Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

நல்லாட்சி மாநிலக் குறியீடு - நீதி, பொதுப் பாதுகாப்பில் தமிழகம் முதலிடம்

 மத்திய உள்துறை அமைச்சகத்தின் நிர்வாகச்  சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத்  துறை தயாரித்த 2021 -ம் ஆண்டு நல்லாட்சிக் குறியீட்டில், ஒட்டுமொத்த நல்லாட்சி குறியீட்டில் குஜராத் மாநில முதலிடம் பிடித்துள்ளது.  நீதி  மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புப்  பிரிவில்  ஏ குழு மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.   

கூ.தக. :நல்லாட்சி குறியீடு பத்து துறைகள் மற்றும் 58 குறிகாட்டிகளை உள்ளடக்கியது ஆகும். அவை: 1)விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகள், 2) வணிகம் & தொழில்கள், 3) மனித வள மேம்பாடு, 4) பொது சுகாதாரம், 5.) பொது உள்கட்டமைப்பு மற்றும் பயன்பாடுகள், 6) பொருளாதார நிர்வாகம், 7) சமூக நலன் & மேம்பாடு, 8) நீதித்துறை மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு, 9) சுற்றுச்சூழல் மற்றும் 10) குடிமக்களை மையப்படுத்திய ஆளுகை. நல்லாட்சி குறியீடு-2021 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை நான்கு பிரிவுகளாக வகைப்படுத்துகிறது, அதாவது (i) பிற மாநிலங்கள் - குழு ஏ; (ii) பிற மாநிலங்கள் - குழு பி; (iii) வடகிழக்கு மற்றும் மலை மாநிலங்கள்; மற்றும் (iv) யூனியன் பிரதேசங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot