Need anything? Search here.

குரூப் II, IIA 2020 (New Syllabus) Test Batch

30 தேர்வுகள் (ஒவ்வொரு தேர்விலும் 200 வினாக்கள்)

Join Now - Tamil Medium | English Medium

TNPSC தேர்வுகளுக்கான நடப்பு நிகழ்வுகள் – 27-29 மார்ச் 2018


TNPSC Current Affairs 27-29 March 2018

தமிழகம்

v  இந்தியாவின் முதல் பூச்சி அருங்காட்சியகம் கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
v  தேனி மாவட்டம் தேவாரம் அருகே பொட்டிப்புரம் கிராமத்தில் உள்ள அம்பரப்பர் மலையில் நியூட்ரினோ திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சகம் அனுமதி அளித்து உள்ளது.
v  சுற்றுப்புற மாசுபாட்டினை குறைக்கும் வகையிலான மின்சார பேருந்துகளை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தும் பொருட்டு, இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் C-40  என்ற முகமைக்கும், தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத் துறைக்கும் இடையே அறிக்கை கையெழுத்தாகியுள்ளது.
v  தமிழ் மருத்துவம் தொடர்பான சிறப்பு நூலகம் மற்றும் பிரத்யேக காட்சிக் கூடம்  தமிழக அரசால்  திருநெல்வேலியில் அமைக்கப்படவுள்ளது. இதேபோன்று, நீலகிரி மாவட்ட பழங்குடியின மக்களின் பண்டைய கலாசாரத்தைப் போற்றும் வகையில் அரசு சார்பில் சிறப்பு நூலகம், பிரத்யேக காட்சிக் கூடமும் விரைவில் அமைய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
v  கூகுள் வரைபடத்தில் இணைகிறது நீலகிரி மலை ரயில்  :ஊட்டி மலை ரயிலை, 'கூகுள் மேப்' தளத்தில், மலை ரயில் பாதையை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட ஊட்டி மலை ரயில் பாதையில், நுாற்றாண்டை கடந்தும் மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. 2005 ம் ஆண்டில், 'யுனெஸ்கோ' சார்பில், மலை ரயிலுக்கு பாரம்பரிய அந்தஸ்து கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
கூ.தக : குன்னூரில் உள்ள என்ஜின் மையம், தெற்கு ரயில்வேயில் தற்போது செயல்பாட்டில் இருக்கும் ஒரே நீராவி இன்ஜின் பணிமனையாகும். இந்தப் பணிமனை கடந்த 1899ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதாகும்.  மேட்டுப்பாளையம்- குன்னூர் பிரிவில் பயன்படுத்துவதற்காக நீராவி என்ஜின்கள் சுவிட்சர்லாந்திலிருந்து தருவிக்கப்பட்டு இந்த மையத்தில் பராமரிக்கப்படுகின்றன. இந்த ரயில் பாதை பல இடங்களில் செங்குத்தாக இருப்பதால் பல் சக்கரத்தின் உதவியுடன் மலை ரயில் இயக்கப்படுகிறது. 
v  ரூ.2.81லட்சம் கோடி முதலீட்டில் சென்னை-கன்னியாகுமரி இடையே தொழில் வழித்தடத் திட்டம்  : 
o    தமிழக கடற்பகுதிகளையும் துறைமுகங்களையும் மேம்படுத்தும் வகையில் சென்னை-கன்னியாகுமரி இடையே ரூ.2.81லட்சம் கோடி முதலீட்டில் தொழில் வழித்தடத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
o    கிழக்கு கடற்கரை பொருளாதார வழித்தடத்தின் ஒரு அங்கமாக செயல்படுத்தப்படும் இத் தொழில் வழித்தடத் திட்டம் மத்திய-மாநில அரசுகள் மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கிக் கடனுதவியுடன் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தைச் செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் பரிசீலனையில் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
o    முதல் கட்டமாக மதுரை-விருதுநகர்-திண்டுக்கல்-தேனி, தூத்துக்குடி-திருநெல்வேலி பகுதிகளில் இத்திட்டம் தொடங்கப்படவுள்ளது. இப்பகுதிகளில் தொழில் வழித்தடத் திட்டம் அமைக்க ரூ.91ஆயிரம் கோடி முதலீடு தேவைப்படுவதாக ஆசிய வளர்ச்சி வங்கியின் திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 10 ஆயிரத்து 650 ஹெக்டேர் பரப்பளவில் தூத்துக்குடி-திருநெல்வேலி இடையே தொழில் வழித்தடம்அமைக்க ரூ.51 ஆயிரத்து 404 கோடி, மதுரை-விருதுநகர்-திண்டுக்கல்-தேனி இடையே அமைக்க ரூ.40 ஆயிரத்து 414 கோடி முதலீடு தேவைப்படுவதாகவும் அந்த வங்கி தெரிவித்துள்ளது. வரும் 2020-க்குள் பணிகளை முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியா

v  தேசிய வருடாந்திர கிராம சுகாதார கணக்கெடுப்பு 2017-2018” (National Annual Rural Sanitation Survey (NARSS) 2017-18) முடிவில்,  இந்திய கிராமங்களிலுள்ள 77%  வீடுகளில் கழிப்பறைகள் இருப்பதாகவும். கழிப்பறை உடைய வீடுகளில், 93 % கழிப்பறைகள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
v  மின்சார  உற்பத்தியில் உலகளவில்,  இந்தியா மூன்றாவது நாடாக  உருவாகியுள்ளது.  மின்சார உற்பத்தியில் முதல் ஐந்து இடங்களில் இருக்கும் நாடுகள் முறையே சீனா, அமெரிக்கா, இந்தியா, ரஷியா மற்றும் ஜப்பான் ஆகியவையாகும்.
v  ஆசியாவின் மிகப்பெரிய அல்லிப்பூ தோட்டமான” (Tulip Garden), ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில்  அமைந்துள்ள  இந்திராகாந்தி நினைவு துலிப் தோட்டம்” (Indira Gandhi Memorial Tulip Garden) பொது மக்கள் பார்வைக்கு  திறக்கப்பட்டுள்ளது.
v  ஹிமாச்சல் பிரதேசத்தில் இளைஞர்களுக்கு தொழிற் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பை  உருவாக்கும் திட்டங்களுக்கா இந்தியா மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியிடையே 80 மில்லியல் கடனுதவி  ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
v  மத்திய அமைச்சரவை ஒப்புதல்கள் ( 28-03-2018)
o    இந்தியா ஜாம்பியா இடையே நீதித்துறை ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு  மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
o    இந்தியா - இங்கிலாந்து - அயர்லாந்து நாடுகளுக்கிடையே  குற்றவியல் தகவல்களை பகிர்ந்து கொள்வதற்கான ஒப்பந்தத்திற்கு மத்திய அமைசரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
o    இந்தியா கனடா நாடுகளுக்கிடையே அறிவு சார் சொத்துரிமை (Intellectual Property ) ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
o    மத்திய பள்ளிக்கல்வித் துறையின் மூலம்   நடத்தப்படும் அனைவருக்கும் கல்வித்திட்டம் (SarvaShikshaAbhiyan (SSA)) , அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம்  (RashtriyaMadhyamikShikshaAbhiyan (RMSA)) மற்றும்  ஆசிரியர் கல்வி (Teacher Education) ஆகியவற்றை ஒருங்கிணைத்த திட்டமாக 1 ஏப்ரல் 2018 முதல் 31 மார்ச் 2020 வரை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
v  பிர்தான் மந்திரி ரோஜ்கார் புரொட்சகான் யோஜனா” ( Pradhan MantriRojgarProtsahanYojana (PMRPY)) :  ஆகஸ்டு 2016  ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், மாதம் ரூ.15000/- க்கு கீழ் சம்பளம் பெறுபவர்களுக்கு  பணி வழங்கும் நிறுவனங்களால் வழங்கப்படும்  தொழிலாளர் ஓய்வூதிய திட்ட தொகை” (Employers to the Employees' Pension Scheme (EPS)) யில் 8.33%  தொகையை மத்திய அரசு வழங்கி வருகிறது.
v  பிரதான் மந்திரி வாய வந்தனா யோஜனா” (Pradhan Mantri Vaya Vandana Yojana (PMVVY)) என்பது  60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்பு பென்சன் திட்டமாகும். 4 மே 2017 முதல் 3 மே 2018 வரை அமலில் இருக்கும் இத்திட்டத்தின் படி,   குறைந்த பட்சம் ரூ.1,50,000  முதல் அதிகபட்சமாக ரூ. 7,50,000 வரையில்  டெபாசிட் செய்பவர்களுக்கு  அடுத்த 10 ஆண்டுகளுக்கு 8% வட்டி வழங்கப்படும். அதாவது மாதம் குறைந்தது ரூ. 1000 முதல் அதிகபட்சமாக  ரூ.5000 வரையில் ஓய்வூதியமாகப் பெறலாம்.
v  சவுபாக்கியா” (SAUBHAGYA) திட்டத்தின் விரிவாக்கம் - Pradhan Mantri Sahaj Bijli Har Ghar Yojna . நாட்டிலுள்ள அனைத்து வீடுகளுக்கும் மின்சார இணைப்பு வழங்குவதற்கான மத்திய அரசின் திட்டம்
v  தேசிய மருத்துவ ஆணைய சட்ட முன்வடிவில் (National Medical Commission (NMC) Bill) சில அரசுமுறைத் திருத்தங்களைக் கொண்டுவருவதற்கு மத்திய அமைச்சரவை 28-03-2018 அன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதன் முக்கிய அம்சங்கள் வருமாறு,
o    எம்.பி.பி.எஸ். இறுதியாண்டுத் தேர்வை நாடு முழுதும் பொதுத் தேர்வாக நடத்துவது. இது தேசிய இறுதித் தேர்வாக (National Exit Test - NEXT) அமையும்
o    ஆயுர்வேதம், சித்தா, யுனானி, யோகா,  ஹோமியோபதி ஆகிய பாரம்பரிய மருத்துவப் பணிகளை மேற்கொள்வோர் இணைப்புக் கல்வி (bridge course) பெற்று, குறிப்பிட்ட அளவே நவீன மருத்துவ சேவையை மேற்கொள்லலாம் என்ற நிபந்தனை தளர்த்தப்படுகிறது.
o    தனியார் மருத்துவக் கல்லூரிகளும், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும் 40 சதவீதம் மருத்துவக் கல்விக் கட்டணத்தை வசூலிக்கலாம் என்ற அளவு உயர்த்தப்பட்டு, 50 சதவீத கட்டணத்தை வசூலிக்க அனுமதிக்கப்படும்.
o    தேசிய மருத்துவ ஆணையத்தில் பிரதிநிதித்துவம் 3லிருந்து 6 ஆக அதிகரிப்பு
o    தகுதியில்லாத மருத்துவர்களுக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும் ரூ. 5 லட்சம் அபராதமும் விதிப்பது உள்பட கடும் தண்டனை அளிப்பது.
v  மலைவாழ் மக்களில்  அதிக அளவில் சீரான  குடிநீர் வினியோகம் பெற்றுள்ளவர்களின் எண்ணிக்கையில்  மத்திய பிரதேசம் முதலிடத்திலும் ஒடிஷா இரண்டாமிடத்திலும் உள்ளதாக  மத்திய  குடிநீர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
v  சமூகநலத் திட்டங்களுடன் ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடு ஜூன் மாதம் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
v  சரஸ் அஜ்வீஜா மேளா” (SARAS Aajeevika Mela) என்பது, ஊரகங்களில் ஏழ்மை நிலையில் உள்ள சுய உதவிக் குழு மகளிர் தயாரித்த பாரம்பரியக் கலை மற்றும் கைவினைப் பொருள்களைக் காட்சிப்படுத்துவதற்கான திட்டமாகும். சரஸ் அத்ஜீவிகா மேளா ஊரக மகளிர் உற்பத்தியாளர்களுக்கு நேரடி சந்தைப்படுத்தும் மேடையை அளித்து அதன் இடைத் தரகர்களைப் புறந்தள்ளி மூலம் அவர்களுக்கு தங்களது உற்பத்தி பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கச் செய்கிறது.  அத்ஜீவிகா மேளா 2018 கண்காட்சி புது தில்லியில்  மத்திய ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் திரு. நரேந்திர சிங் தோமார் அவர்களால் 26-03-2018 அன்று துவக்கி வைக்கப்பட்டது.
v  ஏர் இந்தியாவின் 76% பங்குகளை விற்க முடிவு : நஷ்டத்தில் இயங்கும் ஏர் இந்தியா நிறுவனத்தின் 76 சதவீதப் பங்குகளை விற்பனை செய்யப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், அதன் நிர்வாக நடவடிக்கைகளை தனியார் வசம் ஒப்படைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
v  "ஈ-டிரைப்ஸ் இந்தியா" (E-Tribes India) திட்டத்தை மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திரு ஜூவல்  ஓரம் ( Jual Oram)  புது தில்லியில் துவங்கி வைத்துள்ளார்.  ஈ-டிரைப்ஸ் திட்டத்தின்கீழ், இந்திய பழங்குடியினர் கூட்டுறவு விற்பனை மேம்பாட்டு கூட்டமைப்பின்   (Tribal Cooperative Marketing Development Federation of India Limited (TRIFED)) www.tribesindia.com, www.trifed.in ஆகிய இணைய தளங்கள், சில்லறை விற்பனை மென்பொருள் மற்றும் நடமாடும் வணிக செயலி ஆகியவை தொடங்கப்படவுள்ளன.  இதுதவிர, அமேசான், ஸ்நாப்டீல், பேடிஎம் & சில்லரை வணிகத்திற்கான இந்திய பழங்குடியினர் கூட்டுறவு விற்பனை மேம்பாட்டு கூட்டமைப்பின் கையேடு மற்றும் இந்த அமைப்பின் காலாண்டு இதழான "ட்ரைப்ஸ்  ஹாட்"-ம் வெளியிடப்படவுள்ளது.
v  சீக்கியர்களின் பத்தாவது குருவான குருகோபிந்த் சிங்கின் 350வது பிறந்தநாளை முன்னிட்டு, ரூ.350 நாணயத்தை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்துள்ளது.
v  ரோந்து கப்பல் 'பிகாய்ஜி காமா'வுக்கு பிரியாவிடை :  இந்திய கடலோரக் காவல்படை ரோந்து கப்பல் பிகாய்ஜி காமா ஓய்வு பெற்றுள்ளது.   கொல்கத்தாவில் உள்ள பாதுகாப்பு அமைச்சகத்துக்கு சொந்தமான 'கார்டன் ரீச்' கப்பல் கட்டும் தளத்தில் கட்டமைக்கப்பட்ட 'பிகாய்ஜி காமா' 1997 செப்டம்பர் மாதம் இந்திய கடலோரக் காவல்படையில் இணைக்கப்பட்டது. இந்திய சுதந்திர போராட்டத்துக்கு வித்திட்ட புரட்சிப் பெண்மணி பிகாய்ஜி காமாவின் நினைவாக இந்த ரோந்து கப்பலுக்குப் பெயர் சூட்டப்பட்டது.
v  கூல் இ.எம்.எஸ் சேவை”(Cool EMS Service) என்னும் பெயரில் இந்திய மற்றும் ஜப்பான் நாடுகளுக்கிடையே புதிய அஞ்சல் துறையின் மூலமான இறக்குமதி சேவையை இந்திய அஞ்சல் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் இந்திய வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விரும்பிய ஜப்பான் நாட்டு உணவுப் பொருட்களை தனிப்பட்ட தேவைக்கக இறக்குமதி செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்.
v  இராணுவ உற்பத்திக்கான வரைவுக்  கொள்கையை” (Draft policy on Defence Production)  மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதன் படி, 2025 ஆம் ஆண்டிற்குள் 170000 கோடி அளவிற்கு உள்நாட்டிலேயே இராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
v  மொபைல் இணைய வேகத்தில் உலளவில் 109 வது இடத்தையும் ( 22.16 mbps), பிராட்பேண்ட் இணைய வேகத்தில் 67 வது இடத்தையும் (42.72 Mbps) இந்தியா பெற்றுள்ளது.  ஓக்லாவின் ஸ்பாட்டெஸ்ட் இன்டெக்ஸ்  எனும் ஆய்வறிக்கையின் படி, மொபைல் இணைய வேகத்தில் முதல் ஐந்து நாடுகள் முறையே நார்வே, ஐஸ்லாந்து, நெதர்லாந்து, சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் ஆகிய நாடுகளும், பிராட்பேண்ட் இணைய வேகத்தில் முதல் ஐந்து நாடுகளாக முறையே   சிங்கப்பூர், ஐஸ்லாந்து, ஹாங்காங், தென் கொரியா மற்றும் ரொமானியா நாடுகளும் உள்ளன.
v  மிஷன் சம்பவ்” (Mission Sambavh / Mission Possible) எனும் திட்டத்தின் மூலம்  மாநிலம் முழுவதும் 1 இலட்சம் கழிப்பறைகளைக் கட்டுவதாக அஸ்ஸாம் அரசு அறிவித்துள்ளது.
v  இந்தியாவிலேயே 100% சூரிய சக்தியினால் இயங்கும் ஆரம்ப சுகாதார மையங்களைக் கொண்ட  மாவட்டமாக குஜராத் மாநிலத்திலுள்ள சூரத் மாவட்டம் உருவாகியுள்ளது.
v  மாதவ்பூர் மேளா” (Madhavpur Mela) எனப்படும் பாரம்பரிய திருவிழா குஜராத் மாநிலம் போர்ப்பந்தரில் நடைபெற்றது.
v  இந்தியா - உலகிலேயே நான்காவது மிகப்பெரிய வாகனச் சந்தையாக உருவெடுத்துள்ளது. 2017 ஆம் ஆண்டில் விற்பனையான மொத்த வாகனங்களின் அடிப்படையில், முதல் ஐந்து மிகப்பெரிய வாகனச் சந்தைகள் முறையே சீனா, அமெரிக்கா, ஜப்பான், இந்தியா மற்றும் ஜெர்மனி ஆகியவையாகும்.
v  நாட்டின் முதல் அதிவேக புல்லட் ரயில், குஜராத் மாநிலம், ஆமதாபாத் நகரில் இருந்து மகாராஷ்டிர மாநிலம், மும்பை வரை இயக்கப்படவுள்ளது. இந்தத் திட்டத்துக்கு ஜப்பான் அரசு குறைந்த வட்டியில் கடனுதவி வழங்குகிறது. இந்திய ரயில்வே துறையும், ஜப்பானின் ஷிங்கன்சன் தொழில்நுட்ப நிறுவனமும் இணைந்து இந்தத் திட்டத்தை நிறைவேற்றவுள்ளன. ரூ.10,000 கோடி செலவில் நிறைவேற்றப்படும் இந்தத் திட்டப் பணிகள், வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் நிறைவடைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டம் நிறைவேறினால், மும்பையில் இருந்து 500 கி.மீ. தொலைவில் உள்ள ஆமதாபாத் நகருக்கு இரண்டரை மணி நேரத்தில் சென்று விடலாம். தற்போது, ஏழு மணி நேரம் ஆகிறது.   

வெளிநாட்டு உறவுகள்

v  பிரம்மபுத்திரா நதியின் நீர்வளத் தகவல்களை இந்தியாவுடன் மீண்டும் பகிர்ந்து கொள்ளப் போவதாக சீனா அறிவித்துள்ளது. அண்மையில் அந்நாட்டில் நடைபெற்ற இரு தரப்பு பேச்சுவார்த்தையின்போது இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. சீனாவின் ஹாங்செள பகுதியில் இரு நாட்டு நீர்வளத் துறை அமைச்சக பிரதிநிதிகள் கூட்டம் 27-28 பிப்ரவரி 2018 ஆகிய இரு நாள்களாக நடைபெற்றது. இந்தியத் தரப்பில் மத்திய நீர்வளத் துறை இயக்குநர் தீரத் சிங் மேஹ்ரா தலைமையிலான அதிகாரிகள் குழு பங்கேற்றது.
v  சிந்து நதி கமிஷனின், 114வது கூட்டம், டில்லியில் 29-03-2018 அன்று நடைபெறுகிறது.  பியாஸ், சட்லஜ், ரவி, செனாப், ஜீலம் மற்றும் சிந்து நதி நீரைப் பகிர்ந்து கொள்வது குறித்து, இந்தியா, பாகிஸ்தான் இடையே, 1960ல், சிந்து நதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி, நதிநீரைப் பகிர்ந்து கொள்வது, அதில் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்காக, நிரந்தர சிந்து கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஒருமுறையாவது இந்த கமிஷனின் கூட்டத்தை, இரு நாட்டிலும், மாறி மாறி நடத்தப்பட வேண்டும். இதன் கடைசி கூட்டம், கடந்தாண்டு மார்ச்சில், இஸ்லாமாபாதில் நடந்தது. கமிஷனின், 114வது கூட்டம், டில்லியில்,  நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது. இந்தக் கூட்டத்தில், இந்தியா சார்பில் சிந்து நதி கமிஷனர், பி.கே. சக்சேனா தலைமையிலான குழு பங்கேற்க உள்ளது.
v  வரவேற்பு மற்றும் பயிற்சி 2018” (greeting and training) எனும் பெயரில் அமெரிக்கா - இந்தியா நாடுகளின் கடற்படைப் பயிற்சி  மார்ச் 2018 இல் நடைபெற்றுள்ளது.

சர்வதேச நிகழ்வுகள்

v  மியான்மர் நாட்டின் புதிய அதிபராக வின் மியிண்ட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

முக்கிய நியமனங்கள்

v  தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் (National Green Tribunal (NGT)) தலைவராக (பொறுப்பு) நீதியரசர் ஜாவத் ரஹீமை (Justice Jawad Rahim ) உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது.
v  ஆயுஷ்மான் பாரத் தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தின்” (Ayushman Bharat National Health Protection Mission) தலைமை செயல் அதிகாரியாக இந்து பூஷன் (Indu Bhushan) நியமிக்கப்பட்டுள்ளார்.
v  கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தலுக்கான, தேர்தல் ஆணையத்தின் விளம்பர தூதுவராக கிரிக்கெட் வீரர்  ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். 
v  இந்திய அரசின் தலைமை அறிவியல் ஆலோசகராக விஜய் ராகவன் (Vijay Raghavan) நியமிக்கப்பட்டுள்ளார்.
v  யுனெஸ்கோ” (UNESCO) வின்  நிர்வாகக் குழுவில் (Executive Board) இந்தியாவின் பிரதிநிதியாக ஜெ.எஸ்.ராஜ்புட் (JS Rajput ) நியமிக்கப்பட்டுள்ளார்.

முக்கிய தினங்கள்

v  மகாவீர் ஜெயந்தி (Mahavir Jayanti) 2018 - மார்ச் 29 அன்று அனுசரிக்கப்படுகிறது.
v  உலக நாடக தினம் (World Theatre Day) - மார்ச் 27
v  அடிமைத்தனம்  மற்றும் அட்லாண்டிக் அடிமைவியாபாரத்தினால் பாதிப்புக்குள்ளானோருக்கான சர்வதேச நினைவு தினம் (International Day of Remembrance of the Victims of Slavery and the Transatlantic  Slave Trade) - மார்ச் 25 | நோக்கம் : அடிமைத்தனம் - போராட்டம் மற்றும் சுதந்திரம், சமத்துவத்திற்கான வெற்றியை நினைவு கூருவோம்  (Remember Slavery: Triumphs  and Struggles for Freedom and Equality)

விருதுகள் / மரியாதைகள்

v  காமன்வெல்த் இளைஞர்கள் விருது 2018 (Commonwealth Youth Awards 2018) க்காக  மிர்னளினி தயால் மற்றும் யோகேஷ் குமார் ஆகிய இந்திய இளைஞர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.  இவர்களில்,  மிர்னளினி தயால், “Health Over Stigma” என்ற இயக்கத்திற்காகவும்,  யோகேஷ் குமார் “Even Cargo' என்ற சமூகம் சார்ந்த தொழில்முனைவிற்காகவும் இவ்விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
v  மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் விராட் கோலியின் மெழுகுச் சிலை :  சர்வதேச அளவில் புகழ்பெற்ற மேடம் துசாட்ஸ் மெழுகுச் சிலை அருங்காட்சியகத்தில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியின் மெழுகுச் சிலையும் இடம் பெறவுள்ளது. ஏற்கெனவே, இந்திய கிரிக்கெட் வீரர்கள் கபில் தேவ், சச்சின் டெண்டுல்கர் ஆகியோரது சிலைகள் மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ளன.  லண்டனை தலைமையிடமாகக் கொண்டுள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சிகத்துக்கு சர்வதேச அளவில் பல்வேறு முக்கிய நகரங்களிலும் கிளைகள் உள்ளன. கடந்த 2017-ஆம் ஆண்டு தலைநகர் தில்லியிலும் மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
v  ஸ்வச்ஹதா விருது  பெற்ற தமிழக சுய உதவிக் குழு பவுர்ணமி நிலவு” : இந்திய அரசின், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் சார்பாக, 2017 - 2018ல், சிறந்த முறையில் சுகாதாரம் மற்றும் துாய்மை பணிகள் மேற்கொண்டதற்காக, இந்திய அளவில் இரண்டாம் இடத்தை பிடித்த, பவுர்ணமி நிலவு சுய உதவிக்குழுவினருக்கு, 'ஸ்வச்ஹதா' விருதும், ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கி, மத்திய அரசு கவுரவித்துள்ளது.
v  நீர் பாதுகாப்பு மற்றும் நீர்ப்பாசனத்திற்கான தேசிய விருது 2018 (Water Digest Award)  சட்டிஸ்கர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
v  பெருமைமிகு தமிழர் விருது 2018 : ரவுண்ட் டேபிள் இந்தியா அமைப்பின் சார்பில் பெருமைமிகு தமிழர் சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அறிவியல் தொழில்நுட்பம்

