-->
TNPSC Portal - Thervu Vazhikatti Current Affairs Magazine

TNPSC Current Affairs 19 February 2019

தமிழ்நாடு
 • தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவி - கண்ணகி பாக்கியநாதன் ஐ.ஏ.எஸ்
  • கூ.தக. :மகளிருக்கான பிரச்சனை குறித்து புகாரளிப்பதற்கான இலவச தொலைபேசி எண் -  181

இந்தியா

 • மத்திய அரசுக்கு இடைக்கால ஈவுத்தொகையாக ரூ.28,000 கோடி வழங்கப்படும் என்று ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையானது, நிதிப்பற்றாக்குறையை கட்டுப்படுத்தும் மத்திய அரசின் முயற்சிக்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதார தணிக்கை மற்றும் மூலதன கட்டமைப்பு நடைமுறைகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • ரிசர்வ் வங்கி சட்டம்-1934இன் 47-ஆவது பிரிவின்படி, உபரித் தொகையை மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி வழங்குகிறது. கடந்த 2017-18 (ஜூலை-ஜூன்) நிதியாண்டில் ஈவுத்தொகையாக மத்திய அரசுக்கு ரூ.30,663 கோடியை ரிசர்வ் வங்கி வழங்கியிருந்தது. தற்போது தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக உபரித் தொகையை மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி வழங்கவுள்ளது.
  • மத்திய இடைக்கால பட்ஜெட் 2019-20ஆம் நிதியாண்டில் நிதிப்பற்றாக்குறை 3.4 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
  • மேலும் வங்கிகள் இணைப்பு : கடந்த 2017-ஆம் ஆண்டில் பாரத ஸ்டேட் வங்கியுடன், 5 துணை வங்கிகளும், பாரத மகிளா வங்கியும் இணைக்கப்பட்டன. இதன் மூலம் கிடைத்த நல்ல பலன்களால், அடுத்த இணைப்புக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, பரோடா வங்கியுடன் தேனா, விஜயா வங்கிகளை இணைக்க மத்திய அமைச்சரவை ஜனவரி 2019 மாதம் ஒப்புதல் வழங்கியது.  மேற்கண்ட மூன்று வங்கிகளின் இணைப்பு வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது. இதன் மூலம் பொதுத் துறை வங்கிகளின் எண்ணிக்கை 18-ஆக குறையும்.
 • இந்தியா மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் மாநாடு 2019’ (India Pharma 2019 & India Medical Device 2019) பெங்களூருவில் 18-19 பிப்ரவரி 2019 தினங்களில் நடைபெறுகிறது.
 • ஒரே சுகாதார இந்தியா மாநாடு 2019’ (One Health India Conference, 2019) 18-19 பிப்ரவரி 2019 தினங்களில் புது தில்லியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டை   இந்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் பயோ டெக்னாலஜி துறை மற்றும் வேளாண் அமைச்சகம், சுகாதார அமைச்சகம் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.
 • தொழிலாளர்களின் பணியிட பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான ’சர்வதேச பூஜ்ஜிய நோக்கு மாநாடு (International Vision Zero Conference)   18-20 பிப்ரவரி 2019 தினங்களில் மும்பையில் நடைபெறுகிறது.  இந்தியாவின்   தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகம், ஐ.ஐ.டி, மும்பை மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த சமூக விபத்து காப்பீடு அமைப்பு (German Social Accident Insurance (DGUV)) ஆகியவை இணைந்து இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளன.
 • நான்காவது, ‘விவசாய தலைமைத்துவ கூடுகை 2019’ ( Agri leadership Summit 2019 ) ஹரியானாவின் சோனிபாட் மாவட்டத்திலுள்ள கானவுர் (Ganaur) நகரில் 15-17 பிப்ரவரி 2019 தினங்களில் நடைபெற்றது.  மத்திய வேளாண் அமைச்சர் ராதா மோகன்சிங் அவர்கள் இம்மாநாட்டை தொடங்கி வைத்துள்ளார்.
 • இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடுவதற்கான குறைந்த பட்ச கல்வித்தகுதியை நீக்குவதற்கான மசோதா அம்மாநில சட்டமன்றத்தில் நிறைவேறியுள்ளது. இதற்கு முன்னால் இருந்த நடைமுறையின் படி, பஞ்சாயத்துத் தேர்தல்களில் போட்டியிட 8 ஆம் வகுப்பும், நகராட்சி மற்றும் மாநகராட்சி தேர்தல்களில் போட்டியிட 10 ஆம் வகுப்பும் கல்வித்தகுதிகளாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
 • தெலுங்கானா மாநிலத்தில் புதிதாக இரண்டு மாவட்டங்களாக ‘முலுகு (Mulugu) மற்றும் ‘நாராயண்பேட் (Narayanpet) ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அம்மாநிலத்தின் மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.
 • 3 வது, சர்வதேச பாலைவனத் திருவிழா (International Annual Desert Festival) இராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் தொடங்கியது.

உலகம்

 • சவுதி அரேபியாவில் சிறையில் இருக்கும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்ய சவுதி அரேபியா இளவரசர் உத்தரவிட்டுள்ளார்.
 • அமெரிக்கா - மெக்சிகோ நாடுகளின் எல்லையில் எல்லைச்சுவர் கட்டுவதற்காக தேசிய அவசரநிலைப் பிரகடனத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.

விருதுகள்

 • கலாச்சார ஒருமைப்பாட்டுக்கான இரவீந்தர்நாத் தாகூர் விருது (Rabindranath Tagore Award for Cultural Harmony)  2014,2015,2016 : குஜராத்தில் அமைந்துள்ள சர்தார் படேல் சிலையை வடிவமைத்த ராம் சுடர் வாஞ்சி (Ram Sutar Vanji) க்கு  கலாசார ஒருமைப்பாட்டுக்கான  தாகூர் விருது 2016 வழங்கப்பட்டுள்ளது.  மணிப்பூரைச் சேர்ந்த நாட்டிய கலைஞர் ராஜ்குமார் சிங்கஜித் சிங்குக்கு ( Rajkumar Singhajit Singh)  2014ம் ஆண்டுக்கும்; 'சயானத்' (Chhayanaut) என்ற வங்கதேச கலாசார அமைப்புக்கு 2015ம் ஆண்டுக்கும்  தாகூர் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
 • கேரளாவில் அமைந்துள்ள அகஸ்தியர்கூடம் சிகரத்தை ஏறியுள்ள முதல் பெண் எனும் பெருமையை தன்யா சனல் K (Dhanya Sanal K) பெற்றுள்ளார்.

விளையாட்டுக்கள்  

 • தேசிய சீனியர் மகளிர் ஹாக்கி சாம்பியன் போட்டியில் மத்திய பிரதேச அணியை வீழ்த்தி ரயில்வே விளையாட்டு மேம்பாட்டு வாரிய அணி தனது பட்டத்தை தக்க வைத்துக் கொண்டது.

அறிவியல் & தொழில்நுட்பம்

 • AntBot’ என்ற பெயரில் ஜி.பி.எஸ். உதவியில்லாமல் நடமாடும் உலகின் முதல் ரோபாட்டை பிரஞ்சு நாட்டைச் சேர்ந்த Centre for Scientific Research (CNRS) அமைப்பின் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.


கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.