-->
TNPSC Portal - Thervu Vazhikatti Current Affairs Magazine

TNPSC Current Affairs 14,15 February 2019

தமிழ்நாடு
 • தமிழக அரசினால் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மணிமண்டபங்கள் / அரசு விழாக்கள்
  • முல்லைப்பெரியாறு அணையை தனது சொந்த செலவில் கட்டி தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்கள் பாசன வசதி பெற வழிவகுத்த கர்னல் ஜான் பென்னிகுயிக்கின் பிறந்த நாளான ஜனவரி 15-ந் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் .
  • பவானி ஆற்றின் வாய்க்கால் களை வெட்டிய காலிங்கராயனின் நினைவை போற்றுகின்ற வகையில் ஆண்டுதோறும் தை மாதம் 5-ந் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் .
  • சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக் கோனின் பிறந்த தினமான ஜூலை 11-ந் தேதி தமிழக அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி சிறப்பிக்கப்படும்.
  • இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், சிறந்த தமிழ் அறிஞரும், முன்னாள் மேலவை தலைவர் ம.பொ.சிவஞானத்தின் தமிழ் தொண்டினை போற்றிடும் வகையில், அவரது பிறந்த நாளான ஜூன் 26-ந் தேதி அன்று அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி சிறப்பிக்கப்படும்.
  • தமிழ் அன்னைக்கு தனது பாடல்களால் மாலை சூட்டி அழகு பார்த்த கவிமணி தேசிக விநாயகம் பிள்ளைக்கு, அவர் பிறந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம், தேரூரில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபமும், அதிலேயே ஒரு நூலகமும் அமைக்கப்படும் .
  • பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் வீரத்தை பெருமைப்படுத்தும் விதத்தில், பெரும்பிடுகு முத்தரையருக்கு திருச்சி மாவட்டத்தில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபமும், அதிலேயே ஒரு நூலகமும் அமைக்கப்படும்.
  • இரட்டைமலை சீனிவாசன் பிறந்த இடமான மதுராந்தகம் அருகில் உள்ள கோழியாளம் கிராமத்தில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் உருவச் சிலையுடன் கூடிய நினைவு மண்டபமும், அதிலேயே நூலகமும் அமைக்கப்படும்.
  • விவசாயிகளின் நலனைக் காக்க பரம்பிக்குளம் ஆழியாறு அணைக்கட்டு திட்டம் தொடங்க காரணகர்த்தாவாக இருந்தவர் வி.கே.பழனிசாமி கவுண்டர். அவருக்கு சிறப்பு செய்யும் விதமாக அவர் பிறந்த இடமான கோயம்புத்தூர் மாவட்டம் வேட்டைக்காரன் புதூரில் உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபமும், அதிலேயே ஒரு நூலகமும் ரூ.1 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
  • நீதிக்கட்சியின் வைரத் தூண் என்று அழைக்கப்பட்ட ஏ.டி.பன்னீர்செல்வத்துக்கு திருச்சி மாவட்டத்தில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் உருவ சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படவுள்ளது.
  • நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையத்தில் காவிரியின் குறுக்கே தடுப்பணை அமைத்து 5 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பயன்பெற ராஜ வாய்க்கால் ஏற்படுத்திய அல்லாள இளைய நாயகரை பெருமைப்படுத்தும் வகையில், அவருக்கு ஜேடர்பாளையத்தில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் குவிமாடத்துடன் உருவச்சிலை அமைக்கப்படும்.
  • திருநெல்வேலி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒண்டிவீரன் மணிமண்டபத்தை ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் புனரமைப்பதுடன், அந்த வளாகத்தில் ஒரு நூலகமும் அமைக்கப்படும்.
  • தூத்துக்குடி மாவட்டம் கவர்ணகிரியில் அமைந்துள்ள வீரன் சுந்தரலிங்கனார் மணிமண்டபத்தை ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் புனரமைப்பதுடன், ஒரு நூலகமும் அதிலேயே இந்த அரசு அமைக்கும்.
 • திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் கே.பிச்சுமணி நியமிக்கப்பட்டுள்ளார்.
 • தமிழகத்தில் முதல்முறையாக ஜாதி, மதம் அற்றவர் என்ற சான்றிதழ் திருப்பத்தூர் பெண் வழக்குரைஞர் சிநேகா -வுக்கு     வழங்கப்பட்டுள்ளது.
 • ஆசியாவிலேயே மிகப்பெரிய நவீன கால்நடை பூங்கா சேலம் மாவட்டம் தலைவாசலில் ரூ.396 கோடியில்  நிறுவப்படும் என்று  முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
 • பெண் டாக்டர்களால் நடத்தப்படும் அகில இந்திய எண்டாஸ்கோப்பி மாநாடு சென்னையில் 16 பிப்ரவரி 2019 அன்று தொடங்குகிறது.
 • பிளாஸ்டிக் விற்பனை செய்வோர் மற்றும் பயன்படுத்துவோருக்கு, அபராதம் விதிக்கும், சட்ட மசோதா, சட்டசபையில் 13-02-2019 அன்று தாக்கல் செய்யப்பட்டது.
  • தமிழகம் முழுவதும், ஜன., 1 முதல், ஒரு முறை பயன்படுத்தி, துாக்கி எறியப்படும், பிளாஸ்டிக் பொருட்களுக்கு, தமிழக அரசு தடை விதித்துள்ளது. அன்று முதல், பிளாஸ்டிக் பொருட்கள் தயாரித்தல், விற்றல், எடுத்துச் செல்லுதல், இருப்பு வைத்தல், பகிர்தல் என, அனைத்து நடவடிக்கைகளுக்கும், தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • தடை செய்த பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோருக்கு, புதிய சட்ட விதிகளின்படி, மூன்று முறை அபராதம் விதிக்கப்படும். நான்காவது முறை பயன்படுத்தினால், உரிமம் ரத்து செய்யப்படும்.
  • தற்போது, விதிமுறை மீறி பிளாஸ்டிக் பயன்படுத்துவோருக்கான அபராதம் விதிக்கும் சட்ட திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன் படி, பயன்படுத்தப்பட்ட மற்றும் துாக்கி வீசப்பட்ட பிளாஸ்டிக் சேமித்தல், வழங்குதல், எடுத்துச் செல்லுதல், விற்பனை செய்தல் மற்றும் பகிர்ந்தளித்தலில் ஈடுபடும்,
  • வணிக வளாகங்கள், துணி கடைகள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் வணிக நிறுவனங்களளுக்கு- 25 ஆயிரம் (முதல் முறை), 50 ஆயிரம் (இரண்டாம் முறை), 1 லட்சம் (மூன்றாவது முறை)
  • மளிகை, மருந்து கடைகள் போன்ற நடுத்தர கடைகளுக்கு - 10 ஆயிரம்(முதல் முறை) - 15 ஆயிரம்(முதல் முறை) - 25 ஆயிரம் (முதல் முறை)
  • நடுத்தர கடைகள் - 1,000 (முதல் முறை),  2,000(முதல் முறை) , 5,000(முதல் முறை)
  • சிறிய வணிக விற்பனையாளர்கள் - 100(முதல் முறை) , 200(முதல் முறை) , 500 (முதல் முறை)
 • தமிழ்நாட்டின் குன்னூரில் புதிய வைரல் தடுப்பு மருந்து உற்பத்தி பிரிவு (Viral Vaccine Manufacturing Unit ) அமைப்பதற்கு இந்திய பாஸ்ச்சுவர் நிறுவனத்திற்கு (Pasteur Institute of India) 30 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்யும் திட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை 13-2-2019 அன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. 
  • இத்திட்டத்தின் கீழ், வைரல் தடுப்பு மருந்து (சின்னம்மை தடுப்பு மருந்து, மூளை வீக்கத்திற்கான தடுப்பு மருந்து), ஆண்டி சீரா (பாம்பு விஷம் மற்றும் நாய்க்கடிக்கு எதிரான மருந்து) ஆகியவை குன்னூரில் உள்ள இந்திய பாஸ்ச்சுவர் நிறுவனத்தில் தயாரிக்க இந்தத் திட்டம் வழிவகுக்கும். இத்திட்டத்திற்கான நிலம் இலவசமாக மாற்றித்தரப்படும்.
  • இத்திட்டத்திற்கான நிலம், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தால் தொழில் பிரிவிலிருந்து நிறுவனப் பிரிவுக்கு மாற்றப்படும். இந்த நில ஒதுக்கீடு, குழந்தைகளுக்கான உயிர்காக்கும் தடுப்பு மருந்துகளைத் தயாரிப்பதற்கும், நாட்டின் தடுப்பு மருந்து பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும், செலவைக் குறைப்பதோடு தற்போது இறக்குமதி செய்யப்படும் இவற்றுக்கு மாற்றாகவும் அமையும்.

இந்தியா

 • ஏ.கே., 203 ரக துப்பாக்கிகள் உ.பி.,யில் தயாரிக்க ஒப்பந்தம் : உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அமேதியில், ரஷ்யாவுடன் இணைந்து, ஏ.கே., 203 நவீன ரக துப்பாக்கிகள் தயாரிக்க, ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.
 • இந்தியாவின் முதலாவது பெண் விமானப் பொறியாளராக பஞ்சாபைச் சேர்ந்த இளம்பெண் ஹினா ஜெய்ஸ்வால்  நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
 • புல்வாமா தீவிரவாத தாக்குதல் : 14 பிப்ரவரி 2019 அன்று காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் (சிஆர்பிஎஃப்) சென்ற வாகனத்தின் மீது, வெடிபொருட்கள் நிரப்பிய வாகனத்தை மோத செய்து பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இதில் 45 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.   இவர்களில் தமிழகத்தின் அரியலூர் மாவட்டம் கார்குடியை சேர்ந்த சிவச்சந்திரன் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் சவலப்பேரியை சேர்ந்த சுப்ரமணியம் ஆகியோரும் அடங்குவர். கடந்த 2016 ஆம் ஆண்டு உரியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பின்னர் நடத்தப்பட்ட மோசமான பயங்கரவாத தாக்குதல் இதுவாகும்.
  • புல்வாமா தாக்குதல் எதிரொலியாக, இதுவரை பாகிஸ்தானுக்கு வழங்கி வந்த இணக்கமான நாடு என்ற சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்துள்ளது.இது வணிக ரீதியாக ஒரு நாட்டுக்கு மற்றொரு நாடு வழங்கும் அந்தஸ்தாகும். 1996ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு இந்தியா இந்த அந்தஸ்தை வழங்கியிருந்தது.
 • 'முக்கிய மந்திரி விரிதா பென்சன் யோஜனா (Mukhya Mantri Vriddha Pension Yojana (MMVPY)) என்ற பெயரில் மாநிலத்திலுள்ள 60 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் (அரசு பென்சன் பெறுபவர்களைத்தவிர) ரூ.400 பென்சன் வழங்கும் திட்டத்தை பீகார் மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டம் வரும் 1 ஏப்ரல் 2019 முதல் அமலுக்கு வரவுள்ளது.
 • குஜ்ஜார் இன மக்களுக்கு, 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா, ராஜஸ்தான் சட்டசபையில் 13-2-2019 அன்று நிறைவேறியது.
 • கிரேடாய் இளைஞர் மாநாடு 2019 (CREDAI YouthCon-2019) 13 பிப்ரவரி 2019 அன்று புது தில்லியில் நடைபெற்றது.
கூ.தக. :  CREDAI என்பதன் விரிவாக்கம் Confederation of Real Estate Developers Association of India (இந்திய ரியல் எஸ்டேட்  நிறுவனங்களின் கூட்டமைப்பு) என்பதாகும்.
 • இ-ஆயுஷாதி போர்டல் (e-AUSHADHI portal) : ஆயுர்வேதா, சித்தா, யுனானி மற்றும் ஹோமியோபதி மருந்துகளுக்கு ஆன்லை வழியாக  உரிமை (லைசன்ஸ்) வழங்குவதற்கான ”e-AUSHADHI” எனும் இணையதள சேவையை  மத்திய ’ஆயுஷ்’ அமைச்சகம் தொடங்கியுள்ளது.
 • டோப்ச்சி இராணுவ ஒத்திகை (Exercise Topchi) என்ற  பெயரில் இந்திய இராணுவத்தின் பீரங்கிகள், விமான மற்றும் கண்காணிப்பு  பிரிவுகளுக்கான இராணுவ பயிற்சி  நாசிக் அருகேயுள்ள டியோலாலி முகாமில் 13-2-2019 அன்று நடைபெற்றது.
 • இந்தியாவின் முதல் ‘நீர் உணவு பூங்கா ( Aqua Mega Food Park) எனும் பெருமையை ஆந்திரப்பிரதேச மாநிலத்திலுள்ள கோதாவரி மெகா நீர் உணவுப் பூங்கா (Godavari Mega Aqua Food Park) பெற்றுள்ளது.
 • நிதி அயோக் பற்றி :
  • NITI Aayog விரிவாக்கம் - National Institution for Transforming India
  • 1 ஜனவரி 2015 அன்று மத்திய அமைச்சரவையின் தீர்மானத்தின் மூலம் உருவாக்கப்பட்டது
  • 150 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட திட்டக் குழுவுக்கு மாற்றாக ஏற்படுத்தப்பட்டது
  • ’நிதி அயோக்’ -ன் தற்போதைய பதவிகளில் இடம்பெற்றுள்ளோர்,
   • தலைவர் - பிரதமர் நரேந்திர மோடி உள்ளார்
   • துணைத்தலைவர் - ராஜீவ் குமார்
   • முழுநேர உறுப்பினர்கள் - ரமேஸ் சந்த், வி.கே.சரஸ்வத், விவேக் தேப்ராய், வி.கே.பால்
   • முதன்மைத் தலைமை அதிகாரி - அமிதாப் காந்த்

உலகம்

 • மாசிடோனியா (Macedonia) நாடு தனது பெயரை வடக்கு மாசிடோனியா (North Macedonia) என்று மாற்றியுள்ளது.

வெளிநாட்டு உறவுகள்

 • இந்திய சுற்றுலா அமைச்சகத்திற்கும், சவுதி அரேபிய அரசாட்சியின் சுற்றுலா மற்றும் தேசிய பாரம்பரிய சவுதி ஆணையத்திற்கும் இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தந்தத்திற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை 13-2-2019 அன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.
 • இந்தியாவிற்கும் மொராக்கோவிற்கும் இடையே பயங்கரவாதத்திற்கு எதிரான கூட்டு செயல்பாட்டுக்குழு அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை 13-2-2019 அன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.
 • இந்தியா மற்றும் சவுதி அரேபியா இடையிலான இந்தியாவில் முதலீட்டுக் கட்டமைப்பை உருவாக்குவதற்கான ஒரு செயல்முறையை நிறுவுவதற்கு வழிவகுக்கும்,  புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் மோடி தலைமையிலான  மத்திய அமைச்சரவை 13-2-2019 அன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.  நமது நாட்டின் உள்கட்டமைப்பிற்கு தேவையான முதலீட்டை ஈர்க்கும் நோக்கத்துடன் சவுதி அரேபிய நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதற்கு இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும்.  நமது நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு உத்வேகம் அளிப்பதற்கும், அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும், துணை தொழில் துறைகளின் வளர்ச்சிக்கும், இவற்றின் வாயிலாக ஒட்டுமொத்த பொருளாதார வளம் மற்றும் ஜிடிபி வளர்ச்சிக்கு  இந்த ஒப்பந்தம் உதவும்.
 • இந்தியா, அர்ஜென்டினா இடையேயான சுற்றுலாத் துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை 13-2-2019 அன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.
 • இந்தியாவிற்கும் ஃபின்லாந்திற்கும் இடையே விண்வெளியின் அமைதியான பயன்பாட்டிற்கான ஒத்துழைப்பிற்கு  வழிவகை செய்யும் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு  பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை  13-2-2019 அன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. 
  • இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், புவி மண்டலத்தின் தொலையுணர்தல், செயற்கைக்கோள் தகவல் தொடர்பு மற்றும் செயற்கைக்கோள் அடிப்படையிலான ஊடுருவல், விண்வெளி அறிவியல் மற்றும் கோள்களின் ஆய்வு, விண்வெளி இலக்குகள் மற்றும் தரையில் செயல்படும் முறைகளின் வளர்ச்சி, பரிசோதனை மற்றும் இயக்கம், இந்திய செயற்கைக்கோள் செலுத்துவாகனங்களை ஃபின்லாந்து நாட்டின் விண்வெளி இலக்குகளில் செலுத்துவது, விண்வெளி தகவல் தொகுப்பின் பயன்பாடு, விண்வெளி தொழில்நுட்பத்தின் அடிப்படையிலும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தியும், புதிய செயலிகளையும், தீர்வுகளையும் வளர்ப்பது மற்றும் விண்வெளியின் நீடித்த பயன்பாட்டோடு வளர்ந்து வரும் புதிய விண்வெளி வாய்ப்புக்கள் மற்றும் தகவல் தொகுப்பு முறைகளுக்கான ஒத்துழைப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பிற்கான வாய்ப்பை ஏற்படுத்தும்.
 • மூன்றாவது, இந்திய - ஜெர்மனி சுற்றுசூழல் மன்றம் (Indo-German Environment Forum), ’தூய்மையான காற்று,  பசுமைப் பொருளாதாரம்’  ("Cleaner Air, Greener Economy:") எனும் மையக்கருத்தில் 13-2-2019 அன்று புது தில்லியில்  நடைபெற்றது.

பொருளாதாரம்

 • மத்திய பொதுத்துறை நிறுவனமான ’இந்திய தேசிய திரைப்பட மேம்பாட்டு கார்ப்பரேசன் (National Film Development Corporation of India (NFDC)) க்கு மினி ரத்னா அந்தஸ்தை மத்திய அரசு வழங்கியுள்ளது. 
கூ.தக. : இந்திய தேசிய திரைப்பட மேம்பாட்டு கார்ப்பரேசன் 1975 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இதுவரையில் 300க்கும் மேற்பட்ட இந்திய மொழி திரைப்படங்களுக்கு கடனுதவி வழங்கியுள்ளது.  மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட இந்நிறுவனத்தின்  தற்போதைய இயக்குநராக அனுபமா சோப்ரா உள்ளார்.

நியமனங்கள்

 • மத்திய நேரடி வரிகள் ஆணையத்தின் தலைவராக இருந்த சுஷீல் சந்திரா தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய தேர்தல் ஆணையத்தில் தற்போது சுனில் அரோரா, தலைமைத் தேர்தல் ஆணையராக உள்ளார். ஏற்கெனவே தேர்தல் ஆணையராக உள்ள அசோக் லாவாஸாவுடன் தற்போது நியமிக்கப்பட்டுள்ள சுஷீல் சந்திரா- என இரண்டு தேர்தல் ஆணையர்கள் உள்ளனர்.
 • ஏர் இந்தியா (Air India) நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநராக அஸ்வானி லோகானி (Ashwani Lohani) நியமிக்கப்பட்டுள்ளார்.
 • இந்திய கணக்குத் தணிக்கையாளர்கள் நிறுவன (ஐசிஏஐ) புதிய தலைவராக கணக்குத் தணிக்கையாளர் பி.பிரஃபுல்லா சாஜத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

முக்கிய தினங்கள்

 • உலக வானொலி தினம்’ (World Radio Day) - பிப்ரவரி 13  | மையக்கருத்து(2019) - பேச்சுவார்த்தை, அகிம்சை, அமைதி  (Dialogue, Tolerance and Peace)
 • சர்வதேச டார்வின் தினம் (nternational Darwin Day) - பிப்ரவரி 12 (அறிவியலறிஞர் சார்லஸ் டார்வின் அவர்களின் பிறந்த தினம் 12 பிப்ரவரி 1809)

விருதுகள்

 • பிரதமர் மோடிக்கு சியோல் அமைதி விருது : தேசிய மற்றும் சர்வதேச அளவில் வளர்ச்சிக்கு சிறந்த பங்களித்ததற்காக பிரதமர் மோடிக்கு, சியோல் அமைதி விருது வழங்கப்படும் என கடந்த ஆண்டு அக்டோபரில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தென் கொரியாவில் வரும் 22ம் தேதி பிரதமர் மோடிக்கு, சியோல் அமைதி விருது வழங்கப்படுகிறது.

விளையாட்டுக்கள்  

 • 2022 ஆம் ஆண்டின் தேசிய விளையாட்டுப் போட்டிகள் (National Games) மேகாலயாவில் நடைபெறவுள்ளன. இந்த போட்டியின் இலச்சினையாக ‘ஸ்மைலிங் கிளவுடட் சிறுத்தை’ (Smiling Clouded Leopard) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

புத்தகங்கள் / ஆசிரியர்கள்

 • பருவநிலை மாற்றத் தீர்வுகளில் முன்னோடியாக இந்தியா (’India – Spearheading Climate Solutions’) என்ற புத்தகத்தை மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் 13-2-2019 அன்று வெளியிட்டுள்ளது. இந்த புத்தகத்தில், பருவநிலை மாற்றத்தைக் கட்டுபடுத்த இந்தியா எடுத்து வரும் பல்வேறு முயற்சிகள் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
 • Undaunted: Saving the Idea of India” எனும் புத்தகத்தின் ஆசிரியர் - ப. சிதம்பரம்

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.