Current Affairs for TNPSC Exams in Tamil 13th to 15th March 2018
தமிழகம்
v பிராட்பேண்ட் இணையதள வேகத்தில் நாட்டிலேயே முதல் நகரம்
சென்னை என “ஓக்லா” (Ookla) நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை நகரத்தில்,
சராசரி பிராட்பேண்ட் இணையதள வேகம் 32.67
Mbps என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையைத் தொடர்ந்து பெங்களூரு, ஹைதராபாத், விசாகப்பட்டணம் மற்றும் தில்லி நகரங்கள் இப்பட்டியலில்
அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளன.
v “தமிழிணைய மென்பொருள் தொகுப்பு – III”
(Tamil Inayam Software Suite-III) : தகவல் தொழில்நுட்பவியல் துறை சார்பில் தமிழ்
இணையக் கல்விக் கழகத்தினால், தமிழ் மென்பொருள் உருவாக்கும்
திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள,
தமிழிணையம் - பிழை திருத்தி (Tamil Spell Checker), தமிழிணையம் - அகராதி
தொகுப்பி (Tamil Dictionary
Compilation), தமிழிணையம்
- கருத்துக்களவு ஆய்வி (Tamil
Plagiarism Detection Software), தமிழிணையம் - சொற்றொடர் ஆய்வி (Sentence Aggregator), தமிழிணையம் - தரவு பகுப்பாய்வி (Corpus
Analysis Tools) ஆகிய ஐந்து மென்பொருட்கள் அடங்கிய “தமிழிணைய மென்பொருள் தொகுப்பு – III” (Tamil Inayam Software Suite-III)
ஐ மாண்புமிகு தமிழக
முதல்வர் திரு,எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களால் துவக்கி
வைத்துள்ளார்.
v தமிழ்நாடு அரசு - ஆஸ்திரேலிய வர்த்தகம் மற்றும் முதலீட்டு
ஆணையம் இடையே ஒப்பந்தம் : தமிழ்நாட்டின் மீன்வளம் மற்றும் நீர்வாழ்
உயிரின வளர்ப்பு மேம்பாட்டிற்காக தமிழ்நாடு அரசிற்கும் ஆஸ்திரேலிய வர்த்தகம்
மற்றும் முதலீட்டு ஆணையத்திற்கும் இடையே, நீடித்த மீன்வளத்தினை உறுதி செய்திடவும்,
மீன்வள ஏற்றுமதியை அதிகரிக்கவும் ஒருங்கிணைந்த செயல்பாட்டு ஏற்பாடு
கையெழுத்திடப்பட்டுள்ளது.
கூ தக: தமிழ்நாடு 1076 கி.மி. நீளமுள்ள கடற்கரையையும்,
13 கடலோர மாவட்டங்களையும் (சென்னை,
திருவள்ளூர், காஞ்சீபுரம்,விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை,ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி) சுமார் 10 இலட்சம் மினவர்களையும் கொண்டுள்ளது.
v தமிழ்நாடு - ஆஸ்திரேலியாவின் விக்ரோட்ஸ் ஒப்பந்தம் : சாலைப் பாதுகாப்பு, போக்குவரத்து மேலாண்மை, நெடுஞ்சாலை திட்டம் மற்றும் நிறுவன திறன் மேம்பாட்டிற்காக
தமிழ்நாடு அரசிற்கும், ஆஸ்திரேலியாவின் விக்டோரியா அரசின் சாலை மற்றும் போக்குவரத்து மேலாண்மை நிறுவன
அமைப்பான விக்ரோட்ஸ் இடையே ஒருங்கிணைந்த செயல்பாட்டு ஏற்பாடு
கையெழுத்திடப்பட்டுள்ளது.
v இந்தியாவின் மிகப்பெரிய
காற்றாலை டர்பைன் ஜெனரேட்டர் (wind turbine generator)
S128 சுஷ்லான் (Suzlon)
நிறுவனத்தால் தமிழ்நாட்டிலுள்ள சிங்கனேரியில்
நிறுவப்பட்டுள்ளது.
v கிராமப்புற வேலைவாய்ப்பில் மேற்கு வங்காளம் முதலிடத்திலும் தமிழ்நாடு
இரண்டாமிடத்திலும் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
v குரங்கணி காட்டுத் தீ சம்பவம்: விசாரணை அதிகாரியாக அதுல்ய
மிஸ்ரா நியமனம் : தேனி
மாவட்டம் குரங்கணி காட்டுத் தீ சம்பவம் தொடர்பாக விசாரித்து அறிக்கை அளிக்க
விசாரணை அதிகாரியாக வருவாய்த் துறை முதன்மைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா
நியமிக்கப்பட்டுள்ளார்.
v நியூட்ரினோ திட்டத்துக்கு அனுமதி : தமிழ்நாட்டில் நியூட்ரினோ திட்டம் தொடங்குவற்கு மத்திய
வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. தமிழகத்தின் தேனி
மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைப்பதற்கு
மத்திய அரசு கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் நடவடிக்கை மேற்கொண்டு வருவது
குறிப்பிடத்தக்கது.
