நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC Current Affairs 4 September 2020

TNPSC Current Affairs  Today 4-9-2020
தமிழ்நாடு
☛  தமிழக அரசின் பொது சுகாதார சட்டத் திருத்தத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்துள்ளார். கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்காதவர்கள் மீது அபராதம் விதிக்க வழிவகை செய்யும் வகையில் பொது சுகாதாரச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, முகக்கவசம் அணியாதது, சமூக இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்டவை இச்சட்டத்தின்படி குற்றமாக கருதப்படும். கரோனா தடுப்பு நெறிமுறைகளை கடைப்பிடிக்காதவர்கள் மீது சட்ட நடவடிக்கை வழிவகை செய்யப்பட்டுள்ளது.
o கூ.தக. :  தற்போதைய திருத்தத்துடன் , தமிழக அரசின் பொது சுகாதாரச் சட்டம் 1939ல் இதுவரையில்  2  முறை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
☛ புதிய கல்விக்கொள்கை குறித்து ஆராய உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் அபூர்வா தலைமையில் ஒரு 7 பேர் கொண்ட உயர்மட்டக்குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. அந்தக்குழுவில் சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்கள் எஸ்.பி.தியாகராஜன், பி.துரைசாமி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் கே.பிச்சுமணி, அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் என்.ராஜேந்திரன், மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கிருஷ்ணன், திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.தாமரைச்செல்வி ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியா
☛ ”டைம்ஸ் உயர் கல்வி உலக பல்கலைக்கழகங்களின் தரவரிசை 2021’ (Timers Higher Education - World University Ranking 2021) ல் இந்திய பல்கலைக்கழகங்களில் முதல் மூன்று இடங்களை முறையே, இந்திய அறிவியல் நிறுவனம், பெங்களூரு (Indian Institute of Science, Bengaluru) , ஐ.ஐ.டி, ரோபார் மற்றும் ஐ.ஐ.டி. இந்தூர் ஆகியவை பெற்றுள்ளன.
o உலக அளவில் , முதல் மூன்று இடங்களை முறையே ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம், இங்கிலாந்து, ஸ்டான்ஃபோர்டு பல்கலைகழகம், அமெரிக்கா மற்றும் ஹார்வர்டு பல்கலைக்கழகம், அமெரிக்கா ஆகியவை பெற்றுள்ளன.
☛ குவைத்திலிருந்து, ஒடிசாவுக்கு 20 லட்சம் பேரல்கள் கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல், இலங்கை அருகே வந்தபோது, தீ விபத்தில் சிக்கியுள்ளது . இந்த கப்பல், மத்திய அமெரிக்க நாடான பனாமாவுக்கு சொந்தமானது என்றும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்காக பெட்ரோலிய பொருட்களை ஏற்றி வந்ததாகவும் தெரியவந்துள்ளது.
☛   13 வது உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீடு பட்டியல் 2020 (Global Innovation Index 2020) ல் இந்தியா 48-ம் இடத்தைப் பிடித்துள்ளதன் மூலம், முதல் முறையாக முதல் 50 நாடுகளில் ஒன்றாக நுழைந்துள்ளது. இந்த பட்டியலில் முதல் மூன்று இடங்களை முறையே சுவிட்சர்லாந்து, ஸ்வீடன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் பெற்றுள்ளன.
o கூ.தக. : உலக அறிவுசார் சொத்து நிறுவனம், கார்னெல் பல்கலைக்கழகம் மற்றும் இன்சீட் பிசினஸ் ஸ்கூலும் இணைந்து 2020-ம் ஆண்டுக்கான உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீடு பட்டியலை வெளியிட்டிருக்கின்றன.
வெளிநாட்டு உறவுகள்
☛  அமெரிக்க – இந்திய உத்திகள் வகுத்தல் மற்றும் பங்கேற்றல் அமைப்பின்(US-India Strategic Partnership Forum (USISPF) ) அமெரிக்க-இந்திய 2020 (US-India 2020) உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி அவர்கள் 4-9-2020 அன்று உரையாற்றினார்.
☛ அங்காரா அப்பாஜி மற்றும் கோபிந்த பட்நாயக் ஆகிய இரு இந்தியர்களை சர்வதேச பயஙகரவாதிகளாக பட்டியலிட பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சிகள் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலால் முறியடிக்கப்பட்டுள்ளது.
