நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC Current Affairs 18,19 January 2020

 Current Affairs for TNPSC Exams 18,19 January 2020

தமிழ்நாடு

  • 2019 ஆம் ஆண்டில், மாநில நீர் மேலாண்மை செயல்பாட்டில் தமிழகம் 13வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. கடந்த ஆண்டு (2018) , நீர் மேலாண்மை திட்டங்களில், தமிழகம் 33வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. மத்திய ஜலசக்தி அமைச்சகம், வெளியிட்டுள்ள 2019ம் ஆண்டிற்கான, மத்திய, மாநில நீர் மேலாண்மை துறைகளின் செயல்பாடு குறித்த ஆய்வறிக்கையில், குடிநீர் கொள்முதல், திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு, உடனடியாக தகவல்களை பதிவேற்றும் வசதி, தகவல்களை மின்னணுமயமாக்குதல், பகுப்பாய்வு பணி, பயிற்சி, நீராதார தகவல்களை விரைவாக மேம்படுத்துவது ஆகியவற்றில், குஜராத் மாநிலம் சிறப்பாக செயல்பட்டு, முதலிடத்தை பிடித்துள்ளது.
  • நார்வே சர்வதேச தமிழ் திரைப்பட விழா 2020 -ல்  சிறந்த படமாக, தனுஷ் நடித்த, அசுரன் தேர்வாகியுள்ளது. சிறந்த இயக்குனராக வெற்றிமாறனும், சிறந்த நடிகராக, கைதி படத்தில் நடித்த கார்த்தியும், சிறந்த நடிகையாக, மிக மிக அவசரம் படத்தில் நடித்த ப்ரியங்காவும் தேர்வாகி உள்ளனர். பேரன்பு படத்தை தயாரித்த, பி.எல்.தேனப்பன் சிறந்த தயாரிப்பாளர் விருது பெற்றுள்ளார். பேரன்பு படத்தில் நடித்த சாதனா, சிறந்த குழந்தை நட்சத்திர விருதை பெற்றார். 
  • எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்த நாள் விழா - 17 ஜனவரி 2020 ( பிறந்த தேதி : 17 January 1917) அன்று கொண்டாடப்பட்டது.

இந்தியா

  • 5வது, அறிவியல் திரைப்பட திருவிழா 2020 (Science Film festival 2020) 15-18 ஜனவரி 2020 தினங்களில் கோவாவின் பானாஜி நகரில் நடைபெற்றது.
  • இந்தியாவின் முதல் மாதிரி விளையாட்டு கிராமங்களாக  உத்தரப்பிரதேச மாநிலத்தின்  பகதூர்பூர் மற்றும் கேரி வேரன் (Bahadurpur and Kheri Viran) கிராமங்கள் உருவாக்கப்படவுள்ளன.  ‘ஆதர்ஷ் கேல் கிராம்’ (‘Adarsh Khel Gram’) எனும் திட்டத்தின் கீழ் இந்தியிய மேலாண்மை கல்வி நிறுவனம் , காஷியாபாத் மற்றும் ‘ Sports: A Way of Life’ எனும் அரசு சாரா நிறுவனம் இணைந்து இந்த திட்டத்தை அமலாக்கம் செய்யவுள்ளன.
  • சாப்ஷார் கட் (‘Chapchar Kut’) என்ற மிஷோராம் மாநிலத்தில் முக்கியமான பாரம்பரிய திருவிழா 6 மார்ச் 2020 அன்று நடைபெறவுள்ளது.
  • 1984 ஆம் ஆண்டின் சீக்கியர்களுக்கெதிரான வன்முறைகளைப் பற்றி ஆராய அமைக்கப்பட்ட ’நீதியரசர்  SN திங்ரா  (Justice  SN Dhingra)  தலைமையிலான  சிறப்பு புலனாய்வு குழுவின் (Special Investigation Team (SIT))  பரிந்துரைகளை 4-1-2020 அன்று மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.
  • ஷாக்சம் (‘Saksham’) என்ற பெயரில் எரி பொருள் சேமிப்பு பற்றிய நாடு முழுவதுமான விழிப்புணர்வு பிரச்சாரத்தை மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை வாயு அமைச்சரகம் 16-1-2020 அன்று தொடங்கியுள்ளது.
  • ப்ரூ - ரியாங் அகதிகள் ஒப்பந்தம் (Bru-Reang refugee agreement) 16 ஜனவரி 2016 அன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களது தலைமையில் மத்திய அரசு மற்றும்   திரிபுரா , மிஷோராம் ஆகிய மாநிலங்களுக்கிடையே செய்துகொள்ளப்பட்டது.  23 ஆண்டுகளாக நிலவிவரும் “ப்ரூ” மலைவாழ் அகதிகள் பிரச்சனைக்கு இந்த ஒப்பந்தம் முடிவுக்கொ கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் 34,000 ‘ப்ரூ’ மலைவாழின அகதிகள் திரிபுரா மாநிலத்தில், மத்திய அரசு உதவியுடன் ரூ.600 கோடி செலவில்  குடியேற்றப்படவுள்ளனர்.
    • கூ.தக. : ‘ப்ரூ’ மலைவாழின மக்கள் பேசும் மொழி - காடுயிக் (Katuic)

  • சிறகுகள் இந்தியா (“Wings India 2020”) என்ற பெயரிலான ஆசியாவின் மிகப்பெரிய  விமானப் போக்குவரத்து கண்காட்சி நிகழ்வு  12-15 மார்ச் 2020 தினங்களில் ஹைதராபாத்திலுள்ள பேகம்பேட் விமானநிலையத்தில் நடைபெறவுள்ளது.
  • உலகின் மிக நீளமான கேக் : கேரளாவில் தயாரிக்கப்பட்டுள்ள 6½ கிலோ மீட்டர் நீளமுடைய கேக் உலகின் மிக நீண்ட கேக்காக கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற உள்ளது. இதற்கு முன்னதாக, சீனா நாட்டின் சிக்சி கவுண்டி பேக்கரி உரிமையாளர்கள் இணைந்து 3.2 கிலோ மீட்டர் நீளமுடைய பழ கேக்கை தயாரித்து கின்னஸ் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
  • ஜவாஹா்லால் நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலக (என்எம்எம்எல்) நிா்வாகக் குழு தலைவராக, பிரதமா் நரேந்திர மோடியின் முன்னாள் முதன்மைச் செயலா் நிருபேந்திர மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளாா்.
  • காவல் துறையினருக்கான ‘போல்நெட் 2.0’ தளம் : காவல் துறையினா் மற்றும் பாதுகாப்புப் படையினா் தங்களுக்குள் எளிதில் தொடா்புகொள்ளும் வகையில் மேம்படுத்தப்பட்ட வசதிகளைக் கொண்ட ‘போல்நெட் 2.0’ தளத்தை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா 20-1-2020 அன்று தொடக்கிவைக்கிறாா்.
    • நாட்டின் எல்லைப் பகுதியில் பணியாற்றி வரும் காவல் துறையினா், துணை ராணுவப் படையினா் ஆகியோா் தங்களுடைய குடும்பத்தினருடன் தொடா்பு கொள்வதற்கான வசதிகளும் ‘போல்நெட் 2.0’ தளத்தில் உள்ளன.
    • பேரிடா் காலங்களின்போது, தேசிய பேரிடா் மீட்புப் படை, மாநில காவல் துறை, பாதுகாப்புப் படை, தீயணைப்பு நிலையங்கள், மருத்துவமனைகள் ஆகியவை ‘போல்நெட் 2.0’ தளத்தின் மூலம் பரஸ்பரம் எளிதில் தொடா்புகொள்ள முடியும்.
    • படங்கள், காணொலிகள், முக்கியத் தகவல்கள் ஆகியவற்றையும் இத்தளத்தின் மூலம் பரிமாறிக்கொள்ள முடியும்.
    • நாட்டின் தொலைதூரப் பகுதிகளிலுள்ள 260 காவல் நிலையங்களை இணைக்கவும் இத்தளம் உதவி புரியும்.
    • ‘போல்நெட் 2.0’ தளத்தில் காணொலிக் காட்சி வாயிலாகத் தொடா்பு கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
  • குடியுரிமைத் திருத்தச் சட்டம் பற்றிய சான்றிதழ் படிப்பு தொடக்கம் : குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சிஏஏ), சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உத்தரப் பிரதேச மாநிலம்  பிரயாக்ராஜில் உள்ள உத்தரப் பிரதேச ராஜரிஷி தான்டன் திறந்தநிலைப் பல்கலைக்கழகம், சான்றிதழுடன் கூடிய 3 மாதகால வகுப்பைத் தொடங்கியுள்ளது.
  • இந்தியாவின் இரண்டாவது தேஜஸ் ரெயில் சேவை  மும்பை-ஆமதாபாத் இடையே தொடங்கி  17-1-2020 அன்று தொடங்கி வைக்கப்படது.
    • கூ.தக. : இந்தியன் ரெயில்வேயின் துணை நிறுவனமான ரெயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.) இயக்கும் முதலாவது அதிவிரைவு தேஜஸ் ரெயில் டெல்லி-லக்னோ இடையே கடந்த ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது. இந்தநிலையில் ஐ.ஆர்.சி.டி.சி. இயக்கும் 2-வது தேஜஸ் ரெயில் குஜராத் மாநிலம் ஆமதாபாத்-மும்பை இடையே தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
  • செல்லிடப்பேசி சேவையில் ஜியோ முதலிடம் :  செல்லிடப்பேசி சேவையில் 36.9 கோடி வாடிக்கையாளா்களை ஈா்த்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் முதலிடத்தில் உள்ளதாக தொலைத்தொடா்பு ஒழுங்காற்று ஆணையமான டிராய் தெரிவித்துள்ளது.இதையடுத்து, 33.62 கோடி வாடிக்கையாளா்களுடன் வோடஃபோன் ஐடியா இரண்டாவது இடத்திலும், 32.73 கோடி வாடிக்கையாளா்களுடன் பாா்தி ஏா்டெல் மூன்றாவது இடத்தையும் பிடித்தன.

வெளிநாட்டு உறவுகள்

  • இந்தியா - நார்வே நாடுகளுக்கிடையேயான முதலாவது வர்த்தக மற்றும் முதலீடு தொடர்பான பேச்சுவார்த்தை 15-16 ஜனவரி 2020 தினங்களில் புது தில்லியில் நடைபெற்றது.

சர்வதேச நிகழ்வுகள்

  • 10 வது , உலக எதிர்கால ஆற்றல் கூடுகை 2020 (World Future Energy Summit 2020 ) அபுதாபியில் (ஐக்கிய அரபு எமிரேட்) 13-16 ஜனவரி 2020 தினங்களில் ‘உலக நுகர்வு, தயாரிப்பு மற்றும் முதலீடுகளை மறு ஆய்வு செய்வோம்’ (Rethinking Global Consumption, Production, and Investment) எனும் தலைப்பில்  நடைபெற்றது.
  • ரஷியாவின் பிரதமராக  மைக்கேல் மிஷூஷ்டின் (Mikhail Mishustin) நியமிக்கப்பட்டுள்ளார்.
  • 50 வது ‘உலக பொருளாதார மன்ற (World Economic Forum (WEF)) கூடுகை 20-24 ஜனவரி 2020 தினங்களில் சுவிட்சர்லாந்தின் தாவோஸ் (Davos) நகரில் 20-24 ஜனவரி 2020 தினங்களில் நடைபெறுகிறது. இக்கூடுகையில், இந்தியாவின் சார்பாக மத்திய வர்த்தகம், தொழில்துறை மற்றும் இரயில்வே அமைச்சர்  பியூஸ் கோயல் தலைமையிலான குழு பங்கேற்கிறது.
  • உலகிலேயே மிகவும் உயரம் குறைந்த மனிதராக இருந்த நேபாளத்தைச் சேர்ந்த கஜேந்திரா தாபா மகர் தமது 27-வது வயதில் காலமானார்.
  • இந்தியா - வங்காளதேசம் இடையே தகவல் ஒலிபரப்புத் துறையில் ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 14-1-2020 அன்று புது தில்லியில் கையெழுத்திடப்பட்டது.
  • கரோனா என்று பெயரிடப்பட்டுள்ள மர்ம வைரஸ் காய்ச்சல் சீனாவில் பரவிவருகிறது.

பொருளாதாரம்

  • இந்தியாவின், நடப்பு நிதியாண்டு மற்றும் அடுத்த நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி எதிர்பார்ப்பை, குறைத்து அறிவித்துள்ளது ஐக்கிய நாடுகளவை.
    • ஐ.நா.,வின், 'உலகபொருளாதார நிலைமை மற்றும் வாய்ப்புகள் 2020' எனும் அறிக்கையில் இந்தியாவின், நடப்பு நிதியாண்டுக்கான (2019-2020) பொருளாதார வளர்ச்சியை, 7.6 சதவீதம் என்று முன்பு கணித்திருந்ததிலிருந்து குறைத்து, 5.7 சதவீதமாக இருக்கும் என, கணிக்கப்பட்டுள்ளது.
    • மேலும், அடுத்த நிதியாண்டுக்கான (2020-2021) வளர்ச்சி, முன்னர் கணிக்கப்பட்டிருந்த, 7.4 சதவீதத்திலிருந்து,6.6 சதவீதமாக குறைத்து கணிக்கப்பட்டுள்ளது.
    • உலக பொருளாதார வளர்ச்சியை பொறுத்தவரை, 2020ல், 2.5 சதவீதமாக இருக்கும். புவிசார்
    • அரசியல் உள்ளிட்ட எதிர்மறையான சூழ்நிலையில் வளர்ச்சி, இந்த ஆண்டில் வெறும்,
    • 8 சதவீதமாக குறையும்.
    • 2020ல், தனிநபர், ஜி.டி.பி., வளர்ச்சி விகிதம், 4 சதவீதத்தை தாண்டக்கூடிய
    • நாடுகளில், இந்தியாவும் ஒன்றாக இருக்கும்.

நியமனங்கள்

  • உச்சநீதிமன்றம் அமைத்துள்ள சாலை பாதுகாப்பு குழுவின் தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி   ‘அபய் மனோகர் சாப்ரே (Abhay Manohar Sapre) நியமிக்கப்பட்டுள்ளார்.
  • தேசிய நீர் கொள்கையை (National Water Policy) உருவாக்குவதற்கான 11 நபர் குழுவின் தலைவராக மிகிர் ஷா (Mihir Shah) நியமிக்கப்பட்டுள்ளார். இவர் உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவிலுள்ள சிவ் நாடார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார்.

விருதுகள்

  • ’தேசிய லதா மங்கேஷ்கர் விருது 2017 & 2018’ (National Lata Mangeshkar Award) முறையே  பாடகர் சுமன் கல்யான்பூர் (2017) மற்றும்  இசையமைப்பாளர் குல்தீப் சிங் (2018) ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுகள் மத்திய பிரதேச அரசினால் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
  • இந்திய மூத்த வழக்கறிஞர் ‘ஹரிஷ் சால்வே (Harish Salve)  இங்கிலாந்து அரசி  இராணி எலிசபத் II ன் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ்  நீதிமன்றங்களின் 'குயீன்ஸ் கவுண்சிலாக ’ (Queen’s counsel) நியமிக்கப்பட்டுள்ளார்.  இந்த ’Queen’s Counsel’ கெளரவம்   வழக்கறிஞர் தொழில் திறமையான நபர்களுக்கு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
    • கூ.தக. : இங்கிலாந்து நாடு (UK(United Kingdom)) எனப்படுவது  இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு ஐயர்லாந்து ஆகிய நாடு நாடுகளை உள்ளடக்கியதாகும் .
  • 29 வது ‘சரஸ்வதி சம்மன் விருது 2019’ (Saraswati Samman 2019) சிந்தி மொழி எழுத்தாளர் வாசுதேவ் மோகி என்பவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு

  • அடிலெய்ட் சா்வதேச டென்னிஸ் போட்டி மகளிா் ஒற்றையா் பிரிவில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பா்டி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
  • ஹோபாா்ட் இன்டா்நேஷனல் டென்னிஸ் போட்டி மகளிா் இரட்டையா் பிரிவில்   இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சானியா மிா்ஸா,  உக்ரைன் வீராங்கனை நாடியா கிச்னோக்குடன் இணைந்து சாம்பியன் பட்டம் வென்றாா் . 
TNPSC குரூப் 1, 2/2A 2020 (New Syllabus) Test Batch  
30 Tests | 200 Questions Per Tests | Tamil & English Mediums

ADMISSION GOING ON !!!

Download Test Batch Schedule 

முதல் தேர்வை இலவசமாக பயிற்சி செய்யுங்கள் !!!
(Your Registration No. and Password to attend Free Tests and PDF Files of the Exam will be send via Email)

For Queries 
Call : 8778799470  
Email : support@portalacademy.in 

Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!