v வாழைத் தண்டு மடலில் இருந்து பட்டு நூல் பிரித்தெடுக்கும்
கருவியை கண்டுபிடித்த தூத்துக்குடியைச் சேர்ந்த விஞ்ஞானி முருகன், தான்
வாழைப் பட்டு நூல் மூலம் தயாரித்த உடையை பிரதமர் மோடியிடம் வழங்க விஞ்ஞானி அனுமதி
பெற்றுள்ளார்.
v மலேசிய தமிழ்
ஆசிரியர்கள் 42 பேருக்கு,
சென்னையில் வைத்து,
தமிழக அரசினால்
முதல்கட்டமாக ஒரு வாரம் (13 -19 மார்ச்
2018) பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
இந்தியா
v தரமான நிர்வாகத்தை வழங்கும் இந்திய நகரங்களின் பட்டியல் 2017
(Annual Survey of India’s City-Systems) ல், பூனே நகரம் முதலிடத்தைப் பெற்றுள்ளது. ஜனாக்ரகா
குடிமக்கள் மற்றும் மக்களாட்சி மையத்தினால் ( Janaagraha Centre for
Citizenship and Democracy ) மேற்கொள்ளப்பட்ட
இந்த ஆய்வில், இரண்டாம்,
மூன்றாம், நான்காம் மற்றும் ஐந்தாம் இடங்களை முறையே,
கல்கத்தா, திருவனந்தபுரம், புவனேஸ்வர் மற்றும் சூரத் நகரங்கள் பெற்றுள்ளன.
v பத்திரிக்கையாளர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினருக்கு
இலவச ஆயுள் காப்பீடு வழங்கும் திட்டத்தை அஸ்ஸாம் மாநில அரசு அறிவித்துள்ளது.
v உலக மகிழ்சி பட்டியல் 2018
(World Happiness Index) ல்
இந்தியா 133 வது இடத்தைப் பெற்றுள்ளது. முதல் ஐந்து இடங்களை முறையே, பின்லாந்து,
நார்வே, டென்மார்க், ஐஸ்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகள் பெற்றுள்ளன.
v மத்திய கேபினட் ஒப்புதல்கள் (14-03-2018)
o
இந்தியா
- ஈரான நாடுகளுக்கிடையே, பாரம்பரிய மருத்துவ முறைகள் (Traditional Systems of
Medicine) தொடர்பாக செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு
ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
o
இந்தியா
- ஈரான நாடுகளுக்கிடையே, இரட்டை வதி விதிப்பை தடுப்பதற்கான ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
வழங்கியுள்ளது.
o
3.இந்தியா - ஈரான நாடுகளுக்கிடையே, விவசாயம்
மற்றும் விவசாயம் சார் துறைகளில் ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு
மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
o
4.இந்தியா - ஈரான நாடுகளுக்கிடையே, சுகாதாரம்
மற்றும் மருத்துவத் துறைகளில் ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு
மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
o
5. இந்தியா - ஸ்ரீலங்கா நாடுகளுக்கிடையே,
தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல் துறைகளில் ஒத்துழைப்பிற்கான
புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
v ”கிரிஷி உன்னாதி மேளா 2018” (Krishi Unnati Mela 2018) என்ற பெயரில்
மாபெரும் விவசாய கண்காட்சி 16-18 மார்ச் 2018 தேதிகளில் புது தில்லியில்
நடைபெறவுள்ளது.
v ”ஆஸ்டிராக்” மொபைல்
செயலி (ASHTRACK Mobile Application) : நிலக்கரி சுரங்கங்களிலிருந்து
வெளியேறும் சாம்பல் கழிவு (Fly Ash) மேலாண்மைக்காக மத்திய
நிலக்கரி அமைச்சகத்தினால் வெளியிடப்பட்டுள்ள மொபைல் செயலி.
v 15 வது நிதிக்குழு (Finance
Commission) மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களிடையேயான முதலாவது சந்திப்பு 15-03-2018 அன்று நடைபெற்றது. 15 வது நிதிக்குழுவின் தலைவர் திரு. N.K.
சிங் (N.K. Singh) என்பது குறிப்பிடத்தக்கது.
v உத்தரப்பிரதேசத்தின் மிர்ஷாபூர் மாவட்டத்திலுள்ள
விஜய்பூரில் அமைக்கப்பட்டுள்ள அம்மாநிலத்தின் மிகப்பெரிய சூரிய சக்தி ஆலை (Solar Power Plant) பிரதம்
நரேந்திர மோடி மற்றும் பிரஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் (Emmanuel
Macron) ஆகியோரால் 12-03-2018 அன்று துவங்கி வைக்கப்பட்டது. இந்த சூரிய சக்தி ஆலையின் மூலம் 75 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய இயலும்.
o
கூ.தக.
: 2022 ஆம் ஆண்டிற்குள் 1 இலட்சம் மெகா வாட் மின்சாரத்தை,
நாடெங்கிலுமுள்ள சூரிய மின்சக்தி ந்லையங்களின் மூலம்
தயாரிக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
v சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பின் முதல் கூடுகை
(International Solar Alliance (ISA) Summit) புது தில்லியில் நடைபெற்றது. இந்தியா
மற்றும் பிரான்ஸ் நாடுகள் இணைந்து நடத்திய இந்த
கூடுகையில் 21 நாடுகளின் தலைவர்கள்
மற்றும் 10 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
கூ.தக. :
o
சர்வதேச சூரிய சக்தி
கூட்டமைப்பானது 30 நவம்பர் 2015 இல் ஏற்பட்ட
“பாரிஸ் பிரகடனத்தின்” (Paris Declaration) மூலம் உருவாக்கப்பட்ட்து.
o
இந்த அமைப்பின் இடைக்கால
இயக்குநர் ஜெனராலாக, இந்தியாவின் உபேந்திர
திரிபாதி (Upendra Tripathy) உள்ளார்.
o
இந்திய அரசு, 2022 ஆம்
ஆண்டிற்குள், 175 ஜிகா வாட் மின்சாரத்தை புதுப்பிக்கவல்ல ஆற்றல் மூலம் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இதில் 100 ஜிகா
வாட் மின்சாரத்தை சூரிய சக்தியின் மூலம் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது குறிப்பிட்த்தக்கது.
v உலக ஹிந்தி செயலகத்தை (world
Hindi secretariat) மொரீஷியஸிலுள்ள
போர்ட் லூயிஸ் (Port Louis)
நகரில் குடியரசுத்
தலைவர் 13-03-2018 அன்று தொடங்கி வைத்தார்.
கூ.தக: 2018 ஆகஸ்டில் மொரீஷியஸ் நாட்டில் 11ஆவது உலக ஹிந்தி மாநாடு நடைபெறவுள்ளது. இந்தியா தவிர இந்த
மாநாடு மூன்றாம் முறையாக நடைபெறும் ஒரே நாடு மொரீஷியஸ்தான் என்பது
குறிப்பிடத்தக்கது.
v இந்தியாவின் மிக உயரமான தேசியக் கொடி கர்நாடகா மாநிலம் பெலகாவியில்
(Belagavi)
12-03-2018 அன்று
ஏற்றப்பட்டது. இந்த தேசியக் கொடியின் உயரம் 110 மீட்டர்.
நீளம் மற்றும் அகலம் முறையே 120 ,80 அடி ஆகும்.
v அஸ்ஸாம் மாநிலத்தில், முதல் இ-பட்ஜெட் (E-Budget) அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இதன் மூலம், ஒவ்வொரு சட்ட மன்ற உறுப்பினருக்கும் பட்ஜெட் பற்றிய அனைத்து
ஆவணங்களும் அடங்கிய டேப்ளட் (tablet)
வழங்கப்பட்டுள்ளது.
v இந்தியாவின் முதல், “கடலோர காவல் அகடெமி” (coastal
policing academy) குஜராத்தில்,
தேவ்பூமி துவார்க்கா
மாவட்டத்திலுள்ள ஓக்கா - எனுமிடத்தில் அமைக்கப்படவுள்ளது.
v மஹாநதி நீர் பிரச்சனை தீர்ப்பாயம் (Mahanadi
Water Disputes Tribunal) :
ஒடிஷா மற்றும் சட்டிஸ்கார் மாநிலங்களுக்கிடையேயான மஹாநதி
நீர் பிரச்சனைக்கு தீர்வு காணும் நோக்கில், மஹாநதி நீர் பிரச்சனை தீர்ப்பாயம் (Mahanadi
Water Disputes Tribunal) உச்ச நீதிமன்ற நீதிபதி
A.M. கான்வில்கர்
( A.M.
Khanwilkar ) தலைமையில்
அமைக்கப்பட்டுள்ளது.
கூ.தக : மாநிலங்களுக்கிடையே ஆற்று நீர் பிரச்சனைச்
சட்டம் (Inter-State
River Water Disputes Act) இயற்றப்பட்ட
ஆண்டு – 1956
v ”பர்யாதன் பர்வ்” (Paryatan Parv)
2017 : ”அனைவருக்கும் சுற்றுலா” எனும்
நோக்குடன், மத்திய சுற்றுலா அமைச்சகத்தினால் 5-25 அக்டோபர் 2017 இல் நடத்தப்பட்ட நாடு தழுவிய சுற்றுலா மற்றும் கலாச்சார ஒற்றுமை
விழிப்புணர்வு நிகழ்வு.
v ”ஜல் மார்க் விகாஸ் திட்டம்” (Jal
Marg Vikas Project) - வாரணாசி, பாட்னா, முங்கர்,
பாகல்பூர், கொல்கத்தா மற்றும் ஹால்டியா ஆகிய இடங்களில் படகு போக்குவரத்தை மேம்படுத்துவதற்கான திட்டம். இதற்கான இடங்களை
கண்டறிவதற்காகவும் சாத்தியக்கூறு ஆய்வறிக்கைகளை தயாரிக்க தொழில் முறையில் சிறந்த
ஆலோசகர்களை இந்திய உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து ஆணையம் பணியமர்த்தியுள்ளது.
