‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ என்ற கருப்பொருளுடன் ஜி-20 தலைமையை இந்தியா 1.12.2022 அன்று ஏற்றுள்ளது. முன்னதாக நவம்பர் 2022 -ல் இந்தோனேசியாவில் நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாட்டின் போது, 2023- ஆம் ஆண்டில் ஜி/20 நாடுகளின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி அந்த மாநாட்டில் ஜி-20 மாநாட்டின் கவுரவ பொறுப்பான சுத்தியலை பிரதமர் மோடியிடம், இந்தோனேசிய அதிபர் ஜோஜோ விடோடோ வழங்கினார். ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை 2022 டிசம்பர் 1 முதல் 2023 நவம்பர் 30 வரை இந்தியா ஏற்கவுள்ளது. இது சார்ந்து, நாடு முழுவதும் 50 நகரங்களில் 200 கூட்டங்களை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 2023-ம் ஆண்டு செப்டம்பர் 9 மற்றும் 10ம் தேதிகளில் ஜி-20 மாநாடு டெல்லியில் நடைபெற உள்ளது.
ஜி- 20 2023 -ன் சின்னமாக தாமரை மலரில் பூமி வீற்றிருப்பது அறிவிக்கப்பட்டுள்ளது. ‘உலகம் ஒரே குடும்பம்’ என்ற இந்தியாவின் பாரம்பரியம், நம்பிக்கை, சிந்தனையை தாமரை குறிக்கிறது. போரில் இருந்து உலகம் விடுதலை பெறவேண்டும் என்ற புத்தரின் போதனை, தேசத் தந்தை மகாத்மா காந்தியின் அகிம்சை கொள்கையையும் தாமரை சின்னம் பிரதிபலிக்கிறது. அதன் 7 இதழ்கள் 7 கண்டங்களையும், 7 இசையையும் குறிக்கின்றன. இது உலகை ஒன்றிணைப்பதை உணர்த்துகிறது.
ஜி-20 தலைமை பதவியை இந்தியா ஒரு வருடத்திற்கு ஏற்றதனால், 1.12.2022 முதல் ஒரு வாரத்திற்கு நூறு மத்திய பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்கள் ஒளிரும் விளக்குகளால் அலங்கரிக்கப்படவுள்ளன. இந்த நினைவுச்சின்னங்களில் டெல்லியின் குதுப்மினார் மற்றும் புராண கிலா, தமிழ்நாட்டில் வேலூர் கோட்டை மற்றும் ஹைதராபாத்தில் உள்ள கோல்கொண்டா கோட்டை,சாரநாத் மற்றும் தமேக் ஸ்தூபிகள், ஆக்ராவில் உள்ள ஃபதேபூர் சிக்ரி மற்றும் சிக்கந்த்ரா, மகாபலிபுரத்தில் உள்ள கடற்கரை கோயில் மற்றும் ஹைதராபாத்தில் உள்ள சார்மினார், உத்தரகாண்டில் உள்ள ஜாகேஷ்வர் கோவில், மேற்கு வங்காளத்தில் உள்ள முர்ஷிதாபாத்தில் உள்ள ஹசர்துவாரி அரண்மனை மற்றும் லேவில் உள்ள பழங்கால அரண்மனை ஆகியவையும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
கூ.தக. : ஜி-20 அமைப்பு கடந்த 1999-ல் தொடங்கப்பட்டது. இதில் அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், சீனா, இந்தியா, கனடா, துருக்கி, தென் ஆப்பிரிக்கா, சவுதி அரேபியா, தென்கொரியா, மெக்சிகோ, இத்தாலி, இந்தோனேசியா, பிரேசில், ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.