நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC Current Affairs in Tamil - 23-25 February 2021

TNPSC Current Affairs 23-25 பிப்ரவரி 2021

Click Here to Subscribe for Current Affairs PDF

(Registered Aspirants will get current affairs PDF files to your email ID)

தமிழ்நாடு

☞ நெய்வேலியில் 1000 மெகாவாட் திறனுள்ள புதிய அனல் மின் திட்டம் மற்றும் என்எல்சிஐஎல் நிறுவனத்தின் 709 மெகா வாட் சூரிய மின் சக்தி திட்டம் ஆகியவற்றை நாட்டுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி 25-2-2021 அன்று நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

☞ அரசுப் பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது 59-இல் இருந்து 60 ஆக உயர்த்தப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.2021 மே மாதம் 31-ஆம் தேதிக்குள் ஓய்வு பெறும் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் இந்த ஓய்வுபெறும் வயது வரம்பு பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

☞ திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டானில் புதிதாக அமைக்கப்பட உள்ள உணவுப் பூங்காவுக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி 24-2-2021 அன்று அடிக்கல் நாட்டினார். திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் 50 ஏக்கர் பரப்பில் அமைக்கப்படவுள்ள இந்த உணவுப் பூங்காவில் உணவுப் பொருள் சோதனை ஆய்வகம், 5,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதனக் கிடங்கு, 7,500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்புக் கிடங்கு, சிப்பம் கட்டும் மைய

☞ "பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர்., பாரம்பரிய நெல் பாதுகாவலர் விருது 2021' : பாரம்பரிய நெல் ரகங்களைப் பாதுகாத்து பயிரிடும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், தமிழக அரசின், "பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர்., பாரம்பரிய நெல் பாதுகாவலர் விருது' நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சக்திபிரகதீஷ், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வேல்முருகன், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த உ.சிவராமன் ஆகிய மூன்று பேருக்கு வழங்கப்பட்டது.

☞ மூன்றாவது உலகத் திருக்குறள் மாநாடு, தஞ்சாவூரில் , பாரத் அறிவியல் - நிர்வாகவியல் கல்லூரியில், 26-28 பிப்ரவரி 2021 தினங்களில் நடைபெறுகிறது. தமிழ்நாடு அரசின் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தஞ்சாவூர் பாரத் அறிவியல் - நிர்வாகவியல் கல்லூரி, ஆஸ்திரேலியா மெல்போர்ன் தமிழ்ச் சங்கம், இளங்காடு நற்றமிழ்ச் சங்கம், தஞ்சாவூர் தமிழ்த்தாய் அறக்கட்டளை சார்பில் இம்மாநாடு நடைபெறவுள்ளது.

☞ தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு சிறப்பு டிஜிபியாக பதவி வகித்த ராஜேஷ்தாஸ் மீது கூறப்படும் பாலியல் புகாா் குறித்து விசாரணை செய்ய கூடுதல் தலைமைச் செயலா் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் 6 போ் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அவா் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளாா்.

கூ.தக. : காவல்துறையில் இருந்து வரும் பாலியல் தொடா்பான புகாா்களை விசாகா கமிட்டி விசாரணை செய்யும். ஆனால், இப்போது டிஜிபி அளவிலான அதிகாரி, பாலியல் புகாரில் சிக்கியிருப்பதால் கூடுதல் தலைமைச் செயலா் அளவிலான பெண் ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

உள்நாடு, வெளிநாட்டு நிறுவனங்களை ஈர்க்க நிதி தொழில்நுட்ப நகரம் சென்னை அருகில் உள்ள காவனூரில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகத்தின் மூலம் உருவாக்கப்பட்டு வருகிறது.

டாக்டர் சி.ரங்கராஜன் குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு கடன் வழங்கும் நிறுவனமாக தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தை வலுப்படுத்துவதற்கும் அதன் செயல்பாடுகளை விரிவாக்குவதற்கும் கூடுதல் மூலதனமாக ரூ.1,000 கோடியை தமிழ அரசு வழங்கவுள்ளது. இதற்காக 2021-22-ம்ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவு திட்ட மதிப்பீடுகளில் ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

‘தமிழ்நாடு மாநில எரிசக்தி கணிப்பான் 2050’ இணையதளத்தை, மின்சாரத்துறை அமைச்சா் பி.தங்கமணி 23-2-2021 அன்று தொடக்கி வைத்தாா். இந்திய எரிசக்தி பாதுகாப்பு சூழல் நிலை காட்சிகள் 2047-க்கு ஏற்ப ‘தமிழ்நாடு மாநில எரிசக்தி கணிப்பான் 2050 (tnsec 2050) என்னும் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.இதன் மூலம், மாநிலத்தின் வருங்கால மின்சாரத் தேவை, விநியோகம், பயன்பாடு உள்ளிட்டவை குறித்து அறிந்து கொள்ள முடியும்.

கப்பலோட்டிய தமிழா் வ.உ.சிதம்பரனாா், முன்னாள் முதல்வா்கள் ஓமந்தூா் ராமசாமி ரெட்டியாா், பி.சுப்பராயன் ஆகியோரின் முழு உருவப் படங்கள் சட்டப் பேரவையில் 23-2-2021 அன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களால திறந்து வைக்கப்பட்டது .

கூ.தக. :

மூதறிஞா் ராஜாஜியின் அமைச்சரவையில் சட்டம் மற்றும் கல்வித்துறை அமைச்சராகப் பணியாற்றியவா் டாக்டா் பி.சுப்பராயன். ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றவா். தலித்துகளுக்கு இந்து கோயில்களில் நுழைய அனுமதி வழங்கும் சட்டத் திருத்தத்தை ஆதரித்தவா். பல்வேறு பொறுப்புகளை வகித்த அவா் தனது வாழ்நாளில் ஒரு சமூக சீா்திருத்தவாதியாக வாழ்ந்தாா். இவரது ஆட்சிக் காலத்தில்தான் முதல் முறையாக அரசு வேலைகளில் தலித்துகள், பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ அரசாணை அமல்படுத்தப்பட்டது.

அரசியலில் தூய்மை, நோ்மையான நிா்வாகம் மக்கள் நலனுக்கே முன்னுரிமை என தமது கொள்கையை வகுத்துக் கொண்டு தமிழகத்தை ஆட்சி செய்து வரலாறு படைத்த ஓமந்தூா் பி.ராமசாமி ரெட்டியாா், மக்களால் ஓமந்தூராா் என அன்புடன் அழைக்கப்பட்டாா். கடந்த 1947-ஆம் ஆண்டு முதல் 1949-ஆம் ஆண்டு வரை தமிழகத்தை உள்ளடக்கிய சென்னை மாகாணத்தின் முதலாவது முதல்வராக பதவி வகித்த பெருமைக்குரியவா். அவரது ஆட்சிக் காலத்தில் பட்டியலின மக்கள் நலனுக்காக தனியாக ஒரு துறை என இல்லாமல் தொழிலாளா் நலத்துறையின் ஒரு பகுதியாகவே ஹரிஜன நலத்துறை இருந்தது. அந்த துறையைப் பிரித்து, அதற்கென தனியாக ஓா் ஆணையரை நியமித்தாா். எனவே அவா் இன்றுவரை ஆதிதிராவிட நலத்துறையின் தந்தை என அழைக்கப்படுகிறாா்.கோயில் நுழைவுப் பிரவேசத்தை அனைத்து கோயில்களிலும் முறைப்படுத்த தனிச்சட்டத்தை தோற்றுவித்தாா். விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தவா். இத்தகைய பெருமை வாய்ந்த, நாட்டுக்காக உழைத்த முப்பெரும் தலைவா்களின் திருவுருவப் படங்களைத் திறப்பது பெருமையளிக்கிறது.

‘பாரதியாரின் பாட்டையும், வ.உ.சி.,யின் மேடைப் பேச்சையும் கேட்டால், புரட்சி ஓங்கும். அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும்’ என ஆங்கிலேயே நீதிபதி ஒருவா் தனது தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளாா்.

எரிசக்தித் துறையின் சார்பில் திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில் ரூ.6,376 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் நிலக்கரியில் இயங்கும் 800 மெகாவாட் திறன் கொண்ட வடசென்னை மிக உய்ய அனல் மின் திட்டம் நிலை-3-ஐ செயல்பாட்டுக்கு கொண்டு வரும் விதமாக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக்காட்சி மூலமாக கொதிகலன் எரியூட்டும் நிகழ்வை 24-2-2021 அன்று தொடங்கி வைத்தார்.

தமிழகத்தைச் சேர்ந்த இரு நிறுவனங்களுக்கு தேசிய தொழில்நுட்ப விருது 2020 (National Technology Awards 2020) : புதுமையான உள்நாட்டு தொழில்நுட்பங்களை வெற்றிகரமாக விற்பனை செய்ததற்காக, தமிழகத்தை சேர்ந்த 2 நிறுவனங்கள் உட்பட 12 நிறுவனங்கள் தேசிய தொழில்நுட்ப விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தைச் சேர்ந்த நிறுவனங்களின் விவரம் வருமாறு,

குறு, சிறு, நடுத்தர தொழில் பிரிவில் சென்னையைச் சேர்ந்த எஸ்.வி.பி. லேசர் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் ஆட்டோ கேம்2டி கேம் மென்பொருள், மற்றும் நகை, பர்னிச்சர் தயாரிப்பில் இந்நிறுவனத்தின் இயந்திர தொழில்நுட்பங்கள் கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்ப்டடுள்ளது.

குறு, சிறு, நடுத்தர தொழில் பிரிவில், தஞ்சாவூரைச் சேர்ந்த அல்ஹல் ஆர் நியூட்ரா பார்ம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனமும் தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்நிறுவனம் நுண் நீர் பாசிகளில் இருந்து டோகோசஹெக்ஸெனோயிக் அமிலம் என்ற ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலத்தை தயாரிக்கும் பசுமை தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. இது இதய நோய் மற்றும் மூளை முடக்கு வாதத்தை தடுக்க கூடியது. இது குழந்தைகளின் மூளை செயல்பாடுகளையும் அதிகரிக்கிறது. இது அமெரிக்கா, ஐரோப்பா, கொரியா, பிரான்ஸ் மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் டை தமிழக நிதியமைச்சராக 10வது முறையாக தமிழக பட்ஜெட்டை ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் 23-2-2021 அன்று தாக்கல் செய்தார். பல்வேறு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு விவரம் வருமாறு:

* மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை - ரூ. 19,420.54 கோடி

*காவல் துறை - ரூ.9,567 கோடி

*தீயணைப்பு மீட்புத்துறை - ரூ.436.68 கோடி

*நீதி, நிர்வாகம் - ரூ.1,437 கோடி

*மீன்வளத்துறை - ரூ.580 கோடி

*மின்துறை - ரூ.7,217 கோடி

*உயர் கல்வித்துறை - ரூ.5,478 கோடி

*வேளாண் துறை - ரூ.11, 982 கோடி

*ஊரக வளர்ச்சித்துறை - ரூ.22, 218.58 கோடி

*பயிர்க் கடன் தள்ளுபடி திட்டம் - ரூ.5,000 கோடி

*நெடுஞ்சாலை துறை - ரூ.6,023.11 கோடி

*கோவை மெட்ரோ ரயில் திட்டம் - ரூ.6,683 கோடி

* நீதித் துறை - ரூ.1,437.82 கோடி

* புரட்சித் தலைவி அம்மா விபத்து மற்றும் ஆயுள் காப்பீட்டு திட்டம் எல்ஐசி (LIC) மற்றும் யுனைடட் காப்பீடு இந்தியாவுடன் இணைந்து தமிழக அரசினால் தொடங்கப்படும் என்று தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டத்திற்கான முழு நிதியையும் தமிழக அரசே ஏற்றுக்கொள்ளும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி,

குடும்பத் தலைவரின் இயற்கை மரணங்களுக்கு காப்பீடு தொகை ரூ.2 லட்சம் வழங்கப்படும். குடும்பத் தலைவரின் விபத்து மரணத்திற்கு ரூ.4 லட்சம் காப்பீடு தொகை வழங்கப்படும். நிரந்தர இயலாமைக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம், தமிழகத்தில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள 55.67 லட்சம் தகுதியான குடும்பங்கள் பயன்பெறுவர்.

*பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் மேற்கூரை அமைப்பதற்கான மானியம் ரூ.70,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

*சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்கான நீா்வழித் தடங்களை பராமரிக்கவும், சதுப்பு நிலத்தின் தன்மையை மீட்டெடுக்கும் வகையில் ரூ. 816 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக இடைக்கால நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

*2022-ம் ஆண்டில் தமிழக அரசின் கடன் ரூ.5.7 லட்சம் கோடியாக உயரும் என, இடைக்கால பட்ஜெட் உரையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

கூ.தக . : 15-வது நிதிக்குழு பரிந்துரைத்துள்ள நிதி மேலாண்மை உத்தியின்படி, மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் கடன் விகிதம் 2020-21ஆம் ஆண்டில் 28.90 சதவீதம் வரையும், 2021-22ஆம் ஆண்டில் 28.70 சதவீதம் வரையும், 2022-23ஆம் ஆண்டில் 29.30 சதவீதம் வரையும் மற்றும் 2023-24ஆம் ஆண்டில் 29.31 சதவீதம் வரையும் இருக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 அன்றைய நிலையில், தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் கடன் விகிதம் 24.98 சதவீதமாகவும், 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 அன்றைய நிலையில் 26.69 சதவீதமாகவும் இருக்கும். அவை, 15-வது நிதிக்குழுவின் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டவையே ஆகும்

இந்திய விமானத்துறை ஆணையம் (Indian Airport Authority) வெளியிட்டுள்ள, வாடிக்கையாளர் சேவை அடிப்படையில் , பயணிகளுக்குப் பிடித்த விமான நிலையங்கள் பட்டியலில் மதுரை விமான நிலையம் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது .முதல் இடத்தை உதய்பூர் விமான நிலையம் பிடித்துள்ளது.

கூ.தக. : இந்திய விமானத்துறை ஆணையம் (Indian Airport Authority) ஆண்டிற்கு இரு முறை நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பயணிகள் சேவை எப்படியிருக்கிறது என்பது பற்றி சர்வே எடுக்கிறது. அந்த அடிப்படையில் கடந்த ஜூலை 2020 முதல் டிசம்பர் 2020 வரையில் எடுக்கப்பட்ட சர்வே முடிவுகளின் படி இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான செயல் இயக்குநராக மருத்துவர் மங்கு ஹனுமந்த ராவை மத்திய அரசு நியமித்தது.

கனடாவில் உள்ள டொரன்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையை உருவாக்க தமிழக அரசு சார்பில் ரூ.1 கோடி நிதியளிக்கப்படும் என்று தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இந்தியா

காகிதமில்லாத பட்ஜெட்டை (paperless budget) தாக்கல் செய்த முதல் இந்திய மாநிலம் எனும் பெருமையை உத்தரப்பிரதேசம் பெற்றுள்ளது . அம்மாநில நிதியமைச்சர் சுரேஷ் கன்னா 2021-2021க்கான மாநில பட்ஜெட்டை 22-2-2021 அன்று காகிதமற்ற முறையில் தாக்கினார்.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு முதன்முறையாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

”VL-SRSAM” எனப்படும் ‘குறைந்த தூர இலக்கைத்தாக்கவல்ல நிலத்திலிருந்து - வான் இலக்கைத் தாக்கும் செங்குத்து ஏவுகணை (Vertical Launch Short Range Surface to Air Missile) முதல் முறையாக 22-2-2021 அன்று ஒடிஷாவின் சந்திபூர் சோதனை தளத்தில் சோதிக்கப்பட்டது. இதனை மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் உருவாக்கியுள்ளது.

இந்தியாவின் முதல் கடலுக்கடியிலான சுரங்கப்பாதையை (first undersea tunnel of India) மும்பையில் அமைப்பதற்காக பணிகள் 2023 ஆம் ஆண்டில் தொடங்கப்படவுள்ளன.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்களுக்கான வரைவு தேசிய கொள்கையை (draft national policy on migrant labours) நிதி அயோக் 24-2-2021 அன்று வெளியிட்டுள்ளது.

”பி.எம். கிஷான்” (PM KISAN - Pradhan Mantri Kisan Samman Nidhi) எனப்படும் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா தொடங்கப்பட்டு 24-2-2021 அன்று இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளது . இந்தியாவில் உள்ள அனைத்து விவசாய குடும்பங்களுக்கும் நில உரிமையாளர்களின் அளவைப் பொருட்படுத்தாமல் வருமான ஆதரவை வழங்குவதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை ஈடுசெய்வதை நோக்கமாகக் கொண்ட இந்த திட்டம் . 24-2-2019 அன்று தொடங்கியது. இந்தத் திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு 6000 ரூபாய் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக மாற்றப்படுகிறது. இந்த தொகை ரூ.2000 வீதம் மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது.

17 வது இந்தியா சர்வதேச மெகா வர்த்தக கண்காட்சி (17th India International Mega Trade Fair) மற்றும் வீட்டு அலங்கார கண்காட்சி 2021 (Home Decor Exhibition 2021) 19 பிப்ரவரி 2021 முதல் 1 மார்ச் 2021 வரை ஒடிஷா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெறவுள்ளது.

“தேசிய நகர்புற டிஜிட்டல் திட்டம் ” (National Urban Digital Mission (NUDM)) மற்றும் இந்திய நகர்புற தரவுகள் பரிமாற்ற அமைப்பு (India urban data exchange (IUDX)) ஆகியவற்றை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் 23-2-2021 அன்று தொடங்கி வைத்தார்.

தேசிய நகர்ப்புற டிஜிட்டல் மிஷன் (NUDM) பற்றி ..

தேசிய நகர்ப்புற டிஜிட்டல் மிஷன், நகர்ப்புற இந்தியாவிற்கான பகிரப்பட்ட டிஜிட்டல் உள்கட்டமைப்பை (shared digital infrastructure) உருவாக்கும், இது 2022 ஆம் ஆண்டில் 2022 நகரங்களில் நகர்ப்புற ஆளுமை மற்றும் சேவை வழங்கலுக்கான குடிமக்களை மையமாகக் கொண்ட அணுகுமுறையை நிறுவனமயமாக்கும், மேலும் 2024 ஆம் ஆண்டில் இந்தியாவின் அனைத்து நகரங்கள் மற்றும் நகரங்களிலும் இது நிறுவனமயமாக்கும்.

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சின் பல்வேறு டிஜிட்டல் முன்முயற்சிகளை ஒருங்கிணைத்து, கடக்கக்கூடிய ஒரு பகிரப்பட்ட டிஜிட்டல் உள்கட்டமைப்பை தேசிய நகர்ப்புற டிஜிட்டல் மிஷன் உருவாக்கும்,

இந்தியா நகர்ப்புற தரவு பரிமாற்ற அமைப்பு (IUDX) பற்றி …

ஸ்மார்ட் சிட்டிஸ் மிஷன் மற்றும் பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் (ndian Institute of Science (IISc)) ஆகியவற்றுடன் இணைந்து இந்தியா நகர்ப்புற தரவு பரிமாற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. நகரங்கள், நகர்ப்புற ஆளுகை மற்றும் நகர்ப்புற சேவை வழங்கல் தொடர்பான தரவுத்தொகுப்புகளைப் பகிரவும், கோரவும், அணுகவும் தரவு வழங்குநர்கள் மற்றும் தரவு பயனர்களுக்கிடையே தடையற்ற இடைமுகமாக இந்தியா நகர்ப்புற தரவு பரிமாற்ற அமைப்பு செயல்படுகிறது. இது ஒரு திறந்த மூல மென்பொருள் தளமாகும் (open-source software platform),

நாகாலாந்தில் உள்ள பள்ளிகளில் கற்பிக்கும் முறைகள், கற்றல் சூழல், பள்ளிகளின் நிர்வாகம் ஆகியவற்றை மேம்படுத்தும் துவதற்காக, 68 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.493.07 கோடி) கடன் திட்டத்தில் மத்திய அரசு, நாகாலாந்து அரசு மற்றும் உலக வங்கி ஆகியவை 23-2-2021 அன்று கையெழுத்திட்டன.

”கரோனில்” (Coronil ) என்ற பெயரில், கரோனாவை எதிர்கொள்வதற்கான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் மாத்திரையை பதஞ்சலி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஒரு ரூபாய்க்கு ஏழைகளுக்கு சொந்த வீடு வழங்கும் திட்டத்திற்கு ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. பெண்கள் பெயரிலேயே இந்த இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்படுகிறது.

கடுங்குளிர் பிராந்தியமான லடாக்கில் முகாமிட்டுள்ள ராணுவ வீரர்களுக்கு உதவும் வகையில் சூரிய ஒளியில் மின்னுற்பத்தி செய்து கதகதப்பாக வைக்கும் கூடாரத்தை சோனம் வாங்சுங் உருவாக்கியுள்ளார் .இது எளிதில் எடுத்துச் செல்லும் வகையில் 30 கிலோ எடை கொண்டதாக உள்ளது. இந்தக் கூடாரத்தில் ஒரே நேரத்தில் 10 ராணுவ வீரர்கள் தங்க முடியும்.

இந்தக் கூடாரம் உறைபனி நிலை 0 முதல் மைனஸ் 14 டிகிரி வரையிலான குளிர் நிலவும் பிராந்தியங்களில் பயன்படுத்த மிகவும் ஏற்றது.

கூ.தக. : பாலிவுட் திரைப்படமான 3 இடியட்ஸ் கதைக்களத்துக்கு மூலக் காரணமாக அறியப்பட்டவர் சோனம் வாங்சுங்.

நீதிபதி ரோகிணி ஆணையத்தின் பதவிக் காலம் ஜூலை 31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்டு வரும் 27% இட ஒதுக்கீட்டில் தொகுப்புமுறை உள் ஒதுக்கீடு சம்பந்தமாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 340 வது ஷரத்தின் அடிப்படையில் ஓய்வு பெற்ற நீதிபதி ரோகிணி ( Justice G. Rohini ) தலைமையிலான ஆணையத்தை மத்திய அரசு அக்டோபர் 2017 ல் அமைத்தது.

வெளிநாட்டு உறவுகள்

2020 ஆம் ஆண்டில் இந்தியாவுடன் வர்த்தகம் மேற்கொண்ட நாடுகளின் பட்டியலில் சீனா முதலிடத்தைப் பெற்றுள்ளது . இரு நாடுகளுக்குமிடையே 77.7 பில்லியன் அமெரிக்க டாலர் வர்த்தகம் நடைபெற்றுள்ளது.

பிரிக்ஸ் நாடுகளின் நிதி மற்றும் மத்திய வங்கிகளின் துணைத் தலைவர்களின் முதல் கூட்டத்தை காணொலி மூலம் இந்தியா 25-2-2021 அன்று நடத்தியது .பிரேசில், ரஷ்யா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்காவின் பிரிக்ஸ் நிதி மற்றும் மத்திய வங்கிகளின் துணை தலைவர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.2021-ம் ஆண்டில் இந்தியாவின் தலைமையில் நடைபெறும் முதல் பிரிக்ஸ் ஒத்துழைப்பு கூட்டம் இதுவாகும்.

இந்தியாவும் மோரீஷஸும் தடையற்ற வா்த்தகத்தை மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் அந்த நாட்டு தலைநகா் போா்ட் லூயிஸில் கையெழுத்தானது.

சர்வதேச நிகழ்வுகள்

“தனிமைக்கான அமைச்சராக” (loneliness minister) டெட்சுஷி சாகமோட்டோவ்வை ஜப்பான் நாடு நியமித்துள்ளது. அதிகரித்து வரும் தற்கொலைகளை தடுப்பதே இந்த அமைச்சரவையின் நோக்கமாகும்

கூ.தக. உலகிலேயே முதல் முறையாக இத்தகைய ‘தனிமைக்கான அமைச்சரை’ 2018 ஆம் ஆண்டில் இங்கிலாந்து நியமித்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவைச் சேர்ந்த கெளசிக் பரூவா-விற்கு கம்போடியா அரசின் உயர்ந்த விருது : அந்நாட்டு மன்னருக்கும், மக்களுக்கும் சிறப்பான சேவையாற்றிய வெளிநாட்டினருக்காக, ராயல் ஆர்டர் ஆஃப் சாஹமித்ரை என்ற அமைப்பின் கீழ் கெளசிக் பரூவாவுக்கு கம்போடிய அரசின் தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.

ஐ.நா. அமைப்புக்கான புதிய அமெரிக்கத் தூதராக லிண்டா தாமஸ்-கிரீன்ஃபீல்டு நியமிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க விவசாய துறையில், பண்ணை சேவை முகைமையின் கொள்கை ஆலோசகராக, இந்திய வம்சாவளியை சேர்ந்த பிடிஷா பட்டாச்சார்யா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பொருளாதாரம்

வரி வசூல், ஓய்வூதிய விநியோகம் உள்ளிட்ட அரசு சாா்ந்த பணப்பரிவா்த்தனைகளை மேற்கொள்ள தனியாா் துறையைச் சோ்ந்த அனைத்து வங்கிகளுக்கும் மத்திய நிதியமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

விருதுகள்

இந்திய சமூக ஆர்வலர் அஞ்சலி பரத்வாஜ், அமெரிக்காவின் சர்வதேச ஊழல் ஒழிப்பு சாம்பியன்ஸ் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டு உள்ளார். இந்தியாவில் தகவல் அறியும் உரிமை இயக்கத்தில் கடந்த 20 ஆண்டுகால உறுப்பினராக இருப்பவர் அஞ்சலி பரத்வாஜ். இவர், அரசில் வெளிப்படை தன்மை மற்றும் பொறுப்புணர்வு ஆகியவற்றை ஊக்குவிக்கும் நோக்குடன் சடார்க் நாகரீக சங்கதன் என்ற அமைப்பை உருவாக்கி நடத்திவருகிறார்.

