Skip to main content
TNPSC Group 4 2019 Self Preparation Test Series குரூப் IV 2019 Test Batch - Join Now !
Tamil & English Medium |35 தேர்வுகள் | Online & PDF
TNPSC General English Book - Buy Now

TNPSC Current Affairs 2nd August 2018 | நடப்பு நிகழ்வுகள் - ஆகஸ்டு - 2

தமிழகம்
v  வாணியம்பாடி அருகே சங்க இலக்கியங்களில் குறிப்பிட்டுள்ள உடன்கட்டை (சதி) ஏறுதல் நிகழ்வை குறிக்கும் நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.  வாணியம்பாடியை அடுத்த நிம்மியம்பட்டு  மாடுகளை பகைவர்கள் கவர்ந்து சென்றபோது உயிரிழந்த 2 வீரர்களுக்கு எழுப்பப்ப்ட்ட நடுகல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அருகில் அவ்வீரர்களின் மனைவிகளும் கணவரோடு உயிர்விட்டதற்கான அடையாளங்களோடு படைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. 4 அடி உயரமும், 3.5 அடி அகலமும் கொண்டதாக நடுகற்கள் உள்ளன.  உடன்கட்டை ஏறுதல் சங்க இலக்கிய நூலான புறநானூறு பதிவு செய்துள்ளது. உடன் கட்டை ஏறிய இக்கல்லை தீப்பாய்ந்தாள் கல், சதி கல் என்றும் அழைப்படுகிறது.
v  மதிய உணவுத் திட்டம் தமிழகத்துக்கு உச்ச நீதிமன்றம் ரூ.50 ஆயிரம் அபராதம்:  பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும் விதத்தை இணையதளம் வாயிலாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க தவறியதற்காக தமிழகம், ஜார்க்கண்ட், உத்தரகண்ட் ஆகிய 3 மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.
v  2011 முதல் 2018 வரையில் தமிழக அரசினால் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையங்கள்:
o    ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.ரகுபதி தலைமையிலான விசாரணை ஆணையம் (2011) -  புதிய தலைமைச் செயலக கட்டடம் கட்டிய முறைகேடு தொடர்பாக விசாரிக்க
o    ஓய்வுபெற்ற நீதிபதி சிங்காரவேலு தலைமையில் விசாரணை ஆணையம் (2013) -  தருமபுரி இளவரசன் மரணம் தொடர்பாக விசாரிக்க
o     ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஸ்வரன்  தலைமையில் விசாரணை ஆணையம் (2017) - ஜல்லிக்கட்டுப் போராட்டம் தொடர்பாக
o    ஓய்வுபெற்ற நீதபதி ஆறுமுகசாமி தலைமையில்  விசாரணை ஆணையம் (2018) - முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க
o    ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில்  விசாரணை ஆணையம் (2018) - தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரிக்க
v  திருப்பரங்குன்றம்  அதிமுக சட்ட மன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ் (வயது 69) மாரடைப்பு ஏற்பட்டு 02-08-2018 அன்று மரணமடைந்தார்.
v  தமிழக முன்னாள் ஆளுநர் பீஷ்ம நாராயண்சிங் காலமானார் :  ஜார்கண்ட் மாநிலத்தில் பிறந்த  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பீஷ்ம நாராயன் சிங் கடந்த 1984 முதல் 1989- வரை அசாம் மாநில ஆளுநராகவும், 1991-ஆம் ஆண்டு தமிழகத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து 3 ஆண்டுகள் 1993 வரை தமிழகத்தின் ஆளுநராக இருந்தார். தமிழக ஆளுநராக இருந்த போது நிகழ்ந்து வந்த பதற்றமான அரசியல் சூழ்நிலை காரணமாக, மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தினார்.   தனது பதவிக்காலத்தின்போது ராஜீவ் காந்திக்கு தமிழகத்தில் ஆபத்து இருக்கிறது. அவர் தமிழகம் வருவதைத் தவிர்க்க வேண்டும். வந்தால் கொலை செய்யப்படும் அபாயம் இருப்பதாக பீஷ்ம நாராயண் சிங் எச்சரிக்கை விடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா
v  பெண்கள் ஆரோக்கியத்தைப் பேண உதவும்  "wow' (wellness for women)  செல்லிடப்பேசி செயலி அறிமுகம்  :  இந்திய தொழில், வர்த்தக சபையின் பெண்கள் பிரிவான பிக்கி லேடீஸ் அமைப்பின் (எஃப்.எல்.ஓ) 25-ஆம் ஆண்டு நிறைவு விழாவை யொட்டி, பிக்கி லேடீஸ் அமைப்பு, அப்பல்லோ மருத்துவமனை குழுமத்துடன் இணைந்து பெண்கள் ஆரோக்கியத்தைப் பேண உதவும் "wow' (wellness for women) என்ற செல்லிடப்பேசி செயலியை அறிமுகப்படுத்தியது. இந்த செயலி மூலம் பெண்கள் உடல் சார்ந்த பிரச்னைகள் குறித்து மருத்துவர்களிடம் ஆலோசனை பெறலாம். மேலும், தங்களுடைய மருத்துவக் குறிப்புகள் உள்ளிட்ட தகவல்களை சேமித்து வைக்கவும், மருத்துவரைச் சந்திப்பதற்கான நேரம் பெறுவது, உடல் நலத்துக்கான பொருள்களை வாங்குவது, வீட்டுக்கே வந்து ரத்தம் உள்ளிட்ட மாதிரிகளை எடுத்துச் செல்வது ஆகிய வசதிகள் இந்த செயலியில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
v  நகர்ப்புற மேம்பாடு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகிய துறைகளில் நிதி, தொழில்நுட்பரீதியிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பாக இந்தியா, ஜெர்மனி இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்தியா-ஜெர்மனி இடையிலான வளர்ச்சிரீதியிலான உறவின் 60-ஆவது ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தமானது, பசுமை இல்ல வாயுக்களின் வெளியீட்டை கட்டுப்படுத்துவதில் இந்தியா நிர்ணயித்துள்ள இலக்கை எட்டுவதற்கு உதவும். நகர்ப்புறங்களில் தூய்மையை உறுதி செய்தல், திடக்கழிவு மேலாண்மை ஆகிய நடவடிக்கைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது'  இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஜெர்மனி இந்தியாவின் நகர்புற வளர்ச்சிப் பணிகளுக்காக தொழில்நுட்ப உதவியுடன்,  ரூ.85000 கோடி நிதியுதவியும் வழங்கும்.
v  வட கிழக்கு ஆயுர்வேத மற்றும் ஹோமியோபதி ஆராய்ச்சி கல்வி நிறுவனம் ( North East Institute of Ayurveda & Homeopathy (NEIAH)) மேகாலயா மாநிலம் சில்லாங் நகரில் அமைந்துள்ளது. இந்நிறுவனம் 2015 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.
v  மத்திய அரசின்  தேசிய உயிரி எரிபொருள் கொள்கையை’ (National Policy of Biofuel) முதல் மாநிலமாக ராஜஸ்தான் அமல்படுத்தியுள்ளது.
கூ.தக. : தேசிய உயிரி எரிபொருள் கொள்கை , உயிரி எரிபொருட்களை மூன்று வகைகளாக வகைப்படுத்துகிறது. அவை முறையே
o    1.முதல் தலைமுறை  -  பயோ எத்தனால் (bioethanol) & பயோ டீசல் (biodiesel)
o    2. இரண்டாம் தலைமுறை  - எத்தனால் (ethanol),  நகராட்சி திடக்கழிவுகள் (Municipal Solid Waste (MSW)) 
o    3.மூன்றாம் தலைமுறை - உயிரி எரிபொருட்கள், உயிரி இயற்கை எரி வாயு (bio-CNG)
  


பொருளாதாரம்
v  மூன்றாவது   இருமாதமொரு  கொள்கையை (Bi-monthly Policy) ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது  : இரண்டு மாத இடைவேளையில் இந்திய ரிசர்வ் வங்கி இரண்டாவது முறையாக வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் அதிகரித்துள்ளது. பணவீக்க பிரச்னையை அடிப்படையாகக் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரிசர்வ் வங்கிடம் இருந்து வங்கிகள் பெறும் கடன்களுக்கான வட்டி (ரெப்போ ரேட்) 6.50 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதே போல வர்த்தக வங்கிகளிடம் இருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடன்களுக்கான வட்டியும் (ரிவர்ஸ் ரெப்போ ரேட்) 0.25 சதவீதம் அதிகரிக்கப்பட்டு 6.25 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வங்கி விகிதம் (Bank Rate)  0.25 சதவீதம் அதிகரிக்கப்பட்டு  6.75% ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால்,   ரொக்க இருப்பு விகிதம் (Cash Reserve Ratio (CRR))  4% மற்றும் Statutory Liquidity Ratio (SLR) 19.5% ஆகவும் மாறாமல் உள்ளது.
v  இந்திய தொழில் வளர்ச்சி வங்கியின்(IDBI - INDUSTRIAL DEVELOPMENT BANK OF INDIA)  51% பங்குகளை  இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (Life Insurance Corporation (LIC)) வாங்குவதற்கு  மத்திய அமைச்சரவை  ஒப்புதல் வழங்கியுள்ளது.
விளையாட்டு
v  ஹங்கேரியன் ஃபார்முலா 1 கிராண்ட் பிரிக்ஸ் (Hungarian Formula 1 Grand Prix) பட்டத்தை   6 வது முறையாக லேவிஸ் ஹாமில்டன் வென்றுள்ளார்.
v  உலக ஜீனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் 2018 (World Junior Squash Championships 2018) போட்டிகள் சென்னையில் 18-29 ஜீலை 2018 ல் நடைபெற்றது.  அப்போட்டிகளின் வெற்றியாளர்களின் விவரமாவது,
o    ஆண்கள் ஒற்றையர் - முஸ்தஃபா ஆசல் (Mostafa Asal), எகிப்து
o    பெண்கள் ஒற்றையர் - ரோவான் எல்லார்பை (Rowan Elaraby) எகிப்து
o    ஆண்கள் குழு - எகிப்து
v  சர்வதேச இராணுவ விளையாட்டுகள் 2018 (International Army Games 2018)  28 ஜீலை - 11 ஆகஸ்டு 2018 வரையில் அசர்பெய்ஜான், அர்மேனியா, பெலாரஸ், ஈரான்,கஷகஸ்தான், சீனா மற்றும் ரஷியா ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது.
v  சர்வதேச இந்திய விளம்பர சங்கத்தின்  ‘2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த விளம்பர விருது’ (Marketer of the Year) குஜராத் மாநிலத்தின் அமுல்’ (Amul) நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
v  ‘iHub’ (the intelligent hub) என்ற பெயரில் இந்தியாவின் முதல்  அறிவியல் ஆராய்ச்சி மற்றும் கல்விமையத்தை  ஆந்திர பிரதேச அரசு அமைக்கவுள்ளது.
  
அறிவியல் & தொழில்நுட்பம்
v  ”scutoid”   என்று பெயரிடப்பட்டுள்ள முப்பரிமாண வடிவ (3D shape) மனித செல்லை  அமெரிக்க மற்றும் ஸ்பெயின் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.Comment Policy:Dear visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation. Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.
View Comments
Close Comments