Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

தூய்மை இந்தியா இயக்கம் (நகர்ப்புறம்) 2.0 (Swachh Bharat Mission-Urban 2.0) மற்றும் அம்ருத் 2.0 (AMRUT 2.0 ) தொடக்கம்

 தூய்மை இந்தியா இயக்கம் (நகர்ப்புறம்) 2.0 (Swachh Bharat Mission-Urban 2.0) மற்றும் அம்ருத் 2.0 (AMRUT 2.0 ) ஆகியவற்றை  1 அக்டோபர் 2021 ஆம் தேதி பிரதமர் தொடங்கி வைக்கிறார்

தூய்மை இந்தியா இயக்கம் (நகர்ப்புறம்) 2.0 பற்றி:

‘கழிவுகள் இல்லாத’ நிலையை அனைத்து நகரங்களிலும் ஏற்படுத்துவது, அம்ருத் இயக்கத்தின் கீழ் கொண்டு வரப்படாத அனைத்து நகரங்களிலும் கழிவு நீர் மேலாண்மையை உறுதிசெய்வது, திறந்தவெளியில் மலம் கழிக்காத நிலையை அனைத்து ஊரக உள்ளாட்சி அமைப்புகளிலும் (ஓடிஎஃப்+), ஒரு லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை உள்ள நகர்ப் பகுதிகளிலும் (ஓடிஎஃப்++)  ஏற்படுத்துவது ஆகியவற்றின் மூலம் நகரங்களில் பாதுகாப்பான துப்புரவு பணிகளை மேற்கொள்ள தூய்மை இந்தியா இயக்கம் (நகர்ப்புறம்) 2.0 திட்டமிட்டுள்ளது. திடக் கழிவுகளின் ஆதாரங்களை தரம் பிரித்தல், 3 ஆர் (R) சொற்களின் (குறைத்தல், மறுபயன்பாடு,  மறுசுழற்சி) கொள்கைகளை பின்பற்றுவது, அனைத்து விதமான திடக்கழிவுகளையும் அறிவியல் ரீதியாக அகற்றுவது மற்றும் பயனுள்ள திடக்கழிவு மேலாண்மைக்கு மரபுசார் கழிவு இடங்களை சரி செய்தல் போன்றவற்றில் இந்த இயக்கம் கவனம் செலுத்தும். இந்த இயக்கத்திற்காக சுமார் ரூ.1.41 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

அம்ருத் 2.0  (Atal Mission for Rejuvenation and Urban Transformation -AMRUT 2.0)பற்றி:

2.68 கோடி தண்ணீர் இணைப்புகளை வழங்கி 4700 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 100% தண்ணீர் இணைப்புகளை வழங்குவது மற்றும்  நகர்ப்புறங்களில் வசிக்கும் 10.5 கோடி மக்கள் பயனடையும் வகையில் 500 அம்ருத் நகரங்களில் சுமார் 2.64 கோடி கழிவுநீர் இணைப்புகளை வழங்கி 100% கழிவுநீர் வசதிகளை உருவாக்குவது ஆகியவை அம்ருத் 2.0 இயக்கத்தின் நோக்கமாகும். சுழற்சி பொருளாதாரத்தின் கொள்கைகளைப் பின்பற்றி நிலத்தடி நீர் மற்றும் நீர் வளங்களின் பாதுகாப்பு மற்றும் புத்தாக்கத்தை இந்த இயக்கம் ஊக்குவிக்கும். நவீன சர்வதேச தொழில்நுட்பங்கள் மற்றும் திறன்களை பயன்படுத்துவதற்காக நீர் மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப துணை இயக்கத்தில் தரவுகள் சார்ந்த ஆளுகைக்கு இந்த இயக்கம் ஆதரவளிக்கும். நகரங்கள் இடையே வளர்ச்சிக்கான போட்டியை ஊக்குவிப்பதற்காக குடிநீர் ஆய்வு நடத்தப்படும். இந்த இயக்கத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகை சுமார் ரூ.2.87 லட்சம் கோடி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot