Skip to main content
TNPSC Group 4 2019 Self Preparation Test Series குரூப் IV 2019 Test Batch - Join Now !
Tamil & English Medium |35 தேர்வுகள் | Online & PDF
TNPSC General English Book - Buy Now

TNPSC தேர்வுகளுக்கான நடப்பு நிகழ்வுகள் – 23-26 மார்ச் 2018


TNPSC Current Affairs 23-26 March 2018

தமிழகம்

v  மத்திய அரசின் உடான்” (UDAN - Udey Deshka Aam Nagrik) திட்டத்தின் கீழ்  சென்னை சேலம் இடையே TrueJet நிறுவனத்தின் மூலம் முதல் விமான சேவை 25.03.2018 அன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் துவக்கி வைத்தார்.
v  தமிழகத்தில் புதிதாக 4 விமான நிலையங்கள் : தமிழகத்தில், ஒசூர், நெய்வேலி, தஞ்சை, வேலூர் ஆகிய  இடங்களில் விமான நிலையங்கள், இந்த ஆண்டுக்குள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய ஆணையத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
v  தமிழகத்தில் முதல் முறையாக, சென்னை மேற்கு மாம்பலம் போலீஸ் ஸ்டேஷனில்சூரிய மின் சக்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், இரண்டு மாதத்திற்கு ஒருமுறை, 900 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இந்த திட்டத்தால், ஸ்டேஷன் மின் கட்டணம், 15 சதவீதம் குறைய வாய்ப்பு உள்ளது.
v  "சாகர் கவச் or கடற்கவசம்” (Sagar Kavach) :  தமிழ்நாடு கடலோரப் பகுதிகளில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த சாத்தியக்கூறு உள்ள பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் மற்றும் நுண்ணறிவுப் பிரிவினரின் தயார் நிலை குறித்து ஆய்வு செய்வதற்காக சாகர் கவாச்எனப்படும் கடலோரப் பாதுகாப்பு ஒத்திகையானது 13 தமிழகக் கடலோர மாவட்டங்களில் 22.03.2018 காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மேற்கொள்ளப்பட்டது.
v  'பிராமி' எழுத்து பொருட்கள் கண்டுபிடிப்பு : மதுரை மாவட்டம், கவசகோட்டையில் நடந்த ஆய்வில், கி.பி., 1ம் மற்றும் 2ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, 'பிராமி' எழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இதில், தமிழரின் தொன்மை எழுத்து வடிவமான, தமிழ், 'பிராமி' எழுத்துகள் பொறித்த, கருப்பு, சிவப்பு வண்ணமுடைய பானை ஓடுகள், முதுமக்கள் தாழி, சுடுமண் பொம்மைகள், மண்பாண்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன.பானை ஓடுகளில், கி.பி., 1- மற்றும் 2ம் நுாற்றாண்டை சேர்ந்த, தமிழ் பிராமி எழுத்து வடிவம் இடம் பெற்றுள்ளது.
v  வி.ஐ.டி., பல்கலைக்கழகத்துக்கு  க்யூ.எஸ்., அமைப்பின், தேசிய அளவிலான, 'வைர விருது' : கல்வி, ஆராய்ச்சி பணிகளில் சிறந்து விளங்குவதற்காக, க்யூ.எஸ்., அமைப்பின், தேசிய அளவிலான, 'வைர விருது', வி.ஐ.டி., பல்கலைக்கழகத்துக்கு வழங்கப்பட்டது.இங்கிலாந்து நாட்டை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும், க்யூ.எஸ்., அமைப்பு, உலக தரத்திலான, கல்வி மற்றும்ஆராய்ச்சி பணிகளில் சிறந்து விளங்கும் உயர் கல்வி நிறுவனங்களை, தேர்ந்தெடுத்து, தர வரிசை அங்கீகாரம் வழங்கி வருகிறது.
v  தமிழக அரசின் காசநோயாளிகளுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் :  தமிழகத்திலுள்ள காசநோயாளிகளுக்கு அவர்களது சிகிச்சை காலங்களில் மாதம் 500 ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
கூ.தக : உலக சுகாதார நிறுவனம், உலகளவில் 2030-ம் ஆண்டிற்குள் காசநோயைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று அறிவித்துள்ளது. இந்தியாவில் இக்குறிக்கோளை 2025-ம் ஆண்டிற்குள் அடைய முழு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகமும் அந்த இலக்கு காலத்துக்கு முன்பே காசநோயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
v  கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நாட்டின் மிகப் பெரிய பூச்சி அருங்காட்சியகம் 26-03-2018 அன்று  முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி  திறந்துவைக்கிறார்.  ரூ. 5 கோடி செலவில் 6,691 சதுர அடி பரப்பளவில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. தில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தில் சுமார் 70 ஆயிரம் பூச்சிகளைக் கொண்ட ஆய்வு மையம் இருந்தாலும், நாட்டிலேயே முதல்முறையாக மக்களுக்கு காட்சிப்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள முதலாவது பூச்சியியல் அருங்காட்சியகம் இதுவாகும்.  இந்த அருங்காட்சியகத்தில் 20,122 இனங்களைச் சேர்ந்த 84 ஆயிரம் பூச்சிகளின் பதப்படுத்தப்பட்ட மாதிரிகள், உயிருள்ள பூச்சிகள் இடம் பெற்றுள்ளன. மேலும் இங்கு பூச்சிகளின் வாழ்க்கை, செயல்படும் பண்புகள் போன்றவற்றை விளக்கும் படங்கள் ஒளி, ஒலிப் பதிவுகள் உள்ளன.
v  மாற்றுத்திறனாளிகள் நல வாரிய உறுப்பினர்களாக 3 எம்.எல்.ஏ.க்கள் நியமனம்   : தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நல வாரிய உறுப்பினர்களாக ஆர். நடராஜ், பி.கே.சேகர்பாபு, மருதமுத்து ஆகிய 3 எம்.எல்.ஏ.க்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் பேரவைத் தலைவர் தனபால் அறிவித்துள்ளார்.
v  பூச்சியியல் நோய்களை அழிக்க, மருந்து கண்டுபிடித்த, வேலுார், திருவள்ளுவர் பல்கலை துணைவேந்தர் முருகனுக்கு, 'கேரியர் - 360'  பேராசிரியர் ஆராய்ச்சி விருது வழங்கப்பட்டது.

இந்தியா

v  ஆயுள் காப்பீட்டு கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால வரையறையை 31 மார்ச் 2018 லிருந்து காலவரையறையற்றதாக ( indefinitely)  இந்திய காப்பீடு  முறைப்படுத்துதல் மற்றும் மேம்பாட்டு ஆணையம்” (Insurance Regulatory and Development Authority of India (IRDAI))  அறிவித்துள்ளது.
v  பிரதான் மந்திரி ஜீவன் ஜியோதி பீமா யோஜனா” (Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana (PMJJBY)) மற்றும்  பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா (Pradhan Mantri Suraksha Bima Yojana (PMSBY)) ஆகியவை  9 மே 2015 அன்று மத்திய அரசினால் அறிவிக்க பட்ட ஆண்டுதோறும் புதிப்பத்தக்க ஒராண்டு காப்பீட்டு திட்டங்களாகும்.  ஒவ்வொரு வருடமும் ஜீன் 1 ஆம் தேதி துவங்கி அடுத்த ஆண்டு மே 31 வரையில் அமலில் இருக்கும்.
o    பிரதான் மந்திரி ஜீவன் ஜியோதி பீமா யோஜனா (PMJJBY) திட்டத்தின் மூலம், வங்கி கணக்கு வைத்திருக்கும் 18 முதல் 50 வயதினர் அனைவரும்,  ஆண்டு பிரீமியம் தொகையான ரூ.330/- செலுத்துவதன் (வங்கிக் கணக்கிலிருந்து தானாகவே எடுத்துக்கொள்ளப்படும்)  மூலம்  ரூ.2 இலட்சம் அளவிற்கு ஆயுள் காப்பீடு செய்யப்படுவார்கள்.
o    பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா (PMSBY)  என்பது ஆண்டு தோறும் புதிப்பிக்கத்தக்க , 18 முதல் 70 வயதுவரையிலான அனைத்து பொதுமக்களும் ரூ.12/- வருடாந்திர பிரீமியம்,  அவர்களது வங்கிக்கணக்கிலிருந்து  தானாகவே பிடித்தம் செய்யப்படும். இந்த காப்பீடு திட்டத்தின் மூலம்,  விபத்து மற்றும்  நிரந்தர ஊனம் ஆகியவற்றிற்கு  ரூ.2 இலட்சமும், பகுதி நிரந்தர ஊனத்திற்கு ரூ.1 இலட்சமும் வழங்கப்படும்.
v  “Print Biennale India 2018’ என்ற பெயரில் முதல் சர்வதேச  கிராஃபில் அச்சு கண்காட்சி (International Exhibition of Graphic Prints) புது தில்லியில் 25-03-2018 அன்று நடைபெற்றது.
v  குஜராத் மாநிலம், ஆமதாபாத்திலுள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் சர்வதேச விமான நிலையத்திற்கு  2017 ஆம் ஆண்டின் மிகவும் மேம்படுத்தப்பட்ட விமான நிலையம் எனும் விருதை    சர்வதேச விமானநிலையங்களின் கவுண்சில் (Airport Council International (ACI)) வழங்கியுள்ளது. 
v  மாதவ்பூர் மேளா” (Madhavpur Mela) எனப்படும் கலாச்சாரத் திருவிழா 25-28 மார்ச் 2018 தேதிகளில் குஜராத் மாநிலம், போர்பந்தரில் உள்ள மாதவ்பூர் பகுதியில் நடைபெறுகிறது. மத்திய அரசின் ஏக் பாரத் ஸ்ரேஷ்தா பாரத்” (Ek Bharat Shrestha Bharat) எனப்படும் கலாச்சார ஒருமைப்பாட்டுத் திட்டத்தின் கீழ் கொண்டாடப்படும் இந்த திருவிழாவில் அருணாச்சல பிரதேசத்திலுள்ள மிஷ்மி மலைவாழினத்தவரின்” (Mishmi Tribe) கலாச்சாரத்திற்கு முக்கியத்துவம் வழங்கி அனுசரிக்கப்படுகிறது.
v  மகிளா சக்தி கேந்திரா திட்டம்   (Mahila Shakti Kendra scheme) எனப்படும்  சமுதாயத்தில் பங்குபெறுவதன் மூலம் கிராமப்புற பெண்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
