Skip to main content
குரூப் 2,2A 2019 (New Syllabus) Test Batch Admission Going On ! Download Test Batch Schedule Tamil English

TNPSC தேர்வுகளுக்கான நடப்பு நிகழ்வுகள் – 21-22 மார்ச் 2018


TNPSC Current Affairs 21 - 22 March 2018

தமிழகம்

v  4500 ஆண்டுகள் பழமையான மொழி தமிழ் -ஆய்வில் தகவல் : தமிழ் உட்பட 82 மொழிகளை உள்ளடக்கிய திராவிட மொழிக்குடும்பம் 4,500 ஆண்டுகள் பழமையான மொழி என ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில் மிகப் பழமையான மொழி தமிழ் தான் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
o    ஜெர்மனியை சேர்ந்த மானிட வரலாற்று அறிவியல் ஆய்வகமான மேக்ஸ் பிளான்க் கல்வி நிறுவனமும், டேராடூன் இந்திய வன உயிர் கல்வி நிறுவனமும் இணைந்து மொழி ஆராய்ச்சி நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டனர்.அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தெற்காசிய பகுதி 600 மொழிகளின் தாயகமாக விளங்கியுள்ளது. அவை திராவிடம், இந்தோ-ஐரோப்பா, சீனா-திபெத்தியம் உட்பட 6 மொழிக் குடும்பங்களின் கீழ் வகைப்படுத்தப்பட்டு ஆராயப்பட்டன. இந்த 6 மொழி குடும்பங்களில் முதன்மையானதும், பழமையானதும் திராவிட மொழிக்குடும்பமே. இது சுமார் 4,500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
o    தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட சுமார் 80 மொழிகளை உள்ளடக்கிய திராவிட மொழியை 22 கோடி மக்கள் தற்போது பேசுகின்றனர். இதில் பழமையான மொழி தமிழ். சமஸ்கிருதம் போல் சிதைந்து போகாமல் தமிழ் மொழியின் கல்வெட்டுக்களும், காப்பியங்களும் தற்காலம் வரை காணக்கிடைக்கின்றன. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
v  தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக தம்ம சூரியநாராயண சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியா

v  அதிக அளவில் பிச்சைக்காரர்கள் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பட்டியலில், மேற்கு வங்க மாநிலம் முதலிடத்தை பிடித்துள்ளது. மத்திய சமூக நலத்துறை வெளியிட்டுள்ள இந்தப்பட்டியலில், இரண்டாவது இடத்தில் உத்தர பிரதேசமும், மூன்றாவது இடத்தில்  பீகாரும் உள்ளன. தமிழகம் 33 வது இடத்தில் உள்ளது.
v  கோவாவில், வாஸ்கோ (Vasco) எனுமிடத்தில்,  படகுப் போக்குவரத்து சேவை மத்திய  சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், கப்பல் மற்றும் நீர்வள அமைச்சர் நிதின் கட்காரி அவர்களால் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
v  சமீபத்தில் மரணமடைந்த இங்கிலாந்தைச் சேர்ந்த அறிவியல் அறிஞர்  ஸ்டீபன் ஹாக்கின்ஸ் (Stephen Hawking) நினைவாக சிறப்பு அஞ்சல் உறையை இந்திய தபால் துறை வெளியிட்டுள்ளது.

