TNPSC Current Affairs in Tamil 16,17 March 2018
தமிழகம்
v பூமிதான வாரியத்துக்கு தலைவர்-உறுப்பினர்கள் நியமனம்: இச்சட்டத்தின்படி, 14 பேர் வாரியத்துக்கு
நியமிக்கப்படுகின்றனர். அதன்படி, கதர் மற்றும் கிராமத்
தொழில்கள் வாரியத் துறை அமைச்சர் பாஸ்கரன் அதற்குத் தலைவராக இருப்பார். நிலச்சீர்திருத்த
இயக்குநர் உறுப்பினர் செயலாளராகவும், வருவாய் மற்றும்
பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளர், நிலச்சீர்திருத்த
ஆணையாளர், வேளாண்மைத் துறை இயக்குநர், தோட்டக்கலை
மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் ஆகியோர் அரசு சார்பிலான உறுப்பினர்களாக
இருப்பர். திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியைச் சேர்ந்த கே.எஸ்.நீலா, மதுரை மாவட்டம் வாடிப்பட்டி என்.சுந்தரராஜன், ராமநாதபுரம்
அபிராமத்தைச் சேர்ந்த கே.ஆர்.கண்ணன், சென்னை பெசன்ட்நகர்
எஸ்.எஸ்.நாராயணன், ராயப்பேட்டை எஸ்.லோகநாதன், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி க.கலியமூர்த்தி, கோவை தொண்டாமுத்தூர் டி.லட்சுமிகாந்தன் ஆகியோர் உறுப்பினர்களாக
நியமிக்கப்பட்டுள்ளனர்.
o
பூமிதான
இயக்கம் 1951-இல்
ஆச்சார்ய வினோபா பாவேவால் துவக்கப்பட்டது. அவர் தமிழகத்தில் பல்வேறு இடங்களுக்கு சுற்றுப்பயணம்
மேற்கொண்ட போது நிலச்சுவான்தார்கள் தங்கள் நிலங்களை தானமாக அளித்தனர். அவ்வாறு
அளிக்கப்பட்ட நிலங்கள் இன்று பூமிதான நிலங்களாக உள்ளன. இவற்றை முறைப்படுத்தவும், அதனை நிலமில்லாத ஏழைகளுக்கு விநியோகம்
செய்யும் பொருட்டு தமிழ்நாடு பூமிதான வாரியச் சட்டம் ஏற்படுத்தப்பட்டது. இந்தச்
சட்டப்படி, பூமிதான வாரியம் உருவாக்கப்பட்டது.
v தமிழ்நாட்டில் பசுமை ஆற்றல் மின் தொடர் திட்டம் ஜெர்மனி வளர்ச்சி வங்கியின் கடனுதவியுடன், 1,593 கோடி ரூபாய்மதிப்பீட்டில்
செயல்படுத்தப்பட்டு வருகிறது.
v தமிழ்நாடு மின் தொடரமைப்பு மேம்பாட்டு திட்டம்' ஜப்பான்
பன்னாட்டு கூட்டுறவு முகமை உதவியுடன், 5,014 கோடி ரூபாய் மதிப்பீட்டில், செயல்படுத்தப்பட்டு வருகிறது.
v திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில்
காய்கனிக் கழிவுகள் உள்ளிட்டவற்றில் இருந்து எரிவாயு தயாரிக்கும் திட்டம் 16-03-2018 அன்று தொடங்கப்பட்டது.
v தமிழக பட்ஜெட் : 2018 - 2019 - முக்கிய அம்சங்கள்
o
திண்டிவனம்
அருகேயுள்ள பெலாக்குப்பம் கிராமத்தில்,
450 ஏக்கர் பரப்பளவில், மிகப்பெரிய உணவு
பதப்படுத்தும் பூங்கா அமைக்கப்படும்.
o
தேனி, விருதுநகர், துாத்துக்குடி,
ஈரோடு, கடலுார், சேலம்,
திண்டுக்கல், திருநெல்வேலி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில், ஒருங்கிணைந்த உணவு பதப்படுத்தும் பூங்காக்கள் உருவாக்கப்படும்.
o
சென்னை, கிண்டியில், 20 கோடி
ரூபாயில், 'அம்மா பசுமை பூங்கா' அமைக்கப்படும்;
o
கிருஷ்ணகிரி
மாவட்டம், ஓசூரில், மலர்களுக்கான
வணிக வளாகம்; கடலுார் மாவட்டம், மங்களூரில்
மக்காசோளம் பதப்படுத்தும் மையம் அமைக்கப்படும். கன்னியாகுமரி, தோவாளையில், மலர்களை அறுவடைக்கு பின், பதப்படுத்தும் மையம் அமைக்கப்படும்.
o
விவசாயிகளுக்கு
பயன்படும் வகையில், 'உழவன்'
என்ற மொபைல் போன் செயலிஅறிமுகப்படுத்தப்படும்.
o
மாநில
அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான நிதியம் ரூ. 10 கோடி ஒதுக்கீட்டில் உருவாக்கப்படும்
o
முத்துலட்சுமி
ரெட்டி மகப்பேறு நிதியுதவி ரூ.18,000 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.
o
மாநில
அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான நிதியம் ரூ. 10 கோடி ஒதுக்கீட்டில் உருவாக்கப்படும்.
o
கர்ப்பிணி
பெண்களுக்கு ரூ. 4000
மதிப்பில் அம்மா - தாய் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படும்.
o
ஊரகப்
பகுதிகளில் திறந்தவெளியில் மலம் கழிக்கும் பழக்கம் இல்லாத மாநிலமாக தமிழகம் 2017 - 2018-ஆம் ஆண்டு இறுதிக்குள்
அறிவிக்கப்பட உள்ளது.
o
தமிழகத்தில்
செயல்படுத்தப்பட்டு வரும் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்
திட்டம் மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் ஒரு அங்கமான, தேசிய மருத்துவப் பாதுகாப்புத்
திட்டத்துடன், இத்திட்டமும் ஒருங்கிணைக்கப்பட்டு
செயல்படுத்தப்படும்.
o
தஞ்சாவூர்
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ரூ.1 கோடி மானியத்தில் தமிழ்ப் பண்பாட்டு மையம் உருவாக்கப்படும்.
இந்தியா
v 105வது
இந்திய அறிவியல் காங்கிரஸ் (Indian Science Congress) 16-20 மார்ச் 2018 தேதிகளில் மணிப்பூர் மாநிலம்
இம்பாலுள்ள மணிப்பூர்
பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது. முன்னதாக, இந்த கூடுகை
ஹைதராபாத்தில் நடைபெறுவதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
v ”கிரிஷி
உன்னதி மேளா” (Krishi Unnati Mela) என்ற மாபெரும் விவசாய கண்காட்சி 16-18 மார்ச் 2018 ஆகிய
தினங்களில் புது தில்லியில் நடைபெறுகிறது.
கூ.தக.: விவசாயிகளின் வருமானத்தை 2022 ஆம் ஆண்டிற்குள் இரண்டு மடங்காக
அதிகரிக்க மத்திய அரசு இலக்கு வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
v ”சர்வதேச போட்டி நெட்வொர்க்கின் ஆண்டு
கூடுகை” (Competition Network Annual Conference), இந்தியாவில்
முதல் முறையாக, 21-23 மார்ச் 2018
தினங்களில் புது தில்லியில் நடைபெறுகிறது.
v இந்தியாவில் இரயில்வே
உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக இந்தியா மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி (Asian Development Bank (ADB) ) இடையே 120 மில்லியன் அமெரிக்க டாலர் கடனுதவி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
v ”ராஷ்டிரிய ஆரோக்கிய நிதி” (Rashtriya
Arogya Nidhi) : வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும்
நோயாளிகளுக்கு மருத்துவம் பெறுவதற்கு நிதியுதவி வழங்கும் திட்டம்.
v ”காச நோயை ஒழிப்பதற்கான தேசிய திட்டம்”
(National Strategic Plan for Tbelimination) ஒன்றை மத்திய அரசு
துவங்கியுள்ளது. இத்திட்டத்தின் கால வரையறை 2017 - 2025
ஆண்டுகளாகும். முன்னதாக இத்திட்டம்,
ஜனவரி 2017 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு
வருவது குறிப்பிடத்தக்கது.
v ”லக்ஷயா திட்டம்” (LaQshya
program) : கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் அரசு சுகாதார
மையங்களில் பிறக்கும் குழந்தைகளின் நலனுக்காக
அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மத்திய அரசின் திட்டம். இத்திட்டத்தின் முக்கிய
நோக்கம், பிரசவ அறை
(Operation Theatre), தீவிர சிகிச்சை பிரிவு (Intensive
Care Units (ICUs)) போன்றவற்றில்
கர்ப்பிணி பெண்களை கவனித்துக்கொள்ளும் தரத்தை மேம்படுத்த, இத்திட்டம்
வழிவகுக்கும். அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட
மருத்துவமனைகள், முதல் குறிப்பு அலகு (FRU), மற்றும் சமுதாய சுகாதார மையங்களில் (CHCs) நடைமுறைப்படுத்தப்படும்
லக்ஷயா திட்டம், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும்
அனைத்து கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு
பயனளிக்கும்.
v விவசாயிகளின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் மேம்பாடு
பெருமத்திட்டம் (Kisan
Urja Suraksha evam Utthaan Mahabhiyan (KUSUM)) : மத்திய அரசு விவசாயிகளின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும்
மேம்பாடு பெருமத்திட்டம் என்ற திட்டத்தை உருவாக்கும் நடைமுறையைத்
தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின்படி:
o
கிராமப்பகுதிகளில்
இரண்டு மெகாவாட் திறன்கொண்ட கட்டமைப்புடன் இணைக்கப்படும் சூரியசக்தி
மின்திட்டங்களை அமைத்தல்,
o
மின்கட்டமைப்புடன்
இணைப்புப் பெறாத விவசாயிகளின் பாசனத்தேவைகளை நிறைவு செய்வதற்காக தானாக செயல்படும்
கட்டமைப்புடன் இணையாத சூரியசக்தி தண்ணீர் பம்புகளை அமைத்தல்,
o
தற்போதுள்ள
மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்ட விவசாயப் பம்புகளை சூரியசக்தி மயமாக்குதல் மூலம்
மின்கட்டமைப்பு சப்ளையை நம்பியிராத நிலையை விவசாயிகளுக்கு ஏற்படுத்துதல் மற்றும்
உபரி சூரிய மின்சக்தியை டிஸ்காம் நிறுவனங்களுக்கு விற்பனை செய்து கூடுதல் வருமானம்
பெற வாய்ப்பு ஏற்படுத்துதல்,
o
அரசுத்துறையில்
இயங்கும் குழாய் கிணறுகள் மற்றும் நீரேற்றி பாசன வசதி பெறும் திட்டங்கள்
ஆகியவற்றையும் சூரியசக்தி மயமாக்குதல், போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
v அதல் பூஜல் திட்டம் (Atal Bhujal Yojana) : நிலத்தடி நீர் அதிகம் எடுக்கப்பட்டுவிட்ட மற்றும் நிலத்தடி
நீர் குறைவாக உள்ள குஜராத், ஹரியானா,
கர்நாடகா, மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம்
ஆகிய ஏழு மாநிலங்களின் பகுதிகளில் நிலைத்த நிலத்தடி நீர் மேலாண்மையை நோக்கமாகக்
கொண்டு சமுதாயப் பங்களிப்புடன் அதல் பூஜல் திட்டத்தை (ஏபிஹெச்ஒய்) செயல்படுத்த
அரசு உத்தேசித்துள்ளது.
o
2013
மார்ச் 31 ஆம் தேதி நிலவரப்படி, தமிழ்நாட்டில் மொத்தம் 1,139 மதிப்பீடு செய்யப்பட்ட பிரிவுகளில் 358-ல் 31 சதவீத நிலத்தடி நீர் பயன்படுத்தப்பட்டுவிட்டது தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
v ”ஸ்வாதர் கிரே திட்டம்” (Swadhar Greh
Scheme) : 2001 -2002 ஆம்
நிதியாண்டில் துவங்கப்பட்ட இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், பல்வேறு சூழல்களினால், விழிம்புநிலையிலுள்ள பெண்களை பாதுகாத்து அவர்களின் அடிப்படைத்
தேவைகளை பூர்த்தி செய்வதாகும்.
இத்திட்டத்தின் மூலம் ஆள்கடத்தலுள்ளான பெண்கள், விதவைகள்,
இயற்கைப் பேரிடல்களால் பாதிப்புள்ளான மகளிர், மனநிலை
பாதிக்கப்பட்டோர், கணவனால் கைவிடப்பட்டோர் ஆகியோருக்கு உணவு,
உடை, மனநல ஆலோசனை, மருத்தவ
வசதிகள் மற்றும் தொழிற்பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
v பணிக்கொடை (திருத்த) மசோதா, 2017 மக்களவையில் 15
மார்ச் 2018 அன்று நிறைவேறியது. பணிக்கொடைச் சட்டம்,
1972 (Payment of Gratuity Act 1972) இன் மீது திருத்தம்
மேற்கொள்ளும் இம்மசோதாவின் படி, தனியார் மற்றும் அரசு
நிறுவனங்கள், பணியாளர்களுக்கு வழங்கி வந்த ரூ.10 இலட்சமாக
இருந்த வரியில்லா பணிக்கொடை வரம்பு ரூ. 20 இலட்ச வரியில்லா பணிக்கொடையாக உயர்த்தப்பட்டுள்ளது.
v உலக ஆற்றல் மாற்ற பட்டியல் 2018 (World Energy Transition Index) ல்
இந்தியா 78 வது இடத்தைப் பெற்றுள்ளது. உலகப் பொருளாதார
மன்றம் வெளியிட்டுள்ள இப்பட்டியலில், முதல் ஐந்து இடங்களை முறையே ஸ்வீடன், நார்வே,
சுவிட்சர்லாந்து, பின்லாந்து மற்றும்
டென்மார்க் நாடுகள் பெற்றுள்ளன.
v 'பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா தொழிலாளர்
அன்னதான திட்டம்' என்ற பெயரில் , சத்தீஸ்கர் மாநிலத்தில், ஏழை தொழிலாளர்களுக்காக,
ஏப்., 1 முதல், ஐந்து
ரூபாய்க்கு உணவு வழங்கும் திட்டம் 1 ஏப்ரல் 2018 முதல் அமல்படுத்தப்படவுள்ளது.
v தேசிய கீதத்தை திருத்த கோரி நாடாளுமன்றத்தில் தனி நபர் மசோதா ஒன்றை, அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ்
எம்.பி ரிபுன் போரா தாக்கல் செய்துள்ளார். அதில் அவர், தேசிய கீதத்தில் இடம் பெற்று உள்ள சிந்து என்ற வார்த்தைக்கு பதிலாக
வடகிழக்கு என்ற வார்த்தையை சேர்க்க வேண்டும் என்று கோரி உள்ளார். சிந்து, தற்போது பாகிஸ்தானில் அங்கம் வகிக்கிறது குறிப்பிடத்தக்கது.
v உலக மகிழ்ச்சி அறிக்கை 2018ல் இந்தியா 133 வது
இடத்தைப் பெற்றுள்ளது. வருமானம், சுகாதாரம், ஆயுட்காலம்,
சமூக ஆதரவு, சுதந்திரம், அகதிகள் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில்
ஆராய்ந்து ஐ.நா. சபையின் நிலையான வளர்ச்சி
தீர்வுகள் பிணையம் வெளியிட்டுள்ள இந்தப் பட்டியலில், பின்லாந்து,
நார்வே, டென்மார்க், ஐஸ்லாந்து,
சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, கனடா, நியூசிலாந்து, சுவீடன்,
ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள்தான், மகிழ்ச்சியான
முதல் 10 நாடுகளின் பட்டியலை ஆக்கிரமித்து உள்ளன.
v பிரணாப் முகர்ஜி அறக்கட்டளை தொடக்கம் : கிராப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் மக்களின்
வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப்
முகர்ஜியின் பெயரில் அறக்கட்டளை ஒன்று புது தில்லியில் தொடங்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு உறவுகள்
v ”இந்தியாவின் புகைப்படங்கள் : மக்கள் மற்றும்
இடங்கள்” (India Images : People and Places) எனும் பெயரிலான
புகைப்படக் கண்காட்சி எகிப்தின் கெய்ரோ நகரில் 14 மார்ச் 2018 அன்று
நடைபெற்றது. இந்த புகைப்படக் கண்காட்சியானது எகிப்திற்கான இந்திய தூதர் சஞ்சய்
பட்டாச்சார்யா அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.
முக்கிய
நியமனங்கள்
v பெலாரஸ் நாட்டிற்கான இந்திய தூதுவராக சங்கீதா பகதூர் (Sangeeta Bahadur) நியமிக்கப்பட்டுள்ளார்.
v ஹிமாச்சல் பிரதேச மாநிலத்திலிருந்து இராஜ்யசபா உறுப்பினராக
மத்திய சுகாதார அமைச்சர் ஜெ.பி.நட்டா (J.P.Nadda) இரண்டாவது முறையாக
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பொருளாதாரம்
v 2018-2019 ஆம் ஆண்டு நிதி ஆண்டில்
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதத்தை
எட்டும் என
தரக்குறியீட்டு நிறுவனமான 'ஃபிட்ச்' மதிப்பிட்டுள்ளது.
v இந்தியாவின் சரக்கு மற்றும் சேவைகள் வரி (Goods and Services Tax) முறை உலகளவில்
இரண்டாவது மிக அதிகமான வரி விதிப்பு முறையாக உள்ளது என உலக வங்கி தெரிவித்துள்ளது.
கூ.தக: 1 ஜீலை 2017 முதல்
அமலுக்கு வந்துள்ள ஜி.எஸ்.டி வரி முறையானது ஏற்கனவே அமலில் இருந்த 7 மத்திய வரிகள் மற்றும் 9 மாநில வரிகளுக்கு மாற்றாக
ஒரே வரியாக உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது 5%, 12%, 18 % மற்றும் 28% என வெவ்வேறு வரிவிதிப்பு மதிப்பீடுகள் அமலில் உள்ளன.
முக்கிய
தினங்கள்
v உலக உறக்க தினம் (world sleep day) - மார்ச் 16 அன்று “உறங்கும் உலகத்தில் இணைந்து உங்கள் வாழ்வை
அனுபவிப்பதற்கான சந்தத்தை பாதுகாத்துக்கொள்ளுங்கள் ” (Join the Sleep
World, Preserve Your Rhythms to Enjoy Life)
எனும் நோக்கில் அனுசரிக்கப்பட்டது.
விருதுகள்
/ மரியாதைகள்
v இந்திய நடிகை சிமி காரிவாலுக்கு (Simi garewal) இங்கிலாந்தின் “கோல்டன் ஃபிளேம் விருது”
(UK Golden Flame Award) வழங்கப்பட்டுள்ளது.
அறிவியல்
தொழில்நுட்பம்
v இந்தியாவின் முதல், குளோனிங் முறையில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள அஸ்ஸாம் எருமை (Assamese Buffalo), ஹரியானாவின், ஹிசாரில் அமைந்துள்ள இந்திய எருமைகள் ஆராய்ச்சி நிறுவனத்தினால் (Central
Institute for Research on Buffaloes) உருவாக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுகள்
v ஃபிஃபா தரவரிசை: 99-ஆவது இடத்தில் இந்தியா : சர்வதேச கால்பந்து சங்கங்களுக்கான சம்மேளனத்தின்
(ஃபிஃபா) தரவரிசைப் பட்டியலில் இந்தியா 99-ஆவது இடத்துக்கு வந்துள்ளது. இந்த ஆண்டில் முதல் முறையாக முதல் 100 இடங்களுக்குள்ளாக வந்துள்ள இந்தியா, தற்போது
339 புள்ளிகளோடு லிபியாவுடன் தனது இடத்தை
பகிர்ந்துகொண்டுள்ளது.
v சீனாவில் நடைபெற்ற 14 வது ஆசிய நாடுகளுக்கிடையேயான சாம்பியன்ஷிப் போட்டியில், 8 கி.மீ. ஓட்டத்தில், இந்தியாவின் சஞ்சிவாணி ஜாதவ்,
ஸ்வாதி காதவி, ஜூமா காதுன் மற்றும் லலிதா
பாபர் ஆகியோர் கொண்ட அணி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது.
v ஒருநாள் கிரிக்கெட் அந்தஸ்தை அடைந்த நேபாளம் மற்றும் ஹாங்காங் அணிகள் : ஹராரேவில் 15-03-2018 அன்று நடைபெற்ற உலகக் கோப்பைத்
தகுதிச்சுற்றுப் போட்டியில் பப்புவா நியு கினியா அணியைத் தோற்கடித்ததன் மூலம்
முதல்முறையாக ஒருநாள் கிரிக்கெட் அந்தஸ்தை அடைந்துள்ளது நேபாள அணி. மேலும் அதனுடன்
சேர்ந்து ஹாங்காங்கும் ஒருநாள் அந்தஸ்தை இழந்துள்ளது.
புத்தகங்கள்
v ”A tribute to Jagu” என்ற புத்தகம் இலங்கை கிரிக்கெட் அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புத்தகம்
முன்னாள் சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் ஜக்மோகன் டால்மியா
பற்றியதாகும்.
படியுங்கள் ! பகிருங்கள் ! வெற்றி பெறுங்கள் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.