o    2017-2018 முதல் 2019-2020 ஆம் ஆண்டு வரை கால வரையறைக் கொண்ட இத்திட்டத்தின் மூலம், கல்லூரி மாணவ தன்னார்வலர்களின் மூலம் , நாடுமுழுவதும் பிந்தங்கிய 115 மாவட்டங்களில், வட்டார அளவில்   அமல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் மாவட்ட அளவிலான பெண்கள் மையங்கள் அமைக்கப்படவுள்ளன. இந்த மையங்கள் மத்திய அரசின் பெண்களுக்கான பல்வேறு திட்டங்களை செய்ல்படுத்துவதில்  கிராமப்புற, வட்டார, மாவட்ட, மாநில அளவிலான இணைப்புப் பாலங்களாக செயல்படும்.  ஒவ்வொரு மாவட்ட பெண்கள் மையத்திற்கும் ரூ. 12.30 இலட்சம் வருடாந்திர நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
v  ஸ்வச்த பக்வாடா” (Swachhta Pakhwada) : சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி,  மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால்  1-15 மார்ச் 2018 தினங்கள் ஸ்வச்த பக்வாடாநிகழ்வாக அனுசரிக்கப்பட்டது.  உள் மற்றும் வெளிப்புற தூய்மை” (‘cleanliness, inside out’) எனும் முக்கிய நோக்கில் அனுசரிக்கப்பட்ட இந்த நிகழ்வில், நாடுமுழுவதும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் சுகாதாரம், தூய்மை, பாதுகாப்பைப் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
v  மார்ச் 2018 வரை, உலகப் பாரம்பரிய பட்டியலில் (World Heritage List) மொத்தம் 36 இந்திய இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன என மத்திய அரசு அறிவித்துள்ளது.  இவற்றில் 28 கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த இடங்களும், 7 இயற்கை முக்கியத்துவம் வாய்ந்த இடங்களும்,  1 இயற்கை மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த இடமும் அடங்கும்.
v  சர்வதேச யோகா திருவிழா (International Yoga Festival) 21-23 மார்ச் 2018 ஆகிய தினங்களில்  புது தில்லியில் நடைபெற்றது.
v  உலக  அளவில் குற்றவியல் விகிதத்தில், இந்தியா, மிகக்குறைவாக 33 அளவீட்டைப்பெற்றுள்ளது.   குற்றவியல் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் (Institute of criminal policy research) வெளியிட்டுள்ள இப்பட்டியலில் மிகக்குறைந்த குற்றவியல் விகிதம் உடைய நாடுகளின் பட்டியலில் முதல் ஐந்து இடங்களை இந்தியா, ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாடுகள் பெற்றுள்ளன.  மிக அதிக சிறைவாசிகளைக்  கொண்ட முதல் ஐந்து நாடுகள்  முறையே,  அமெரிக்கா, சீனா, பிரேசில், ரஷியா மற்றும் இந்தியா ஆகும்.
v  ஐ.என்.எஸ். கங்கா” (INS Ganga)  போர்க்கப்பல் 22-03-2018 அன்று இந்திய கப்பற்படையிலிருந்து ஓய்வு பெற்றது.  1985 ஆம் ஆண்டு இந்திய கடற்படையில் இணைக்கப்பட்ட இந்த போர்க்கப்பல், மும்பயின் மாஷாகான் டாக் லிமிடட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டதாகும்.
v  சவுதி அரேபியாவின் வான்வெளியின் மூலம் இஸ்ரேல் நாட்டிற்கு செல்லும் முதல் வணிக ரீதியிலான விமானம் எனும்  பெருமையை இந்திய அரசின் ஏர் இந்தியா நிறுவனத்தின்  AI 139 விமானம் பெற்றுள்ளது.
v  2 வது அனைத்திந்திய போலீஸ் அறிவியல் மாநாடு (All India Police Science Congress)  ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தின் சிம்லா நகரில் 22-03-2018 அன்று நடைபெற்றது.
v  105 வது தேசிய அறிவியல் கூடுகையை முன்னிட்டு, மணிப்பூரில் நடைபெற்ற, “இந்தியாவின் பெருமைக் கண்காட்சியில்” (Pride of India Expo)  சிறந்த கண்காட்சி விருது  இராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பிற்கு ( Defence Research and Development Organisation (DRDO)) வழங்கப்பட்டுள்ளது.
