நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC பொதுத் தமிழ் -20.எதுகை, மோனை, இயபு

பகுதி அ.20.எதுகை, மோனை, இயபு

தமிழ் இலக்கியத்தில் செய்யுளின் உறுப்புகள் ஆறு வகைப்படும். எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை . இவற்றில் 'தொடை'  என்பதன் பொருள் ஒரு செய்யுளின் அடிகளையோ, சீர்களையோ ஒன்றுடன் ஒன்று தொடுப்பது எனப் பொருள்படும். மோனைத்தொடை, எதுகைத்தொடை, இயைபுத்தொடைகள் அவ்வாறு தொடுப்பதால் உருவானவை. இவற்றில் சீர் (செய்யுளின் ஒரு அடி /வரி) தோறும் ஒன்றி வருபவை சீர் மோனை/எதுகை/இயைபு எனவும், அடி தோறும் ஒன்றி வருபவை அடி மோனை/எதுகை/இயைபு எனவும் அழைக்கப்படுகின்றன.

மோனை : முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை


உதாரணம் : கீழ்க்கண்ட செய்யுளில் மோனை எது ?

நாணாக்த் தில்லார் இயக்கம் மரப்பாவை
நானால் உயிர்மருட்டி யற்று

அ.நாணக - இயக்கம்
ஆ.நாணால்- உயிர்மருட்டி
இ.நாணக-மரப்பாவை
ஈ.நாணக-நாணால்

விடை: ஈ.நாணக-நாணால்  ( முதல் எழுத்து ஒன்றியுள்ளது)

எதுகை : இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை.


உதாரணம் : எதுகையைத் தெர்ந்தெடுக்கவும் ?

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை

அ.செல்வத்துள் -செல்வம்
ஆ.செல்வம் -செவிச்செல்வம்
இ.அச்செல்வம் -எல்லாம்
ஈ.தலை-செல்வம்

விடை : அ.செல்வத்துள் -செல்வம் (இரண்டாம் எழுத்து ஒன்றியுள்ளது)

இயைபு : ஒரு பாடல்/செய்யுளின் சீர்களிலோ, அடிகளிலோ எழுத்துக்கள் ஒன்றி வருவது இயைபு ஆகும்.

உதாரணம் : எது இயைபு ?

செந்தமிழ் நாடென்னும் போதினிலே
இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே

அ.செந்தமிழ் - போதினிலே
ஆ.நாடென்னும் - இன்பத்தேன்
இ.வந்து - பாயுது
ஈ.போதினிலே - காதினிலே

விடை : ஈ.போதினிலே - காதினிலே ( ஒரே மாதிரியான ஒலியினைத்தருகிறது )

-தொடரும்.

(இனி வரும் பதிவுகளில் TNPSC பொதுத்தமிழ் பகுதியில் புதிதாக சேர்த்துள்ள பகுதி ஆ மற்றும் பகுதி இ  பகுதிகளை விளக்கமாக பார்க்கலாம். )
Announcement !
உரையாடலில் சேர் (1)
1 கருத்து உள்ளது
  1. Unknown
    Unknown
    Profile
    Unknown
    Unknown
    Said: very usefull...
    very usefull...
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!