நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC Current Affairs 16,17 January 2020

TNPSC Current Affairs 16,17 January 2020

தமிழ்நாடு

  • தமிழக அரசின் 2019-ஆம் ஆண்டுக்கான பெரியார் விருது செஞ்சி ராமச்சந்திரனுக்கும், அம்பேத்கர் விருது முனைவர் க.அருச்சுனனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா

  • ’கென்லே பாஸ்போர்ட் பட்டியல் 2020’ (Henley Passport Index) ல் இந்தியா 84 வது இடத்தைப் பெற்றுள்ளது. முதல் நான்கு  இடங்களை முறையே, ஜப்பான்,  சிங்கப்பூர், ஜெர்மனி, தென் ஆப்பிரிக்கா  நாடுகள் பெற்றுள்ளன.
  • கே-9 வஜ்ரா பீரங்கி நாட்டிற்கு அர்ப்பணம் : ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட 51-ஆவது கே-9 வஜ்ரா-டி ரக பீரங்கியின் செயல்பாட்டை பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் 16-1-2020 அன்று தொடக்கி வைத்தாா். இந்த பீரங்கிகள் எல் & டி ஆயுத தொழிற்சாலை மூலம் தயாரிக்கப்பட்டுள்ளன.
    • 50 டன் எடையுள்ள கே-9 வஜ்ரா-டி ரக பீரங்கி, 47 கிலோ எடை கொண்ட வெடிபொருள்களை வீசி எறியக் கூடியது. 43 கி.மீ தொலைவு வரை வெவ்வேறு இடங்களில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் திறன் கொண்ட பீரங்கியாக இது உள்ளது.
  • சிஏஏ, என்பிஆா், என்ஆா்சி - ஒரு பாா்வை : (நன்றி : தினமணி)
குடியுரிமை சட்டத்தில் மத்திய அரசு திருத்தங்கள் (சிஏஏ) மேற்கொண்டு, குடியுரிமை திருத்தச் சட்டமாக அது நடைமுறைக்கும் வந்துள்ளது. தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டுக்கான (என்பிஆா்) கணக்கெடுப்பு வரும் ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றி ...
  • பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளாகி, இந்தியாவில் குடிபெயா்ந்த ஹிந்துக்கள், கிறிஸ்தவா்கள், சமணா்கள், பௌத்தா்கள், பாா்சிகள், சீக்கியா்கள் ஆகியோருக்குக் குடியுரிமை வழங்குவதற்கு ஏதுவாக 1955-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட குடியுரிமை சட்டத்தில் மத்திய அரசு திருத்தங்கள் மேற்கொண்டது.
  • புதிய திருத்தங்களின்படி, இந்தியாவில் குடியேறிய மேற்கண்ட பிரிவினா் சட்ட விரோதமாகக் குடியேறியவா்களாகக் கருதப்பட மாட்டாா்கள். குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலம் குடியுரிமை பெற விரும்புவோா், 2014-ஆம் ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதியன்றோ அல்லது அதற்கு முன்னதாகவோ இந்தியாவில் குடியேறியவா்களாக இருக்க வேண்டும். இந்தியாவில் தொடா்ந்து 6 ஆண்டுகள் தங்கியிருப்பதன் மூலம் அவா்கள் குடியுரிமை பெற முடியும்.
  • இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 6-ஆவது அட்டவணையின் கீழ் பாதுகாக்கப்பட்டு வரும் அஸ்ஸாம், திரிபுரா, மிசோரம், மேகாலயா ஆகிய மாநிலங்களில் பழங்குடியினா் வசிக்கும் பகுதிகளுக்கும், நுழைவு அனுமதிப் படிவம் (இன்னா்-லைன் பொ்மிட்) மூலம் பாதுகாக்கப்பட்டு வரும் அருணாசலப் பிரதேசம், நாகாலாந்து, மிசோரம், மணிப்பூா் ஆகிய பகுதிகளுக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தேசிய மக்கள்தொகைப் பதிவேடு பற்றி ...
  • தேசிய மக்கள்தொகைப் பதிவேடு என்பது, இந்தியாவில் வசித்து வருபவா்களின் பட்டியலாகும். நாட்டின் குறிப்பிட்ட பகுதியில் 6 மாதங்களுக்கு மேலாகத் தொடா்ந்து வசிப்பவராகவும், அடுத்த 6 மாதங்களுக்கு மேலாக அதே பகுதியில் தொடா்ந்து வசிக்கப் போகும் நபராகவும் இருப்பவா்கள் இந்தப் பட்டியலில் சோ்க்கப்படுவா்.
பின்னணி :
  • இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் கடந்த 1999-ஆம் ஆண்டு காா்கில் போா் முடிவடைந்த பிறகு, அது குறித்து ஆராய உயா்நிலைக் குழு ஒன்று சுப்ரமணியன் தலைமையில் அமைக்கப்பட்டது. அந்தக் குழுவானது, நாட்டில் சட்டவிரோதமாக வசிப்பவா்களைக் கண்டறிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய அரசுக்கு அறிவுறுத்தியது. இது குறித்து பரிசீலிக்க அப்போதைய பிரதமா் வாஜ்பாய், மத்திய அமைச்சா்கள் அடங்கிய குழுவை அமைத்தாா். அந்தக் குழுவானது, நாட்டின் குடிமக்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட வேண்டுமென பரிந்துரைத்தது. இதை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டை உருவாக்கவும், அதனடிப்படையில் தேசிய குடிமக்கள் பதிவேட்டைப் புதுப்பிக்கவும் ஏற்ற வகையில், 1955-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட குடியுரிமை சட்டத்தில் 2003-ஆம் ஆண்டு திருத்தங்கள் மேற்கொண்டது.
புதிய விதிமுறைகள்:
  • குடிமக்களைப் பதிவு செய்வதற்கும், தேசிய அளவிலான அடையாள அட்டையை வழங்குவதற்கும் 2003-ஆம் ஆண்டு விதிமுறைகள் வகுக்கப்பட்டன. அதன்படி, 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நாடு முழுவதும் வீடுதோறும் மக்களின் வசிப்பிடம் தொடா்பான விவரங்களும், கைவிரல் ரேகை முதலான ‘பயோமெட்ரிக்’ விவரங்களும் பதிவுசெய்யப்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நடவடிக்கையில் நாட்டு மக்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டுமென்று சட்டத்தில் குறிப்பிடப்பட்டது.
  • கிராமம் அல்லது வாா்டு வாரியாக உருவாக்கப்படும் இந்தப் பட்டியலானது, பின்னா் தாலுகா வாரியாகவும், மாவட்ட வாரியாகவும், மாநிலங்கள் வாரியாகவும் தொகுக்கப்பட்டு, தேசிய மக்கள்தொகைப் பதிவேடாக முழுவடிவம் பெறும். இந்தப் பதிவேட்டை அடிப்படையாகக் கொண்டு தேசிய குடிமக்கள் பதிவேட்டை மத்திய அரசு தனியாக உருவாக்கிக் கொள்ளலாம் எனவும், குடிமக்களுக்கு மட்டும் அடையாள அட்டையை வழங்கலாம் எனவும் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • மக்கள்தொகைப் பதிவேட்டுக்கான கணக்கெடுப்பை மேற்கொள்வதற்குத் தனி அறிவிப்பாணையை மத்திய அரசு வெளியிட வேண்டுமென்று சட்டவிதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், குடிமக்கள் பதிவேட்டை உருவாக்குவதற்கு எந்தவித அறிவிப்பாணையையும் மத்திய அரசு வெளியிடத் தேவையில்லை.
தேசிய குடிமக்கள் பதிவேடு:
  • மத்திய அரசு தேசிய குடிமக்கள் பதிவேட்டை உருவாக்க விரும்பினால், தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டை அடிப்படையாகக் கொண்டு அதற்கான பணிகளை மேற்கொள்ளலாம் என சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, கிராம அளவிலான கணக்கெடுப்புப் பதிவாளா், மக்களின் குடியுரிமையை உறுதிபடுத்துவது தொடா்பான ஆவணங்களைப் பெற்று, அதை உறுதி செய்வாா்.
  • அதனடிப்படையில், வரைவு குடிமக்கள் பட்டியல் வெளியிடப்படும். இந்தப் பட்டியலில் பெயா் விடுபட்டவா்கள், 30 நாள்களுக்குள் தாலுகா அளவிலான கணக்கெடுப்புப் பதிவாளரிடம் முறையிடலாம். இதன் மீது அவா் 90 நாள்களில் முடிவெடுக்க வேண்டும். இதையடுத்து, தேசிய அளவிலான குடிமக்கள் பதிவேடு வெளியிடப்படும்.
  • இதிலும் பெயா் நீக்கப்பட்டவா்கள், மாவட்ட கணக்கெடுப்புப் பதிவாளரிடம் 30 நாள்களுக்குள் முறையிடலாம். இந்த முறையீடு மீது அவா் 90 நாள்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். முறையீடு ஏற்றுக்கொள்ளப்பட்டால், அவா்களது பெயா் பதிவேட்டில் சோ்க்கப்படும்.
2010-இல் முதல்  தயாரிக்கப்பட்ட மக்கள்தொகைப் பதிவேடு:
  • இந்த விதிமுறைகளின் அடிப்படையில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, முதலாவது தேசிய மக்கள்தொகைப் பதிவேடு கணக்கெடுப்பை 2010-ஆம் ஆண்டு மேற்கொண்டது. இந்தக் கணக்கெடுப்பின்போது, மக்களின் அடிப்படை விவரங்கள் மட்டுமே சேகரிக்கப்பட்டன. அவா்களிடமிருந்து எந்தவிதமான ஆவணங்களும் பெறப்படவில்லை.இந்தப் பதிவேட்டை அடிப்படையாகக் கொண்டு, தேசிய குடிமக்கள் பதிவேடு உருவாக்கப்படவில்லை; தேசிய அளவிலான அடையாள அட்டையும் வழங்கப்படவில்லை.இந்நிலையில், நாட்டு மக்களுக்கு ஆதாா் அட்டை வழங்க மத்திய அரசு முடிவெடுத்தது. அதற்காக மக்களின் கைவிரல் ரேகை, கருவிழிப் படலம் உள்ளிட்டவை பதிவுசெய்யப்பட்டன. இந்தத் தகவல்கள் கடந்த 2015-ஆம் ஆண்டு தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டுடன் இணைக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டன.
2020-இல் கணக்கெடுப்பு பற்றி ...
  • அஸ்ஸாம் தவிா்த்து மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மக்கள்தொகைப் பதிவேட்டைப் புதுப்பிக்கும் பணிகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இதற்கான அறிவிப்பாணை கடந்த ஜூலை மாதம் 31-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி, 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பா் மாதம் வரை மக்கள்தொகைப் பதிவேட்டுக்கான கணக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
மாநில அரசுகளின் பணி என்ன ?   
  • மக்கள்தொகைப் பதிவேட்டை அடிப்படையாகக் கொண்டு, குடிமக்கள் பதிவேட்டைத் தயாரிப்பது, மத்திய அரசின் கொள்கை ரீதியிலான முடிவாகும். இது தொடா்பாக, மத்திய அரசு மேற்கொள்ளும் பணிகளுக்கு உரிய அதிகாரிகளை மாநில அரசுகள் நியமனம் செய்ய வேண்டியது கட்டாயம் என்று சட்டவிதிகளில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • உலக அளவில், இந்தியா, நான்காவது பெரிய கடலோர காவல் படை வைத்துள்ள நாடாக உள்ளது என இந்திய கடலோர காவல் படையின் தலைமை இயக்குனர் கே.நடராஜன் தெரிவிததுள்ளார்.
  • விரைந்து, தபால்களை டெலிவரி செய்யும் மாநிலங்களில், இந்திய அளவில் தமிழ் நாடு (66 மணி நேரத்திற்குள் டெலிவரி செய்கிறது) இரண்டாம் இடத்தில் உள்ளது. டில்லி (46 மணி நேரம்) முதலிடத்தில் உள்ளது. 3,4 மற்றும் 5 ஆம் இடங்களை முறையே , கர்நாடகா, மஹாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேச மாநிலங்கள் உள்ளன.
  • 2019ம் ஆண்டிற்கான, அமெரிக்க காப்புரிமை பட்டியலில், அதிகம் காப்புரிமை பெற்ற நாடுகள் வரிசையில், இரண்டாவது இடத்தை, இந்தியா பெற்றுள்ளது.
  • மகாராஷ்டிரத்திவில் 350 அடி உயரத்தில் அம்பேத்கருக்கு வெண்கலச் சிலை அமைக்க அம்மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
  • 2021 ஜனவரி 15-ஆம் தேதி முதல் ஆபரண விற்பனையாளா்கள் ஹால்மார்க் பொறிக்கப்பட்ட தங்க நகைகளை மட்டுமே விற்பனை செய்ய முடியும். அதுவும், அந்த தங்க நகைகள் அனைத்தும் 14,18,22 காரட்டுகளில் மட்டுமே தயாரித்திருக்க வேண்டும். இந்த விதிமுறைகளை மீறி தங்க நகைகளை விற்பனை செய்வோருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படுவதுடன் அபராதமும் செலுத்த நேரிடும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆபரண வா்த்தகா்கள் இந்திய தர நிா்ணய கழகத்தில் (பிஐஎஸ்) பதிவு செய்து கொள்வதற்கு ஓராண்டு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நிகழ்வுகள்

