தூய்மை இந்தியா திட்டம் - கிராமங்கள் / ஸ்வச் பாரத் மிஷன் - கிராமின் (Swachh Bharat Mission - Grameen) கீழ் 75% கிராமங்கள் இப்போது திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாதவையாக (Open Defecation Free (ODF)) மாறி இருப்பதால் இந்தியா முக்கிய சுகாதார மைல்கல்லை எட்டியுள்ளது.
ஸ்வச் பாரத் மிஷன் (கிராமீன்) இரண்டாம் கட்டத்தின் கீழ், நாட்டின் மொத்த கிராமங்களில் நான்கில் மூன்றில் ஒரு பங்கு, அதாவது 75% கிராமங்கள், பணியின் இரண்டாம் கட்டத்தின் கீழ் திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாதவை (Open Defecation Free (ODF)) அந்தஸ்தைப் பெற்றுள்ளதால், நாடு மற்றொரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத பிளஸ் (ODF Plus) கிராமம் என்பது திட அல்லது திரவக் கழிவு மேலாண்மை அமைப்புகளைச் செயல்படுத்துவதோடு, திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத அந்தஸ்தையும் தக்க வைத்துக் கொண்டது. இன்றைய நிலவரப்படி, 4.43 லட்சத்திற்கும் அதிகமான கிராமங்கள் தங்களை ODF பிளஸ் என்று அறிவித்துள்ளன, இது 2024-25 ஆம் ஆண்டிற்குள் ஸ்வச் பாரத் மிஷன் - கிராமின் (Swachh Bharat Mission - Grameen) இரண்டாம் கட்ட இலக்குகளை அடைவதற்கான குறிப்பிடத்தக்க படியாகும்.
100% திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத (Open Defecation Free (ODF)) கிராமங்களை எட்டிய சிறந்த மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் - அந்தமான் & நிக்கோபார் தீவுகள், D&N ஹவேலி, கோவா, குஜராத், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு & காஷ்மீர், கர்நாடகா, கேரளா, லடாக், புதுச்சேரி, சிக்கிம், தமிழ்நாடு, தெலுங்கானா, மற்றும் திரிபுரா.
மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் - அந்தமான் & நிக்கோபார் தீவுகள், தாத்ரா நகர் ஹவேலி & டாமன் டையூ, ஜம்மு & காஷ்மீர் மற்றும் சிக்கிம் ஆகியவை 100% திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத (Open Defecation Free (ODF)) மாதிரி கிராமங்களைக் கொண்டுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.