Type Here to Get Search Results !

TNPSC Current Affairs 30 January 2019

0
நடப்பு நிகழ்வுகள் 30  ஜனவரி 2019
☞   Previous Days' Current Affairs Notes
☞  Today / Previous Days' Current Affairs Quiz

தமிழ்நாடு

 • கனடா நாட்டின் டோரண்டோ பல்கலைக்கழக விருது தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் டி இமானுக்கு வழங்கப்பட்டது. இந்தப் பல்கலைக்கழகம் முதன் முறையாக 21 ஜனவரி மாலை அன்று தமிழ் மரபுத் தினத்தை கொண்டாடியது. உலகிலேயே ஒரு பல்கலைக்கழகம் தமிழ் மரபு தினத்துக்கு விழா எடுத்தது இதுவே முதல் முறையாகும் . 
  • கூ,தக. : கனடா டோரண்டோ பல்கலைக்கழக தமிழ் இருக்கை வாழ்த்துப் பாடலை இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார். இப்பாடலை    கவிஞர் யுகபாரதி எழுதியுள்ளார்.
 • தேசிய அளவில், ஆரோக்கியமான உணவு முறைகளை, பொதுமக்களிடம், சிறப்பாக விளக்கி, விழிப்புணர்வு ஏற்படச் செய்த மாநிலம் என்ற வகையில், தமிழகத்துக்கு, மத்திய அரசின் விருது கிடைத்துள்ளது. ஊட்டச்சத்துடன் கூடிய உணவு வகைகளை, பொதுமக்கள் உட்கொள்வது குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தை, பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து, அனைத்து மாநிலங்களிலும், மத்திய அரசு மேற்கொண்டிருந்தது.இதன் மூலம், 'சரியான, பாதுகாப்பான,ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுங்கள்' என்ற மையக் கருத்துடன் கூடிய விழிப்புணர்வை, பொதுமக்களிடம், பல்வேறு பிரசாரங்கள் மூலம் விளக்கிக் கூற, நடவடிக்கை எடுக்கப்பட்டது.மற்ற மாநிலங்களை விட, இந்த விழிப்புணர்வு இயக்கத்தை திறம்பட செயல்படுத்தியதற்காக, தேசிய அளவிலான, 'ஸ்வஸ்த் பாரத் யாத்ரா' விருதுக்கு, தமிழகம் தேர்வாகியுள்ளது. மேலும், சிறப்பாக செயல்படுத்திய நகரங்கள் உட்பட, பல்வேறு பிரிவுகளின் கீழ், தமிழகத்தின் மதுரை மற்றும் சிவகாசி நகரங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
 • 10-வது இந்து ஆன்மிக கண்காட்சி சென்னை குருநானக் கல்லூரியில் 29 ஜனவரி 2019 முதல்   4 பிப்ரவரி 2019 வரையில் நடைபெறுகிறது. 

இந்தியா

 • 'கங்கை எக்ஸ்பிரஸ்வே' என்ற பெயரில் உலகிலேயே மிகவும் நீளமான விரைவு சாலை  உத்தர பிரதேசத்தில், 36 ஆயிரம் கோடி ரூபாயில், 600 கி.மீ., நீளத்தில் அமைக்கப்படவுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
 • முன்னாள் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ஜார்ஜ்பெர்னாண்டஸ் 29-1-2019 அன்று காலமானார். கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்த இவர் வாஜ்பாய் அமைச்சரவையில் 1998-2004 வரை ராணுவ அமைச்சராக பதவி வகித்தார். விபி சிங் பிரதமராக இருந்த போது பெர்னாண்டஸ் ரயில்வே துறை அமைச்சராக இருந்தார். இவர் ராணுவ அமைச்சராக இருந்தபோதுதான் கார்கில் போர் நடந்தது குறிப்பிடத்தக்கது.
 • ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியல் 2018 ல், இந்தியா 78ஆவது இடத்தில் உள்ளது. சர்வதேச வெளிப்படைத்தன்மை நிர்வாக அமைப்பால் (டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்) இந்தப்  பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  2016ஆம் ஆண்டில் 79ஆவது இடத்திலும், 2017ஆம் ஆண்டில் 81ஆவது இடத்திலும் இந்தியா இருந்தது குறிப்பிடத்தக்கது
 • லோக்பால் தேடுதல் குழுவின் முதல் கூட்டம் 29-1-2019 அன்று  புது தில்லியில் நடைபெற்றது.   உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தலைமையில் 8 உறுப்பினர்களை கொண்ட இக்குழு, கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமைக்கப்பட்டது. 
  • இக்குழுவில், பாரத ஸ்டேட் வங்கி முன்னாள் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா, பிரசார் பாரதி தலைவர் ஏ.சூர்ய பிரகாஷ், இஸ்ரோ முன்னாள் தலைவர் ஏ.எஸ்.கிரண் குமார், அலாகாபாத் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ராம் சிங் யாதவ், குஜராத் காவல்துறை முன்னாள் தலைவர் சபீர்ஹுசைன் எஸ் கண்ட்வாவாலா, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி லலித் கே பன்வார், முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

உலகம்

 • பாகிஸ்தானில் முதலாவது ஹிந்து பெண் நீதிபதியாக சுமன்குமாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டு உறவுகள்

 • அறிவியல் மொழிபெயர்ப்பு தொடர்பாக, சுவிட்சர்லாந்து சுவிட்சர்லாந்து ஜூரிச் மொழியியல் பல்கலைக்கழகத்துடன், புதுச்சேரி பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது.

நியமனங்கள்

 • மத்திய அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்தின்(யுபிஎஸ்சி) உறுப்பினராக உள்நாட்டு விமானப்போக்குவரத்து துறை செயலர் ராஜீவ் நயன் செளபே 29-1-2019 அன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

விருதுகள்

 • இந்திய மொழிகளைச் சேர்ந்த 24 எழுத்தாளர்களுக்கு சாகித்ய அகாதெமி விருது 2018  புது தில்லியில்   29-1-2019 அன்று வழங்கப்பட்டது. தமிழுக்கான சாகிதிய அகாதெமி விருது,  2014-ஆம் ஆண்டு வெளியான 'சஞ்சாரம்' நாவலுக்காக  தமிழக எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனுக்கும்,   மலையாளத்துக்கான சாகித்ய அகாதெமி விருது, கன்னியாகுமரியை பூர்வீகமாகக் கொண்ட மலையாள எழுத்தாளர் ரமேஷன் நாயருக்கு அவர் எழுதிய குருபௌர்ணிமா கவிதை நூலுக்கும் வழங்கப்பட்டன.

Post a Comment

0 Comments