v  "வாடகைத்தாய் (கட்டுப்பாடுகள்) மசோதா, 2016 ((Surrogacy (Regulation) Bill, 2016) வில் துறைரீதியான திருத்தங்கள் மேற்கொள்ள மத்திய அமைச்சரவை 22-03-2018 அன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் வணிகரீதியிலான வாடகைத் தாய்  முறை தடுக்கப்பட்டுள்ளது.  கருத்தரிக்க இயலாமைமுதலிய நியாயமான காரணங்கள் இருந்தால் மட்டுமே வாடகைத்தாய் வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. 
v  பட்டு தொழில் வளர்ச்சிக்கான ஒருங்கிணைந்த திட்டத்தை ” (Integrated Scheme for Development of Silk Industry)  2017-2018 முதல் 2019-2020 ஆம் ஆண்டுவரை அமல்படுத்துவதற்கு 22-03-2018 அன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. 
v  இந்திய தொலைத்தொடர்பு ஆலோசனை நிறுவனம் (Telecommunications Consultants India Ltd (TCIL)) என்ற பெயரில்  அமெரிக்காவில் ஒரு நிறுவனத்தை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்நிறுவனத்தின் மூலம் தகவல் தொடர்பு  சம்மந்தமான அனைத்து செயல்பாடுகளும் மேற்கொள்ளப்படவுள்ளது.
v  கேரள அரசின்  மாநிலப் பழமாக (official fruit of Kerala)  பலாப்பழம் (Jackfruit)  21-03-2018 அன்று அறிவிக்கப்பட்டுள்ளது.  
v  கரம் பூரி” (Krem Puri)  என்ற பெயரிலான,  உலகின் மிக நீளமான    மணற்பாறை குகை” (sandstone cave) மேகாலயாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மண்பாறைக் குகையானது 24,583 மீட்டர் நீளமுள்ளது. 
கூ.தக.:  பொதுவானக் குகைப் பிரிவில், புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட இந்த கரம் பூரி” (Krem Puri)  மணற்பாறை குகையானது இந்தியாவின் இரண்டாவது நீளமான குகையாகும். இந்தியாவின் மிக நீளமான குகை    மேகாலயாவின் ஜைந்தியா மலைத்தொடரிலுள்ள கிரம் லியட் பிரா உமிம் - லாபிட்”(Krem Liat Prah-Umim-Labit” குகையாகும்.
v  மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட பாங்க் ஆப் இந்தியா” (Bank of India (BOI)) மியான்மர் நாட்டின் ரங்கூன் மற்றும் போஸ்ட்வானா நாட்டிலுள்ள தன்னுடைய அலுவலகங்களை 19 ஜனவரி 2018 முதல் மூடியுள்ளன.
v  ஆந்திராவில் " கிரியா" உதாரண பல்கலைக்கழகம் : ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர், ரகுராம் ராஜன், இண்டஸ் இண்ட் வங்கியின் தலைவர், சேஷசாயி, மஹிந்திரா குழுமத்தின் தலைவர், ஆனந்த் மஹிந்திரா உட்பட பல கார்ப்பரேட் நிறுவன அதிபர்கள் இணைந்து, கிரியா பல்கலைக்கழகம் என்ற கல்வி நிறுவனத்தை துவங்க உள்ளனர். இந்த பல்கலைக்கழகத்தின் நிர்வாக குழு ஆலோசகராக, ரகுராம் ராஜன் பொறுப்பேற்று உள்ளார். இதில், கலை மற்றும் அறிவியல் இளங்கலைப் பாடப்பிரிவுகள் நான்கு ஆண்டுகள் பயிற்றுவிக்கப்படுகிறது. தற்போது இருக்கும் பாடதிட்டத்தில் இருந்து முற்றிலும் வேறுபடும் இது, உதாரண பல்கலைக்கழகமாக திகழும் என கூறப்படுகிறது. ஆந்திராவின் ஸ்ரீ சிட்டி வளாகத்தில், 200 ஏக்கர் பரப்பளவில், 750 கோடி ரூபாய் செலவில், இந்த பல்கலைக்கழகம் உருவாகி வருகிறது. வரும், 2019, ஜூலை முதல் செயல்படத் துவங்கும்.
v  தெலுங்கானாவின் அனைத்து பள்ளிகளிலும் தெலுங்கு மொழி பாடத்தை கட்டாயமாக்கும் மசோதா, அம்மாநில சட்டப் பேரவையில் 24-03-2018 அன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.  "தெலங்கானா (பள்ளிகளில் தெலுங்கு பயிற்றுவிப்பதும், கற்பதும் கட்டாயம்) சட்டம், 2018' என்ற பெயரிலான அந்த மசோதாவின் படி,  எதிர்வரும் 2018-19 நிதியாண்டிலிருந்து ஒன்றாம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை மாணவர்கள் தெலுங்கை கட்டாயமாக கற்றுக் கொள்ள வேண்டும். சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, ஐபி அல்லது கேம்பிரிட்ஜ் வாரிய பள்ளிகளிலும் இதை அமல்படுத்த வேண்டும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.
v  பாதுகாப்பு தளவாட உற்பத்தி: வரைவுக் கொள்கை வெளியீடு :   உள்நாட்டில் பாதுகாப்பு தளவாட உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான வரைவுக் கொள்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி,
o    அதிநவீன பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தியில் உலகின் முதல் 5 நாடுகளில் ஒன்றாக இந்தியாவை மாற்றுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை எட்டுவதற்காக, அரசுத் துறை மட்டுமன்றி தனியார் துறை பங்களிப்பும் ஊக்குவிக்கப்படும்.
o    போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், போர்க் கப்பல்கள், ஏவுகணை, பீரங்கி வாகனங்கள், சிறிய ரக ஆயுதங்கள், வெடிகுண்டுகள், கண்காணிப்பு கட்டமைப்புகள் உள்பட 12 வகையான தளவாடங்களின் உற்பத்தியை ஊக்குவிப்பதன் மூலம் இந்தியாவை தற்சார்புடைய நாடாக மாற்ற முடியும்.
o    மேலும், 2025-ஆம் ஆண்டுக்குள் பாதுகாப்புத் துறை உற்பத்தி, சேவைகளின் வாயிலாக ரூ.1,70,000 கோடி விற்றுமுதல் ஈட்டவும், இதற்காக கூடுதலாக ரூ.70,000 கோடி முதலீடு செய்யவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 20 லட்சம் முதல் 30 லட்சம் வரை வேலைவாய்ப்புகள் உருவாகும்.
o    இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பாதுகாப்பு தளவாடங்களின் மதிப்பை, 2025-ஆம் ஆண்டுக்குள் ரூ.35,000 கோடியாக அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
v  செயற்கைக்கோளுக்கான லித்தியம்-அயன் பேட்டரி உற்பத்தி: " பெல்' நிறுவனத்துடன் இஸ்ரோ ஒப்பந்தம் : செயற்கைக்கோள்கள் மற்றும் அவற்றை ஏவுவதற்கான இயந்திரங்களில் பயன்படுத்தக்கூடிய லித்தியம்-அயன் பேட்டரிகளை உற்பத்தி செய்வதற்கான தொழில்நுட்ப பரிமாற்ற ஒப்பந்தம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துக்கும் (இஸ்ரோ), திருச்சி "பெல்' நிறுவனத்துக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
v  குஜராத்தில் விமானப்படை தளம் :  ராஜஸ்தானின், பார்மர் மற்றும் குஜராத்தின், புஜ் மாவட்டங்களில், இந்திய விமானப் படை தளங்கள் தற்போது செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், குஜராத்தில் மேலும் ஒரு விமானப் படை தளம் உருவாக்க திட்டமிடப்பட்டது. பானஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள தீசா என்ற இடத்தில், இந்த விமானப் படை தளம் உருவாக்கப்பட உள்ளது. இதற்காக, 4,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விமானப் படை தளம், 4,000 கோடி ரூபாய் செலவில், உருவாக உள்ளது. சமீபத்தில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ராணுவ அமைச்சரவைக் குழு, இந்த திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

வெளிநாட்டு உறவுகள்

v  ஏழாவது இந்தியா- எகிப்து கமிஷன் 23-03-2018 அன்று புது தில்லியில் நடைபெற்றது. இக்கூடுகையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் எகிப்து வெளியுறவுத்துறை அமைச்சர் சமேஷ் சவுக்ரி ஆகியோர் தலைமையிலான குழுக்கள் பங்கேற்றன.
v  4 நாள் சுற்றுப் பயணமாக ஜெர்மன் அதிபர் ஃபிராங்க் வால்டர் ஸ்டென்மெய்ர்  23-03-2018 அன்று  இந்தியா வந்துள்ளார்.

சர்வதேச நிகழ்வுகள்

v  சிம்பொனி ஆஃப் த சீஸ்” (Symphony of the Seas) என்ற பெயரிலான உலகின் மிகப்பெரிய கப்பல் , பிரஞ்சு கப்பல் கட்டும் நிறுவனத்திடமிருந்து   அமெரிக்காவின் ராயல் கரீபியன் குரூஸ் லிமிடட்” (Royal Caribbean Cruise Ltd)  நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  362 மீ நீளமும் 228000 டன் எடையும் கொண்ட இந்த கப்பல்  1.35 பில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்பட்டுல்ளது.
v  வெனுசிலியா நாடு தன் பண மதிப்பில் கடைசி மூன்று பூஜ்ஜியங்களைக் குறைத்துள்ளது.  அந்நாட்டில் நிலவும் உயர் பணவீக்கத்தினைக் (hyperinflation)  கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
v  பகத் சிங் நினைவு தினம் - பாகிஸ்தானில் அனுசரிப்பு : இந்திய விடுதலைக்காகப் போரிட்டு, தனது இன்னுயிரைத் தியாகம் செய்த பகத் சிங்கின் 87-ஆவது நினைவு தினம், பாகிஸ்தானில் அனுசரிக்கப்பட்டது. அவரை தேசிய நாயகனாக பாகிஸ்தான் அரசு அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இந்திய விடுதலைக்காகப் போரிட்ட பகத் சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகிய மூவரும், லாகூரில் கடந்த 1931-ஆம் ஆண்டு மார்ச் 23-ஆம் தேதி தூக்கிலிடப்பட்டனர். அவர்களின் தியாகம், ஆயிரக்கணக்கானோரை விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட வைத்தது.
v  பெரு நாட்டின் அதிபராக மார்ட்டின் விஷ்காரா (Martin Vizcarra) நியமிக்கப்பட்டுள்ளார்.
v  2017 ஆம் ஆண்டில்  ஆற்றல் சார் துறைகளின் கார்பன் வெளியீடு (Global energy-related carbon  emissions) 32.5 ஜிகா டன்களாக இருந்துள்ளதாக  சர்வதேச ஆற்றல் முகமை (International Energy Agency (IEA)) தெரிவித்துள்ளது.  இது சென்ற ஆண்டை விட 1.4% அதிகமான அளவாகும்.
v  உலகின் மிகச்சிறந்த விமான நிலையம்” (‘World’s best airport’) என்னும் பெருமையை சிங்கப்பூர் நாட்டிலுள்ள சாங்கிவிமான நிலையம் பெற்றுள்ளது. இங்கிலாந்திலிருந்து இயங்கும் ஸ்கைடிராக்ஸ்” (Skytrax) ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள இப்பட்டியலில், மும்பை விமான நிலையம் 63 வது இடத்தையும், பெங்களூரு மற்றும் தில்லி விமான நிலையங்கள் முறையே 64, 66 வது இடங்களையும் பெற்றுள்ளன.
v  பாகிஸ்தான் நாட்டின், செனட்டின், முதல் பெண் எதிர்கட்சி தலைவராக செர்ரி ரெஹ்மான்  (Sherry Rehman) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  இவர் பாகிஸ்தானின் பாகிஸ்தான் மக்கள் கட்சியைச்” (Pakistan People’s Party) சேர்ந்தவராவார்.
v  'கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா' பேஸ்புக் பயன்பாட்டாளர்களின் தகவல் திருட்டு  :  பேஸ்புக்கில் பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்டு தனியார் நிறுவனங்கள் மூலம் அரசியல் பிரச்சாரங்களுக்கு பயன்படுத்தப்பட்டதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  இது தொடர்பாக இங்கிலாந்தினைச் சேர்ந்த 'கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா' என்ற அரசியல் பிரசார நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த இங்கிலாந்து எம்.பி. டாமியன் கொலின்ஸ் என்பவர் தலைமையில் எம்.பி.க்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.

முக்கிய நியமனங்கள்

v  யுனெஸ்கோ நிறுவனத்தின் நிர்வாகக் குழுவின்” (Executive Board (EXB) of UNESCO)  இந்தியாவின் பிரதிநிதியாக முன்னாள் NCERT இயக்குநர்  பேராசிரியர் J S ராஜ்புட் (Professor J S Rajput) அவர்களை மத்திய அரசு நியமித்துள்ளது. 
v  வோடாஃபோன் மற்றும் ஐடியா  நிறுவனங்களை இணைத்து உருவாகியுள்ள புதிய நிறுவனத்திற்கு  தலைமை செயல் அதிகாரியாக பாலேஸ் ஷர்மா ( Balesh Sharma ) நியமிக்கப்பட்டுள்ளார்.

முக்கிய தினங்கள்

v  கம்பர் திருநாள்  -  மார்ச் 24 அன்று தமிழக அரசினால் அனுசரிக்கப்பட்டது.
v  இராம நவமி 2018” (Rama Navami) எனப்படும்  இராமரின் பிறந்த தினம் (Birthday of Lord Rama)  25 மார்ச் 2018 அன்று கொண்டாடப்பட்ட்து.
v  உலக காச நோய் தினம் (World Tuberculosis Day) - மார்ச் 24  | நோக்கம் :  காசநோயற்ற உலகை உருவாக்க தலைவர்கள் தேவை (Wanted: Leaders for a TB-free world)
v  மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையின்” (CRPF)  79 வது எழுச்சி தினம் (Raising Day) மார்ச் 24 அன்று அனுசரிக்கப்பட்டது.  
கூ.தக. : மத்திய ரிசர்வ் படை (Central Reserve Police Force) துவங்கப்பட்ட நாள்  - 27 ஜீலை 1939 ஆகும்.

v  உலக நீர் தினம் (World Water Day) - மார்ச் 22 | நோக்கம் - தண்ணீருக்காக இயற்கை” (Nature for Water)
v  பூமி மணி நேரம் (Earth Hour) 2018  :  24 மார்ச் 2018, 8:30 to 9:30 pm  | நோக்கம் : இயற்கை ஒளிரட்டும்” (Let Nature Shine)
v  பகத்சிங், சுக்தேவ் மற்றும் ராஜ்குரு ஆகியோரைத் தூக்கிலிட்ட தினமான மார்ச் 23 - இளைஞர்கள் மேம்பாட்டு தினமாக  (Youth Empowerment Day) அனுசரிக்க பஞ்சாப் அரசு முடிவெடுத்துள்ளது.
v  உலக வானிலை ஆராய்ச்சி தினம் (World Meteorological Day) - மார்ச் 23 | நோக்கம் : வானிலை தயார், காலநிலை சிறப்பு (Weather-Ready, Climate-Smart)

விருதுகள் / மரியாதைகள்

v  ஜி.கே. ரெட்டி தேசிய நினைவு  விருது 2017” (G.K. Reddy Memorial National Award for 2017 ) ஊடகவியலாளர்  கரண் தாப்பருக்கு வழங்கப்பட்டுள்ளது.  

அறிவியல் தொழில்நுட்பம்

v  ஃபுளூரிமீட்டர்” (Fluorimeter) எனும், நீரில் யுரேனியத்தின் அளவை கண்டறிவதற்கான கருவியை   இந்தியாவின் அணு ஆற்றல் துறை” (Department of Atomic Energy (DAE)) யின் கீழுள்ள ராஜா ராமண்ணா அதிநவீன தொழில்நுட்ப மையம்(Raja Ramanna Centre for Advanced Technology (RRCAT).) , இந்தூர் உருவாக்கியுள்ளது.
v  பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி :  இந்தியா மற்றும் ரஷியாவின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட பிரமோஸ் ஏவுகணையானது சுமார் 290 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எதிரிகளின் தளவாடங்களைக்கூட அழிக்கும் திறன் கொண்டது. அதன் இயக்க தூரத்தை 400 கிலோ மீட்டர் வரையிலும் நீட்டிக்க இயலும் என்பது கூடுதல் சிறப்பு.  பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) மற்றும் ரஷியாவின் என்பிஓஎம் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றால் வடிவமைக்கப்பட்ட பிரமோஸ் ஏவுகணையின் மொத்த எடை 3 டன் ஆகும். சுமார் 300 கிலோ எடை வரையிலான வெடி பொருள்களைத் தாங்கிச் செல்லும் திறன் அதற்கு உண்டு.

