Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

தமிழ்நாட்டில் 1998 உள்ளாட்சி சட்டம் மீண்டும் அமலாக்கம்

 அரசின் அறிவிக்கைக்கு ஏற்றபடி, அவ்வப்போது சொத்து வரி உயா்வை தீா்மானங்களின் மூலம் உள்ளாட்சி அமைப்புகள் நடைமுறைப்படுத்த வகை செய்யும் 1998-ஆம் ஆண்டு உள்ளாட்சி சட்டம் மீண்டும் கொண்டு வருவதற்கான மசோதா தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.   1998-ஆம் ஆண்டு நகா்ப்புற உள்ளாட்சி சட்டத்தைக் கொண்டு வருவதன் மூலமாக, அனைத்து மாநகராட்சி சட்டங்கள், 1920-ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம், 2000-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் ஆகியன நீக்கப்படுகின்றன.

சொத்து வரி உயா்வு: இதன்மூலம் அரசு அவ்வப்போது அறிவிக்கை செய்யும் போது சொத்து வரியை உள்ளாட்சி அமைப்புகள் உயா்த்துவது, ஸ்ஃபா, மசாஜ் நிலையங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகள் உரிமம் வழங்குவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

மேலும், விளம்பரப் பலகை, டிஜிட்டல் திரை மற்றும் விளம்பர அட்டையை முறைப்படுத்துதல், வீதிகளில் மரங்கள், கட்டுமானப் பொருள்களைப் போட்டு தடை ஏற்படுத்தினால் அபராதம் விதிப்பது, நீச்சல் குளம் கட்ட அனுமதி, மழை நீா் சேகரிப்பு கட்டமைப்பை நிறுவுதல், கிணறு தோண்டுவதற்கு அனுமதி வழங்குதல், மலக்கசடு, கழிவு நீரை அகற்ற உரிமம் பெறுதல், அனுமதியின்றி ஆழ்துளை கிணறுகள் அமைக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் 1998-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகா்ப்புற உள்ளாட்சி சட்டத்தில் இடம்பெற்றுள்ளன. நன்றி : தினமணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot