நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

தொழில் முதலீடுகளுக்கு மிகச் சிறந்த மாநிலம் ’தமிழ்நாடு’ - புராஜெக்ட் டுடே நிறுவன ஆய்வு

 தொழில் முதலீடுகளுக்கு மிகச் சிறந்த மாநிலம் ’தமிழ்நாடு’ - என புராஜெக்ட் டுடே நிறுவன ஆய்வு தெரிவிக்கிறது.2021 ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலும் தொழில் முதலீடுகளை அதிகமாகப் பெற்றுள்ள மாநிலம் தமிழகமாகும். 304 திட்டங்களின் மூலம் ரூ.1,43,902 கோடியை தமிழகம் மூலதனமாகப் பெற்றுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் தமிழ்நாடு ரூ.36,292 கோடியை மட்டுமே தொழில் மூலதனமாகப் பெற்றிருந்தது. தமிழ்நாட்டிற்கு இந்த நிதியாண்டில் கிடைத்திருக்கும் ஒட்டு மொத்த முதலீட்டு ஆதாயம் ரூ.1,07,610 கோடியாகும்.  இந்தப் பட்டியலில், ரூ.77,892 கோடி தொழில் மூலதனத்துடன் குஜராத் மாநிலம் இரண்டாவது இடத்திலும், ரூ.65,288 கோடி தொழில் மூலதனத்துடன் தெலுங்கானா மாநிலம் மூன்றாவது இடத்திலும் இருக்கின்றன.


Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!