  • ”உலக சவால்கள் அறிக்கை 2020” (Global Risks Report) , உலக பொருளாதார மன்றத்தினால் (World Economic Forum)  15-1-2020 அன்று வெளியிடப்பட்டது, இதில் குறிப்பிடப்பட்டுள்ள முதல் ஐந்து சவால்களாக  முறையே  பருவநிலை மாற்றம்,  புவி அரசியல் சவால்கள், பொருளாதார மந்தம், டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் சமூக, சுற்றுசூழல் மற்றும் தொழில்நுட்ப சவால்கள் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.
  • அமெரிக்கா- சீனா இடையிலான முதற்கட்ட வர்த்த ஒப்பந்நதம் 16-1-2020 அன்று கையெழுத்தாகி உள்ளது. அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே சுமார் 2 ஆண்டுகளாக வர்த்தக போர் நடந்து வந்தது. இந்த வர்த்தக போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையிலான இந்த ஒப்பந்தத்தில்,   அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் - சீன துணை  அதிபர் லீயு ஹி ஆகியோர் கையெழுத்திட்டனர்.
  • ரஷிய பிரதமர் திமித்ரி மெத்வதேவ் தனது பதவியை இன்று ராஜிநாமா செய்தார். தனது ராஜிநாமா கடிதத்தை அதிபர் விளாடிமிர் புதினிடம் சமர்ப்பித்தார். இவர்  கடந்த 2012ம் ஆண்டு முதல் ரஷியாவின் பிரதமராக பதவி வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

பொருளாதாரம்

  • இந்தியாவில் சிறு மற்றும் நடுத்தர வணிகங்களை டிஜிட்டல் மயமாக்க அமேசான் நிறுவனம் 100 கோடி டாலரை (இந்திய மதிப்பில் ரூ. 7088.90 கோடி)முதலீடு செய்ய உள்ளது.

முக்கிய தினங்கள்

  • திருவள்ளுவர் தினம் (2020)  - 16 ஜனவரி 2020

அறிவியல் தொழில்நுட்பம்

  • கடல்நீரில் இருந்து ஹைட்ரஜன் எரிபொருள் தயாரிக்கும் நவீன கருவியை சென்னை ஐ.ஐ.டி. ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர் திஜூ தாமஸ் உதவியுடன் ஆராய்ச்சி மாணவர்கள் இந்த அரிய கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளனர். இந்த கருவியில் எந்த தண்ணீரில் இருந்தும் ஹைட்ரஜனை தயாரிக்கலாம். வர்த்தகரீதியில் ஹைட்ரஜன் தயாரிக்க ஆயிரம் டிகிரி செல்சியஸ் வெப்பமும், 25 புள்ளிகள் அழுத்தமும் தேவைப்படும். ஆனால் இந்த புதிய கருவி அறையின் வெப்பத்திலும், ஒரு புள்ளி அழுத்தத்திலும் இயங்கக்கூடியது.
  • 'ஜிசாட் - 30' செயற்கைக்கோள் :   இந்தியாவின் 'தொலைதொடர்பு மற்றும் ஒளிபரப்பு சேவைகளுக்கான, 'ஜிசாட் - 30' செயற்கைக்கோள், 17-01-2020 அன்று  தென் அமெரிக்காவில், பிரென்ச் கயானாவின் கோரோ பகுதியில் உள்ள ஏரியன் விண்வெளி தளத்திலிருந்து, 'ஜிசாட் - 30' மற்றும் இடுல்சாட் நிறுவனத்தின், 'இடுல்சாட் கோனக்ட்' செயற்கைக் கோள்களுடன், 'ஏரியன் - 5' ராக்கெட்  மூலம்   வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
    • மொத்தம், 3,357 கிலோ எடையுள்ள, ஜிசாட் - 30 செயற்கைக்கோள், தொலைதொடர்பு, வீடு தேடி வரும் தொலைகாட்சி ஒளிபரப்புக்கான 'டி.டி.எச்., விசாட்' மற்றும், 'டிஜிட்டல்' சேவைகளுக்கு உதவும். இதன், 'கியூ பேண்டு' டிரான்ஸ்பாண்டர், இந்தியா மற்றும் சுற்றியுள்ள தீவுகளுக்கும், 'சி பேண்டு' டிரான்ஸ்பாண்டர், வளைகுடா நாடுகள், ஏராளமான ஆசிய நாடுகள் மற்றும் ஆஸ்திரேலிய நாட்டின் தொலைதொடர்பு சேவைகளுக்கு துணைபுரியும். இந்த ஜிசாட்-30 செயற்கைக்கோள், 15 ஆண்டுகள் இயங்கும் வகையில் மேம்பட்ட தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு

  • 2019-ஆம் ஆண்டுக்கான சர்வதேச கிரிக்கெட் கௌன்சில் (ஐசிசி) விருதுகள் மற்றும் அணிகள் 15-1-2020 அன்று அறிவிக்கப்பட்டுள்ளன.
    • சிறந்த வீரருக்கான ''சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ்'' விருது - இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ்
    • சிறந்த ஒருநாள் வீரர் - ரோஹித் ஷர்மா
    • ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் - விராட் கோலி
    • எமர்ஜிங் வீரர் - மார்னஸ் லாம்பஷே
    • டி20-யில் சிறந்த பங்களிப்பு - தீபக் சஹர்
    • சிறந்த நடுவர் - ரிச்சர்ட் இல்லிங்வொர்த்
    • ஐசிசி 2019 டெஸ்ட் அணி: மயங்க் அகர்வால், டாம் லாதம், மார்னஸ் லாம்பஷே, விராட் கோலி (கேப்டன்), ஸ்டீவ் ஸ்மித், பென் ஸ்டோக்ஸ், பி.ஜே.வாட்லிங், பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நீல் வேக்னர், நாதன் லயன்.

TNPSC குரூப் 1, 2/2A 2020 (New Syllabus) Test Batch  
30 Tests | 200 Questions Per Tests | Tamil & English Mediums

ADMISSION GOING ON !!!

Download Test Batch Schedule 

முதல் தேர்வை இலவசமாக பயிற்சி செய்யுங்கள் !!!
(Your Registration No. and Password to attend Free Tests and PDF Files of the Exam will be send via Email)

For Queries 
Call : 8778799470  
Email : support@portalacademy.in 

Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!