v  ”GRACE Follow-On (GRACE-FO)” என்ற பெயரில் பூமியின் பனிபடர்ந்த பகுதிகளை ஆராய்வதற்கான திட்டத்தை நாசா” ( NASA ) அறிவித்துள்ளது.
v  ஜிசாட்- 6' செயற்கைக்கோள், ஜி.எஸ்.எல்.வி., - எப் 8 ராக்கெட்  ஆந்திரா மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள, சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து 29-03-2018 அன்று விண்ணில் ஏவப்படவுள்ளது.             
o    3 நிலைகளை கொண்ட ஜி.எஸ்.எல்.வி- எப்8 ராக்கெட்டில் முதல் நிலையில் திடஎரிபொருளும், 2-ம் நிலையில் திரவ எரிபொருளும் நிரப்பப்பட்டு உள்ளது. 3-வது நிலையில் முழுவதும் உள்நாட்டில் இந்திய விஞ்ஞானிகளால் வடிவமைக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்டு உள்ளது.
o    இது இஸ்ரோ அனுப்பும் 12 ஆவது ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஆகும்.
o    இதுவரை 7 முறை வெற்றிகரமாக ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை விண்ணில் செலுத்தி, திட்டமிட்ட பாதையில் செயற்கைகோளை இஸ்ரோ நிலைநிறுத்தியுள்ளது. 4 முறை மட்டும் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் தோல்வியில் முடிந்துள்ளது. தற்போது ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் 8-ஆவது வெற்றியைப் பதிவு செய்யும் முனைப்பில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
o    தகவல்தொடர்பு வசதிக்காகவும், பருவநிலை மாற்றத்தை அறிவதற்காகவும் ஜிசாட்- 6 ஏ பெரும் உதவியாக இருக்கும்.
o    ஜிசாட்- 6ஏ செயற்கைகோளின் ஆயுட்காலம் 10 ஆண்டுகள் ஆகும். ஆமதாபாத்தில் உள்ள இஸ்ரோ மையத்தில் எஸ்.பேண்ட்தகவல்தொடர்பு வசதிக்காக 6 மீட்டர் விட்டத்தில் மிகப்பெரிய ஆன்டெனாஒன்றும் தயாரிக்கப்பட்டு செயற்கைகோளில் பொருத்தப்பட்டு உள்ளது. இஸ்ரோ தயாரித்த ஆன்டெனாக்களிலேயே இது மிகவும் பெரியதாகும். செல்போன் மற்றும் அதற்கு சிறிய மின்னணு சாதனங்களில் இருந்து அனுப்பப்படும் சிக்னல்களையும் முழுமையாக பெற்று தரும் வசதியை இந்த ஆன்டெனாஏற்படுத்தி தரும்.
v  புற்றுநோய் எப்படி பரவுகிறது என்பதை கண்டறிய மனித உடலில் புதிய உறுப்பு இன்டர்ஸ்டிசியம்” (interstitium) கண்டுபிடிப்பு : விஞ்ஞானிகள் மனித உடலில் புதிய ஒரு உறுப்பை கண்டுபிடித்திருக்கிறார்கள். இது மனித உடலின் நமது பார்வை  புரிதலை மாற்றும்.  இன்டர்ஸ்டிசியம் (interstitium) எனப்படும் இவை ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கும், தோலின்  மேல் அடுக்குக்கு கீழே இருக்கும் ஒரு' நகரும் திரவத்தின் ஓட்டம் போல் இருக்கும்.  இந்த கோடுகள் போன்ற அமைப்பு செரிமான பாதை, நுரையீரல் மற்றும் சிறுநீரக அமைப்புகள் மற்றும் தமனிகளை சுற்றி நரம்புகள் மற்றும் தசை இடையே திசுப்படலம் "ஆகியற்றை சுற்றி உள்ளது
v  ”Transiting Exoplanet Survey Satellite (TESS)”  என்ற பெயரில் சூரிய குடும்பத்திற்கு வெளியேயுள்ள கோள்களைப் பற்றிய ஆராய்ச்சிக்காக செயற்கைக் கோளை நாசா அனுப்பவுள்ளது.