 விளையாட்டுகள்

v  ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற “F1 சீசன் 1” (F1 season’s first) கார்பந்தயப் போட்டியில் ஜெர்மனியின் செபாஸ்டியன் விட்டல்  (Sebastian Vettel ) கிராண்ட்பிரிக்ஸ் பட்டத்தை வென்றுள்ளார்.
v  இலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை உள்ள கடல் பகுதியை 11மணி 55 நிமிடத்தில் நீந்தி, சென்னையைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் ராஜேஷ்வரபிரபு  சாதனை படைத்தார்.
v  மியான்மரின் யங்கூன் நகரில் நடைபெற்ற ஆசிய பில்லியர்ட்ஸ் சாம்பியன்” (Asian Billiards Championships) போட்டியில்  இந்தியாவின் பங்கஜ் அத்வானி (Pankaj Advani) சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
v  2018 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில்  இந்திய கொடி அணிவகுப்புக்கு தலைமை ஏற்கிறார் பி.வி.சிந்து. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் ஏப்ரல் 4-ஆம் தேதி தொடங்கி நடைபெறுகிறது. இந்த காமன்வெல்த் போட்டிகளின் துவக்க விழாவில் இந்திய அணி தரப்பில் முன்னணி நட்சத்திர பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, இம்முறை தேசியக் கொடி ஏந்தி இந்திய அணியின் அணிவகுப்புக்கு தலைமை ஏற்கிறார். முன்னதாக, 2014-ல் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் பி.வி.சிந்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். அதுபோல கடந்த வருடம் நடைபெற்ற பாட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டித் தொடரில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
v  6 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 20 பந்துகளில் சதம் - ரித்திமான் சாஹா 'அபூர்வ' சாதனை : கொல்கத்தாவில் மேற்குவங்க கிரிக்கெட் சங்கத்தின் சார்பாக ஜெ.சி.முகர்ஜீ டி20 கிரிக்கெட் உள்ளூர் போட்டித் தொடர் நடைபெற்றது. இதில் மோஹுன் பாகன் மற்றும் பி.என்.ஆர் ரீக்ரியேஷன் கிளப்புகளுக்கு இடையிலான போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரித்திமான் சாஹா 20 பந்துகளில் சதமடித்து அபூர்வ சாதனையைப் படைத்துள்ளார்.
v  ஜீனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் - மானு பேக்கருக்கு தங்கம் :  ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற ஜீனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் மானு பேக்கர் மகளிருக்கான 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்றார்.
v  ஜூனியர் உலகக் கோப்பை போட்டியில் உலக சாதனையுடன் தங்கம் வென்ற தமிழ்ப் பெண் இளவேனில் :  சிட்னியில் நடைபெற்ற துப்பாக்கிச் சுடுதல் ஜூனியர் உலகக் கோப்பைப் போட்டியில், குஜராத்தில் வசிக்கும் 18 வயது தமிழ்ப் பெண்ணான இளவேனில், 10 மீ. ஏர் ரைஃபிள் போட்டியில் 249.8 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றார்.
v  உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: வெண்கலம் வென்றார் விவான் கபூர் :  சிட்னியில் நடைபெற்ற ஐஎஸ்எஸ்எஃப் ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆடவருக்கான டிராப் பிரிவில் இந்தியாவின் விவான் கபூர் வெண்கலப் பதக்கம் வென்றார்.  ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெறும் இப்போட்டியில், டிராப் இறுதிச்சுற்றில் மொத்தம் பறக்கவிடப்பட்ட 40 களிமண் தட்டுகளில் விவான் 30 தட்டுகளை சுட்டுத் தள்ளி 3-ஆம் இடம் பிடித்தார். இப்பிரிவில் இத்தாலியின் மேட்டியோ மரோங்கியு தங்கமும், சீனாவின் யிலியு ஒளயாங் வெள்ளியும் வென்றனர்.

புத்தகங்கள்

v  முதலாவது இந்திய சைகை மொழி அகராதி (Indian Sign Language Dictionary) வெளியீடு :  காது கேளாதோருக்கு உதவும் வகையில் 3000 வார்த்தைகள் அடங்கிய முதலாவது இந்திய சைகை மொழி அகராதியை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் திரு. தாவர்சந்த் கெலாட் 22-03-2018 அன்று வெளியிட்டார். இந்த அகராதியின் ஆங்கில மற்றும் இந்தி சொற்கள் காது கேளாத குழந்தைகள் ஆங்கிலம் பயிலவும் உதவும். இந்த அகராதியில் அன்றாட பயன்பாட்டு சொற்கள், சட்ட சொற்கள், கல்வித் துறை சொற்கள், மருத்துவ சொற்கள்,தொழில்நுட்ப சொற்கள் ஆகிய ஐந்து பிரிவுகளின் சொற்கள் உள்ளன.


படியுங்கள் !     பகிருங்கள் !         வெற்றி பெறுங்கள் !
Comment Policy:Dear visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation. Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.
View Comments
Close Comments