Skip to main content
குரூப் II, IIA 2020 (New Syllabus) Test Batch - Admission Going on!

☞30 தேர்வுகள் (ஒவ்வொரு தேர்விலும் 200 வினாக்கள் | GS-175 + APTITUDE-25 )
☞தமிழ் & ENGLISH MEDIUMS | Online & PDF

Join Now Tamil Medium English Medium

TNPSC Current Affairs 7th to 9th August 2018 | நடப்பு நிகழ்வுகள் - 07 - 09 ஆகஸ்டு


TNPSC Current Affairs 07-09 August 2018
தமிழகம்
v  தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் தமது 95 வது வயதில் 07-08-2018 அன்று காலமானார். கடந்த 1957 முதல் 2016 வரை 13 முறை சட்டப் பேரவை உறுப்பினராக இருந்த கருணாநிதி ஒரேயெரு முறை 1984 சட்டப்பேரவைத் தேர்தலில் மட்டும்  போட்டியிடாமல் இருந்துள்ளார்.
o    கருணாநிதி அவர்கள் முதல்வராக பதவியேற்ற காலங்கள்;
§  1969–1971 --கா. ந. அண்ணாதுரை மறைவுக்குப் பின் முதல் முறை ஆட்சி
§  1971-1976—இரண்டாவது முறையாக
§  1989–1991 --எம். ஜி. இராமச்சந்திரன், மறைவுக்குப் பின் மூன்றாம் முறை ஆட்சி
§  1996-2001—நான்காம் முறை ஆட்சி
§  2006-2011—ஐந்தாம் முறை ஆட்சி
o    கருணாநிதி அவர்கள் எழுதிய நாடகங்கள் ;  சிலப்பதிகாரம்,மணிமகுடம்,  ஒரே ரத்தம்,  பழனியப்பன்,  தூக்குமேடை, * காகிதப்பூ,  நானே அறிவாளி,  வெள்ளிக்கிழமை,  உதய சூரியன்,  நச்சுக்கோப்பை
o    கருணாநிதி அவர்கள் எழுதிய புத்தகங்கள் ;  குறளோவியம்,  நெஞ்சுக்கு நீதி,  தொல்காப்பிய உரை,  சங்கத்தமிழ்,  பாயும் புலி , பண்டாரக வன்னியன்,  ரோமாபுரி பாண்டியன்,  தென்பாண்டி சிங்கம்,  வெள்ளிக்கிழமை,  இனியவை இருபது, பொன்னர் சங்கர்,  திருக்குறள் உரை,  மேடையில் வீசிய மெல்லிய பூங்காற்று
v  தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரில் புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப்படும் என்று புதுச்சேரி மாநில முதல்வர் வே.நாராயணசாமி அறிவித்துள்ளார்.


இந்தியா

v  மக்களவையில் வன்கொடுமை தடுப்பு சட்ட திருத்த மசோதா 06-07-2018 அன்று  நிறைவேறியது.
o    இந்த புதிய மசோதாப்படி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் புகார் கூறப்படுபவரை உடனடியாக கைது செய்ய முடியும். இதற்காக புலனாய்வு அதிகாரியின் ஒப்புதல் தேவை இல்லை. மேலும் 25 புதிய குற்றங்கள் இந்த சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு உள்ளன. இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவருக்கு இடைக்கால ஜாமீன் கிடையாது.
o    மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணத்தொகை ரூ.85 ஆயிரம் முதல் ரூ.8.25 லட்சம் வரை அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் 2 மாதங்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, 2 மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்க வேண்டியது கட்டாயம் ஆகும்.
v  சிறுமியரை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு, மரண தண்டனை வழங்கும் சட்ட திருத்த மசோதா, ராஜ்யசபாவில் 06-08-2018 அன்று  நிறைவேறியது.  
o    இந்த நிரந்தர சட்டப்படி, சிறுமியரை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு, ஏழு ஆண்டாக இருந்த சிறைத்தண்டனை, 10 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
o    மேலும், 12 வயதுக்கு உள்பட்ட சிறுமியரை பாலியல் பலாத்காரம் செய்தால், அந்த வழக்கை இரண்டு மாதத்துக்குள் விசாரித்து, குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படும்.
o    16 வயதுக்கு உட்பட்ட சிறுமியரை பலாத்காரம் செய்யும் குற்றவாளிக்கு முன் ஜாமின் கிடையாது; 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.
v  பசு பாது காவலர்களுக்கு அடையாள அட்டை வழங்க உத்தரகாண்ட் அரசு முடிவு செய்துள்ளது.
v  சர்ச்சைக்குரிய எஃப்.ஆர்.டி.ஐ. மசோதா மக்களவையில் இருந்து வாபஸ் : மக்களவையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட சர்ச்சைக்குரிய நிதி தீர்மானம் மற்றும் வைப்புத் தொகை காப்பீடு மசோதாவை (எஃப்.ஆர்.டி.ஐ.) மத்திய அரசு 07-08-2018 அன்று  வாபஸ் பெற்றது.
v  இந்தியாவின் முதல்  உயிரி தொழில்நுட்பம் மற்றும் மருத்துவ தொழில்நுட்பத்திற்கான மையம்’ (B-Hub-hub for biotech, pharma sector) தெலுக்கானாவில் அமைக்கப்பட்டுள்ளது.
v  தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு’ (National Commission for Backward Classes (NCBC)) அரசியலமைப்பு அந்தஸ்து வழங்குவதற்கான  123 வது அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதா (Constitution (123rd Amendment) Bill 2017)    07-08-2018 அன்று  மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தின் மூலம்  தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணைய சட்டம் 1993 (National Commission for Backward Classes Act, 1993) ரத்து செய்யப்பட்டுள்ளது.
o    இந்த சட்டத்திருத்தத்தின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு,
§  பெண்களுக்கு பிரதிநித்துவம்,  
§  சாதி வாரியான கணக்கெடுப்பு விவரங்களை பொதுதளத்தில் வெளியிடல் மற்றும்   அவற்றை அடிப்படையாகக் கொண்டு இட ஒதுக்கீடு  செய்தல்,
§  பிற்படுத்தப்பட்டவர்களில் பொருளாதார சமூகவாய்ப்பு பெற்றவர்கள்(creamy layer ) முறையை மறுபரிசீலனை செய்தல் அல்லது நீக்குதல்,
§  நீதித் துறையில் இட ஒதுக்கீடு ஆகியவையாகும்.
கூ.தக. : தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்  1993 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட சட்டரீதியான அமைப்பாகும்.  மத்திய  பட்டியலில் காணப்படும்  மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் புதிதாக சாதிகளை இணைப்பது அல்லது நீக்குவது இதன் முக்கிய பணியாகும்.
v  சிக்கிம் மாநிலத்திலுள்ள கஞ்செண்ட்ஷொங்கா உயிர்க்கோளக் காப்பகம்’ (Khangchendzonga Biosphere Reserve)  , யுனெஸ்கொவின் (UNESCO) உலக உயிர்க்கோள காப்பக வலையமைப்பில் (World Network of Biosphere Reserves (WNBR)) புதிதாக இணைக்கப்பட்டுள்ளது.  இதன் மூலம்,   யுனெஸ்கோவினால் சர்வதேச அங்கீகாரம் பெற்ற இந்தியாவின் 11 வது உயிர்க்கோள காப்பகமாக கஞ்செண்ட்ஷொங்கா உயிர்க்கோளக் காப்பகமாகஉருவாகியுள்ளது.
கூ.தக. : இந்தியாவில் மொத்தம் 18  உயிர்க்கோள காப்பகங்கள் அமைந்துள்ளன.  இதில்  கஞ்செண்ட்ஷொங்கா உயிர்க்கோளக் காப்பகத்துடன்சேர்த்து 11 சர்வதேச அங்கீகாரம் பெற்ற உயிர்க்கோளங்களும் 7 உள்நாட்டு உயிர்க்கோள காப்பகங்களும் (domestic Biosphere Reserves) அடங்கும். 

வெளிநாட்டு உறவுகள்

v  மைத்ரி’ (Exercise Maitree) என்னும் பெயரில் இந்தியா மற்றும் தாய்லாந்து நாடுகளின் தரைப்படைகளின் (Army) கூட்டு இராணுவப்பயிற்சி  தாய்லாந்து நாட்டின் சாசோயங்கசோ மகாணத்தில் (Chachoengsao province) 6-19 ஆகஸ்டு 2018 தினங்களில் நடைபெற்றுவருகிறது.  சென்ற ஆண்டின் மைத்ரிகூட்டு இராணுவப்பயிற்சியானது ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்திலுல்ள பாக்லோ’ (Bakloh) எனுமிடத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
v  ஏசியான்’ (ASEAN) அமைப்பின் 51 வது  வெளியுறவு அமைச்சர்களின் கூடுகை சிங்கப்பூரில் நடைபெற்றது.

உலகம்

v  பெப்ஸி கோ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) பொறுப்பில் இருந்து இந்தியாவைச் சேர்ந்த இந்திரா நூயி (62) விலக இருக்கிறார். சுமார் 12 ஆண்டுகளாக அவர் இப்பொறுப்பில் இருந்தார். பெப்ஸி கோ நிறுவனத்தின்  புதிய தலைமைச் செயல் அதிகாரியாக ரமோன் லகுவார்ட் (54) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பொருளாதாரம்

v  MOPAD (Multi Option Payment Acceptance Device) என்ற பெயரில் புதிய பணம் செலுத்து இயந்திரத்தை  ஸ்டேட் பாங் ஆஃப் இந்தியா (State Bank of India) வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.

நியமனங்கள்

v  சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக இந்திரா பானர்ஜி, வினீத் சரண் மற்றும் கே.எம். ஜோசப் ஆகியோர் 07-08-2018 அன்று பதவியேற்று கொண்டனர்.  அவர்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார்.
v  யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் பொது மேலாளராக  எஸ்.கோபகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
v  இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) பகுதி நேர (அதிகாரப்பூர்வமற்ற) இயக்குநராக ஆடிட்டர் எஸ். குருமூர்த்தி, தொழிலதிபர் சதீஷ் காசிநாத் மராத்தே ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய அமைச்சரவையின் நியமனக்குழு இந்த நியமனங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அவர்கள் இருவரும் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு இந்தப் பொறுப்பில் இருப்பார்கள் என்று மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
o    ஆர்பிஐ இயக்குநர்கள் குழுவில் அதிகாரப்பூர்வ மற்றும் அதிகாரப்பூர்வமற்ற இயக்குநர்கள் உள்ளனர். ஆர்பிஐ ஆளுநர் மற்றும் நான்கு துணை ஆளுநர்களும் அதிகாரப்பூர்வ இயக்குநர்கள் ஆவர். அவர்கள் தவிர 10 அதிகாரப்பூர்வமற்ற இயக்குநர்களை நியமிக்க ஆர்பிஐ விதிகளில் இடம் உள்ளது. 

அறிவியல் தொழில்நுட்பம்

v  கம்ப்யூட்டரின் விண்டோஸ் 10 இயக்க முறையில் தமிழ் 99 கீபோர்ட்ஐ மைக்ரோசாப்ட் அறிமுகம் செய்துள்ளது. கம்ப்யூட்டரில் எளிய முறையிலும், வேகமாகவும் தமிழ் எழுத்துக்களை டைப் செய்வதற்கு உருவாக்கப்பட்ட தரமிக்க தமிழ் 99’ கீபோர்டை தமிழக அரசு கடந்த 1999-ம் ஆண்டு ஏற்றுக்கொண்டது. கடந்த 2010-ம் ஆண்டு முதல் பல்வேறு விண்டோஸ் இயக்க முறையில் (ஆப்ரேட்டிங் சிஸ்டம்) இந்த கீபோர்டு இணைக்கப்பட்டு வருகிறது.  அதன் தொடர்ச்சியாக விண்டோஸ் 10’ இயக்க முறையிலும் தமிழ் 99’ கீபோர்டை மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்போது அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதியை இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், தென் ஆப்பிரிக்கா, மொரீசியஸ் போன்ற நாடுகளில் உள்ள தமிழ் பயன்பாட்டாளர்கள் பயன்படுத்த முடியும்.
v  Internet Corporation for Assigned Names and Numbers ((ICANN) panel country code Names Supporting Organization (ccNSO) அமைப்பின் உறுப்பினராகியுள்ள முதல் இந்தியர் எனும் பெருமையை Data XGen Plus நிறுவனத்தின் நிறுவனர்  அஜய் தத்தா (Ajay Data) பெற்றுள்ளார்.  உலகளவில் இணையதள முகவரிகளை மேலாண்மை செய்கின்ற  இலாப நோக்கற்ற நிறுவனமாகும். 1988 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்ப்பட இந்த நிறுவனத்தின் தலைமையிடம் அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அமைந்துள்ளது.
v  உலகின் முதல் வெப்பஞ்சார்ந்த மின்கலம்  (thermal battery) ஆந்திர மாநிலத்தின் அமராவதியில் அமைக்கப்பட்டுள்ளது. ரூ.660 கோடியில் உருவாக்கப்பட்டுள்ளதும், 1000 மெகாவாட் மின்சாரத்தைச் சேமிக்க வல்லதுமான, இந்த மின்கலத்தை  Bharat Energy Storage Technology Private Limited (BEST) என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.
v  ராஷ்மி’ (Rashmi) என்ற பெயரில் இந்தியாவின் முதல்   மனித வகையின  ரோபோவை (humanoid robot)  ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரஞ்சித் ஸ்ரீவாஸ்தவா (Ranjit Srivastava) உருவாக்கியுள்ளார்.  இந்த ரோபோ ஆங்கிலம், இந்தி, போஜ்புரி மற்றும் மராத்தி மொழிகளில் பேசும் திறன் கொண்டது.
v  சிங்கோங்-2”(Xingkong-2) அல்லது ஸ்டாரி ஸ்கை-2” ( Starry Sky-2 ) என்ற பெயரில் மீஉயர் அதிர்வெண் கொண்ட போர் விமானத்தை (hypersonic aircraft) சீனா வெற்றிகரமாக சோதித்துள்ளது.
v  இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (ISRO)  மிக அதிக எடையிலான (5.7 டன்கள்)  ஜிசாட் - 11 தகவல்தொடர்பு செயற்கைக்கோள் (GSAT-11 satellite)   30 நவம்பர் 2018 ல் பிரஞ்சு கயானாவிலிருந்து விண்ணில் செலுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய தினங்கள்

v  தேசிய கைத்தறி தினம் - ஆகஸ்டு 7
v  73 வது  ஹிரோஷிமா தினம் (73rd Hiroshima day)   - ஆகஸ்டு 6
கூ.தக. : 6 ஆகஸ்டு 1945 ல்  அமெரிக்கா லிட்டில் பாய்’ (Little Boy) எனப்பெயரிடப்பட்ட அணு குண்டால்  ஜப்பானின் ஹிரோஷிமா நகரைத் தாக்கியதன் நினைவு தினம்.

விளையாட்டு

v  சர்வதேச ஹாக்கி சம்மேளனம் (எஃப்ஐஎச்) வெளியிட்டுள்ள தரவரிசைப் பட்டியலில் இந்தியா 5-ஆவது இடம் பெற்றுள்ளது.  
v  லண்டனில் நடைபெற்ற பெண்கள் ஹாக்கி உலகக் கோப்பை -2018 (Women’s Hockey World Cup 2018) போட்டியில் நெதர்லாந்து நாடு சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.  இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை முறையே, அயர்லாந்து மற்றும்  ஸ்பெயின் நாடுகள் பெற்றுள்ளன. இந்திய அணி 8 வது இடத்தை பெற்றுள்ளது.
v  ஸ்பெயினில் நடைபெற்ற COTIF Cup கால்பந்து சாம்பியன்சிப் போட்டி - 2018 ல்  20 வயதிற்குட்பட்டோர்  பிரிவில் இந்திய அணி  அர்ஜெண்டினாவை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியுள்ளது. மேலும்,  மேற்கு ஆசிய கால்பந்து கூட்டமைப்பு கோப்பைக்கான  (West Asian Football Federation Cup) 16  வயதிற்குட்பட்டோர்  பிரிவில் இந்திய அணி  ஈராக் அணியை  வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியுள்ளது.
v  வாசிங்டன் ஓபன் டென்னிஸ் 2018’ (Washington Open (tennis) 2018)  வெற்றியாளர்கள் விவரம்.
o    ஆண்கள் ஒற்றையர் போட்டியில் ஜெர்மனியின் அலெக்ஸாண்டர்  ஸ்வரெவ் (Alexander Zverev) , ஆஸ்திரேலியாவின் அலெக் டி மினார் (Alex de Minaur) யை வீழ்த்தி பட்டத்தை வென்றுள்ளார்.
o    பெண்கள் ஒற்றையர் போட்டியில் ரஷியாவின் ஸ்வெட்லானா குஷ்னெட்சோவா (Svetlana Kuznetsova) குரோஷியாவின் டோனா வெகிகை வீழ்த்தி பட்டத்தை வென்றுள்ளார்.
o    ஆண்கள் இரட்டையர் போட்டியில்  இங்கிலாந்தின் ஜாமி முரே (Jamie Murray) மற்றும் பிரேசிலின் புரோனா சோர்ஸ்’ (Bruno Soares) இணை  அமெரிக்காவின்  மைக் பிரயான் (Mike Bryan) மற்றும் பிரான்ஸின் எடோர்ட் ரோஜர் வாசிலின் (Édouard Roger-Vasselin) இணையை வீழ்த்தி பட்டத்தை வென்றுள்ளது.
o    பெண்கள் இரட்டையர் போட்டியில் சீனாவின்  ஹான் ஜின்யூன் (Han Xinyun) மற்றும் குரோஷியாவின் டாரிஜா ஜீரக் (Darija Jurak) இணை      சிலியின் அலெக்ஸா குராச்சி  (Alexa Guarachi) மற்றும் நியூசிலாந்தின் எரின் ரூட்லிஃப் (Erin Routliffe ) இணையை வீழ்த்தி பட்டத்தை வென்றுல்ளது.
Comment Policy:Dear visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation. Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.
View Comments
Close Comments