Type Here to Get Search Results !

TNPSC Current Affairs 9 January 2019 | நடப்பு நிகழ்வுகள் 9 ஜனவரி 2019

0

தமிழ்நாடு

 • அகில பாரத கவி சம்மேளனம்-2019 : இந்திய குடியரசு தினத்தையொட்டி தமிழ் உள்ளிட்ட 22 மொழி கவிஞர்கள் பங்கேற்கும் அகில பாரத கவி சம்மேளனம்-2019 சென்னை கலைவாணர் அரங்கில் 9-1-2019 அன்று  நடைபெறவுள்ளது.
  • மக்களிடையே தேசிய ஒருமைப்பாடு மற்றும் மொழி நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு ஆண்டுதோறும் அகில பாரத கவி சம்மேளனம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கவி சம்மேளனத்தில் நாடு முழுவதும் உள்ள அகில இந்திய வானொலி நிலையங்கள் மூலம் கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு வாசிக்கப்படுகிறது. கடந்த 64 ஆண்டுகளில் முதல் முறையாக சென்னை அகில இந்திய வானொலிக்கு இந்த சம்மேளனத்தை நடத்தும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
  • இந்தப் பன்மொழிக் கவி சம்மேளனத்தில் தமிழ், மலையாளம், ஹிந்தி, குஜராத்தி என 22 மொழிகளைச் சேர்ந்த கவிஞர்களின் கவிதை வாசிப்பு நடைபெறும். குறிப்பாக குஜராத்தி மொழியின் முதுபெரும் கவிஞர் மற்றும் ஓவியரான குலாம் முகமது ஷேக் போன்ற பிரபலமான கவிஞர்கள் கவிதை வாசிக்கவுள்ளனர்.
  • தமிழில் கவிஞர் குகை மா.புகழேந்தி பூமிப்பந்து கவிதையை வாசிக்கவுள்ளார்.
 • தமிழகத்தில் 33வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி உதயமாகியுள்ளது. இதனால், பரப்பளவில் மிகப்பெரிய மாவட்டமாக இருந்து வந்த விழுப்புரம் அந்த அந்தஸ்தை இழந்துள்ளது.
கூ.தக. :
 • கடலூர் மாவட்டத்தோடு சேர்த்து ஆற்காடு மாவட்டத்தின் ஒரு அங்கமாக விழுப்புரம் மாவட்டம் இருந்தது. பிறகு இது கடலூரில் இருந்து பிரிக்கப்பட்டது. 1993ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி விழுப்புரம் மாவட்டம் உதயமானது. விழுப்பரையர் என்ற இனத்தைச் சேர்ந்த மக்கள் அதிகம் வசித்ததால் விழுப்புரம் என்ற பெயரை இப்பகுதி பெற்றதாகவும் ஒரு குறிப்பு உள்ளது.

இந்தியா

 • நந்தன் நிலகனி குழு’ (Nandan Nilekani panel) :   டிஜிட்டல் முறைப் பணப் பரிமாற்றங்களை மேலும் அதிகரிக்கச் செய்வதற்கான வழிமுறைகளை ஆராய இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர்  நந்தன் நிலகனி தலைமையில் ஐந்து நபர் உயர்மட்டக் குழுவை  இந்திய ரிசர்வ் வங்கி அமைத்துள்ளது.
 • செம்மொழி மொழிகள் மையத்தை’ (Centre for Classical Language) கேரள மாநிலம் திரூரில் அமைந்துள்ளதுந்த்சாத் எழுத்தச்சன் மலையாளம் பகலைக் கழகத்தில்’ (Thunchath Ezhuthachan Malayalam University) அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
கூ.தக. : 
 • ஆகஸ்டு 2013 ல் மலையாளத்தை செம்மொழியாக மத்திய அரசு அறிவித்தது.
 • மத்திய இந்திய மொழிகள் நிறுவனம் (Central Institute of Indian Languages) கர்நாடகா மாநிலத்திலுள்ள மைசூரில் அமைந்துள்ளது.
 • “E-Prisions” திட்டம் : மத்திய உள்துறை அமைச்சகத்தின் நிதியுதவியினால் அமலாக்கம் செய்யப்படும் இத்திட்டத்தின் மூலம் நாடெங்கிலுமுள்ள அனைத்து சிறைச்சாலைகளும்,  தேசிய தகவல் மையத்தினால் (
  • National Informatics Centre (NIC)) உருவாக்கப்பட்ட ’E-prisons network ’ வலையமைப்பில் இணைக்கப்படவுள்ளன. இதற்கு தேவையான இணையதள மற்றும் தகவல் தொழில்நுட்ப உபகரணங்களும் மத்திய அரசினால் வழங்கப்படவுள்ளன. இத்திட்டத்திற்க்காக் 2017-18, 2018-2019 மற்றும் 2019-20 நிதி ஆண்டுகளுக்காக ரூ. 100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
 • திரைப்பட சட்டம் 1952 (Cinematograph Act, 1952.) திருத்தம் செய்ய மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் முடிவெடுத்துள்ளது.
 • அகில இந்திய வானொலி செய்திகளை தனியார் எஃப் எம் சானல்களுடன் பகிரும் வசதியை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு (தனிப்பொறுப்பு) இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை இணையமைச்சர் கர்னல் (ஓய்வுபெற்ற) ராஜ்யவர்தன் ரத்தோர் 8-1-2019 அன்று புதுதில்லியில் துவக்கிவைத்தார். இந்த சேவை மே 31, 2019 வரை சோதனை முயற்சியாக இலவசமாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
 • "டி.என்.. தொழில்நுட்ப ( பயன்பாடு ) ஒழுங்குமுறை மசோதா - 2019” ( “The DNA Technology (Use and Application) Regulation Bill - 2019”) 8-1-2019 அன்று மக்களவையில் நிறைவேறியது.   இந்த மசோதாவின் முக்கிய நோக்கம், காணாமல் போன நபர்கள், ஆள் கடத்துதல் பாதிப்புள்ளானோர், அடையாளமில்லாமல் மரணமுற்றோர் ஆகியோர் தொடர்பான விசாரணைகளுக்கு ‘டி.என்.ஏ/’ தொழில்நுட்பத்தை முறையாக பயன்படுத்துதலாகும்.
 • ஜல் சார்ச்சா” (Jal Charcha) - என்ற பெயரில் மத்திய நீர் வளத்துறை ஆறுகள் மேம்பாடு மற்றும் கங்கை நதி மறுசீரமைப்பு அமைச்சகத்தின் (Union Minister for Water Resources, River Development and Ganga Rejuvenation) முதலாவது மாத இதழின் முதல் பதிப்பு   8-1-2019 அன்று வெளியிடப்பட்டுள்ளது.

உலகம்

 • உலக வங்கித் தலைவர் ஜிம் யாங் கிம், தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். தனியார் நிறுவனமொன்றில் இணைவதற்காக, தனது பதவிக் காலம் முடிவடைவதற்கு 3 ஆண்டுகளுக்கு முன்னதாகவே அவர் ராஜிநாமா செய்வதாக தெரியவந்துள்ளது.

வெளிநாட்டு உறவுகள்

 • மும்பையில் வங்கி திறக்க ஈரானுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஈரான் நாட்டின் தனியார் வங்கியான பசர்கத் வங்கியின் கிளையை மும்பையில் திறக்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. இன்னும் 3 மாதத்தில் அந்த வங்கி திறக்கப்படவுள்ளது.
கூ.தக. :
 • ஈரான் நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள சபாஹர் துறைமுகத்தில் இந்தியா சுமார் ரூ. 596 கோடி முதலீடு செய்துள்ளது. அந்த துறைமுகம் மூலமாக பாகிஸ்தான் வழியாக இல்லாமல் ஆப்கானிஸ்தானை சென்றடைய முடியும். அதனால் அந்த திட்டத்துக்கு இந்தியா அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

நியமனங்கள்

 • சர்வதேச நாணய நிதியத்தின்’ (International Monetary Fund (IMF)) 11 வது (மற்றும் முதல் பெண்) தலைமை பொருளாதார நிபுணராக இந்திய வம்சாவழி பெண் கீதா கோபிநாத் (Gita Gopinath) நியமிக்கப்பட்டுள்ளார்.
  • கூ.தக. : 27 டிசம்பர் 1945 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சர்வதேச நாணய நிதியத்தின் தலைமையிடம் அமெரிக்காவின் வாசிங்டன் டி.சி -யில் அமைந்துள்ளது. இதன் தற்போதைய மேலாண்மை இயக்குநராக கிறிஸ்டின் லகார்டே உள்ளார்.
 • சீனாவிற்கான இந்தியாவின் புதிய தூதுவராக விக்ரம் மிஷ்ரி (Vikram Misri) 8 ஜனவரி 2019 அன்று நியமிக்கப்பட்டுள்ளார்.
 • உலக சூரிய ஆற்றல் கவுண்சிலின்’ (Global Solar Council) தலைவராக, ‘இந்தியாவின் சோலார் மனிதர்’ (Solar Man of India) என அழைக்கப்படும்பிரணவ் மேத்தா’ ( Pranav R Mehta) 1-1-2019 அன்று நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ‘இந்திய சூரிய ஆற்றல் கூட்டமைப்பின்’ (National Solar Energy Federation of India (NSEFI)) தலைவராகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
  • கூ.தக. : பாரிஸில் நடைபெற்ற (30 நவம்பர் முதல் 12 டிசம்பர் 2015 வரையில்) ஐ.நா. பருவநிலை மாநாட்டினைத்  (United Nations Climate Change Conference (UN COP 21)) தொடர்ந்து,  6 டிசம்பர் 2015 ல் ஐ.நா. வினால் தொடங்கப்பட்ட ‘உலக சூரிய ஆற்றல் கவுண்சிலின்’  தலைமையிடம் அமெரிக்காவின் வாசிங்க்டன் டி.சி. யில் அமைந்துள்ளது.
 • சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவை, கட்டாய விடுப்பில் அனுப்பி, மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை 8-1-2019 அன்று உச்சநீதிமன்றம்  ரத்து செய்ததுடன், அவரை மீண்டும் அப்பொறுப்பில் நியமித்துள்ளது.  எனினும், இந்த விவகாரத்தில் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய உயர்நிலைக் குழு, ஒரு வாரத்துக்குள் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும்; அதுவரை, அலோக் வர்மா கொள்கை முடிவுகள் எதையும் எடுக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
 • சாஷ்த்ர சீம பால் என அழைக்கப்படும் ஆயுத எல்லைப்படையின் தலைமை இயக்குனராக (DG, SSB) திரு. குமார் ராஜேஷ் சந்திரா நியமிக்கப்பட்டுள்ளார்.

அறிவியல் & தொழில்நுட்பம்

 • ”HD 21749b” எனப்படும் புதிய கோளை அமெரிக்காவின்நாசா’ கண்டுபிடித்துள்ளது. பூமியிலிருந்து 53 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் அமைந்துள்ள இந்தக் கோளானது ’HD 21749’ என்ற நட்சத்திரத்தை சுற்றி வருகிறது.

விளையாட்டு

 • .டி.பி. உலகக் கோப்பை டென்னிஸ் போட்டிகள் - 2020” (ATP Cup) நடத்துவதற்கு ஆஸ்திரேலிய நகரங்களான சிட்னி மற்றும் பிரிஸ்பேன் ஆகியவை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
  • கூ.தக. : ATP எனப்படும் ’Association of Tennis Professionals’ அமைப்பின் தலைமையிடம் லண்டனில் உள்ளது. இதன் தற்போதைய தலைவராக கிரிஸ் கெர்மோட் (Chris Kermode) உள்ளார்.
 • விளையாடு இந்தியா இளைஞர் விளையாட்டுகள் 2019” (Khelo India Youth Games), 9-20 ஜனவரி 2019 தினங்களில் மஹாராஷ்டிரா மாநிலம் பூனேவில் நடைபெறுகிறது.

Post a Comment

0 Comments