முக்கிய தினங்கள்

☞ உலக தாய்மொழி தினம் - பிப்ரவரி 21

☞ உலக சிந்தனை தினம் (World Thinking Day) - பிப்ரவரி 22

☞ தமிழ்நாட்டின் மாநில பெண் குழந்தைகள் தினம் - பிப்ரவரி 24 (முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா பிறந்த தினத்தில் (24 பிப்ரவரி, 1948) அனுசரிக்கப்படுகிறது.)

அறிவியல் & தொழில்நுட்பம்

செவ்வாய் கிரகத்தில் இருந்து முதல் ஆடியோவை 22-2-2021 அன்று அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா வெளியிட்டுள்ளது . அமெரிக்காவின் மூலம் அனுப்பப்பட்ட ’பெர்சிவரன்ஸ் ரோவர்’ (Perseverance rover) இந்த ஆடியோவை வெளியிட்டுள்ளது. . ‘ஸ்ரீ சக்தி சாட்’ செயற்கைக்கோள் : இஸ்ரோவுக்காக கோவையைச் சோ்ந்த ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவா்கள் ரூ. 2.5 கோடி மதிப்பில் உருவாக்கிய ‘ஸ்ரீ சக்தி சாட்’ செயற்கைக்கோள் வரும் பிப்.28-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்படவுள்ளது.

19 செயற்கைகோள்களை பொருத்தி பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட்டை வருகிற 28-2-2021 ஆம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள ஒன்றாவது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்படவுள்ளது. இந்த ராக்கெட்டில், ஏவப்படும் பிரேசில் நாட்டைச் சேர்ந்த அமசோனியா-1 என்ற செயற்கைகோள் முதன்மை செயற்கை கோளாகும். இவற்றுடன், இந்தியாவை சேர்ந்த இன்ஸ்பேஸ் நிறுவனத்தின் யுனிட்டி சாட் தொகுப்பை சேர்ந்த ஜெ.ஐ.டி. சாட், ஜி.எச்.ஆர்.சி.இ. சாட், ஸ்ரீசக்தி சாட் ஆகிய 3 செயற்கைகோள்களுடன் ஸ்பேஸ் கிட்ஸ் செயற்கைகோளான சதீஷ்தவான் சாட் உள்ளிட்ட 4 செயற்கை கோள்கள் மற்றும் இந்திய விண்வெளித் துறையின் கீழ் செயல்படும் நியு ஸ்பேஸ் இந்தியா நிறுவனத்தின் 14 செயற்கைகோள் உள்பட 19 செயற்கைகோள்கள் பூமியில் இருந்து 752 கிலோ மீட்டர் தூரத்தில் புவிவட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட உள்ளன.

கூ.தக. :

தற்போது விண்ணில் ஏவப்பட உள்ள பி.எஸ்.எல்.வி. 51 ராக்கெட்டானது, பி.எஸ்.எல்.வி ராக்கெட் வகையில் 53-வது ராக்கெட்டாகும். மத்திய அரசின் இந்திய விண்வெளித்துறையின் கீழ் செயல்படும் நியுஸ்பேஸ் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான முதல் வணிக ராக்கெட்டாகும்.

பிரேசில் நாட்டின் செயற்கைக் கோளான, அமசோனியா-1 பூமி கண்காணிப்பு செயற்கைகோளாகும். இந்த செயற்கைகோள் அமேசான் பிராந்தியத்தில் காடுகள் அழிப்பைக் கண்காணிப்பதற்கும், பிரேசிலிய நாட்டு பிரதேசத்தில் பன்முகப்படுத்தப்பட்ட விவசாயத்தை பகுப்பாய்வு செய்வதற்கும், பயனாளிகளுக்கு தொலை உணர்வு தரவுகளை வழங்குவதன் மூலம் தற்போது இருக்கும் கட்டமைப்பை மேலும் பலப்படுத்த இந்த செயற்கைகோள் உதவும்.

விளையாட்டுகள்

இரண்டாவது கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகள் 2021 (Khelo India University Games 2021) கர்நாடகா மாநிலத்திலுள்ள ஜெயின் பல்கலைக்கழகத்தில் (Jain University) நடைபெறுகின்றன.

