நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC Current Affairs 5,6 February 2019

நடப்பு நிகழ்வுகள் 5,6 பிப்ரவரி 2019 

தமிழ்நாடு

  • ‘ தமிழ்நாடு கிராம வங்கி (Tamil Nadu Grama Bank) உருவாக்கம் :  ’பல்லவன் கிராம வங்கி’ மற்றும் ‘பாண்டியன் கிராம வங்கிகளை’ இணைத்து ‘ தமிழ்நாடு கிராம வங்கி’ (Tamil Nadu Grama Bank) உருவாக்குவதற்கு மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.  இந்த இணைப்பானது வரும் 1 ஏப்ரல் 2019 முதல் அமலுக்கு வருகிறது.
    • பல்லவன் கிராம வங்கியானது இந்தியன் வங்கி (Indian Bank) யின் மூலமும், பாண்டியன் கிராம வங்கியானது ‘இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின்’ (Indian Overseas Bank) மூலமும்  நிதியுதவி வழங்கப்பட்டு வந்தன. தற்போது இரண்டு வங்கிகளையும் இணைத்து உருவாக்கப்பட்டுள்ள ‘ தமிழ்நாடு கிராம வங்கியானது’  இந்தியன் வங்கியின் மூலம் நிதியுதவி வழங்கப்படும். இதன்  தலைமையிடம் சேலத்தில் அமையும்.
  • சமூக முன்னேற்றத்திற்கு சிறப்பாக பணியாற்றிய கரூர் மாவட்டம், ராமேஸ்வரபட்டி கிராமத்தைச் சேர்ந்த கே.ஆர்.ரக்‌ஷனாவுக்கு தேசிய பெண் குழந்தை தினத்தை முன்னிட்டு ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையையும், பாராட்டு பத்திரத்தையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கியுள்ளார்.
    • கூ.தக. : குழந்தை பாலின விகிதத்தை மேம்படுத்தவும், பெண் குழந்தைகளின் எண்ணிக்கையை உயர்த்தவும் “பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” என்ற மத்திய அரசின் திட்டத்தை சிறந்த முறையில் செயல்படுத்தி திட்ட இலக்கை அடைந்ததற்காக, இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாடு தேர்ந்தெடுக்கப்பட்டது. இதற்காக, தேசிய பெண் குழந்தைகள் தினமான கடந்த ஜனவரி 24-ந் தேதியன்று டெல்லியில், மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை சார்பில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாட்டிற்கு தேசிய விருது வழங்கப்பட்டது.
  • மாவட்ட அளவில், திட்டம் சார்ந்த விழிப்புணர்வை பள்ளிக் குழந்தைகள், பொதுமக்கள், கல்லூரி மாணவ, மாணவிகளிடையே சென்றடையும் வகையில் சிறப்பான நடவடிக்கைகள் எடுத்ததற்காக, திருவண்ணாமலை மாவட்டத்திற்கு “மேம்பட்ட சமூகப் பங்கேற்பு என்ற பிரிவின் கீழ் தேசிய விருது அந்த விழாவில் வழங்கப்பட்டது.
  • தனக்கு நடக்க இருந்த குழந்தை திருமணத்தை துணிச்சலுடன் போராடி நிறுத்தியதற்காக, 2018-ம் ஆண்டு தமிழ்நாடு அரசின் மாநில விருது பெற்ற நந்தினி, டெல்லியில் நடைபெற்ற விழாவில், “பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்ட உள்ளூர் சாதனையாளராக அறிவிக்கப்பட்டார்.
  • கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வு நடத்த மத்திய அரசு அனுமதி : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி பள்ளிச்சந்தை புதுாரில் பண்டைய தமிழர் நாகரீகம் இருந்ததற்கான ஆதாரத்தை கண்டறிய 2015-ல் மத்திய தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடைபெற்றன. இதில் பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய மண் பானை ஓடுகள், ஆயுதங்கள், முதுமக்கள் தாழி உட்பட 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்தன.இதையடுத்து 2016-ல் இரண்டாம் கட்டமாகவும் 2017-ல் 3-ம் கட்டமாகவும் கீழடியில் அகழாய்வு பணி நடைபெற்றது. இதில் பளிங்கு கற்கள் உட்பட 1600-க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்தன.இதற்கிடையே 'கீழடியில் தொடர்ந்து அகழாய்வு மேற்கொள்ள வேண்டும்' என பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வுக்கு தமிழக அரசு கடந்த ஆண்டு நிதி ஒதுக்கியது.இந்நிலையில் கீழடியில் மீண்டும் அகழாய்வு நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
  • கி.வீரமணி சமூக நீதிக்கான விருது 2018 ( K.Veeramani Award for Social Justice)  பி.எஸ்.கிருஷ்ணன் (P.S. Krishnan) அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.  இவர், Social Exclusion and Justice in India, Empowering Dalits for Empowering India: A Road-map எனும் புத்தகத்தை எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.
  • கஜா புயல் பாதிப்பிற்குள்ளான பகுதிகளில், தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் 100 நாள்கள் வழங்கப்பட்டு வந்த பணி நாள்கள் 150 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • வன்னியர் பொது சொத்து நல வாரியத்தின் தலைவராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜி.சந்தானம் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • DIGICOP” மொபைல் செயலி : மொபைல் போன் திருட்டை தடுக்க உதவும் DIGICOP என்ற ஆப்பை சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் அறிமுகம் செய்து வைத்தார்.

இந்தியா

  • 'சேஷ்ரி சம்ரிதி உத்சவ் (Shehri Samridhi Utsav) என்ற பெயரில் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புக்களின் கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்வு  1-15 பிப்ரவரி 2019 தினங்களில் புது தில்லியில் நடைபெற்றது.  மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்புற வறுமை ஒழிப்பு அமைச்சகத்தின் மூலம்  நடத்தப்படும் இந்நிகழ்வின் முக்கிய நோக்கம் ‘தீனதயாள் அந்தியோதயா திட்டம் - தேசிய நகர்புற வாழ்வாதார திட்டத்தின் (Deendayal Antyodaya Mission – National Urban Livelihoods Mission (DAY-NULM)) பயன்பாட்டை  அதிகரிக்கச் செய்வதாகும்.
  • ISKCON ( International Society for Krishna Consciousness ) அமைப்பின் மூலம் ‘ உலக பாரம்பரிய மையம் ( World Heritage Centre ) மேற்கு வங்காள மாநிலத்தின் நாடியா மாவட்டத்திலுள்ள மாயாபூர் எனுமிடத்தில் ரூ. 3000 கோடி செலவில் அமைக்கப்படவுள்ளது.
  • நிதிநிலையறிக்கை உருவாக்குவதில் வெளிப்படையான நடைமுறைகளைக் கையாளும் சிறந்த மாநிலங்களின் பட்டியலில் அஸ்ஸாம் மாநிலம் முதலிடத்திலும் ஆந்திரப்பிரதேசம் மற்றும் ஒடிசா மாநிலங்கள் முறையே இரண்டாம் மற்றும் மூன்ற்றாம் இடங்களையும் பெற்றுள்ளன. இந்த பட்டியலை ஜெர்மனியின் பெர்லின் நகரைத் தலைமையிடமாகக் கொண்ட ‘டிரான்ஸ்பரன்சி இண்டர்நேசனல்’ (Transparency International) அமைப்பு வெளியிட்டுள்ளது.
  • 2015 - 2018 காலக்கட்டத்தில் அதிக வருமானம் ஈட்டிய நினைவு தலங்களில் முதல் பத்து இடங்களை முறையே தாஜ்மஹால், ஆக்ரா கோட்டை, குதுப்மினார், ரெட் ஃபோர்ட், ஹிமாயூன் கல்லறை, கோனார்க் சூரிய கோயில், மாமல்லபுரம், எல்லோரா குகைகள், கஜீராகோ, அஜந்தா குகைகள், அவரங்காபாத் ஆகியவை பெற்றுள்ளன.
  • மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் விலைகளை கண்காணிப்பதற்காக ‘விலை கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் (price monitoring and research unit) எனும் அமைப்பை நாட்டிலேயே முதல் மாநிலமாக , கேரள மாநிலம்   உருவாக்கியுள்ளது.  ‘தேசிய மருந்துபொருட்கள் விலை ஆணையத்தின் (National Pharmaceutical Pricing Authority (NPPA)) உதவியுடன் இந்த மையம் உருவாக்கப்பட்டுள்ளது.
  • ஆபரேசன் புன்னகை (Operation Smile) / Operation MUSKAAN :    காணாமல் போகும் குழந்தைகள், குழந்தைத் தொழிலாளர்கள் மற்றும் பிச்சையெடுத்தல் போன்ற செயல்களில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் குழந்தைகளை மீட்டு அவர்களுக்கு மறுவாழ்வு வழங்குவதற்காக மத்திய  உள்துறை அமைச்சகத்தினால் அமல்படுத்தப்பட்டு வரும் திட்டமாகும்.
  • தேசிய நூலக திட்டத்தின் ( National Mission on Libraries) படி, 'தேசிய மெய்நிகர் நூலகம் (National Virtual Library)    அமைப்பதற்கான பொறுப்பு  கடந்த 2016 ஆம் ஆண்டில்  ஐ.ஐ.டி மும்பை யிடம் வழங்கப்பட்டுள்ளது.  ஐ.ஐ.டி மும்பை ,  பூனேவிலுள்ள C-DAC (Centre for Development of Advanced Computing) மற்றும் தில்லியிலுள்ள IGNOU (Indira Gandhi National Open University)  ஆகியவற்றுடன் இணைந்து இந்த திட்டத்தை நிறைவேற்றவுள்ளது.
  • தேசிய கையெழுத்துப் பிரதிகள் திட்டம் (National Mission for Manuscripts) 2003 ஆம் ஆண்டில் மத்திய கலாச்சார அமைச்சகத்தினால் தொடங்கப்பட்டது.  இத்திட்டத்தின் முக்கிய நோக்கம்  நாடெங்கிலுமுள்ள பழமைவாய்ந்த மற்றும் அரிய கையெழுத்துப் பிரதிகளை டிஜிட்டல் வடிவில் மாற்றுவதாகும். இத்திட்டத்தின் கீழ் ஜனவரி 2019 வரையில் 43.16 லட்சம் கையெழுத்துப் பிரதிகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன.
  • ஷேகாத்கர் குழு (Shekatkar Committee) -   பாதுகாப்புத் துறையின் செலவினங்களை  ஆராய்வதற்காக பாதுகாப்பு அமைச்சகத்தினால் அமைக்கப்பட்டக் குழு.  ஓய்வுபெற்ற லெப்டினண்ட் ஜெனரல் DB ஷேகாத்கர் (DB Shekatkar) தலைமையில் அமைக்கப்பட்ட இக்குழுவானது தனது அறிக்கையை 2016 டிசம்பரில் சமர்ப்பித்தது.
  • NTA Students App” மொபைல் செயலி : மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள தேசிய தேர்வு முகமை (National Testing Agency) யின் மூலம் வெளியிடப்பட்டுள்ள இந்த மொபைல் செயலியானது  பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கான  மாதிரித் தேர்வுகளை உள்ளடக்கியதாகும்.
  • கங்கை பாதுகாப்பு படை (Ganga Protection Corps) :   தேசிய கங்கை நதி மசோதா, 2018 (Draft National River Ganga Bill, 2018),  நாட்டிலுள்ள  இராணுவத்தைப் போன்ற,  ’கங்கை பாதுகாப்பு படை’ (Ganga Protection Corps) எனும் புதிய படையை  உருவாக்குவதற்கு வழிவகை செய்கிறது.  இந்த படைக்கு,  கங்கை நதியின் தூய்மைக்கு பங்கம் விளைவிக்கும் எவரையும் கைது செய்து சமீபத்திலுள்ள காவல்துறையில் ஒப்படைப்பதற்கு அதிகாரம் வழங்கப்படும். 

உலகம்

  • எல் சாவ்டார் (El Salvador) நாட்டின் அதிபராக நாயிப் புகெலே (Nayib Bukele) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

வெளிநாட்டு உறவுகள்

  • நேபாள நாட்டின் இந்திய தூதராக அந்நாட்டின் முன்னாள் சட்ட அமைச்சர் நீலாம்பர் ஆச்சார்யா (Nilambar Acharya) நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ஐரோப்பிய நாடான மொனாகோவின் அரசர் ஆல்பர்ட் இந்தியாவுக்கு ஒரு வார அரசுமுறைப் பயணமாக கடந்த 3-2-2019 அன்று வருகை தந்துள்ளார்.
  • மத்திய நிலக்கரி அமைச்சகம் மற்றும் போலந்து நாட்டின் ஆற்றல் அமைச்சகமும்   ,  நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் தூய நிலக்கரி தொழில்நுட்பங்களில் ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை 4-2-19 அன்று செய்துள்ளனர்.
  • உலக வர்த்தக அமைப்பில் அமெரிக்கா மீது இந்தியா வழக்கு :  இந்தியாவின்  எஃகு தயாரிப்புகளின் மீது கூடுதலாக 25% சுங்கவரியும்,  அலுமினிய தயாரிப்புகளின் மீது கூடுதலாக 10% சுங்கவரியும்  விதித்துள்ள அமெரிக்காவின் நடவடிகை  உலக வர்த்தக அமைப்பின் (World Trade Organization) விதிகளுக்கு எதிரானது என இந்தியா  அமெரிக்காவின் மீது  உல்க வர்த்தக அமைப்பின்  தீர்ப்பாயத்தில் (WTO Dispute Settlement Body (DSB)) வழக்கு தொடுத்துள்ளது.

முக்கிய தினங்கள்

  • உலக கேன்சர் நோய் தினம் (World Cancer Day) - பிப்ரவரி 4 | மையக்கருத்து (2019) - நான் இருக்கிறேன், நான் இருப்பேன் (I Am and I Will)  
  • தேசிய சாலை பாதுகாப்பு வாரம் 2019 ( National Road Safety Week) , 4-10 பிப்ரவரி 2019 தினங்களில் ’சாலை பாதுகாப்பு - உயிர் பாதுகாப்பு’ (Road Safety – Protection to Life) எனும் மையக்கருத்தில் நடைபெற்றது.

விளையாட்டுக்கள்  

  • சீட்டில் ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் (Seattle Open title) இந்தியாவின் ராமித் தாண்டன் (Ramit Tandon) எகிப்தின் மொகமது எல் செர்பினியை வீழ்த்தி பட்டம் வென்றுள்ளார்.

அறிவியல் & தொழில்நுட்பம்

  • ஜி சாட் -31 செயற்கைகோள் :  இஸ்ரோ உருவாக்கிய  40-வது தகவல் தொடர்பு செயற்கைகோளான   ஜி சாட் -31 செயற்கைகோள் 6-2-2019 அன்று பிரெஞ்ச் கயானாவில் உள்ள கொரூவ்வில் இருந்து கனரக ஐரோப்பிய ராக்கெட்டான ‘ஏரியன்-5’ மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு நிலைநிறுத்தப்பட்டது. ‘ஜிசாட்-31’ செயற்கைகோள் 2 ஆயிரத்து 535 கிலோ எடை கொண்டதாகும். இதன் ஆயுள் காலம் 15 ஆண்டுகள் ஆகும். இது ‘இஸ்ரோ’வின் ‘1-2கே பஸ்’ வகையின் மேம்படுத்தப்பட்ட செயற்கை கோள். இதன்மூலம் இந்தியாவின் மையப்பகுதியும், தீவுப்பகுதியும் பலன் அடையும். ‘ஜிசாட்-31’ செயற்கை கோள், விசாட் நெட்வொர்க், டெலிவிஷன் இணைப்பு, டிஜிட்டல் செயற்கைகோள் செய்தி சேகரிப்பு, டி.டி.எச். டெலிவிஷன் சேவை, செல்போன் சேவை ஆகியவற்றுக்கும் பயன்படும்.
Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!