நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC Current Affairs 20 January 2020

TNPSC Current Affairs 20-01-2020

DOWNLOAD PDF

தமிழ்நாடு

  • ’தேசிய பசுமை தீர்ப்பாயத்தின், திடக்கழிவு மேலாண்மைக்கான  தமிழ்நாடு மாநில அளவிலான குழு’ (National Green Tribunal’s State­level monitoring committee for solid waste management in Tamil Nadu) வின் தலைவர் -  ஓய்வு பெற்ற நீதிபதி  ஜோதிமணி

இந்தியா

  • 33 வது சாலைப் பாதுகாப்பு வாரவிழா 20 -27 ஜனவரி 2020 தினங்களில் அனுசரிக்கப்படுகிறது.
கூ.தக. :
  • உச்ச நீதிமன்ற சாலைப் பாதுகாப்பு குழுவின் வழிகாட்டுதலின் படி , 2016 ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு 2020 ஆம் ஆண்டிற்குள் சாலை விபத்துகள் மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளை 50 % குறைத்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
  • தமிழகத்தில், 2016 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 25.60% என்ற அளவில் சாலை விபத்துகளும், 43.10% என்ற அளவில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளும் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
  • ”காதி உத்சவ் 2020” ( Khadi Utsav 2020 ) என்ற பெயரில் தேசிய அளவிலான காதி மற்றும் கிராம தொழில்கள் கட்காட்சி மற்றும் விற்பனைத் திருவிழா 16-1-2020 முதல் 14-2-2020 வரையில் பெங்களூருவில் நடைபெறுகிறது.
  • ஆந்திர பிரதேசத்தின் தலைநகர் அமராவதியில் இருந்து விசாகப்பட்டினத்துக்கு மாற்றுவதற்காக அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது.
  • கே-4 கடலுக்கடியிலிருந்து ஏவத்தக்க ஏவுகணை  (K-4 Nuclear capable Underwater missile) சோதனை வெற்றி :  நீர்மூழ்கி கப்பலில் இருந்து அணு ஆயுதங்களை எடுத்துச் சென்று எதிரி இலக்குகளைத் தாக்கும் கே-4 ஏவுகணை 19-1-2020 அன்று ஆந்திர மாநில கடற்பகுதியில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.   இந்த ஏவுகணை 3,500 கி.மீ. தொலைவு வரை உள்ள இலக்குகளைத் துல்லியமாக தாக்கி அழிக்கும். கே-4 ஏவுகணை இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரண்டாவது நீர்மூழ்கி ஏவுகணையாகும்.
    • கூ.தக. : 700 கி.மீ. தொலைவு வரையிலான இலக்குகளைத் தாக்கும் பிஓ-5 ஏவுகணை இந்தியாவின் முதல் நீர்மூழ்கி ஏவுகணை என்பது குறிப்பிடத்தக்கது.
  • ”ELECRAMA 2020” என்ற பெயரில் இந்திய மின்சாதன தொழிற்சாலை கண்காட்சி நொய்டாவில் 8-1-2020 அன்று நடைபெற்றது.  இதனை இந்திய மின்சாதன தயாரிப்பாளர்கள் சங்கம், இந்திய அரசின்   புதிப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் சிறு குறு நடுத்தர தொழிற்சாலைகள் அமைச்சகங்களுடன் இணைந்து நடத்தியது. 
  • இந்திய அரசின் காசநோய் தடுப்பு திட்டத்தின் பெயர், தேசிய காசநோய் கட்டுப்பாட்டு திட்டம் (National TB Control Programme) என்பதிலிருந்து  தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் (National Tuberculosis Elimination Programme) எனப்  17-1-2020 அன்று பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் தயாரிக்கப்பட்ட “TrueNat MTB” எனும் காச நோய்  சோதனை கருவிக்கு மிகவும் துல்லியமான கருவி என  உலக சுகாதார நிறுவனம்  அங்கீகாரம் வழங்கியுள்ளது.  இந்த கருவியை  கோவாவைச் சேர்ந்த  மோல்பியோ டயக்னாஸ்டிக்ஸ் (Molbio Diagnostics) எனும் நிறுவனம் தயாரித்துள்ளது.

வெளிநாட்டு உறவுகள்

  • இலங்கை பாதுகாப்புத் துறைக்கு இந்தியா ரூ.355 கோடி அளிக்கும் என்று இந்திய அரசு சார்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.  இலங்கை அதிபா் கோத்தபய ராஜபட்சவை தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல் கொழும்பில் 18-1-2020 அன்று சந்தித்து பேசியபோது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  

சர்வதேச நிகழ்வுகள்

  • இங்கிலாந்து இளவரசர் ஹாரி, மேகன் தம்பதியர் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் பதவியில் இருந்து விலகியதோடு, அவர்கள் அரச கடமைகளில் இருந்து விலகுகின்றனர். அரச பட்டங்களையும் துறக்கின்றனர் என்று பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
  • லிபியா அமைதி மாநாடு : லிபியாவில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசுப் படையினருக்கும், முன்னாள் ராணுவ தளபதி காலிஃபா ஹஃப்தாரின் படையினருக்கும் இடையே   உள்நாட்டுச் சண்டை நடைபெற்று வரும் லிபியாவில் அமைதியை ஏற்படுத்துவது தொடர்பான சர்வதேச மாநாட்டில் பங்கேற்பதற்காக, ஜெர்மனி தலைநகர் பெர்லினில் உலகத் தலைவர்கள் 19-1-2020 அன்று  கூடினர். 
    • ஐ.நா.வின் அழைப்பை ஏற்று இந்த மாநாடு நடைபெறுகிறது. ரஷிய அதிபர் விளாதிமீர் புதின், துருக்கி அதிபர் எர்டோகன், பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கெல் உள்ளிட்ட தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.
    • ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் பங்கேற்கும் இந்த மாநாட்டில், காலிஃபா ஹஃப்தார் படை, சர்வதேச அங்கீகாரம் பெற்ற பிரதமர் ஃபாயஸ் அல்-சராஜ் தலைமையிலான அரசு ஆகிய இரு தரப்பையும் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டு பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

பொருளாதாரம்

  • 2019 ஆம் ஆண்டில் உலக அளவில் வெளிநாடுகளிலிருந்து அதிக தங்கம் வாங்கும் நாடுகளின் பட்டியலில் இந்திய ரிசர்வ் வங்கி  6 வது இடத்தில் உள்ளதாக  உலக தங்க கவுண்சில் வெளியிட்டுள்ள  ‘World Gold Outlook 2020’ எனும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   இந்த பட்டியலில் முதல் ஐந்து இடங்களை முறையே,  சீனா, ரஷியா, கஷகஷ்தான், துருக்கி மற்றும் போலந்து நாடுகள் உள்ளன.
கூ.தக. :
  • இந்த அறிக்கையின் படி, தற்போது, இந்திய ரிசர்வ் வங்கியிடம் 2 டன் தங்கம் உள்ளதாக கூறப்படுகிறது. 
  • இந்திய ரிசர்வ் வங்கியிடமுள்ள தங்கமானது, இந்திய அன்னிய செலாவணியில், 6.6% ஆக மதிப்பிடப்பட்டுள்ளது.
  • 2019 ஆம் ஆண்டில் உலக அலவில் அதிக தங்கத்தை விற்ற நாடுகளாக உஷ்பெகிஸ்தான் மற்றும் வெனிசூலியா நாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

முக்கிய தினங்கள்

  • தேசிய தடுப்பூசி தினம் (National Immunization Day) , போலியோ சொட்டு மருந்து வழங்கும் தினமான  19 ஜனவரி 2020 அன்று அனுசரிக்கப்பட்டது.
    • கூ.தக. : உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தலின் படி, தேசிய தடுப்பூசி தினம் வருடத்திற்கு இரண்டு முறை அனுசரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
    • உலக தடுப்பூசி வாரம் - ஏப்ரல் கடைசி வாரம்

விளையாட்டு

  • ஒருநாள் ஆட்டங்களில் 5 ஆயிரம் ரன்களை விரைவாகக் கடந்த கேப்டன் என்ற உலக சாதனையை படைத்தாா் விராட் கோலி. அதிவேகமாக 5 ஆயிரம் ரன்களை கடந்த கேப்டன் என்ற சாதனையை தோனி (127 இன்னிங்ஸ்) நிகழ்த்தி இருந்தாா். அதை முறியடித்து, விராத் கோலி தற்போது வெறும் 82 இன்னிங்ஸ்களில் கடந்து புதிய உலக சாதனையை படைத்துள்ளார். 
  • ரோம் ரேங்கிங் மல்யுத்த சா்வதேச போட்டியில் இந்தியாவின் பஜ்ரங் புனியா, ரவிக்குமாா் தாஹியா ஆகியோா் தங்கப் பதக்கம் வென்றனா்.
  • ப்ரீமியா் பாட்மிண்டன் லீக் போட்டியின் மிக இளம் வயது வீரராக தமிழகத்தின் சங்கா் முத்துசாமி (15) சென்னை சூப்பா் ஸ்டாா்ஸ் அணிக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
TNPSC குரூப் 1, 2/2A 2020 (New Syllabus) Test Batch  
30 Tests | 200 Questions Per Tests | Tamil & English Mediums

ADMISSION GOING ON !!!

Download Test Batch Schedule 

முதல் தேர்வை இலவசமாக பயிற்சி செய்யுங்கள் !!!
(Your Registration No. and Password to attend Free Tests and PDF Files of the Exam will be send via Email)

For Queries 
Call : 8778799470  
Email : support@portalacademy.in 

Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!