v உத்தரபிரதேச இடைத்தேர்தலுக்கு (மார்ச் 2018)
பிறகு
நாடாளுமன்றத்தில் கட்சிகள் நிலவரம் (மொத்த இடங்கள் - 543
| காலி இடங்கள் - 5)
பா. ஜனதா - 274, காங்கிரஸ் - 48, அ.தி.மு.க. - 37, திரிணாமுல் காங்கிரஸ் - 34, பிஜூ ஜனதாதளம் - 20, சிவசேனா
- 18,
தெலுங்கு தேசம் - 16, டி.ஆர்.எஸ். கட்சி - 11, மார்க்சிஸ்ட் கம்யூ. - 9, ஒய்.எஸ்.ஆர். காங். - 9, சமாஜ்வாடி கட்சி - 7, லாலு கட்சி - 4, பிற கட்சிகள் – 51
v உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை 65லிருந்து 67ஆகவும், உயர்நீதிமன்ற நீதிபதிகளின் வயதை 62லிருந்து 65ஆகவும் அதிகரிக்க வேண்டும் என நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது.
v நாட்டிலேயே உத்தரப்பிரதேசத்தில் தான் மத ரீதியிலான
வன்முறைகள் அதிகம்: நாட்டிலேயே உத்தரப் பிரதேச மாநிலத்தில்தான்
மதரீதியிலான வன்முறைச் சம்பவங்கள் கடந்த 2017ஆம் ஆண்டில் அதிகம் நடந்துள்ளன. இதையடுத்து,
கர்நாடகத்தில் அதிக சம்பவங்கள் நடந்துள்ளன என மத்திய
உள்துறை இணையமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹீர் தெரிவித்துள்ளார். இந்தப் பட்டியலில் இரண்டாம்,
மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் இடங்களில் முறையே , கர்நாடகம்,
மகாராஷ்டிரா, பிகார் மற்றும்
ராஜஸ்தான் மாநிலங்கள் உள்ளன.
v ஒரு ரஃபேல் விமானத்தின் விலை : பிரான்ஸிடம் இருந்து ரஃபேல் போர் விமானங்களை ரூ.58,000 கோடி மதிப்பில் வாங்குவதற்கு பாதுகாப்பு தொடர்பான
அமைச்சரவைக் குழு (சிசிஎஸ்) கடந்த 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒப்புதல் அளித்தது. ஒரு ரஃபேல்
விமானத்தில் விலை ரூ.670 கோடி' என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
v C-17
Globemaster என்ற இந்தியாவின் மிகப்பெரிய இராணுவப்
போக்குவரத்து விமானம் அருணாச்சல்பிரதேசத்திலுள்ள்
‘டூடிங்’ விமானப்படைத் தளத்தில் வெற்றிகரமாக சோதிகப்பட்ட்து. அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட இந்த விமான்மானது 18 டன்
எடையை சுமந்து செல்லும் திறனுடையது jeba
வெளிநாட்டு உறவுகள்
v சர்வதேச வான் வழிப் போக்குவரத்து சங்கம் (International
Air Transport Association (IATA)) மற்றும் இந்திய அரசின் உள்நாட்டு விமானப்போக்குவரத்து அமைச்சகம் (Civil
Aviation Ministry) மற்றும்
தேசிய விமானப்போக்குவரத்து பல்கலைக்கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது.
கூ.தக. :
சர்வதேச வான் வழிப் போக்குவரத்து சங்கத்தின் தலைமையிடம் கனடாவிலுள்ள மாண்ட்ரீல்
நகரில் உள்ளது.
v குடியரசுத்தலைவரின் வெளிநாட்டு பயணங்கள் - மார்ச் 2018 :
o
குடியரசுத்தலைவர்
ராம்நாத் கோவிந்த் அவர்கள் 6 நாட்கள்
பயணமாக மொரிசியஸ்,
மடகஸ்கர் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
சுற்றுப்பயணத்தின் முதற்கட்டமாக மார்ச் 11-ம் தேதி மொரிசியஸ் புறப்பட்டு சென்ற ராம்நாத் கோவிந்த், அங்கு
நான்கு நாட்கள் தங்கி இருந்தார். அப்போது,
மொரிசியஸ் நாட்டில் நடைபெற்ற 50-வது சுதந்திர தினவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து
கொண்டு,
அந்நாட்டின் ஜனாதிபதி அமீனா குர்ஜிப்பையும்,
பிரதமர் பிரவிண்ட் குக்நாத்தையும் சந்தித்து பேசினார்.
o
அதன்
பின்னர், 2 நாட்கள் பயணமாக ”மடகாஸ்கர்” (Madagascar ) நாட்டிற்கு 14-03-2018 அன்று சென்றுள்ளார்.
இதன் மூலம், மடகாஸ்கர் நாட்டிற்கு செல்லும் முதல் இந்திய குடியரசுத்தலைவர் எனும் பெருமையை ராம் நாத் கோவிந்த் அவர்கள்
பெற்றுள்ளார்கள். இப்பயணத்தின் போது,
இந்தியா - மடகாஸ்கரிடையே
இராணுவம் மற்றும் வான்வழிப் போக்குவரத்துத் தொடர்பான ஒப்பந்தங்கள் செய்து
கொள்ளப்பட்டன.
கூ.தக.: மடகாஸ்கர் நாட்டின் அதிபர் - திரு. ஹேரி
ராஜோனாரிமாம்பியானியா (Hery Rajaonarimampianina)
v இந்தியா - கனடா நாடுகளுக்கிடையே அணு உலை தொழில்நுட்பத்தில்
ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் : கனடா பிரதமர்
ஜஸ்டின் அவர்களின் இந்திய வருகையின் போது,
23-02-2018 அன்று,
இந்தியா - கனடா இடையே செய்து கொல்ளப்பட்ட அறிவியல்
தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளில் ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி, அதிநவீன
கனநீர் உலைகள் (advanced Pressurised Heavy Water
Reactors (PHWRs) அமைப்பதில் இரு
நாடுகளுக்கிடையே பரஸ்பர ஒத்துழைப்பு
நல்குவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
v ”தில்லி
காசநோய் ஒழிப்பு கூடுகை செயல்திட்ட அறிக்கை” (Delhi End TB
Summit Statement of Action) 14 மார்ச் 2018 அன்று வெளியிடப்பட்டது. புது
தில்லியில் நடைபெற்ற ”உலக சுகாதார நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசிய பிராந்திய அலுவலகத்தின்” (India - World Health Organization,
South-East Asia Regional Office) காசநோய் ஒழிப்பு கூடுகையின்
முடிவில், இக்கூடுகையில் பங்கேற்ற நாடுகள் இணைந்து இந்த
அறிக்கையை வெளியிட்டுள்ளன.
கூ.தக:
உலகளவில் 2030 ஆம்
ஆண்டிற்குள் காசநோயை முற்றிலுமாக
ஒழிப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசு, 2025 ஆம் ஆண்டிற்குள் காசநோயில்லாத நாடாக மாற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
v ”சம்வேதனா 2018” (Samvedna) என்ற பெயரில்
இந்தியா, ஸ்ரீலங்கா,
ஐக்கிய அரபு எமிரேட், வங்காளதேசம் மற்றும்
நேபாளம் ஆகிய நாடுகளின் கூட்டு
விமானப்படை பயிற்சி (Air Force
exercise) கேரள கடலோரத்தில் 12 - 17 மார்ச் 2018 தேதிகளில் நடைபெறுகிறது.
v மோரீஷஸுக்கு ரூ.650 கோடி கடன்: இந்தியா அறிவிப்பு : மோரீஷஸ் அரசு, ராணுவத் தளவாடங்களைக் கொள்முதல் செய்வதற்கு உதவும் வகையில் 10 கோடி டாலர் (இந்திய மதிப்பில் ரூ.650 கோடி) கடனை அந்நாட்டுக்கு வழங்குவதாக இந்தியா
அறிவித்துள்ளது.
சர்வதேச நிகழ்வுகள்
v உலக பெருங்கடல் கூடுகை 2018
(World Ocean Summit ) மெக்சிகோவில் 7-9 மார்ச் 2018
ஆகிய தினங்களில் நடைபெற்றது.
v உலகிலேயே மிகப்பெரிய தேசியக் கொடி ‘பொலீவியா’ நாட்டில்
உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தேசியக் கொடி 200 கிலோ மீட்டர்
நீளமானது.
v பிரிட்டன் இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங் (76), 14-03-2018 அன்று காலமானார்.
ஸ்டீஃபன் ஹாக்கிங் பற்றி ...
o
ஆல்பர்ட்
ஐன்ஸ்டீனுக்கு அடுத்து கோட்பாட்டு இயற்பியலில் தலைசிறந்த விஞ்ஞானியாக அறியப்பட்ட
ஸ்டீஃபன் ஹாக்கிங், கருந்துளைகள், சார்புக் கோட்பாடு, அண்டவியல் ஆகியவை தொடர்பான ஆய்வுகளில் முக்கியப் பங்காற்றினார்.
o
கோட்பாட்டு
இயற்பியல் துறையில் தலைசிறந்து விளங்கிய அவர், 21 வயதில் நரம்பு பாதிப்பு நோயால் பாதிக்கப்பட்டு சக்கர
நாற்காலியில் அமர்ந்தே செயல்பட முடியும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டார். பின்னர்
உடல் உறுப்புகள் செயலிழந்தாலும், அயராத மனஉறுதி காரணமாக சிறந்த விஞ்ஞானியாக
பரிணமித்தார்.
o
கேம்பிரிட்ஜ்
பல்கலைக்கழக பேராசிரியராகவும், சிறந்த எழுத்தாளராகவும் அவர் விளங்கினார். அண்டவியல்,
அணுக்கட்டமைப்பு தொடர்பான 'எ பிரிஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம்' என்ற தலைப்பில் ஹாக்கிங் 1988-ஆம் ஆண்டு எழுதிய புத்தகம் மிகவும் பிரபலமானது. அவரது இந்த
சிறந்த படைப்பு, 'காலம்:
ஒரு வரலாற்றுச் சுருக்கம்' என்ற பெயரில் தமிழிலும், வேறு பல மொழிகளில், மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. விற்பனையில் இப்புத்தகம்
கின்னஸ் சாதனை படைத்தது. சாதாரண மக்களுக்கும் புரியும் வகையில் இயற்பியலையும்,
அண்டவியலையும் எளிமையாக விளக்கியதே இப்புத்தகத்தின் வெற்றி
ரகசியம்.'தி யுனிவர்ஸ் இன் நட்ஷெல்', 'பிளாக் ஹோல்ஸ் அண்ட் பேபி யுனிவர்ஸ்'
என்பது உள்ளிட்ட பல்வேறு புத்தகங்களையும் அவர்
எழுதியுள்ளார். இயற்பியல் மாணவர்களுக்கு இப்புத்தகங்கள் அனைத்தும் சிறந்த
வழிகாட்டியாக விளங்குகின்றன.
o
கடந்த
2009-ஆம் ஆண்டு அமெரிக்காவின் மிக உயரிய 'பிரசிடென்ஷியல்' பதக்கத்தை ஹாக்கிங்குக்கு அணிவித்து கெளரவித்தார் அப்போதைய
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா.
o
ஆல்பர்ட்
ஐன்ஸ்டீன் விருது, அடிப்படை இயற்பியல் விருது, அமெரிக்காவின் மிக உயரிய பிரசிடென்ஷியல் பதக்கம் உள்ளிட்ட
பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள ஹாக்கிங், நோபல் பரிசை அடைவதற்கு முன்பு காலம் அவரை அழைத்துக்
கொண்டது. ஐன்ஸ்டீனின் பிறந்த தினத்தில் ஹாக்கிங் மறைந்துள்ளார்.
o
கடந்த
2014-ஆம் ஆண்டு ஹாக்கிங் வாழ்க்கையை மையமாகக் கொண்டு 'தி தியரி ஆஃப் எவ்ரிதிங்' என்ற திரைப்படம் வெளியானது. இந்தத் திரைப்படத்தில்
ஹாக்கிங்காக நடித்த எட்வர்ட் ரெட்மைனிக்கு ஆஸ்கர் விருது அளிக்கப்பட்டது.
o ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் இந்திய வருகை
கடந்த 2001-ஆம் ஆண்டு ஸ்டீஃபன் ஹாக்கிங் முதல்முறையாக இந்தியாவுக்கு
வந்தார். மும்பையில் நடைபெற்ற சர்வதேச இயற்பியல் கருத்தரங்கம் உள்பட பல்வேறு
நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பேசினார். தில்லியில் அப்போதைய குடியரசுத் தலைவர்
கே.ஆர். நாராயணனைச் சந்தித்தார்.
v ஜெர்மனி பிரதமராக ஏஞ்சலா
மெர்க்கெல் 4-ஆவது முறையாகப் பதவியேற்றுள்ளார்.
v நேபாளத்தில் மீண்டும் அதிபரானார் வித்யா தேவி பண்டாரி: நேபாளத்தின் முதல் பெண் அதிபரான வித்யா தேவி பண்டாரி (56),
அந்தப் பதவிக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
v உலகின் மிகவும் ஆபத்தான 50
நகரங்களின் பட்டியல்
2018
: உலகில் கொலை,
கொள்ளை, கற்பழிப்பு மற்றும் துப்பாக்கி சூடு என மிக மோசமான 50
நகரங்கள் பட்டியலில் மெக்சிகோவின் லாஸ் கபோஸ் நகரம்
முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்த படியாக வெனிசுலாவின் கராகஸ் நகரம் 2-வது இடத்தில் உள்ளது. மெக்சிகோவின் துறைமுக நகரமான
அகாபுல்கோ 3-வது
இடத்திலும், பிரேசிலின்
நடால் நகரம் 4-வது
இடத்திலும், மெக்சிகோவின்
டிஜூவானா 5-வது
இடத்திலும் உள்ளது.
v அமெரிக்க சி.ஐ.ஏ உளவு அமைப்பின் முதல் பெண் இயக்குநராக கினா
ஹாஸ்பல் நியமிக்கப்பட்டுள்ளார்.
பொருளாதாரம்
v "InstaOD" ( instant overdraft facility) என்ற பெயரில் சிறு குறு மற்றும் நடுத்தர
தொழில்நிறுவனங்களுக்கான (MSME (Micro, Small and Medium Enterprises)) நிதி சேவையை ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
v வரும் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதமாக இருக்கும் ன்று உலக வங்கி கணித்துள்ளது.
v எஸ்.பி.ஐ வங்கி குறைந்தபட்ச இருப்பு அபராதத்தைக்
குறைத்துள்ளது. புதிய அபராதம்
1 ஏப்ரல் 2018 முதல் அமலுக்கு வரவுள்ளது. பெருநகரங்களில் இருக்கும் எஸ்பிஐ வங்கிக்
கிளைகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை (ரூ.3,000) பராமரிக்காத நபர்களுக்கு ரூ.50 மற்றும் ஜிஎஸ்டி வரியும், நகர்ப்புறம் (ரூ.2,000), கிராமப்புறப் பகுதிகளில் (ரூ.1,000)
இருக்கும் எஸ்பிஐ கிளைகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை
பராமரிக்காதோருக்கு ரூ.40-ம் அபராதமாக விதிக்கப்பட்டு வந்தது.இந்நிலையில்,
இந்த அபராதக் கட்டணத்தை எஸ்பிஐ தற்போது 75 சதவீதம் வரை அதிரடியாக குறைத்துள்ளது.
o
பெருநகர
வங்கிகளில் சேமிப்புக் கணக்கு வைத்திருப்போருக்கு விதிக்கப்பட்டு வந்த அபராதக்
கட்டணம் ரூ.15-ஆகக்
குறைக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையுடன் ஜிஎஸ்டி வரியையும் செலுத்த வேண்டும்.
o
நகர்ப்புறம்
மற்றும் கிராமப்புற வங்கிகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காதோருக்கு
விதிக்கப்பட்ட அபராதக் கட்டணம் முறையே ரூ.12, ரூ.10ஆக குறைக்கப்பட்டுள்ளது. இத்துடன் ஜிஎஸ்டி வரியும் செலுத்த வேண்டும்.
முக்கிய தினங்கள்
v ”உலக
நுகர்வோர் தினம்” (World Consumer Rights Day) - மார்ச் 15 நோக்கம் : “நியாயமான
டிஜிட்டல் சந்தைகளை உருவாக்குதல்” (Making Digital Marketplaces
Fairer))
விருதுகள்
/ மரியாதைகள்
v “சர்வதேச கோச்சோன் விருது 2017”
(International Kochon Prize 2017) இந்திய மருத்துவ ஆராய்ச்சி
கவுண்சிலுக்கு (Indian Council of Medical Research (ICMR)) வழங்கப்பட்டுள்ளது. காசநோய்த் தடுப்பு ஆராய்ச்சியில் சிறந்த
பங்களிப்பைப் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. 'கோச்சோன்’ என்பது கொரியாவைச் சேர்ந்த தன்னார்வல அமைப்பாகும்.
v நியூட்டன் - பாபா நிதி (Newton
Bhabha Fund) 2018 , கங்கை நதி படுகையில், நிலத்தடி நீர் மீது ஆர்சனிக் நச்சுப்பொருள் தாக்கத்தைப் (Groundwater
Arsenic Research in Ganga River Basin) பற்றிய ஆராய்ச்சிக்காக,
இந்திய -
இங்கிலாந்து கூட்டு ஆராய்ச்சிக் குழுவிற்கு
வழங்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ்
கவுன்சிலின் மூலம் வழங்கப்படும் இந்த நியூட்டன் - பாபா நிதியானது இந்திய மற்றும் இங்கிலாந்து அறிவியலாளர்களின்
கூட்டு முயற்சியினால் மக்களுடைய பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் வகையிலான
கண்டுபிடிப்புகளுக்காக வழங்கப்படுகிறது.
o
இந்த
ஆராய்ச்சியில், இந்தியாவின்
சார்பாக ஐ.ஐ.டி காரக்பூர் (IIT Kharagpur), தேசிய
நீர் ஆராய்ச்சி நிறுவனம் (National Institute of Hydrology), ஐ.ஐ.டி ரூர்கே (IIT Roorkee) மற்றும் மஹாவீர் கேன்சர் சன்ஸ்தான் மற்றூம் ஆராய்ச்சி
மையம்(பாட்னா) ஆகியவை பங்கேற்றன.
v ”உலக அமைதிக்கான அகதமி விருது 2018”
(Academy Award for Global Peace), இந்தியாவைச் சேர்ந்த கெத்ஷியா டேவிட் பிரகாஷம் என்ற
பெண்மணிக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதைப் பெறும் முதல் இந்தியப் பெண்மணி இவர்
என்பது குறிப்பிடத்தக்கது.
v இந்தியாவிற்கு சிறந்த சுற்றுலாக் கண்காட்சி விருது : ஜெர்மனி நாட்டின் தலைநகரமான பெர்லினில் அமைந்துள்ள
மெஸியில் நடைபெறும் சர்வதேச சுற்றுலா கண்காட்சி - ஐ.டி.பி. 2018
கண்காட்சியில் ஆஸ்திரேலியா மற்றும் ஓசியானியா பிரிவில்
இந்தியாவிற்கு சிறந்த கண்காட்சி விருது (Best Exhibitor Award
for Australia and Oceania Category) கிடைத்துள்ளது. ஐ.டி.பி கண்காட்சியின்போது நடைபெற்ற ஊடக
சந்திப்பில் மத்திய சுற்றுலா அமைச்சகம் வெளியிட்ட “யோகி ஆன் தி டிராக்” (Yogi on the Race
Track) என்ற குறும்படம்
பெரும் வெற்றியை கண்டுள்ளது.
v காவல்துறை புலனாய்வில் சிறந்த பணிக்கான மத்திய உள்துறை
அமைச்சரின் பதக்கம் (Union
Home Minister’s Medal for Excellence in Police Investigation) எனப்படும் புதிய விருது
உருவாக்கப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் சுதந்திர தினத்தில் இவ்விருது
வழங்கப்படும்.
v தமிழ்நாடு சுற்றுலா விருது 2018
சுற்றுலா தொடர்பான
செய்திகளை சிறப்பாக வெளியிட்டதற்காக, 'தினமலர்' நாளிதழுக்கு வழங்கப்பட்டுள்ளது. மத்திய சுற்றுலா துறையின், இன்கிரிடிபிள் இந்தியா, தமிழக சுற்றுலாத்துறை, மதுரா டிராவல்ஸ் ஆகியவை இணைந்து,
இவ்விருது வழங்கப்பட்டது. விழாவில் ஒரு லட்சம் ரூபாய்
ரொக்கத்துடன் கூடிய மதுரா மாமனிதர் விருது, மதுரையில் உள்ள தியாகம் உமன் டிரஸ்ட் நிர்வாகி,
அமுதசாந்திக்கு வழங்கப்பட்டது.
v கப்புகளை சேகரித்து
கின்னஸ் சாதனை படைத்த ராமநாதபுரம் இளைஞர் : ராமநாதபுரம்
இளைஞர் வி.சங்கர நாராயணன், 736 விதமான கப்புகளை சேகரித்து, இரண்டாவது முறையாக கின்னஸ் சாதனை படைத்தார்.
அறிவியல்
தொழில்நுட்பம்
v ”AYUSH QOL-2C”
- என்ற பெயரில்
கேன்சர் நோயாளிகளின் ஆரோக்கியத்தை மேம்படச் செய்வதற்காக, இந்தியாவினால்
புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள
ஆயுர்வேத மருந்து. இந்த
மருந்தை மத்திய ஆயுர்வேத அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கவுண்சில் (Central Council for Research in Ayurvedic Sciences
(CCRAS)) உருவாக்கியுள்ளது.
விளையாட்டுகள்
v இந்திய மோட்டார் விளையாட்டு கிளப்புகளின் கூட்டமைபினால் (FMSCI
- Federation of Motor Sports Clubs of India) வழங்கப்படும் 2017 ஆம்
ஆண்டிற்கான தேசிய மோட்டார் விளையாட்டு வீரர் விருது (‘FMSCI National
MotorSports Person of the Year 2017’) அனிந்தித் (Anindith )- க்கு
வழங்கப்படுகிறது.
v இந்தியாவில் முதல் “சோல்ஜியரத்தான்” (Soldierathon) புது
தில்லியிலுள்ள நேரு ஸ்டேடியத்தில் 11-03-2018 அன்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களால்
துவங்கி வைக்கப்பட்டது. “ஷோல்டியரத்தான்” என்பது, இந்திய
படை வீரர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினரின் நலனுக்கான நிதி திரட்டும் வகையிலான சிறப்பு மாரத்தான்
ஆகும்.
v தேசிய “டிரையத்தான்” சாம்பியன்சிப்
போட்டியில் (National Triathlon Championship) ஆண்கள்
மற்றும் பெண்கள் பிரிவில் முறையே பிஷ்வர்ஜித் சிங், சமீரா ஆப்ரஹாம் ஆகியோர் தங்கம் வென்றுள்ளனர். விஷாகப்பட்டணத்தில் நடைபெற்ற இந்த டிரையாத்தான் விளையாட்டு போட்டியானது, 1.5 கி.மீ நீச்சல், 40கி.மீ. மிதிவண்டி, 10கி.மீ. ஓட்டம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
v மல்யுத்தப் போட்டியில் ஆசிய சாம்பியனாகவுள்ள இந்திய பெண்ணான
நவ்ஜோத் குமார்,
65கிலோ பிரிவில்,
உலக
தரப்பட்டியலிலும் இரண்டாமிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
v தேசிய 'ஸ்கல்' படகு போட்டி : சென்னையில் நடந்த தேசிய 'ஸ்கல்' துடுப்புப் படகு போட்டியில் கொடைக்கானலை சேர்ந்த ஜெபா, தேவா ஆகியோர்
ஒரு நிமிடம் 47 வினாடிகளில் படகை ஓட்டிச் சென்று தங்கம் வென்றனர்.
v மலேசியாவின் ‘இப்போ’ நகரில் நடைபெற்ற 27 வது சுல்தான் அஷ்லான் ஷா ஆண்கள் ஹாக்கி போட்டியில்
ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது
படியுங்கள் ! பகிருங்கள் ! வெற்றி பெறுங்கள் !
TNPSC குரூப் II & I 2018 தேர்வுகளுக்கான TEST Batch
20 வாரங்கள்
40 தேர்வுகள்
(பொது தமிழ் 40, பொது அறிவு -40)
மேலும் விவரங்களுக்கு
www.tnpscportal.in/p/testbatch.html
8778799470 / 9385632216
TNPSC குரூப் II & I 2018 தேர்வுகளுக்கான TEST Batch
20 வாரங்கள்
40 தேர்வுகள்
(பொது தமிழ் 40, பொது அறிவு -40)
மேலும் விவரங்களுக்கு
www.tnpscportal.in/p/testbatch.html
8778799470 / 9385632216
----------------------
![]() |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.