2019 - முனைவர் ப. சிவராஜி
  • பாவேந்தா் பாரதிதாசன் விருது 2019 - த.தேனிசை செல்லப்பா
  • தமிழ்த் தென்றல் திரு.வி.க விருது 2019 - முனைவர் சே.சுந்தரராசன்
  • முத்தமிழ்க் காவலா் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது - மருத்துவர் மணிமேகலை கண்ணன்
 • பார்சல் சேவையில், 328 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி, தேசிய அளவில் தமிழகம் நான்காமிடம் பெற்றுள்ளது.
 • Salient Statistics on Agriculture” என்ற பெயரில் 2019 ஆம் ஆண்டிற்கான புள்ளி விவரங்களின் அடிப்படையிலான வேளான் புள்ளி விவரப் புத்தகத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இந்தியா

 • ஒருங்கிணைந்த சாலை விபத்து தரவுத்தளத்தை (Integrated Road Accident Database (IRAD))  மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆகியோர் இணைந்து  13-1-2020 அன்று தொடங்கி வைத்துள்ளனர்.
  • இதனை ஐ.ஐ.டி. மெட்ராஸின் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள்.
  • உலக வங்கியின் ரூ.258 கோடி நிதியுதவியுடன் உருவாக்கப்பட்ட இந்த தரவு தளமானது, National Informatics Centre (NIC) இன் மூலம் அமல்படுத்தப்படவுல்ளது.
  • இந்த திட்டமானது, முதற்கட்டமாக தமிழ்நாடு, கர்நாடகா, மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் உத்தரப்பிரதேசம்  ஆகிய ஆறு மாநிலங்களில் அமல்படுத்தப்படவுள்ளது.
 • குடியரசுத் தின அணிவகுப்பை தலைமைதாங்கி நடத்தவுள்ள இந்தியாவின் முதல் பெண் இராணுவ அதிகாரி ( first woman parade adjutant )  எனும் பெருமையை  கேப்டன் தானியா ஷெர்கில் (Captain Tania Shergill) பெறவுள்ளார். இவர், 2020 ஆம் ஆண்டு குடியரசுத்தின அணிவகுப்பை நடத்தவுள்ளார்.
  • கூ.தக. : 2019 ஆம் ஆண்டு குடியரசுத்தின அணிவகுப்பில். ஆண்கள் படை பிரிவை தலைமையேற்று நடத்திய முதல் பெண் ராணுவ அதிகாரி எனும் பெருமையை கேப்டன் பாவ்னா கஸ்தூரி (Captain Bhavna Kasturi ) பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச நிகழ்வுகள்

 • சா்வதேச அரசியல் மற்றும் பொருளாதாரம் தொடா்பான ‘ரெய்சினா பேச்சுவாா்த்தை மாநாடு, தில்லியில் 14-01-2020 அன்று தொடங்கியது. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகமும், அப்சா்வா் ரிசா்ச் ஃபவுண்டேஷனும் இணைந்து 3 நாள்கள் இந்த மாநாட்டை நடத்துகிறது.

சர்வதேச நிகழ்வுகள்

 • 5,000 ஒட்டகங்கள் சுட்டுக் கொலை : ஆஸ்திரேலியாவில் தென் பகுதியில் கடும் வறட்சி நிலவி வருவதால், அந்தப் பகுதியில் உள்ள சுமாா் 5,000 ஒட்டகங்கள் சுட்டுக் கொல்லப்பட்டன.
 • உலக குழந்தை வியப்புவினைப்போர் விருது 2020” (Global Child Prodigy Award 2020) இந்திய வம்சாவளி இங்கிலாந்து சிறுவன் , யோகா சாம்பியன் ஈஸ்வர் ஷர்மாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

முக்கிய தினங்கள்

 • இந்திய ராணுவ தினம் (Army Day) - ஜனவரி 15 (சுதந்திரத்திற்கு பின்னர் 1949 ஜன., 15ல் இந்திய இராணுவத்தின் தலைமைப் பொறுப்பை ஆங்கிலேயர் ராய் பட்சரிடம் இருந்து, இந்தியாவின் 'கரியப்பா' ஏற்றார். இந்த வரலாற்று நிகழ்வை கவுரவிக்கும் விதமாக ராணுவ தினம் கொண்டாடப்படுகிறது. )
 • ஆயுதப் படைகள் முன்னாள் படைவீரர் தினம் (Armed Forces Veterans’ Day) - ஜனவரி 14

நியமனங்கள்

 • இந்திய ரிசா்வ் வங்கியின் நான்காவது  துணை ஆளுநராக மைக்கேல் தேவப்ரதா பத்ரா நியமிக்கப்பட்டுள்ளாா். மூன்றாண்டு காலம் இவர் இப்பதவியை வகிப்பார்.
  • கூ.தக. : 1 ஏப்ரல் 1935 ல் கல்கத்தாவில் தொடங்கப்பட்ட இந்திய ரிசர்வ் வங்கியின் தலைமையிடம் மும்பையில் உள்ளது.  இதன் தற்போதைய ஆளுநராக சக்திகாந்த தாஸ் உள்ளார்.  இதர மூன்று துணை ஆளுநர்கள், N S விஸ்வநாதன், B P கன்னுங்கோ மற்றும்  M K ஜெயின் ஆகியோராவர்.
 • இந்தியாவின் சர்வேயர் ஜெனரலாக(Surveyor General of India) லெடினண்ட் ஜெனரல் கிரிஷ் குமார்  (Lt General Girish Kumar)  1 ஜனவரி 2020 முதல் ஓராண்டிற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
  • கூ.தக. : சர்வே ஆஃப் இந்தியா (Survey of India) அமைப்பு 1767 ல் தொடங்கப்பட்டதாகும். இதன் தலைமையிடம்   உத்தர்காண்ட் மாநிலம் டேராடூனில் உள்ளது.

அறிவியல் தொழில்நுட்பம்

 • HFHSD- IN 512 (High Flash High Speed Diesel) என்ற பெயரில் இந்திய கடற்படைக்கான புதிய வகை டீசலை இந்தியன் ஆயில் கார்பரேசன் நிறுவனம் (Indian Oil Corporation (IOC)) அறிமுகப்படுத்தியுள்ளது.

விளையாட்டு

 • 2019 ஆம் ஆண்டில் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், சர்வதேச அளவில் 21 தங்கங்கள், 6 வெள்ளிகள் மற்றும் 3 பிரான்ஸ் கோப்பைகளுடன் இந்திய அணி முதலிடத்தைப் பெற்றுள்ளதாக சர்வதேச் துப்பாக்கி சுடுதல் போட்டி கூட்டமைப்பு ( International Shooting Sport Federation (ISSF)) அறிவித்துள்ளது.  இந்த பட்டியலில் இரண்டாமிடத்தை சீனாவும், மூன்றாம் இடத்தை அமெரிக்காவும் பெற்றுள்ளன.
-------------------------------------------------
TNPSC குரூப் 1, 2/2A 2020 (New Syllabus) Test Batch  
30 Tests | 200 Questions Per Tests | Tamil & English Mediums
ADMISSION GOING ON !!!
Download Test Batch Schedule 

முதல் தேர்வை இலவசமாக பயிற்சி செய்யுங்கள் !!!
(Your Registration No. and Password to attend Free Tests and PDF Files of the Exam will be send via Email)

For Queries 
Call : 8778799470  
Email : support@portalacademy.in 

No comments:

Post a comment

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.