Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு பெரியார் பன்னாட்டு அமைப்பு, அமெரிக்கா சமூகநீதிக்கான கி. வீரமணி விருது

பெரியார் பன்னாட்டு அமைப்பு, அமெரிக்கா சமூகநீதிக்கான கி. வீரமணி விருதினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு வழங்கியது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு  2.12.2022 அன்று  நடைபெற்ற திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் திரு. கி. வீரமணி அவர்களின் 90- ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவில், பெரியார் பன்னாட்டு அமைப்பு அமெரிக்கா சார்பில் “சமூகநீதிக்கான கி. வீரமணி விருது” அவ்வமைப்பின் இயக்குநர் டாக்டர் சோம இளங்கோவன் அவர்களால் வழங்கப்பட்டது.  இவ்விருது 1996- ஆம் ஆண்டு இந்திய முன்னாள் பிரதமர் திரு. வி.பி. சிங் அவர்கள், 1997- ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு. சீதாராம் கேசரி அவர்கள், 2000- ஆம் ஆண்டு உத்தர பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் செல்வி மாயாவதி அவர்கள், 2008- ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், 2015- ஆம் ஆண்டு பீகார் மாநில முன்னாள் முதலமைச்சர் திரு. நிதிஷ் குமார் அவர்கள் போன்ற தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot