நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC Current Affairs 25 January 2020

TNPSC Current Affairs 25 January 2020

தமிழ்நாடு

  • சிறைத்துறை பணியாளர்களின் சிறந்த சேவைக்காக தமிழகத்தில் 5 பேருக்கு குடியரசு தினவிழாவில் அறிவிக்கப்பட்டுள்ளது. வேலூர் சரக டி.ஐ.ஜி. கே.ஜெயபாரதி, திருப்பூர் மாவட்ட சிறை ஜெயிலர் யு.தமிழ்மாறன், பெண்கள் சிறப்பு சிறையின் துணை ஜெயிலர் எம்.பேபி, கொக்கிரகுளம் சிறப்பு சப்-ஜெயில் துணை ஜெயிலர் ஜே.கீதா, அருப்புக்கோட்டை சப்-ஜெயில் உதவி ஜெயிலர் எஸ்.கண்ணன் ஆகியோர் இந்த  சிறந்த சேவைக்கான விருது பெறுகிறார்கள்.
  • திருந்திய நெல் சாகுபடி முறையில், மாநில அளவில், அதிக நெல் மகசூல் பெறும் விவசாயிக்கு, வழங்கப்படும் முதல்வரின் சிறப்பு விருதுக்கு, ஈரோடு மாவட்டம்  சென்னிமலை அடுத்த பசுவப்பட்டி கிராமத்தை சேர்ந்த, யுவக்குமார் என்ற, விவசாயி தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.   

இந்தியா

  • ஆக்ஸ்போர்டு அகராதியின் புதிய 10 வது பதிபில்  ‘ஆதார்’  உள்ளிட்ட   26 புதிய இந்திய ஆங்கில வார்த்தைகள் இடம் பிடித்துள்ளன.  
  • எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் பல்கலைக்கழகத்தில் இருக்கை : தேசிய பெண் குழந்தைகள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பல்வேறு துறைகளில் புகழ் பெற்ற 10 பெண் பிரபலங்களின் பெயரால், பல்கலைக்கழகங்களில் இருக்கைகள் அமைக்க மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது.  இந்த பட்டியலில் தமிழகத்தில் இருந்து பாரத ரத்னா விருது பெற்ற பிரபல கர்நாடக இசைப்பாடகி மறைந்த எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பெயர் இடம் பெற்றுள்ளது. மேலும், ஹன்சா மேத்தா (கல்வி), கமலா சொஹோனீ (அறிவியல்), ஆனந்தி பாய் கோபால்ராவ் ஜோஷி (மருத்துவம்), தேவி அகில்யாபாய் ஹோல்கார் (நிர்வாகம்), மகாதேவி வர்மா (இலக்கியம்), ராணி கெய்டின்லியு (சுதந்திர போராட்டம்), அம்ரிதா தேவி (வன விலங்கு பாதுகாப்பு), லீலாவதி (கணிதம்), லால் டெட் (கவிதை) ஆகியோரின் பெயர்களாலும் பல்கலைக்கழகங்களில் இருக்கை உருவாக்கப்படும்.
  • 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மம்மியின் குரல் எப்படி இருக்கும் என்ற ஆராய்ச்சியில் ஆய்வாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். எகிப்தில் உள்ள தீப்ஸ் என்ற இடத்தில் இருந்த கனார்க் கோவிலில் பூசாரி நேஸியாமன் என்பவரின் மம்மியை ஆய்வாளர்கள் சோதனை செய்து, அவரின் குரல்வளையை 3டி பிரிண்டிங் முறையில் உருவாக்கினர். பின்னர் அதன் மூலம் மெல்லின வார்த்தைகளான ஆ மற்றும் ஏ என்ற உயிரெழுத்துக்களை உச்சரித்துப் பார்த்தனர். தற்போதைக்கு குரல் சோதனை வெற்றியடைந்திருந்தாலும் எதிர்காலத்தில் நேஸியாமனின் குரல் மற்றும் வார்த்தைகள் எப்படி இருந்திருக்கும் என்பது கண்டுபிடிக்க முடியும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
  • பொலிவுறு நகரத் திட்டத்தின் (ஸ்மாா்ட் திட்டம்) கீழ் கோவை, உக்கடத்தில் அமைக்கப்பட்டுள்ள சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையத்துக்கு மத்திய அரசின் விருது வழங்கப்பட்டது. உக்கடம் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையத்தில் தினமும் 4,500 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. 2019 பிப்ரவரி முதல் தற்போது வரை 15 லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
  • மகாராஷ்டிர மாநிலத்தில் வேளாண் வர்த்தகம் மற்றும் கிராமப்புற மறுமலர்ச்சி திட்டங்களுக்காக உலக வங்கியிடமிருந்து 210 மில்லியன் டாலர் கடனுதவி பெறுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்திய அரசு மற்றும் உலக வங்கியிடையே 24-1-2020 அன்று செய்துகொள்ளப்பட்டது.
  • ”விக்யான் சமாகம்” (‘Vigyan Samagam’) என்ற பெயரில் இந்தியாவின் முதல் உலக மெகா அறிவியல் கண்காட்சி 21-1-2020 முதல் 20-3-2020 வரையில் புது தில்லியில் நடைபெறுகிறது.
  • இந்தியாவின் முதல் இராணுவத்தில் சேவையாற்றிய விலங்குகளுக்கான போர் நினைவிடம்  உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் அமைக்கப்படவுள்ளது.
  • கேரள அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கு உகந்த சுற்றுலா திட்டம் ( Kerala Tourism’s Barrier Free Project)   ஐ.நா.வின் உலக சுற்றுலா நிறுவனத்தின் ( United Nations World Tourism Organization (UNWTO))  அணுகத்தக்க இலக்கு விருது 2019 (    Accessible Destination Awards 2019 ) ஐ வெற்றுள்ளது.