☛ இந்தியாவில் அதிநவீன ஏகே-47 203 ரக துப்பாக்கிகளைத் தயாரிப்பதற்காக, இந்தியா, ரஷியா இடையே மிக முக்கியமான தளவாட உற்பத்தி ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.
o இந்த துப்பாக்கிகளை இந்தியாவின் ஆயுத தளவாட தொழிற்சாலை(ஓஎஃப்பி), ரஷியாவின் ஆயுதத் தயாரிப்பு நிறுவனமான கலஷ்னிகோவ் கன்சொ்ன், அந்நாட்டு அரசின் ஆயுத ஏற்றுமதி நிறுவமான ரோசோபோரோன் ஆகியவை இணைந்து உருவாக்கியுள்ள இந்தியா-ரஷியா ஃரைபிள்ஸ் பிரைவேட் லிமிடெட் எனும் கூட்டு நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
o இதில், இந்திய ஆயுதத் தளவாட தொழிற்சாலையின் பங்களிப்பு 50.5 சதவீதமாகவும், கலஷ்னிகோவின் பங்களிப்பு 42 சதவீதமாகவும், ரோசோபோரோனின் பங்களிப்பு 7.5 சதவீதமாகவும் இருக்கும்.
o இந்தியாவில் உத்தர பிரதேச மாநிலம், கோா்வாவில் பிரதமா் நரேந்திர மோடி கடந்த ஆண்டு திறந்துவைத்த ஆயுதத் தளவாடத் தொழிற்சாலையில் இந்த துப்பாக்கிகள் தயாரிக்கப்படும்.
o கூ.தக. : தற்போதைய ஏகே-47 ரக துப்பாக்கிகள் கடந்த 1996-ஆம் ஆண்டில் இருந்து இந்திய ராணுவத்தில் பயன்பாட்டில் உள்ளன.
சர்வதேச நிகழ்வுகள்
☛ லெபனான் நாட்டின் புதிய பிரதமராக முஸ்தஃபா அடிப் (Mustapha Adib) நியமிக்கப்பட்டுள்ளார்.
☛ துபையில் முதல்முறையாக 55 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஓய்வு விசா என்ற புதிய நுழைவு இசைவுத் திட்டத்தை அந்நாட்டு பிரதமர் ஷேக் முகமது அறிவித்துள்ளார் . இதன்படி, ”துபையில் ஓய்வு பெறுதல்” என்ற திட்டத்தின் கீழ் 55 வயதிற்கு மேற்பட்டவர்கள் துபையில் தங்குவதற்கு விண்ணப்பிக்கலாம். ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் வெளிநாடுகளில் உள்ள அனைவரும் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.
☛ உலகம் முழுவதும் கொரோனா பரவல் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க உலக சுகாதார அமைப்பு ஒரு குழுவை அமைத்து உள்ளது. முன்னாள் லைபீரிய அதிபர் எலன் ஜான்சன் சிர்லீஃப், முன்னாள் நியூசிலாந்து முன்னாள் பிரதமர் ஹெலன் கிளார்க். தோடு இணைந்து குழுவின் தலைவர்களாக இருப்பார்கள்.
நியமனங்கள்
☛ ’பிரஸ் டிரஸ்ட் ஆஃ இந்தியா’ (Press Trust of India) அமைப்பின் புதிய தலைவராக ஆவீர் சர்க்கார் ( Aveek arkar) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர், ஆனந்தா பஷார் (Ananda Bazar) பத்திரிக்கைக் குழுமத்தின் துணைத்தலைவராக உள்ளார்,
☛ மறுசீரமைக்கப்பட்டுள்ள, இந்திய இரயில்வே வாரியத்தின் (Indian Railway Board) முதலாவது, தலைமைச் செயல் அதிகாரியாக (Chief Executive Officer (CEO)) வினோத் குமார் யாதவ் (Vinod Kumar Yadav) நியமிக்கப்பட்டுள்ளார்.
புத்தகங்கள் / ஆசிரியர்கள்
☛ “Let Us Dream” என்ற பெயரில் புதிய புத்தகத்தை போப் பிரான்ஸிஸ் (Pope Francis) எழுதியுள்ளார்.
Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!