நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC பொதுத் தமிழ் -11.வேர்ச்சொல் கொடுத்து -வினைமுற்று/வினையெச்சம்/வினையாலணையும்/தொழிற்பெயர் உருவாக்கல்

பகுதி அ.11.வேர்ச்சொல் கொடுத்து -வினைமுற்று/வினையெச்சம்/வினையாலணையும்/தொழிற்பெயர் உருவாக்கல்

தா, அறி, கெடு ....இப்படி எதாவது வேர்ச்சொல்லைக் கொடுத்து அதற்கான வினைமுற்று/வினையெச்சம்/வினையாலணையும்/தொழிற்பெயரை கொடுக்கப்பட்டிருக்கும் நான்கு விடைகளிலிருந்து சரியானதை தெரிவு செய்ய வேண்டும் .

வினை முற்று என்றால் என்ன ?

வினைமுற்று என்பது,

தொழிலையும் (நடந்தான் - இதில் நடக்கின்ற action ஐ உணர்த்துகிறது) ,
காலத்தையும் ( நடந்தான் -இறந்த காலம்) உணர்த்த வேண்டும்.
திணையை கூற வேண்டும் ( நடந்தான் என்பது 'உயர்திணை') ,
பால்  காட்டும் விகுதியோடு சொல்லானது முற்று பெற்றிருக்க வேண்டும். (நடந்தான் - ஆண்பால்)

உதாரணம் : இருந்தான், நடந்தான், கற்றான், வாழ்ந்தாள். அரும்பியது, தளர்ந்தது

{பொதுவாக வினைமுற்றுகள் ர், ன, ன்,து என்ற எழுத்துகளில் முற்று பெறும்.)


வினையெச்சம் என்றால் என்ன ?


முடிவு பெறாத வினைச் சொல் வினையெச்சம் ஆகும்.

உதாரணம் : நடந்து, கண்டு, படித்து....


வினையாலணையும் பெயர் என்றால் என்ன ?


இலக்கண விளக்கம் : "ஒரு வினைமுற்று பெயரின் தன்மையை அடைந்து வேற்றுமை உறுப்பு ஏற்றும், ஏற்காமலும் வேறொரு பயனிலையைக்கொண்டு முடிவது வினையாலணையும் பெயர் ஆகும்."

வினையாலணையும் பெயர் தன்மை, முன்னிலை, படர்க்கை என்னும் மூன்று இடங்களிலும், மூன்று காலங்களிலும் உணர்த்தி வரும்.

மேற்கண்ட விளக்கங்களைப்போல் வினையாலணையும் பெயரைக் கண்டறிவது புரியாததோ, கடினமானதோ அல்ல. மிகவும் எளிது.

உதாரணம் : "கொடு" என்பதன் வினையாலணையும் பெயர் எது ?

அ.கொடுத்து
ஆ.கொடுத்த
இ.கொடுத்தல்
ஈ.கொடுத்தவள்

விடை : ஈ.கொடுத்தவள் (மூன்று இடங்களிலும், மூன்று காலங்களிலும் உணர்த்தி வந்துள்ளது)

ஒன்றை மனதில் வைத்துக்கொள்ளுங்கள் வினையாலணையும் பெயர் என்றாலே ஏதோ ஒருவகையில் "அணைத்து" வருவது போல் வரும், எ.கா. அறிந்தவன், படித்தவர்....


தொழிற்பெயர் என்றால் என்ன ?

ஒரு தொழிலை செய்வதைக் குறிப்பது தொழிற்பெயர். பாடுதல், ஆடுதல், நடித்தல்..... பொதுவாக தொழிற்பெயர்கள் தல், அல், கை என்றவாறு முடியும்.

உதாரணம் : 'வாழ்' என்ற வேர்ச்சொல்லின் தொழிற்பெயர் எது ?

அ.வாழ்க
ஆ.வாழ்வீர்
இ.வாழ்ந்தார்
ஈ.வாழ்தல்

விடை : ஈ.வாழ்தல் (தல் என முடிந்துள்ளது.)
Announcement !
உரையாடலில் சேர் (3)
3 கருத்துகள்
  1. Viswa
    Profile
    Viswa
    Viswa
    Said: it with picture is nice
    it with picture is nice
  2. Profile
    பெயரில்லா
    Said: nalla rest edu
    nalla rest edu
  3. Unknown
    Unknown
    Profile
    Unknown
    Unknown
    Said: i cant able to understand about vinnaiyalanayum peyar. plz give me some more ex.

    ID : karthikeyan3105@yahoo.com
    i cant able to understand about vinnaiyalanayum peyar. plz give me some more ex.

    ID : karthikeyan3105@yahoo.com
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!