Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

திருநங்கைகள் நல வாரியத்தின் புதியஅலுவல் சாரா உறுப்பினர்கள் நியமனம்

 திருநங்கைகள் நல வாரியத்தின் புதியஅலுவல் சாரா உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  அதன்படி, நாமக்கல் மாவட்டம், கருவேலம்பட்டி - ஏ.ரியா, தூத்துக்குடி மாவட்டம் கீழ அலங்காரத்திட்டு - டி.பியூட்டி, சென்னை திருவல்லிக்கேணி -ஆர்.அனுஸ்ரீ, செங்கல்பட்டு மாவட்டம் புக்கத்துரை - சத்யஸ்ரீ சர்மிளா, பெரும்பாக்கம் -எம்.நிலா, மயிலாப்பூர் -எம்.ராதா, மதுரை மாவட்டம், விஸ்வநாதபுரம் - பிரியா பாபு, சூளைமேடு - கே.அருணா, திருவொறும்பூர் - பி.மோகனாம்பாள் நாயக், சென்னை அமைந்தகரை - டாக்டர் ஆர்.சுதா, ஆதம்பாக்கம் - கே.அருண்கார்த்திக், தேனி மாவட்டம் பொன்னாம்பாள்பட்டி - செல்வம் முனியாண்டி, சென்னை மாவட்டம் பல்லவா கார்டன் 8-வது அவென்யூ - வித்யா தினகரன் (பெண்) என   12 திருநங்கைகள் மற்றும் ஒரு பெண் ஆகிய 13 நபர்கள் தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியத்தின் புதிய அலுவல் சாரா உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் . 

கூ.தக. : திருநங்கைகள் நல வாரியம் கடந்த 2008-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்த நல வாரியத்தின் தலைவராக சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சரும், துறையின் முதன்மைச் செயலாளா் துணைத் தலைவராகவும், சமூக நல இயக்குநா் உறுப்பினா்-செயலாளராகவும் உள்ளனா்.  மேலும், அரசுத் துறைகளின் பிரதிநிதிகள் அலுவல் சாா் உறுப்பினா்களாகவும், திருநங்கைகள் அலுவல் சாரா உறுப்பினா்களாகவும் நியமிக்கப்பட்டு வருகின்றனா். அலுவல் சாரா உறுப்பினா்களின் பதவிக் காலம் மூன்றாண்டுகள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot