Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

மைசூரு - சென்னை செண்ட்ரல் இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (Mysuru – Puratchi Thalaivar Dr. MGR Chennai Central Vande Bharat Express ) தொடக்கம்

மைசூரு மற்றும் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் இடையேயான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (Mysuru – Puratchi Thalaivar Dr. MGR Chennai Central Vande Bharat Express ) ரயிலை 11.11.2022 அன்று கேஎஸ்ஆர் பெங்களூரு ரயில் நிலையத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.இது நாட்டில் தொடங்கப்பட்ட ஐந்தாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்பதுடன் தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயிலாகும். சென்னையிலிருந்து காலை 5.50-க்கு புறப்படும் ரயில், காட்பாடி ரயில் நிலையத்தை காலை 7.21-க்கு சென்றடையும். அங்கிருந்து 7.25-க்கு புறப்பட்டு, பெங்களூரு நகரத்தை காலை 10.20 மணிக்கு சென்றடையும். அங்கிருந்து 10.25க்கு புறப்பட்டு, மைசூருவை மதியம் 12.20 மணிக்கு அடையும். மறுமார்க்கத்தில், மைசூருவிலிருந்து பகல் 1.05 மணிக்கு புறப்பட்டு, சென்னையை இரவு 7.30 மணிக்கு வந்தடையும். இந்த ரயில் பெங்களூருவை 2.55 க்கும், காட்பாடியை மாலை 5.36க்கும் வந்தடையும். இந்த ரயில் பெங்களூரு ரயில் நிலையத்தில் 5 நிமிடங்களும், காட்பாடி நிலையத்தில் 4 நிமிடங்களும் நிற்கும்.

கூ.தக. : 'மேக் இன் இந்தியா' வெற்றிக்கு  ஒரு சிறந்த உதாரணமாக, இந்திய ரயில்வே இந்தியாவின் முதல் உள்நாட்டு அதிவேக ரயில்- வந்தே பாரத் எக்ஸ்பிரஸை அறிமுகப்படுத்தியது, இது  கான்பூர்- அலகாபாத்-வாரணாசி வழித்தடத்தில் பிரதமரால் பிப்ரவரி 15, 2019 அன்று புது தில்லியில் கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்டது. மேலும், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் புது தில்லி- மாதா வைஷ்ணோ தேவி கத்ரா, காந்திநகர் - அகமதாபாத் - மும்பை சென்ட்ரல், மற்றும் ஆம்ப் ஆண்டௌரா - புது தில்லி வழித்தடங்களில் தொடங்கப்பட்டுள்ளன.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot