-->
TNPSC Portal - Thervu Vazhikatti Current Affairs Magazine

TNPSC Current Affairs 29-31 December 2018 | நடப்பு நிகழ்வுகள் 29-31 டிசம்பர் 2018

TNPSC Current Affairs   29-31 December 2018
☞   Previous Days' Current Affairs Notes
☞  Today / Previous Days' Current Affairs Quiz

தமிழ்நாடு

 • அந்நிய நேரடி முதலீடுகளை அதிகளவில் ஈர்ப்பதில் இந்தியாவிலேயே தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது.
 • 2025ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தில் இருந்து காசநோயை முற்றிலும் ஒழிக்க தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
 • 'மக்கள் மருத்துவர்' ஜெயச்சந்திரனை டிசம்பர் 2018 மாதத்தின் 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அவர்கள் பாராட்டியுள்ளார்.
  • மக்கள் மருத்துவர், சமூக மருத்துவர், 5 ரூபாய் டாக்டர், கைராசி டாக்டர் என்று மக்களால் அழைக்கப்பட்ட டாக்டர் ஜெயச்சந்திரன் வடசென்னையிலுள்ள வண்ணாரப்பேட்டையில் மருத்துவமனை துவங்கி 1971-ம் ஆண்டு முதல் மிகக்குறைந்த செலவில் மருத்துவ சேவையாற்றினார்.
  • 1000க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்களை நடத்திய டாக்டர் ஜெயச்சந்திரன் 'நேதாஜி சமூக சேவை இயக்கம்’ என்ற அமைப்பை ஆரம்பித்து கல்வி உதவித் தொகை, தெருவோரச் சிறுவர்களுக்குத் தேவையான உதவிகள் என அனைத்து உதவிகளையும் செய்து வந்தார்.
  • 'மகப்பேறும் மாறாத இளமையும்,'குழந்தை நலம் உங்கள் கையில்', 'தாய்ப்பால் ஊட்டுதலின் மகத்துவம்', 'உடல் பருமன் தீமைகளும் தீர்வுகளும்' என்பது போன்ற நுால்களை எளிய தமிழில் எழுதியுள்ளார்.
 • இந்தியாவின் முதல் தூக்குப் பாலம் ( lift bridge ) ரூ.250 கோடி செலவில் இராமேஸ்வரத்தில் அமைக்கப்படவுள்ளது. 2 கி.மீ. நீளமும், 63 மீ அகலமும் உடைய இந்த பாலமானது, தற்போது இருக்கும் 104 ஆண்டு பழமையான பாம்பன் பாலத்திற்கு மாற்றாக செயல்படவுள்ளது.

இந்தியா

 • உடல் உறுப்பு தானம் விழிப்புணர்விற்காக மகாராஷ்டிர மாநிலம், சங்கிலி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரமோத் மகாஜன் (67) என்ற முதியவர் 15,000 கி.மீ. தொலைவு மோட்டார் சைக்கிளில் பயணித்து விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
 • தேசிய ஹோமியோபதி ஆணையம் அமைப்பதற்கான மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 
  • ஹோமியோபதி மருத்துவத் துறையில் ஊழலற்ற நிர்வாகத்தையும், வெளிப்படைத்தன்மையும் உருவாக்கும் நோக்கத்தில் தேசிய ஹோமியோபதி ஆணையம் அமைக்கப்படவுள்ளது.
  • புதிதாக உருவாக்கப்படும் தேசிய ஹோமியோபதி ஆணையத்தில் தன்னாட்சி வாரியங்கள் இடம்பெறும். அவை, புதிதாக தொடங்கப்படும் ஹோமியோபதி கல்லூரிகளுக்கு அனுமதி அளிப்பது, ஹோமியோபதி கல்லூரிகளின் தரத்தை மதிப்பிடுவது ஆகிய பணிகளை மேற்கொள்ளும். மேலும், ஹோமியோபதி மருத்துவ சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களின் விவரங்கள் அடங்கிய தேசிய அளவிலான பதிவேட்டை அந்த வாரியங்கள் பராமரிக்கும். மருத்துவ சிகிச்சை தொடர்பான நெறிமுறைகளையும் அந்த வாரியங்கள் வகுக்கும்.
  • இதுதவிர, ஹோமியோபதி மருத்துவ கல்வி பயில்வதற்கு நீட் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்றும், கல்லூரியில் பயின்று முடித்த பிறகு மருத்துவராக சிகிச்சை அளிப்பதற்கு எக்ஸிட் எனப்படும் தகுதித் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்றும் இந்த மசோதா பரிந்துரை செய்கிறது. ஹோமியோபதி கல்லூரிகளில் தரமான கல்வியை மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்பதற்காக, அங்கு ஆசிரியராக நியமிக்கப்படுவோருக்கும், பதவி உயர்வு பெறுவோருக்கும் தகுதித் தேர்வு நடத்த வேண்டும் என்றும் இந்த மசோதா பரிந்துரை செய்கிறது.
 • 106-வது இந்திய அறிவியல் மாநாடு பஞ்சாப் மாநிலம் ஜலந்தரிலுள்ள ‘லவ்லி புரபஃசனல் பல்கலைக்கழகத்தில்’ (Lovely Professional University) 3-7 ஜனவரி 2019 தினங்களில் “எதிர்கால இந்தியா : அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்” (FUTURE INDIA : SCIENCE & TECHNOLOGY) எனும் மையக்கருத்தில் நடைபெறுகிறது. 
 • அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவழி மருத்துவர்கள் சங்கத்தின், 12 வது உலக சுகாதார மாநாடு (12th Global Healthcare Summit) 28-12-2018 அன்று மும்பையில் நடைபெற்றது.
 • இந்திய முறை மருத்துவ தேசிய ஆணையத்தை அமைப்பதற்கான வரைவு மசோதா 2018 (National Commission for Indian System of Medicine Bill, 2018) -க்கு பிரதமர் நரேந்திர மோடி லைமையில்28-12-2018 அன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
முக்கிய அம்சங்கள்
 • இந்த வரைவு மசோதா நான்கு சுயேட்சையான வாரியங்களைக் கொண்ட தேசிய ஆணையம் அமைக்க வகை செய்கிறது. ஆயுர்வேத கல்வியை ஆயுர்வேத வாரியத்தின்கீழ் அளிக்கவும், யுனானி, சித்தா, சவாரிக்பா ஆகிய கல்வியை முறையே யுனானி, சித்தா, சவாரிக்பா வாரியங்களின்கீழ் அளிக்கவும் வகை செய்யப்பட்டுள்ளது. இரண்டு பொதுவான வாரியங்கள் அதாவது, இந்திய முறை மருத்துவ கல்வி நிறுவனங்களுக்கான மதிப்பீடு மற்றும் அனுமதி வழங்கும் வாரியம் மற்றும் இந்திய முறை மருத்துவர்கள் நன்னடத்தை மற்றும் பதிவுக்கான வாரியம் ஆகிய இரண்டு வாரியங்கள் பொதுவாக அமைக்கப்படும்.
 • இந்த முறை மருத்துவத் துறையில் பட்டம் பெறும் அனைவரும் பணியாற்றுவதற்கான உரிமைங்களைப் பெற பொது நுழைவு மற்றும் வெளியேறும் தேர்வுகள் நடத்தவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
 • அலோபதி முறை மருத்துவத்திற்கான தேசிய மருத்துவ ஆணையம் மாதிரியில் இந்த ஆணையம் அமைக்கப்படும்.
 • உத்தேச ஆணையம் வெளிப்படைத் தன்மையையும், பொறுப்பேற்கும் தன்மையையும் உறுதி செய்து பொதுமக்களின் நலன்களை பாதுகாக்கும்.
 • போக்சோ சட்டத்தில் (Protection of Children from Sexual Offences (POCSO) Act, 2012) திருத்தம் செய்ய 28-12-2018 அன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • பாலியல் அத்துமீறல், பாலியல் துன்புறுத்தல், ஆபாசப் படம் எடுப்பது ஆகிய குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக போக்சோ சட்டம் 2012 இயற்றப்பட்டது.  18 வயதிற்கு கீழ் உள்ள நபர்களை குழந்தைகளாக இந்தச் சட்டம் வரையறுக்கிறது.  இந்தச் சட்டம் இருபாலருக்கும் பொருந்தும்.
  • இந்தச் சட்டத்தின் பிரிவுகள் 4, 5, 6, 9, 14, 15 மற்றும் 42-ல் செய்யப்பட்டுள்ள திருத்தமானது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறலை, அதன் தன்மைக்கேற்றவாறு முறையாக கையாள வகை செய்கிறது. நமது நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் அதிகரித்து வரும் நிலையில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியமாகிறது.  அதற்கு இந்த திருத்தம் வகை செய்கிறது.
  • குழந்தைகளுக்கு எதிரான மிக மோசமான பாலியல் துன்புறுத்தல் செய்வோருக்கு மரணத் தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகள் அளிக்கவும் சட்டத்திருத்தம் வகை செய்கிறது.
  • இயற்கை பேரிடர்களின் போதும், பாலியல் அத்துமீறலை நோக்கமாக கொண்டு, குழந்தைகளுக்கு ஹார்மோனை செயற்கையாக செலுத்தி விரைவில் பருவம் அடைய வைக்கும் நிலை ஆகிய குற்றங்களிலிருந்தும் குழந்தைகளைப் பாதுகாக்க சட்டப் பிரிவு 9-ல் திருத்தங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
  • போக்சோ சட்டம் 2012-ல் பிரிவு 14 மற்றும் 15-ல் செய்யப்பட்டுள்ள திருத்தங்களால் குழந்தைகளை ஆபாச படம் எடுப்பவர்களுக்கு எதிரான தண்டனைகள் மிகக் கடுமையாக்கப்பட்டுள்ளன.
 • பிரதமரின் தாய்மை வந்தன திட்டம் (Pradhan Mantri Matru Vandana Yojana) : பிரதமரின் தாய்மை வந்தனத் திட்டம் (PMMVY) என்பது பெண்களுக்குப் பேறுகாலப் பயன்கள் தரும் திட்டமாகும். 2013 ஆம் ஆண்டின் உணவு உறுதிப்பாடு சட்டத்தின் படி, நம் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
  • மத்திய, மாநில அரசு வேலைகளில் அல்லது பொதுத்துறை நிறுவன வேலைகளில் இருக்கின்றவர்களைத் தவிர, ஏனைய கருவுற்ற மற்றும் பாலூட்டும் தாய்களுக்கு இத்திட்டம் பொருந்தும்.
  • 2017 ஜனவரி முதல் தேதியன்று அல்லது அதற்குப் பிறகு முதல் குழந்தையைப் பெறுகின்றவர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கப்படும்.
  • இந்தத்திட்டத்தின் கீழ் ஒரே ஒருமுறைதான் நிதி உதவியைப் பெறமுடியும்.
  • தவணைகளாக வழங்கப்படும் நிதி உதவி, கருக்கலைவு அல்லது குழந்தை இறந்து பிறந்ததன் காரணமாகப் பாதியில் நிறுத்தப்பட்டால் மீதியுள்ள தவணைகளை அடுத்த குழந்தை பிறப்பின் போது பெற்றுக் கொள்ளலாம்.
  • குழந்தை பிறந்து சிலகாலம் கழித்து இறந்துவிட்டாலும், ஒரே ஒரு முறை பயன் பெறும் இத்திட்டத்தில் ஏதாவது தவணைகள் பாக்கி இருந்தால் மட்டும், அடுத்த குழந்தைப் பிறப்பின் போது, நிபந்தனைகளையும் தகுதியையும் நிறைவேற்றினால், பெற்றுக்கொள்ளலாம்.
  • அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆஷா(ASHA) பணியாளர்களும் நிபந்தனைகளை நிறைவு செய்யும்பட்சத்தில் இத்திட்டத்தில் பயன் பெறலாம்.
பயன்கள்
 • மூன்று தவணைகளில் மொத்தம் ரூ.5000/- வழங்கப்படும். கருவுற்றப் பெண்கள் அங்கன்வாடி மையம் அல்லது ஆரம்ப சுகாதார நிலையங்களில், பதிவு செய்து கொண்டதும், முதல் தவணையாக ரூ.1000/- வழங்கப்படும். கருவுற்ற காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பரிசோதனைகளில் குறைந்தது ஒரு பரிசோதனைக்காவது வந்தவர்களுக்கு, ஆறாவது மாத கர்ப்பகாலத்தின் போது, இரண்டாவது தவணையாக ரூ.2000/- தரப்படும். குழந்தை பிறந்த பிறகு, அதனைப் பதிவு செய்து,  BCG, OPV, DPT,  ஹெப்படிடிஸ் B ஆகிய தடுப்பூசிகளின் முதலாவது தவணையைப் போட்ட பிறகு உதவித் தொகையின் மூன்றாவது தவணையான ரூ.2000 தரப்படும்.
 • பிரதமரின் தாய்மை வந்தனத் திட்டத்தின் கீழ் பயன்பெறுகிறவர்கள், மருத்துவ மனைகளில் பிள்ளை பெற்றுக் கொள்வதை ஊக்குவிக்கும் ஜனனி சுரக்ஷா யோஜனா (JSY) வின் கீழ் வழங்கப்படும் உதவித்தொகையான ஆயிரம் ரூபாயையும் பெறலாம்.
 • 42வது இந்திய சமூக அறிவியல் மாநாடு (Indian Social Science Congress) ஒடிஷாவில் புவனேஷ்வரிலுள்ள கலிங்கா தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் (Kalinga Institute of Industrial Technology (KIIT))  27-31 டிசம்பர் 2018 தினங்களில் ’டிஜிட்டல் யுகத்தில் மனித எதிர்காலம்’  (Human Future in Digital Era) என்னும் கருத்துருவில் நடைபெற்றது.
கூ.தக : சென்ற ஆண்டில் 41 வது இந்திய சமூக அறிவியல் மாநாடு தமிழகத்தில் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
 • தாதா சாகேப் பால்கே விருது பெற்ற பிரபல வங்காளம் மொழி திரைப்பட இயக்குநர் மிருணாள் சென்(95) 30-12-2018 அன்று காலமானார்.
 • அந்தமான் தலைநகர் போர்ட் பிளேரில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தேசியக் கொடியை ஏற்றியதன், 75வது ஆண்டை முன்னிட்டு, 30-12-2018 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று 150 மீட்டர் உயர கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றி வைத்து, அவரது நினைவாக தபால் தலையையும், நாணயத்தையும் வெளியிட்டார்.
கூ.தக. : 30 டிசம்பர் 1943 அன்று சுபாஷ் சந்திர போஷ் அவர்கள்  சுதந்திர இந்தியாவிற்கான முதல் கொடியை அந்தமானில், போர்ட்பிளேரிலுள்ள  ஜிம்கானா சதுக்கத்தில் (Gymkhana Ground)  ஏற்றிவைத்தார்.  இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற அந்த நேரத்தில், அந்தமான தீவு, ஜப்பான் நாட்டினால், பிரிட்டனின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
 • அந்தமான் தீவுகளுக்கு பெயர் மாற்றம் : அந்தமானுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி, ராஸ் தீவுக்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீவு என்றும், நீல் தீவுக்கு ஷகீத் தீப் தீவு மற்றும் ஹேவ்லாக் தீவுக்கு ஸ்வராஜ் தீவ் என்று புதிய பெயரை சூட்டியுள்ளார்.
 • இராஜஸ்தான மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவோருக்கு கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்டது ரத்து செய்யப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில், முந்தைய பா.ஜ.க. ஆட்சியின் போது, கடந்த 2015ஆம் ஆண்டு பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடுவோருக்கு குறைந்தப்பட்ச கல்வி தகுதியாக 8ஆம் வகுப்பும், ஜில்லா பரிஷத் தேர்தலில் போட்டியிடுவோருக்கு 10ஆம் வகுப்பும், மாநகராட்சித் தேர்தலில் போட்டியிடுவோருக்கு 10ஆம் வகுப்பும் குறைந்தப்பட்ச கல்வித் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த கல்வித்தகுதி வரைமுறைகள் தற்போதைய காங்கிரஸ் ஆட்சியில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
 • 2-ஆம் உலகப்போர் காலத்திய வெடிகுண்டு கண்டெடுப்பு : கொல்கத்தாவின் துறைமுகப் பகுதியில், இரண்டாம் உலகப் போர் காலத்தைச் சேர்ந்த சுமார் 450 கிலோ எடை கொண்ட வெடிகுண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
 • மும்பையில் அமைந்துள்ள, உலகின் மிகப்பழமையான யோகா கல்வி நிறுவனமான "தி யோகா நிறுவனம் (The Yoga Institute, Mumbai) -ன் நூற்றாண்டு விழா 28 டிசம்பர் 2018 அன்று கொண்டாடப்பட்டது. இந்த யோகா கல்வி நிறுவனம் 1918 ஆம் ஆண்டில் ஸ்ரீ யோகேந்திரா என்பவரால் தொடங்கப்பட்டதாகும்.
 • ரசகுல்லா திருவிழா (Bagbazar-O-Rasogolla) மேற்குவங்க மாநிலம் கல்கத்தாவில் 28-30 டிசம்பர் 2018 தினங்களில் நடைபெற்றது.  இந்நிகழ்வையொட்டி, ரசகுல்லா இனிப்பை கண்டுபிடித்த நபின் சந்திர தாஸ் (Nabin Chandra Das) அவர்களின் நினைவாக 28-12-2018 அன்று அஞ்சல் வில்லையொன்றும் வெளியிடப்பட்டது.
கூ.தக. : ’பங்கார் ரசகுல்லா’ (‘Banglar Rosogolla’ ) எனும் இனிப்பு வகைக்காக மேற்கு வங்காள மாநிலத்திற்கு 14-11-2017 அன்று புவியியல் குறியீடு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 • மனித உரிமை மீறல் புகாரளிப்பதற்காக, ”14433” என்ற இலவச அழைப்பு எண்ணை, தேசிய  மனித உரிமை கமிஷன் தொடங்கியுள்ளது.
கூ.தக. : தேசிய மனித உரிமை ஆணையத்தின் தற்போதைய தலைவர் - நீதியரசர் (ஓய்வு) எச்.எல்.தத்து (H.L.Dattu)
 • இந்தியாவில் பசுமை இல்ல வாயுக்களின் வெளியீடு (Greenhouse Gas Emissions) , 2010 - 2014 காலக்கட்டத்தில் 22% அதிகரித்திருந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
 • 106 வது “இந்திய அறிவியல் மாநாடு – 2019” (Indian Science Congress 2019), பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில், 2019 ஜனவரி 3 முதல், 7 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. ‘எதிர்கால இந்தியா: அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்’ என்பதை மையக்கருத்தாகக் கொண்டு நடைபெறும் இந்த மாநாட்டை பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜனவரி 3-ம் தேதி தொடங்கிவைக்கிறார்.

உலகம்

 • பிரான்சை தொடர்ந்து தைவான் நாட்டிலும் பொதுமக்கள் மஞ்சள் புரட்சியில் இறங்கியுள்ளனர். குறைந்தபட்ச வரி விதிப்பு வேண்டும் என்றும், வரி விதிப்பில் பாரபட்சமின்றி செயல்பட கோரியும் ஆயிரக்கணக்கான தைவான் மக்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக, பிரான்சில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை அரசு உயர்த்தியதை எதிர்த்து மஞ்சள் அங்கி போராட்டம் என்ற மக்கள் போராட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
 • மடகாஸ்கர் நாட்டின் புதிய அதிபராக ஆண்ட்ரி ராஜோலினா (Andry Rajoelina) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
 • ரஷியாவிடமிருந்து பெறப்பட S-400  ஏவுகணையை சீனா வெற்றிகரமாக 27-12-2018 அன்று சோதனை செய்துள்ளது. இந்த ஏவுகணையானது நொடிக்கு 3000 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடியதாகும்.
 • அவங்கார்ட் (“Avangard”) என்று பெயரிடப்பட்டுள்ள அணு ஆயுத ஏவுகணையை ரஷியா 26-12-2018 அன்று வெற்றிகரமாக சோதித்துள்ளது. இந்த ஏவுகணையானது ஒலியின் வேகத்தை விட 20 மடங்கு அதிக வேகத்தில் (மணிக்கு 30,000 கி.மீ. க்கு அதிக வேகத்தில்) பயணிக்கக் கூடியதாகும்.
 • தனி நபராக அண்டார்டிகா கண்டத்தை முழுவதுமாக கடந்த முதல் நபர் எனும் சாதனையை அமெரிக்காவைச் சேர்ந்த  காலின் ஓ பிராடி (Colin O’Brady) என்பவர் படைத்துள்ளார்.  இவர் 54 நாட்களில் 1600 கி.மீ. பனிப்பிரதேசங்களைக் கடந்து இந்த சாதனையைப் படைத்துள்ளா்.

வெளிநாட்டு உறவுகள்

 • பூடானுக்கு ரூ.4,500 கோடி நிதியுதவி வழங்கவுள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்தியாவிற்கு அரசுமுறைப்பயணமாக வந்துள்ள பூடான் பிரதமர் லோதே ஷேரிங் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பையடுத்து, இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி,  பூடானில இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் அமைக்க அந்நாட்டின் 12 ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ்  ரூ.4500 கோடி நிதி உதவியை இந்தியா  வழங்கப்படவுள்ளது.
கூ.தக. : இந்தியாவுக்கும், பூடானுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளில் மிக முக்கியமானது நீர்மின் உற்பத்தி தான். அந்நாட்டின் மகாங்தேச்சு நதியில் மேற்கொள்ளப்படும் நீர்மின் உற்பத்தி திட்டம் விரைவில் நிறைவு பெறும்.
 • உயிரி தொழில்நுட்பத் துறையில் இந்தியா-கியூபா மற்றும் இந்தியா-கொரியா இடையேயான இரண்டு இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்து மத்திய அமைச்சரவையில் 28-12-2018 அன்று விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முறையே  கியூபாவின் ஹவானாவில் 2018 ஜுன் 22-ஆம் தேதியும், புதுதில்லியில் 2018 ஜுலை 9-ஆம் தேதியும் கையெழுத்தாகின.
 • நேபாள குடிமக்கள் இந்தியாவில் மாதமொற்றிற்கு செலவிடும் தொகையை அதிகபட்சம் ரூ.1 இலட்சமாக அந்நாட்டு அரசு நிர்ணயித்துள்ளது. இந்த விதிமுறைகள் 25-12-2018 முதல் அமலுக்கு வந்துள்ளன.
 • லிபேரியா குடியரசு ( Republic of Liberia) நாட்டிற்கான இந்தியாவின் தூதுவராக Y.K. சாய்லாஸ் தங்கல் (Y.K. Sailas Thangal) நியமிக்கப்பட்டுள்ளார்.
 • சொமாலியா (Federal Republic of Somalia) நாட்டிற்கான இந்தியாவின் தூதுவராக ராகுல் சாப்ரா (Rahul Chhabra) நியமிக்கப்பட்டுள்ளார்.

பொருளாதாரம்

 • பங்கு வெளியீட்டில் உலகில் இரண்டாவது இடத்தை பிடித்த இந்தியா :  2018 ஆம் ஆண்டில், பல்வேறு பிரச்னைகளை சந்தித்த போதிலும், இந்திய பங்குச் சந்தைகள், புதிய பங்கு வெளியீடுகள் மூலம், 38 ஆயிரத்து, 850 கோடி ரூபாய் திரட்டியுள்ளன. இதன் மூலம், அதிக தொகை திரட்டி, சர்வதேச பங்குச் சந்தைகளில், அமெரிக்காவிற்கு அடுத்த இடத்தை,இந்தியா பிடித்துள்ளது.

விருதுகள்

 • ஸ்வச் சர்வேக்‌ஷான் 2018” சிறந்த தலைநகருக்கான திடக்கழிவு மேலாண்மை விருது (Swachh Surveksahan 2018 award for Best Capital city in the Solid Waste Management )  கிரேட்டர் ஹைதராபாத் மாநகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.

விளையாட்டு

 • 2018-ஆம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீராங்கனையாக ஸ்மிருதி மந்தானாவை தேர்வு செய்து ஐசிசி அறிவித்துள்ளது.  கடந்த 2007-ஆம் ஆண்டு ஜுலைன் கோஸ்வாமிக்கு பிறகு ஐசிசி விருதை வெல்லும் 2-ஆவது இந்திய வீராங்கனை என்ற சாதனையை ஸ்மிருதி மந்தானா  பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

நியமனங்கள்

 • ஆந்திரபிரதேச தலைநகரமான அமராவதியில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்நீதிமன்றத்தின்  செயல் தலைமை நீதிபதியாக (Acting Chief Justice) சாகரி பிரவீண் குமாரை (Chagari Praveen Kumar)  குடியரசுத்தலைவர் நியமித்துள்ளார். 

விருதுகள்

 • Finding Beauty in Garbage” என்ற குறும்படத்திற்கு தெற்கு ஆசிய சர்வதேச குறும்பட போட்டியில் சிறந்த குறும்படத்திற்கான விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த குறும்படத்தை அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த வருவாய்த்துறை அதிகாரி சத்யமாம் துத்தா (Satyamam Dutta) இயக்கியுள்ளார்.

அறிவியல் & தொழில்நுட்பம்

 • நிலவின் மறுபக்கத்தைப் பற்றி ஆராய அனுப்பப்பட்டுள்ள உலகின் முதல் செயற்கைக் கோள் எனும் பெருமையை சீனாவின் ”சாங் இ-4” என்ற  விண்கலம் பெறவுள்ளது.
  • பூமியை நிலவு சுற்றி வருவதும், அது தன்னைத் தானே சுற்றிக் கொள்வதும் ஒரே வேகத்தில் இருப்பதால் அதன் ஒரு பகுதி மட்டுமே எப்போதும் பூமியை நோக்கி உள்ளது.
  • அதன் மற்றொரு பகுதியில் பெரும்பாலானவை, பூமியிலிருந்து பார்க்க முடியாத நிலை உள்ளது. அந்தப் பகுதியை நிலவின் "இருண்ட பகுதி' என்று அழைக்கிறார்கள்.
  • அந்தப் பகுதியில் முதல் முறையாக ஆய்வுகளை மேற்கொள்வதற்காக, சீனாவின் சாங் இ-4 விண்கலம் 8-12-2018 அன்று விண்ணில் ஏவப்பட்டது. நிலவின் "இருண்ட பகுதி'யில் தரையிறங்குவதற்கு ஏற்ற வகையில், சாங் இ-4 விண்கலத்தின் வட்டப் பாதை, நீள்வட்டப் பாதையாக  மாற்றியமைக்கப்பட்டுள்ளது.   அதையடுத்து அந்த விண்கலம், நிலவை அதிகபட்சமாக 100 கி.மீ. தொலைவிலும், குறைந்தபட்சமாக 15 கி.மீ. தொலைவிலும் சுற்றத் தொடங்கியுள்ளது.   நிலவின் மேற்பரப்பில் தரையிறக்கப்படும் சாங் இ-4 ஆய்வுக்கலம், அங்கு சக்கரங்கள் மூலம் பல்வேறு இடங்களுக்கு நகர்ந்து சென்று ஆய்வுகளை மேற்கொள்ளும்.  பூமியிலிருந்து பார்க்கும்போது தெரியாத நிலவின் பின்புறத்தில் சாங் இ-4 ஆய்வு மேற்கொள்ளவிருப்பதால், அதனுடன் பூமியிலுள்ள கட்டுப்பாட்டகம் நேரடியாக தொடர்பு கொள்ள முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.  இதன் காரணமாக, குவேகியாவ் என்ற செயற்கைக்கோளை சீனா கடந்த மே மாதம் விண்ணில் செலுத்தியது. அந்த விண்கலம், சாங் இ-4 ஆய்வுக்கலத்திலிருந்து தகவல்களைப் பெற்று பூமிக்கு அனுப்பும்.
 • யூன்ஹாய்-2” (Yunhai-2) என்ற பெயரில் 6 வழிமண்டல சுற்றுசூழல் ஆராய்ச்சி செயற்கைக் கோள்களை சீனா தனது லாங் மார்ச் -2டி (Long March-2D) ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.

புத்தகங்கள் / ஆசிரியர்கள்

 • Early Indians: The Story of Our Ancestors and Where We Came From” என்ற புத்தகத்தின் ஆசிரியர் - டோனி ஜோசப் (Tony Joseph)

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.