Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

'விக்ரம்-எஸ்' (Vikram-suborbital (VKS) rocket) - இந்தியாவின் முதலாவது தனியார் செலுத்துவாகனம்

 'விக்ரம்-எஸ்'  (Vikram-suborbital (VKS) rocket) என்ற  இந்தியாவின் முதலாவது தனியார் செலுத்துவாகனம் மூலம் 3 செயற்கைக்கோள்கள் 18.11.2022-ஆம் தேதி   ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டன.      விண்வெளி ஸ்டார்ட் அப் நிறுவனமான ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்  தயாரித்துள்ள  ‘விக்ரம் எஸ்’ ராக்கெட் டிற்கு,  இந்திய விண்வெளி திட்டத்தின் தந்தையான மறைந்த விஞ்ஞானி விக்ரம் சாராபாய் நினைவாக ‘விக்ரம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

வரலாற்று சிறப்புமிக்க இந்த திட்டத்தின் மூலம் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா, என்-ஸ்பேஸ்டெக் இந்தியா, பஸூசும் அர்மீனியா ஆகிய செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டுள்ளன. 

545 கிலோகிராம் எடைகொண்ட விக்ரம் எஸ் ராக்கெட் 6 மீட்டர் உயரம் கொண்டது. ஒரே நிலையை கொண்ட இது அதிகபட்சமாக 80 முதல் 100 கிலோ எடையை சுமந்து செல்லக்கூடியது. இந்த ராக்கெட்டில் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் குழு வடிவமைத்த 3 ஆய்வு சாதனங்கள் அனுப்பப்படுகின்றன. அவை அனைத்தும் புவி மேற்பரப்பில் இருந்து 120 கி.மீ உயரத்தில் நிலைநிறுத்தப்பட்டு, ஆய்வுப் பணிகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளது.

நாட்டின் தனியார் புத்தொழில் நிறுவனங்களுக்கு இஸ்ரோவின் ஆதார வளங்களை பயன்படுத்துவதற்கான புதிய ஒழுங்குமுறை ஆணையமான இன்-ஸ்பேஸ் (IN-SPACe) மூலம் இந்த செயற்கைக்கோள் செலுத்துவதன் நடைமுறை அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின்  முதலாவது தனியார் நிறுவனமான ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் ஐதராபாதை தலைமையிடமாக கொண்டது. 

கூ.தக.   விண்வெளி ஆய்வில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை ஊக்குவிக்க இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) முடிவு செய்தது. இதற்காக 2020-ம் ஆண்டு ‘இன்ஸ்பேஸ்’ என்ற அமைப்பு நிறுவப்பட்டது.  அதனைத் தொடர்ந்து, விண்வெளித் துறையில் பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாகின.  

விண்வெளி ஆய்வு நடவடிக்கைகளில் தனியாா் பங்களிப்புக்கு மத்திய அரசு அனுமதி அளித்ததைத் தொடா்ந்து, இஸ்ரோவின் கீழ் இயங்கும் இன்ஸ்பேஸ் (இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு, அங்கீகார மையம்) அமைப்பு ஹைதராபாதைச் சோ்ந்த புத்தாக்க நிறுவனமான ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்துக்கு ராக்கெட் தயாரிப்புக்கான ஒப்புதலை அளித்திருந்தது.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot