நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC Current Affairs 21 February 2019

நடப்பு நிகழ்வுகள் 21 பிப்ரவரி 2019 

தமிழ்நாடு

  • பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு ஆங்கில மொழி பயிற்சி வழங்குவதற்காக பிரிட்டிஷ் கவுன்சிலுடன் தமிழக அரசு 19-2-2019 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
  • விளையாட்டு வீரர்களுக்கு அரசுப் பணிகளில் 3 சதவீத இடம் வழங்குவதற்கான தமிழ அரசின் உத்தரவு 20-2-2019 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, விளையாட்டு வீரர்களுக்கு அரசுப் பணிகளில் 3 சதவீத இடஒதுக்கீடு அளிப்பது நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
    • முதல் பிரிவாக, ஒலிம்பிக்,  பாரா ஒலிம்பிக்,  காமன்வெல்த்,  ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வெல்வோருக்கு அரசு பொதுத்துறைகளில் பணியிடம் அளிக்கப்படும். இதன் தர ஊதியம் ரூ.5,400 மற்றும் அதற்கு அதிகமாக இருக்கும்.
    • இரண்டாவது பிரிவாக காமன்வெல்த், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளி,  வெண்கலம் வெல்லும் வீரர்களுக்கும், பங்கேற்கும் வீரர்களுக்கும் தர ஊதியம் ரூ.4,400 மற்றும் அதற்கு மேலும் ரூ.5,400-க்குள்ளாக இருக்கும்படி பொதுத்துறைகளில் பணியிடம் அளிக்கப்படும்.
    • மூன்றாவது பிரிவாக ஆசிய, காமன்வெல்த்,  தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்போருக்கும்,  தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வெல்வோருக்கும் தர ஊதியம் ரூ.2,400 மற்றும் அதற்கு மிகுந்த அளவிலும்,  அதேசமயம் ரூ.4,400-க்கும் கீழாகவும் இருக்கும்படி பொதுத் துறை நிறுவனங்கள், அரசுத் துறைகளில் பணியிடம் அளிக்கப்படும்.
    • நான்காவது பிரிவாக, மாநில அளவிலான போட்டிகளில் பதக்கம் வெல்வோருக்கு பணியிடங்கள் அளிக்கப்படும். இது ரூ.2,400 தர ஊதியத்துக்குக் குறைவானதாக இருக்கும்.
    • வயது வரம்பு / தகுதி : 3 சதவீத இடஒதுக்கீட்டு சலுகையைப் பெற விளையாட்டு வீரர்கள் கடந்த ஜனவரி 1-ஆம் தேதிக்கு பின்பாக விளையாட்டுத் துறையில் சாதனைகளை நிகழ்த்தி இருக்க வேண்டும். பதவியிடத்துக்கான அனைத்து கல்வித் தகுதிகளையும் பூர்த்தி செய்திருப்பதுடன், அதிகபட்ச வயது 40-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. (நன்றி : தினமணி)

இந்தியா

  • 14வது, ‘வேளாண் அறிவியல் மாநாடு’ (Agricultural Science Congress) 20-23 பிப்ரவரி 2019 தினங்களில் , ‘வேளாண் துறையில் மாற்றத்திற்கான கண்டுபிடிப்புகள்’ (Innovations for Agricultural Transformation) எனும் மையக்கருத்தில் , புது தில்லியில் நடைபெறுகிறது.
  • ”நியாய பந்து” (‘Nyaya Bandhu’) என்ற பெயரில் சட்ட சேவைக்கான மொபைல் செயலியை  மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் 19-2-2019 அன்று வெளியிட்டுள்ளார். 
  • ’ஆட்டுக்கால் பொங்கால திருவிழா’ (Attukal Pongala festival) எனும் உலகிலேயே அதிக அளவு பெண்கள் ஒரே நாளில் கூடும் மத நிகழ்வு 20-21 பிப்ரவரி 2018 தினங்களில் திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது.
  • ’காலியா சாத்ரா புரூடி” (‘KALIA Chhatra Bruti’) எனும் பெயரில் விவசாயிகளின் குழந்தைகளுக்கான உயர் கல்வி உதவித்தொகை திட்டத்தை ஒடிஷா அரசு அறிவித்துள்ளது.
  • 8வது, ‘உலக நிறுவன - சமூக பொறுப்புணர்வு மாநாடு’ (World Corporate Social Responsibility Congress (World CSR Congress 2019)) 17-18 பிப்ரவரி 2019 தினங்களில் மும்பையில் ’நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகள்’ (Sustainable Development Goals(SDGs)) எனும் கருத்துருவை மையமாகக் கொண்டு  நடைபெற்றது.
  • ’ஆபரேஷன் டிஜிட்டல் போர்டு’ (Operation Digital Board) திட்டத்தை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம், நாடு முழுவதுமுள்ள 9 இலட்சம் பள்ளி மற்றும் கல்லூரி  வகுப்பறைகளில் (7 லட்சம்  9,10,11 மற்ற்றும் 12 ஆம் வகுப்புகள் மற்றும் 2 லட்சம் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக வகுப்பறைகளில்) டிஜிட்டல் தொழில்நுட்ப கட்டமைப்பை மேற்படுத்துவதும்,  பள்ளி மற்றும் கல்லூரி மானவர்களுக்கு டிஜிட்டல் கல்வியை வழங்குவதுமாகும்.
கூ.தக. : ’ஆபரேஷன் கரும்பலை’ (Operation Blackboard ) எனும்   திட்டமானது,  ராஜிவ் காந்தி பிரதமராக இருந்த போது, தேசிய கல்விக் கொள்கை 1986 (National Policy on Education)  -ன் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்திய அரசினால் 1987 ஆம் ஆண்டில் அமல்படுத்தப்பட்டது.  இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் நாடெங்கிலுமுள்ள அனைத்து ஆரம்ப பள்ளிகளிலும்  குறைந்த பட்ச கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதாக இருந்தது. குறிப்பாக, அனைத்து பள்ளிக்கூடங்களிலும் ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு தனித்தனி கழிவறைகள்,  குறைந்த பட்சம் இரண்டு வகுப்பறைகள், பெண் ஆசிரியர்களை நியமித்தல் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டன.
  • SWAYATT - Start-ups, Women and Youth Advantage Through eTransactions on Government e-Marketplace (GeM) எனும் புதிய திட்டத்தை மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்சாலைகள் துறை அமைச்சர் சுரேஸ்  பிரபு 19-2-2019 அன்று  புது தில்லியில் தொடங்கி வைத்தார்.  இத்திட்டத்தின் நோக்கம்  புதிதாக தொழில் துவங்குவோர், இளைஞர்கள் மற்றும் பெண்களிடையே அரசு  மின் -சந்தை (e-Marketplace (GeM)) யின் பயன்பாட்டை ஊக்குவிப்பதாகும். 
  • காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணையை, ஜம்மு-காஷ்மீர் போலீஸாரிடமிருந்து தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) ஏற்றுக் கொண்டுள்ளது.
  • நாட்டிலேயே முதல் முறையாக கேரள போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்தில் பெண் ரோபோவின் பணியினை அம்மாநில பினராயி விஜயன் தொடங்கி வைத்துள்ளார். கே.பி.பாட்’ என்ற பெயரில் சப்-இன்ஸ்பெக்டர் ரேங்க் அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ள இந்த ரோபோவுக்கு முதல் கட்டமாக வரவேற்பாளர் பணி வழங்கப்பட்டு இருக்கிறது.  அதன்படி டி.ஜி.பி. அலுவலகத்துக்கு வரும் பார்வையாளர்களை வரவேற்று அடையாள அட்டை வழங்கவும், உயர் அதிகாரிகளுடன் அவர்களது சந்திப்புக்கான நேரத்தை ஒதுக்கவும், புகார்களின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யவும் பணி ஒதுக்கப்பட்டு உள்ளது. மேலும் டி.ஜி.பி. அலுவலகத்துக்குள் சமூக விரோதிகள் யாரும் நுழையாமல் தடுக்கும் வகையில், அவர்களை இனம் கண்டுகொள்வதற்காக அதனுள் விசேஷ கேமராவும் பொருத்தப்பட்டு உள்ளது. அத்துடன் உயர் அதிகாரிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு வணக்கம் செய்யவும் இந்த ரோபோவால் முடியும். பெண் உருவத்தில் இருக்கும் இந்த ரோபோவால் ஆங்கிலம் மற்றும் மலையாளத்தில் பேசவும் முடியும். மனித உருவில் தயாரிக்கப்பட்டு உள்ள இத்தகைய ரோபோ இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.

உலகம்

  • சீனாவின் முன்னாள் அதிபர் மா சே துங்கின் செயலாளர் லி ருயி 16-2-2019 அன்று காலாமானார்.

வெளிநாட்டு உறவுகள்

  • புல்வாமாவில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை கண்டித்து நியூஸிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா நாடாளுமன்றங்களில் 20-2-2019 அன்று  ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  • இந்தியாவிற்கு இரண்டுநாள் அரசுமுறைப்பயணமாக சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் வருகையின் (19-20 பிப்ரவரி 2019)  முக்கியத்துவங்கள்
    • நடப்பாண்டு முதல் இந்தியாவில் இருந்து மேலும் 25,000 பேர் ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ள இந்தியாவிற்கு முதல்  அரசு முறைப்பயணமாக வந்துள்ள சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் ஒப்புதல் அளித்துள்ளார். இதன்மூலம் ஆண்டுக்கு 2 லட்சம் இஸ்லாமியர்கள் இனி ஹஜ் பயணம் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
    • இந்தியாவில் விவசாயம், உற்பத்தித்துறை, எரிசக்தி, பெட்ரோ கெமிக்கல், உள்கட்டமைப்பு உட்பட பல்வேறு துறைகளில் 3,12,000 கோடி ரூபாய் அளவுக்கு சவுதி அரேபியா முதலீடு செய்துள்ளதாக சல்மான் அறிவித்துள்ளார். மேலும் 7, 00,000 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்ய உள்ளதாகவும் சவுதி இளவரசர் அறிவித்துள்ளார். மேலும் சவுதி அரேபியாவில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள இந்தியாவைச் சேர்ந்த 850 கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் சவுதி அரேபிய இளவரசர் தெரிவித்தார்.
    • இருதரப்பு பேச்சுவார்த்தையில் பிரதமர் நரேந்திர மோடி, சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் முன்னிலையில் சவுதி அரேபியா பட்டத்து இளவரசரின் இந்திய வருகையின்போது கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம்/ ஒப்பந்தங்களின் விவரம் வருமாறு.
      • இந்தியா மற்றும் சவுதி அரேபியா இடையே தேசிய முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு நிதியில் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
      • இந்தியாவின் சுற்றுலா அமைச்சகம் மற்றும் சவுதி அரேபியாவின் சுற்றுலா மற்றும் தேசிய பாரம்பரிய சவுதி ஆணையத்தின் இடையே சுற்றுலாத் துறையில் ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்
      • இந்தியா மற்றும் சவுதி அரேபியா அரசின் இடையே வீட்டுவசதித் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
      • இருநாடுகளுக்கு இடையேயான முதலீட்டு உறவுகளை மேம்படுத்தும் வகையில் இந்திய அரசின் முதலீடு செய் இந்தியா திட்டம் மற்றும் சவுதி அரேபியாவின் முதலீட்டு ஆணையம் செயல்திட்டம்
      • ஒலிபரப்புத் துறையில் ஒத்துழைப்பை ஏற்படுத்தும் வகையில், இந்தியாவின் பிரசார் பாரதி மற்றும் சவுதியின் ஒலிபரப்புக்கழகம், ஒலி-ஒளி நிகழ்ச்சிகளை பரிமாறிக் கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
      • சர்வதேச சூரிய எரிசக்தி கூட்டணியின் செயல்திட்ட ஒப்புதலுக்கும் சவுதி தரப்பில் கையெழுத்திடப்பட்டுள்ளது.

விளையாட்டுக்கள்  

  • சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனத்தின் (ஏஐபிஏ) விளையாட்டு மேம்பாட்டு மைய தலைவராக பிஎப்ஐ தலைவர் அஜய் சிங் தேர்வு செய்யப்பட்டார்
Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!