விளையாட்டுகள்

v  இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்குத் தேர்வான தமிழக வீராங்கனை : இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு 23 வயது தமிழக வீராங்கனை ஹேமலதா தயாளன் தேர்வாகியுள்ளார். 
v  அகில இந்திய வாலிபால் - தெற்கு ரயில்வே அணி முதலிடம், மகளிர் பிரிவில் கேரள போலீஸ் சாம்பியன் :  தூத்துக்குடியில் நடைபெற்ற அகில இந்திய வாலிபால் போட்டியில் ஆண்கள் பிரிவில் தெற்கு ரயில்வே அணியும், பெண்கள் பிரிவில் கேரள போலீஸ் அணியும் முதலிடத்தைப் பிடித்தன.  மகளிர் பிரிவு இறுதிப் போட்டியில்,கேரள சாய் அணியை தோற்கடித்து கேரள போலீஸ் அணியும், ஆண்களுக்கான இறுதிப் போட்டியில்  சென்னை எஸ்ஆர்எம் பல்கலைக்கழக அணியை தோற்கடித்து தெற்கு ரயில்வே அணியும்  வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றின.
v  ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் -தங்கம் வென்றது மானு பேக்கர்-அன்மோல் இணை :  ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் ஐஎஸ்எஸ்எஃப் ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மானு பேக்கர்-அன்மோல் இணை தங்கம் வென்றது. அத்துடன், புதிய உலக சாதனையையும் படைத்தது.
o    மேலும், ஜூனியர் மகளிர் 'ஸ்கீட்' பிரிவு துப்பாக்கி சுடுதலில் தனிநபர் பிரிவில் கனேமத் செகான் வெண்கலம் வென்றார்.
o    10 மீட்டர் ஏர் ரைஃபிள் கலப்புப் பிரிவில் இந்தியாவின் 17 வயது ஸ்ரேயா அகர்வால், 19 வயது அர்ஜூன் பாபுதாஆகியோர் 432.8 புள்ளிகளுடன் வெண்கலம் வென்றனர். இதே பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய சகநாட்டவர்களான இளவேனில் வாளரிவன் இளவேனில் (18), தேஜஸ் கிருஷ்ண பிரசாத் (20) ஆகியோர் 389.1 புள்ளிகளுடன் 4-ஆவது இடம் பிடித்தனர்.
v  ஐபிஎல் போட்டியில் பங்கேற்க ஸ்மித், வார்னருக்குத் தடை - பிசிசிஐ அதிகாரபூர்வ அறிவிப்பு : பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸி. கேப்டன் ஸ்மித், துணை கேப்டன் டேவிட் வார்னர் மற்றும் பேன்கிராஃப்ட் ஆகியோருக்குக் கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து ஐபிஎல் அணிகளில் இடம்பெற்றுள்ள ஸ்மித், வார்னர் ஆகிய இருவரும் இந்த வருட ஐபிஎல் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
v  லக்னோவில் நடைபெற்ற 8வது தேசிய சீனியர் ஹாக்கி இந்தியா சாம்பியன்ஷிப் போட்டி ( Hockey India Senior Men National Championship)  2018 இல்  பஞ்சாப் அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
v  ஹாங்காங்கில் நடைபெற்ற ஜாக்கி கோப்பைக்கான சர்வதேச இளைஞர்கள் கால்பந்து போட்டி (Jockey Cup International Youth Invitational  Football Tournament) யில்  இந்தியாவின் 16 வயதுக்குட்பட்டோருக்கான அணி வெற்றி பெற்றுள்ளது.      

புத்தகங்கள்

v  'Those Eventful Days' புத்தகத்தின் ஆசிரியர் மகாராஷ்டிராவின் ஆளுநர் (தமிழக முன்னாள் பொறுப்பு ஆளுநர்)  -  C. வித்யாசாகர் ராவ் (C. Vidyasagar Rao)  .  வித்யாசாகர் ராவ்  அவர்கள் தமிழக ஆளுநராக பொறுப்பு  வகித்த 13 மாதங்களில் நடைபெற்ற நிகழ்வுகளைப்பற்றி எழுதப்பட்ட புத்தகம்.                      படியுங்கள் !     பகிருங்கள் !         வெற்றி பெறுங்கள் !

No comments:

Post a comment

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.