குஜராத்தில் உள்ள உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் அரங்கத்துக்கு பிரதமா் நரேந்திர மோடியின் பெயா் சூட்டப்பட்டுள்ளது . குஜராத்தின் ஆமதாபாதில் உள்ள மொதேரா பகுதியில் உள்ள இந்த அரங்கத்திற்கு, ஏற்கனவே, சா்தாா் படேல் அரங்கம் என்று சூட்டப்பட்டிருந்த பெயா் தற்போது நரேந்திர மோடி விளையாட்டரங்கம் (Narendra Modi Stadium) என மாற்றப்பட்டுள்ளது. பிரதமா் மோடி குஜராத்தின் முதல்வராக இருந்தபோது, இந்த அரங்கத்தைப் புதுப்பித்து, உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் அரங்கமாகப் புனரமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டாா். அவரைப் பெருமைப்படுத்தும் நோக்கில், அரங்கத்துக்கு நரேந்திர மோடி பெயா் சூட்டப்பட்டுள்ளது.

நரேந்திர மோடி அரங்கத்தில் கால்பந்து, ஹாக்கி, கபடி, குத்துச் சண்டை உள்ளிட்ட விளையாட்டுகளுக்காக அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக வளாகத்தையும் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தாா். அந்த வளாகத்துக்கு சா்தாா் வல்லபபாய் படேல் பெயா் சூட்டப்பட்டுள்ளது.

இந்த விளையாட்டரங்கத்தின், இரு பவுலிங் முனைகளில் ஒரு முனைக்கு அதானி எண்ட் மற்றும் மற்றொரு முனைக்கு ரிலையன்ஸ் எண்ட் எனவும் பெயரிடப்பட்டுள்ளது.

இந்த நரேந்திர மோடி விளையாட்டரங்கம் 63 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஒரே நேரத்தில் 1,32,000 பேர் அமர முடியும்,.

ஹரியாணாவில் நடைபெற்ற 82-ஆவது தேசிய சீனியா் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஜி.சத்தியன் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

மான்டினீக்ரோவில் நடைபெற்ற இளையோா் குத்துச்சண்டை போட்டியில் மகளிா் பிரிவில் இந்தியா 5 தங்கம் உள்பட 12 பதக்கங்களுடன் பட்டியலில் முதலிடம் பிடித்தது .இறுதியாக நடைபெற்ற சுற்றுகளில் மகளிருக்கான 51 கிலோ பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் பேபிரோஜிசானா சானு 3-2 என்ற புள்ளிகள் கணக்கில் உஸ்பெகிஸ்தானின் சபினா போபோகுலோவாவை வீழ்த்தி தங்கம் வென்றாா். மகளிருக்கான 69 கிலோ எடைப் பிரிவு இறுதிச்சுற்றில் அருந்ததி சௌதரி 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் உக்ரைனின் மரியானா ஸ்டாய்கோவை அபாரமாக வீழ்த்தி முதலிடம் பிடித்தாா். 64 கிலோ பிரிவில் லக்கி ராணா 0-5 என்ற கணக்கில் ஃபின்லாந்து வீராங்கனை லியா புக்கிலாவிடம் தோல்வி கண்டு வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினாா்.சிறப்பாகச் செயல்பட்டதற்காக ‘போட்டியின் சிறந்த பெண் வீராங்கனை’ விருது வின்காவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

புத்தகங்கள் / ஆசிரியர்கள்

‘Agriculture Acts 2020’ என்ற புத்தகத்தின் ஆசிரியர் - A.K. ராஜன் (A.K. Rajan)

‘Runway to Skilled India’ என்ற புத்தகத்தின் ஆசிரியர் - டார்லி O கோஷி (Darlie O Koshy)

TNPSC குரூப் IV & VAO, II, IIA 2021 தேர்வுக்கு

இப்போதே தயாராகுங்கள் !!!

Admission going on for the following Online Test Batches.

TNPSC Group 4, VAO 2021 (Tamil Medium)

www.portalacademy.in/p/tnpsc-group-4-2021-tamil-medium.html

TNPSC Group 4, VAO 2021 (English Medium)

www.portalacademy.in/p/tnpsc-group4-2021-test-batch-english.html

TNPSC Group 2, 2A 2021 (Tamil Medium)

www.portalacademy.in/p/group-2-tamil-medium.html

TNPSC Group 2, 2A 2021 (English Medium)

www.portalacademy.in/p/group-2-english-medium.html

For Queries

Call/Whatsapp : 8778799470

“Because India Comes First”

என்ற புத்தகத்தின் ஆசிரியர் - ராம் மாதவ் (Ram Madhav)

Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!