Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

2027 ஆம் ஆண்டில் இந்தியாவில் நடைபெறும் சிமெண்ட் வேதியியல் குறித்த 17-வது சர்வதேச மாநாடு (International Congress on the Chemistry of Cement)

 சிமெண்ட் வேதியியல் குறித்த 17-வது சர்வதேச மாநாடு (International Congress on the Chemistry of Cement)  2027 ஆம் ஆண்டில் இந்தியாவில் நடைபெறவுள்ளது. சிமெண்ட் வேதியியல் குறித்த சர்வதேச மாநாடு என்பது சிமெண்ட் மற்றும் கான்கிரீட் துறையில் ஆராய்ச்சியின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்யும் மிகப்பெரிய மற்றும் மிகவும் மதிப்புமிக்க நிகழ்வாகும். 1918 ஆம் ஆண்டிலிருந்து நான்கு முதல் ஆறு ஆண்டுகள் இடைவெளியில் பொதுவாக மாநாடுகள் நடத்தப்படுகின்றன, இது கல்வி உலகிற்கும், சிமெண்ட் தொழிலுக்கும் இடையே ஒரு வலுவான மற்றும் பயனுள்ள இணைப்பை வழங்குகிறது. 9-வது மாநாடு 1992 ஆம் ஆண்டில் புதுதில்லியில்  நடைபெற்றது. தற்போதைய 16-வது  சர்வதேச மாநாடு 2023 செப்டம்பர் 18-ந் தேதி அன்று தொடங்கி 22  வரை தாய்லாந்தின் பாங்காக்கில் நடைபெறுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot