Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம் (Pradhan Mantri Gram Sadak Yojana (PMGSY) ) 1 மற்றும் 2 ஆம் கட்டங்களுக்கான கால அளவு நீட்டிப்பு

 பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம் (Pradhan Mantri Gram Sadak Yojana (PMGSY) )  1 மற்றும் 2 ஆம் கட்டங்களின்  கீழ் எஞ்சியுள்ள சாலை மற்றும் பாலப்பணிகளை முடிப்பதற்காக 2022 செப்டம்பர் வரை நீட்டிக்கும் மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் ஊரக வளர்ச்சித் துறையின் கருத்துருவுக்கு  பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில்  17-11-2021 அன்று நடைபெற்ற  பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.    

2000 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம் 1, சமவெளியில் 500-க்கும் மேற்பட்ட மக்கள் தொகைக் கொண்டப் பகுதிகள் மற்றும் வடகிழக்கு மற்றும் இமயமலைப் பகுதி மாநிலங்களில் 250-க்கும் மேற்பட்ட மக்கள் தொகைக் கொண்ட குடியிருப்புப் பகுதிகளில் சாலை வசதி அமைக்க வகை செய்கிறது. 

2013 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம் 2-ல் 50,000 கிலோ மீட்டர் ஊரகச் சாலைக் கட்டமைப்பு மேம்படுத்தப்படுகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot