நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC Current Affairs 02 January 2020

Current Affairs  for TNPSC Exams 02 January 2019

தமிழ்நாடு

  • நிதி அயோக் நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகள் - இந்தியா பட்டியல் 2.0 (Sustainable Development Goals - India 2.0)  ல் முதலாவது இலக்கான ‘ வறுமை இல்லை (NO POVERTY) பட்டியலில் இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடத்தைப் பெற்றுள்ளது. 2,3,4 மற்றும் 5 வது இடங்களை முறையே திரிபுரா, ஆந்திரப்பிரதேசம், மேகாலயா மற்றும் மிஷோராம் மாநிலங்கள் பெற்றுள்ளன.
கூ.தக. : 
  • 2015 ஆம் ஆண்டின் கணிப்பின் படி, உலகளவில் 10%  மக்கள்   வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளனர்.
  • இந்திய அளவில், 2015 ஆம் ஆண்டில், உலக வங்கி சர்வதேச வறுமைக் கோட்டு அளவீடுகளின் படி, அதி தீவிர வறுமையிலுள்ளவர்கள் (Extreme  Poverty)  4% எனவும்,  2015-16 ஆண்டின் கணக்கெடுப்பின் படி,  பரிணாம  வறுமையிலுள்ளவர்கள்  ( Multidimensional Poverty)   27.5 % எனவும் உள்ளது.
  • ஸ்னேகா ” தொண்டு நிறுவனத்தின் நிறூவனர்  லக்‌ஷ்மி விஜயகுமாருக்கு   ஹம்ஷத்வானி ராமசந்திரன் விருது (Hamsadhwani R. Ramachandran Award of Excellence) வழங்கப்பட்டுள்ளது.
    • கூ.தக. : ஸ்னேகா தொண்டு நிறுவனமானது தற்கொலைகளை தடுப்பதற்கான சேவையில் ஈடுபட்டு வருகிறது.
  • திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்ட 20 ஆம் ஆண்டு நிறைவு விழா 1-1-2020 அன்று அனுசரிக்கப்பட்டது.  கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவா் சிலை  1.2000 இல் நிறுவப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தியா

  • 31 டிசம்பர் 2019 வரையில் மொத்தம்  28  ஆதார் சேவை மையங்கள் (Aadhaar Seva Kendras) இந்தியா முழுவதும் தொடங்கப்பட்டுள்ளதாக    இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India (UIDAI) ) தெரிவித்துள்ளது.
    • கூ.தக. : ஆதார் சட்டம் 2016 (Aadhaar (Targeted Delivery of Financial and Other Subsidies, Benefits and Services) Act, 2016 (“Aadhaar Act 2016”)) இன் படி  12 ஜீலை 2016 ல் இந்திய அரசினால் உருவாக்கப்பட்ட  இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (Unique Identification Authority of India (UIDAI) )    தற்போதைய தலைமை செயல் அதிகாரியாக   ஸ்ரீ பங்கஜ் குமார் (Shri Pankaj Kumar) அவர்கள் உள்ளார்.

வெளிநாட்டு உறவுகள்

  • இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே தத்தம் நாடுகளிலுள்ள அணு ஆற்றல் நிறுவல்கள் பற்றிய   தகவல்கள்   1 ஜனவரி 2019 அன்று பரிமாறிக்கொள்ளப் பட்டன.   31-12-1988 ல்    ராஜிவ் காந்தி  - பெனாசிர் பூட்டோ  ஒப்பந்தப் படி,  1992 ஆம் ஆண்டு முதல், ஆண்டுதோறும் இந்த தகவல்கள் பரிமாறப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.   

பொருளாதாரம்

  • 2026 ஆம் ஆண்டில் ஜெர்மனியைப் பின்னுக்குத் தள்ளி, இந்தியா உலகின் நான்காவது மிகப்பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும் எனவும்,  2034 ஆம் ஆண்டில், ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளி உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்திய உருவெடுக்கும் எனவும்  இங்கிலாந்தைச் சேர்ந்த   ‘பொருளாதார மற்றும் வர்த்தக ஆராய்ச்சி மையத்தின்’ (Centre for Economics and Business Research (CEBR)) ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
கூ.தக. :
  • இப்போது, இந்தியா 20.49 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடன் உலகின் ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதாரமாக உள்ளது.  முதல் நான்கு இடங்களில் அமெரிக்கா, சீனா , ஜப்பான் மற்றும் ஜெர்மனி நாடுகள் உள்ளன.
  • 2024 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் பொருளாதாரத்தை 5 டிரில்லியன் டாலராக  உயர்த்துவதற்கு பிரதமர் மோடி அவர்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நியமனங்கள்

  • இரயில்வே வாரியத்தின் (Railway Board) தலைவராக   வினோத் குமார் யாதவ் (Vinod Kumar Yadav) மறுபடியும் ஒராண்டிற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

அறிவியல் & தொழில்நுட்பம்

  • 2020 ஆம் ஆண்டில் இஸ்ரோ-வினால் செலுத்தப்படவிருக்கும் முதல் செயற்கைக் கோள், தகவல் ஒலிபரப்பிற்கான ஜிசாட்-30  (GSAT-30) என அறிவிக்கப்பட்டுள்ளது .


Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!