வெளிநாட்டு உறவுகள்

  • 'சாகர்மாதா சம்பாத்' : நேபாள தலைநகர் காத்மாண்டுவில், 'சாகர்மாதா சம்பாத்' என்ற பெயரில் காலநிலை மாற்றம் தொடர்பான கலந்துரையாடல் நிகழ்ச்சி   2-4 ஏப்ரல் 2020 தினங்களில்  நடைபெற உள்ளது.   காலநிலை மாற்றம், மலைகள் மற்றும் மனிதகுலத்தின் எதிர்காலம் என்ற தலைப்பில் நடைபெறும், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க, பிரதமர் நரேந்திர மோடி ,  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உட்பட, 'சார்க்' நாடுகளின் தலைவர்களும்  அழைக்கப்பட்டுள்ளனர். காலநிலை மாற்றங்கள், அதனால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக, 'சார்க்' நாடுகளிடையே ஒருமித்த கருத்தை உருவாக்குவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும்.
  • இந்தியத் தேர்தல் ஆணையம் மற்றும், துனிஷியாவின் தேர்தல்களுக்கான சுயேச்சை உயர் ஆணையம், பப்புவா நியூகினியா தேர்தல் ஆணையம் ஆகியவற்றுடன் தேர்தல் மேலாண்மை மற்றும் நிர்வாகத் துறையில் ஒத்துழைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள பிரதமர்  நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை  22-1-2020 அன்று ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்தியா – பிரேசில் இடையே குற்றவியல் விஷயங்களில், புலன் விசாரணை மற்றும் விசாரணை மேற்கொள்ள, பரஸ்பர சட்டஉதவி வழங்கும் வகையில், ஒத்துழைப்பிற்காக கையெழுத்தாகவுள்ள உடன்படிக்கைக்கு பிரதமர்  நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை  22-1-2020 அன்று ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்தியாவுக்கும், பிரேசிலுக்கும் இடையே எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுப் பிரிவில் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்காக கையெழுத்தாகவுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை 22-1-2020 அன்று ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்தியா-பிரேசில் இடையே மழலைப் பருவத் துறையில் இருதரப்பு ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை 22-1-2020 அன்று ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்தியா – பிரேசில் இடையே நிலவியல் மற்றும் கனிமவளத் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை 22-1-2020 அன்று ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவின் கனிமவள அமைச்சகத்தின் இந்திய புவியியல் ஆய்வு நிறுவனத்திற்கும், பிரேசில் நாட்டின் கனிமவளம் மற்றும் எரிசக்தி அமைச்சகத்தின் பிரேசில் புவியியல் ஆய்வு நிறுவனத்திற்கும் இடையே நிலவியல் மற்றும் கனிமவளத் துறையில் ஒத்துழைப்புக்கான நிறுவன ரீதியிலான வழிமுறைகளை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வழங்கும்.
  • கானா நாட்டின் தேசிய எல்.பி.ஜி மேம்பாட்டு கொள்கையினை அமல்படுத்துவதற்கு, ஒத்துழைப்பு வழங்குவதற்காக இந்தியன் ஆயில் நிறுவனம் மற்றும் கானா நாட்டின் தேசிய பெட்ரோலிய ஆணையம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் 22-1-2020 அன்று செய்துகொள்ளப்பட்டது.
  • இந்தியாவுக்கும், பிரேசிலுக்கும் இடையே எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுப் பிரிவில் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்காக கையெழுத்தாகவுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை 22-1-2020 அன்று ஒப்புதல் அளித்துள்ளது.

சர்வதேச நிகழ்வுகள்

  • உலகின் மிகச்சிறிய தங்க நாணயத்தை (2.96 millimeter (0.12 inches)) சுவிட்சர்லாந்து நாடு அறிமுகப்படுத்தியுள்ளது.

முக்கிய தினங்கள்

  • தேசிய வாக்காளர் தினம் (National Voters Day) - ஜனவரி 25  (25 ஜனவரி 1950 ல் இந்திய தேர்தல் ஆணையம் உருவாக்கப்பட்ட தினத்தில் கொண்டாடப்படுகிறது. ) | மையக்கருத்து (2020) - வலிமையான மக்களாட்சிக்கு தேர்தல் பற்றிய அறிவு (Electoral Literacy for a Stronger Democracy)
  • தேசிய சுற்றுலா தினம் (National Tourism Day) - ஜனவரி 25
  • சர்வதேச கல்வி தினம் (International Day of Education) - ஜனவரி 24

அறிவியல் தொழில்நுட்பம்

  • ”வியோம் மித்ரா” ( ‘Vyom Mitra’ ) என்ற பெயரில் பெண் ரோபோவை இந்தியாவின் முதல் ஆளில்லா விண்வெளித் திட்டத்தின் மூலம்    டிசம்பர் 2020 ல்  விண்ணுக்கு  அனுப்ப இஸ்ரோ  திட்டமிட்டுள்ளது.
    • கூ.தக. : ”வியோம் மித்ரா” ( ‘Vyom Mitra’ ) என்பதற்கு   ‘வானில் ஒரு தோழன் /தோழி’  (a friend in Sky) என்று பொருளாகும்.
----------------------------------------------------------------
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!