v  உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட, முதல் அணுசக்தி நீர் மூழ்கிக் கப்பல்  - ஐ.என்.எஸ்., அரிஹந்த். 2016 ஆம் ஆண்டில் கடற்படையில் இணைக்கப்பட்ட இந்த கப்பல்,  நிலம், நீர் மற்றும் வானில் அணு ஆயுத ஏவுகணைகளை செலுத்தி தாக்கும் வசதிகள் கொண்டதாகும்.
v  இந்திய இரயில்வேயின், ஐ.ஆர்.டி.சி (IRCTC -Indian Railway Catering and Tourism Corporation) நிறுவனம் ஒலா கேப்ஸ்” (Ola Cabs) நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம்  இரயில் பயணிகள் ஐ.ஆர்.டி.சி இணையதளம் அல்லது மொபைல் செயலியின் மூலம்  'ஒலாடாக்சி  பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
v  நிதி அயோக்” (NITI Aayog) மற்றும் பிரமால் பவுண்டேசன்” (Piramal Foundation) இடையே ஒப்பந்தம் :   ஊட்டச்சத்து, கல்வி, பொருளாதார முன்னேற்றம், திறன் மேம்பாடு, விவசாயம், நீர் வளம் மற்றும்  உட்கட்டமைப்பு வசதிகளில் பிந்தங்கியுள்ள, நாட்டின் 115  மாவட்டங்களில்  சுகாதாரம், கல்வி மற்றும் ஊட்டச்சத்து ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக, நிதி அயோக்,  பிரமால் பவுண்டேசன்” (Piramal Foundation)  எனும் தொண்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
v  பத்திரிகையாளர் நலத்திட்டக்குழுவையும் மத்திய பத்திரிகையாளர் அங்கீகாரக் குழுவையும் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் மாற்றியமைத்துள்ளது. பத்திரிகையாளர் நலத்திட்டக்குழுவில் முதல் முறையாக பத்திரிகையாளர்கள் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளார்கள்.
o    மத்திய பத்திரிகையாளர் அங்கீகாரக்குழுவுக்கு (Central Press Accreditation Committee ) பத்திரிகை தகவல் அலுவலக முதன்மைத் தலைமை இயக்குநர் தலைவராக இருப்பார். இந்தியப் பத்திரிகை கவுன்சில் பிரதிநிதியும், ஒலிப்பரப்பாளர் சங்கத்தின் பிரதிநிதியும் இதில் இடம் பெறுகிறார்கள். திரு பிரஷாந்த் மிஸ்ரா - டைனிக் ஜாக்ரான், திருமதி நவிகா குப்தா-டைம்ஸ் நவ், திரு கஞ்சன் குப்தா - ஏ பி பி செய்திப்பிரிவு பிரதிநிதி, திரு ஜே கோபிகிருஷ்ணா - பயோனியர், திருமதி சுமிதா பிரகாஷ்- ஏ என் ஐ ஆகியோர் இதர உறுப்பினர்கள். இந்த உறுப்பினர்களின் பதவிக்காலம்  இரண்டு ஆண்டுகள். காலாண்டுக்கு ஒருமுறையோ அல்லது அடிக்கடியோ கூடுவார்கள்.
o    பத்திரிகையாளர் நலத்திட்டக்குழு (Committee on Journalist Welfare Scheme) திறம்பட செயல்படுவதற்காக அதன் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. இப்போது தகவல் ஒலிபரப்புத்துறை செயலாளரும், ஊழியர் நலம் மற்றும் நிர்வாகப் பிரிவு இணைச்செயலர்,  பத்திரிகை தகவல் அலுவலக முதன்மை தலைமைச் செயலர் ஆகியோர் அதிகார நிமித்தம் உறுப்பினர்களாக இருப்பார்கள். முதன் முறையாக பத்திரிகையாளர்களும், இந்தக் குழுவில் உறுப்பினர்களாக  இணைக்கப்பட்டுள்ளார்கள்.   திரு விகாஸ் பதாரியா, திருமதி ரிச்சா அனிருத், திரு அசோக் உபாத்யாயா, திரு சுஜித் தாக்கூர், செல்வி சிப்ரா தாஸ், திரு ரவீந்தர் சிங் ஆகியோர் அதிகார நிமித்தமல்லாத உறுப்பினர்களாக பத்திரிகையாளர் நலக்குழுவில் இடம் பெற்றுள்ளார்கள். இப்படி அதிகார நிமித்தமல்லாத உறுப்பினர்களின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள்.  பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள் குறிப்பிட்ட காலவரம்புக்குள் உரிய நேரத்தில் ஆதரவு பெற இந்த முயற்சி  உதவும்.
v  ஜார்கண்ட் மாநிலம் தியோகார் (Deoghar) மாவட்டத்தில் பிளாஸ்டிக் பூங்கா (Plastic Park) அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. 
v  தேசியக் கலாச்சார ஒலி ஒளி காப்பகம் (National Cultural Audiovisual Archives (NCAA))  உலகின் முதல் நம்பகத் தன்மை வாய்ந்த மின்னணுக் களஞ்சியமாக உருவாகியுள்ளது. மத்திய கலாச்சார அமைச்சகத்தின் கீழ் செயல்படும், இந்திராகாந்தி தேசிய கலை மையத்தால் செயல்படுத்தப்பட்ட திட்டமான, தேசிய கலாச்சார ஒலி, ஒளி காப்பகத்திற்கு ஐ.எஸ்.ஓ. 16363: 2012 (ISO 16363:2012 )–ன் தரநிலையின்படி உலகின் முதல் நம்பகத் தன்மை வாய்ந்த மின்னணுத் தகவல் களஞ்சியம் என்ற சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
v  106-வது இந்திய அறிவியல் மாநாடு   2019-ம் ஆண்டு ஜனவரி 3-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை போபால் பர்க்கத்துல்லா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் என்றும், “எதிர்கால இந்தியா: அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்” (Future India: Science and Technology) என்பது இதன் மையக் கருத்தாக இருக்கும் என்றும்  106-வது இந்திய அறிவியல் மாநாட்டு சங்கத்தின் பொது தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பேராசிரியர் மனோஜ் குமார் சக்கரபர்த்தி தெரிவித்துள்ளார்.
v  ஃபோஷன் அபியான்” (POSHAN Abhiyaan) எனப்படுவது  சத்துக் குறைபாட்டுக்குத் தீர்வுகாண ஊட்டச் சத்து குறித்த தேசிய அளவிலான பிரசாரமாகும்.  இந்த  ஊட்டச்சத்துப் பிரசாரம் (POSHAN Abhiyaan) திட்டத்திற்காக மூன்றாண்டு நிதியாக ரூ. 9046.15 கோடியை மத்திய அரசு 2017-18ம் நிதியாண்டிலிருந்து ஒதுக்கியுள்ளது. 
v  கர்நாடகா மாநிலத்திலுள்ள பரிவாரா” (Parivara) மற்றும் தலவாரா” (Talawara0 ஆகிய ஜாதிகளை  மலைவாழ் இனத்தவர் பட்டியலில் (Scheduled Tribes) சேர்ப்பதற்கு மத்திய காபினட் ஒப்புதல் வழங்கியுள்ளது. 
v  வடகிழக்கு தொழிற்சாலைகள் மேம்பாட்டு திட்டம், 2017” ( North East Industrial Development Scheme (NEIDS)) ஐ ரூ.3000 கோடி ஒதுக்கீட்டில் மார்ச் 2020 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் நிறைவேற்ற, மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. 
v  ஆயுஷ்மான் பாரத் - தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்திற்கு” (Ayushman Bharat -National Health Protection Mission (AB-NHPM)) மத்திய காபினட் ஒப்புதல் வழங்கியுள்ளது. இத்திட்டத்தின் மூலம்  ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டிற்கு ரூ.5 இலட்சம்  காப்பீடு வழங்கப்படவிருக்கிறது. இதன் மூலம் 10 கோடி குடும்பங்கள் பயன்பெறுவர் எனக் கணிக்கப்பட்டுள்ளது.  புதிதாக துவங்கப்படவிருக்கிற இத்திட்டமானது, ஏற்கனவே அமலில் இருக்கும் மத்திய அரசுத் திட்டங்களான  ராஷ்டிரிய ஸ்வஸ்திய பீமா யோஜனா” (RashtriyaSwasthyaBimaYojana (RSBY)) மற்றும்  மூத்த குடிமக்கள் ஆரோக்கிய காப்பீடு திட்டம் (Senior Citizen Health Insurance Scheme (SCHIS)) போன்றவற்றை உட்படுத்தி செயல்படுத்தப்படவிருக்கிறது.
v  வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான இந்திய வளர்ச்சி நிறுவனத்தை (India Development Foundation of Overseas Indians)  மூடுவதற்கு மத்திய காபினட் ஒப்புதல் வழங்கியுள்ளது. 2008 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம் வரும் 31 மார்ச் 2018 இல் மூடப்படுகிறது.
v  தேசிய உயர்கல்வி திட்டத்தை” (RashtriyaUchchatarShikshaAbhiyan (RUSA) - National Higher Education Mission) 31.03.2030 வரையிலான காலக்கட்டத்திற்கு தொடருவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.  மொத்த உயர்கல்வியில் சேருவோரின் சராசரியை 2020 ஆம் ஆண்டிற்குள் 30% உயர்த்துதல். இத்திட்டத்தின் இரண்டாவது கட்டத்தில் 70 மாதிரி கல்லூரிகளும், 8  தொழில்கல்வி நிறுவனங்களும் அமைக்கப்படவுள்ளன.
v  பாரம்பராகாத் கிரிஷி விகாஷ் யோஜனா (Paramparagat Krishi Vikas Yojana (PKVY)) இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க பாரம்பரிய விவசாய வளர்ச்சித் திட்டம்  (Paramparagat Krishi Vikas Yojana (PKVY)) எனும் திட்டம் மத்திய அரசினால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  இத்திட்டத்தின் மூலம், நாடெங்கிலும் சும்மர் 2 லட்சம் ஹெக்டேர்கள் இயற்கை விவசாயத்திற்கு ஏற்றவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 5 இலட்சம் விவசாயிகள் பயன்பெறுவர். 

வெளிநாட்டு உறவுகள்

v  மியான்மார் நாட்டிற்கு, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 18 உயர்தர டீசல் இரயில்வே எஞ்சின் (18 high-end diesel locos ) இந்தியாவினால் வழங்கப்பட்டுள்ளது.  
v  இந்திய விண்வெளித்துறை (Department of Space) மற்றும் ஐரோப்பிய கமிஷன் (European Commission ) இடையே,  புவி ஆராய்ச்சி  ( earth observation ) தொடர்பான தகவல்களை பரஸ்பரம் பகிர்ந்து கொள்வதற்கான ஒப்பந்தம் 19-03-2018 அன்று செய்து கொள்ளப்பட்டது.
v  இந்தியா மற்றும் ஹாங்காங் இடையே இரட்டை வரி விதிப்பு தடுப்பதற்கானஒப்பந்தம் 19-03-2018 அன்று செய்து கொள்ளப்பட்டது.
v  இந்தியா- கத்தார் இடையேயான இரட்டை வரிவிதிப்பை (Double Taxation Avoidance Agreement (DTAA)) மறுபரிசீலனை செய்வதற்கான ஒப்பந்தத்திற்கு மத்திய காபினட் ஒப்ப்தல் வழங்கியுள்ளது.  

சர்வதேச நிகழ்வுகள்

v  மெர்சர் அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள உலக வாழ்க்கைத் தர பட்டியல் 2018” (Quality of Liiving Survey  by Mercer) இன் படி,  உலகிலேயே வாழ்வதற்கு உகந்த நகரங்களில் முதலிடத்தில் வியன்னாவும் (ஆஸ்திரிய நாட்டின் தலைநகர்) , இரண்டாம், மூன்றாம், நான்காம் மற்றும் ஐந்தாம் இடங்களில் முறையே சூரிச்(சுவிட்சர்லாந்து). ஆக்லாந்து(நியூசிலாந்து), மூனிச்(ஜெர்மனி) மற்றும் வான்கோவர்(கனடா) ஆகிய நகரங்களும் இடம்பெற்றுள்ளன.
v  ஜி-20 நாடுகளின், நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி கவர்னர்களின் கூடுகை (G20 meeting of finance ministers and central bank governors) 19-20 மார்ச் 2018 தினங்களில் அர்ஜெண்டினா நாட்டின் தலைமையில், அந்நாட்டிலுள்ள பியூனோஸ் ஐரிஸ் (Buenos Aires) நகரில் நடைபெற்றது.
கூ.தக :  1999 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட ஜி-20 அமைப்பில், அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகள் உறுப்பினராக உள்ளன.  இவ்வமைப்பின் தற்போதைய தலைவராக, அர்ஜெண்டினா நாட்டின் அதிபர் மவுரிசியோ மாக்ரி” (Mauricio Macri)  உள்ளார்.
v  வளைகுடா பாதுகாப்பு கேடயம் 1” (Gulf Shield 1)  என்ற பெயரில் சவுதி அரேபியா நாட்டினால் நடத்தப்படும்  பன்னாட்டு கூட்டு இராணுவப் பயிற்சி சவுதி அரேபியாவில் 18-03-2018 அன்று துவங்கியது. இந்த பயிற்சியில் 23 நாடுகளின் இராணுவங்கள் பங்கேற்றுள்ளன.
v  உலகின் கடைசி வெள்ளை ஆண் காண்டாமிருகம் "சூடான்" உயிரிழந்தது :  கிழக்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் கென்யாவின் ஒல் பெஜெட்டா என்னும் விலங்குகள் காப்பகத்தில் மிகவும் பாதுகாப்புக்கள் மத்தியில் இருந்த வெள்ளை ஆண் காண்டாமிருகம் (பெயர் சூடான்) 20-03-2018 அன்று உயிரிழந்தது.
o    கடைசி வடக்கு வெள்ளை ஆண் காண்டாமிருகம் சூடானில் பிறந்தது, இதுதான் உலகின் கடைசி ஆண் காண்டாமிருகம் ஆகும். இந்த காண்டாமிருகம் அப்போது செக் குடியரசு உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் 2009-ம் ஆண்டு கென்யாவிற்கு கொண்டு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கூ.தக: உலகில் சுமத்ரா காண்டாமிருகம், இந்திய காண்டாமிருகம், ஜாவா காண்டாமிருகம், கருப்பு காண்டாமிருகம் மற்றும் வெள்ளை காண்டாமிருகம் என 5 காண்டாமிருக வகைகள் உள்ளது.
v  மியான்மர் நாட்டின் அதிபரும், ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய லீக் கட்சியைச் சேர்ந்தவருமான ஹிதின் கியா தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு நாட்டின் அதிபர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

முக்கிய நியமனங்கள்

v  பீகார் ஆளுநர் திரு சத்தியபால் மாலிக்கை, ஒடிசா ஆளுநர் பொறுப்பையும் கவனிக்க இந்தியக் குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார்.

முக்கிய தினங்கள்

v  உலக சிட்டுக்குருவி தினம் (World Sparrow Day)- மார்ச் 20 |  நோக்கம்(2018) : ”நான் சிட்டுக்குருவிகளை நேசிக்கிறேன்” (I love Sparrows)
v  சர்வதேச மகிழ்ச்சி தினம் (International Day of Happiness) - மார்ச் 20 | நோக்கம் (2018) : மகிழ்ச்சியைப் பகிருங்கள் (Share Happiness)
v  இன வேறுபாடுகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் (International Day for the Elimination of Racial Discrimination) - மார்ச் 21 | நோக்கம்(2018) :  சகிப்புத்தன்மை, ஒற்றுமை மற்றும்  பன்முகத்தன்மை மீதான மரியாதையை வளர்ப்போம்.  
v  உலக கவிதை தினம் (World Poetry Day) - மார்ச் 21
v  சர்வதேச் காடுகள் தினம் (International Day of Forests) - மார்ச் 21 | நோக்கம்(2018) :  காடுகள் மற்றும் நகரங்களின் நிலையான வளர்ச்சி (Forests and Sustainable Cities)
v  உலக மனநலிவு நோய் தினம் (World Down syndrome Day) - மார்ச் 21 | நோக்கம்(2018):   மனநலிவு நோய் கொண்டோர், எவ்வாறு, பள்ளிகள், பணிபுரியும் இடங்கள், சமுதாயம், பொது வாழ்வு, கலாச்சாரம், ஊடகங்கள், பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டில் பங்களிப்பு வழங்கலாம் (how people with Down syndrome can contribute in schools, workplaces, community, public and political life, culture, media, recreation, leisure and sport.)

விருதுகள் / மரியாதைகள்

v  ஆபெல் பரிசு 2018” (Abel Prize for 2018) : கணிதத்துறையில் வழங்கப்படும் மிக உயரிய ஆபெல் பரிசு, இந்த ஆண்டு,  கனடாவைச் சேர்ந்த கணித அறிஞர்  ராபர்ட் லாங்க்லாண்ட்ஸ் (Robert Langlands) க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கூ.தக:  நார்வே அறிவியல் அகதமியினால் (Norwegian Academy of Sciences and Letters) வழங்கப்படும்  ஆபெல் பரிசு”,   நார்வே நாட்டின் அறிவியல் மேதை நீல்ஸ் கென்றிக் ஆபெல் (Niels Henrik Abel) இன் நினைவாக வழங்கப்பட்டு வருகிறது.
v  விராட் கோலி, தீபிகா படுகோனுக்கு இன்ஸ்டகிராம் விருதுகள்  : ரசிகர்களால் அதிகம் பயன்படுத்தும் இன்ஸ்டகிராம் கணக்கு  என்கிற விருது விராட் கோலிக்கு வழங்கப்பட்டுள்ளது.  அதிகம் பேர் பின்தொடரும் இன்ஸ்டகிராம் விருது பிரபல நடிகை தீபிகா படுகோனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
v  பெண்களை படிக்கவையுங்கள்” (Educate Girls) எனும் சர்வதேச  தொண்டு நிறுவனத்தின்  விளம்பர தூதுவராக இந்திய பாலிவுட் நடிகை காத்ரினா கைஃப்” (Katrina Kaif) நியமிக்கப்பட்டுள்ளார்.

அறிவியல் தொழில்நுட்பம்

v  உலகின் மிக வேகமான காற்று சுரங்கம்” (wind tunnel) சீனாவில் அமைக்கப்பட்டு வருகிறது.    விண்கங்களை (spacecraft)  பரிசோதிக்க வடிவமைக்கப்பட்டுள்ள இந்த காற்று சுரங்கமானது  30,625 kph வேகத்தில் (காற்றின் வேகத்தை விட 25 மடங்கு அதிகமான வேகம்) இயங்கும் விண்கலங்களையும் பரிசோதிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
v  ஹெலனிக் ஸ்பேஸ் ஏஜென்சி” (Hellenic Space Agency) என்ற பெயரில் கிரேக்க நாடு, தனது முதல் விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தை 19-03-2018 அன்று துவங்கியுள்ளது.
v  புதிய நீர்தாண்டி ( water strider ) உயிரினம் கண்டுபிடிப்பு  :  இந்திய விலங்கியல் சர்வே (Zoological Survey of India (ZSI)) அமைப்பு   நாகாலாந்தின்  இண்டான்கி ஆற்றிலிருந்து,     பிலோமிரா நாகாலாந்தா ஜெஹாமலர் மற்றும் சந்திரா” ( Ptilomera nagalanda Jehamalar and Chandra) எனும் புதிய நீர்தாண்டி ( water strider )  வகையிலான உயிரினத்தைக் கண்டுபிடித்துள்ளது. 

புத்தகங்கள்

v  பரம்வீர் சக்ரா விருது வென்றவர்கள் பற்றிய பரம்வீர் பர்வானே” (Paramveer Parwane) என்ற புத்தகத்தை இந்திய ராணுவம் வெளியி்ட்டுள்ளது. இந்த நூல் 1947 முதல் 1965 வரையிலான காலத்தில், பரம்வீர் சக்ரா விருது வென்றவர்களின் வீரச் செயல்களை விளக்குகிறது. டாக்டர் பிரபாகிரண் ஜெயின் (Dr Prabhakiran Jain )  எழுதிய இந்த நூலை மேதா புக்ஸ் என்ற நிறுவனம் பதிப்பித்துள்ளது. இந்த நூலில் ராணுவ வீரர்கள் அதீத வீரத்துடன், தலைமைப் பண்பை முன்நிறுத்தி, தாய்நாட்டைக் காப்பதற்கான போர்களின்போது எதிரிகளை எதிர்கொண்டு, தங்கள் இன்னுயிரை ஈந்த போர் வரலாறுகளைக் கோடிட்டுக் காட்டும் 11 சிறுகதைகள், கவிதைகள் மற்றும் பாடல்கள் இடம்பெற்றுள்ளன.


படியுங்கள் !     பகிருங்கள் !         வெற்றி பெறுங்கள் !


Comment Policy:Dear visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation. Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.
View Comments
Close Comments