TNPSC Current Affairs, Online Tests, Latest News

Post Top Ad

குரூப் II, IIA 2020 (New Syllabus) Test Batch

குரூப் 2 முதனிலைத் தேர்விற்கான பாடத்திட்டத்தை திட்டமிட்டு குறுகிய காலத்தில் படித்து முடித்து, பயிற்சி செய்வதற்காக மொத்தம் 30 தேர்வுகள் (ஒவ்வொரு தேர்விலும் 200 வினாக்கள்)

New Test Batch Admission Going On
Download Test Schedule / Join

TNPSC Current Affairs 29 January 2020

TNPSC Current Affairs 29 January 2020

தமிழ்நாடு

 • 2ஆவது உலகத் திருக்குறள் மாநாடு  21-23 பிப்ரவரி 2020 தினங்களில் இலங்கை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில்  சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், மதுரை காமராஜர் பல்கலைக்கழக தமிழியல் துறை, இதய நிறைவு தியான அமைப்பு ஆகியவை சார்பில் நடைபெறவுள்ளது.  இதைமுன்னிட்டு இலங்கையின் உரும்பிராய் மற்றும் காரைத்தீவு ஆகிய இரண்டு இடங்களில் திருவள்ளுவர் சிலை நிறுவப்படுகிறது. இதற்காக கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடியைச் சேர்ந்த சிற்பி பாலகிருஷ்ணன் இரண்டு சிலைகளை வடிவமைத்துள்ளார்.
 • தமிழகத்தில் அரியலூா் மற்றும் கள்ளக்குறிச்சி  மாவட்டங்களில்  புதிதாக இரண்டு அரசு மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க  மத்திய அரசின் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.   தமிழகத்தில் ,  கடந்த ஒரு ஆண்டு காலத்தில்  மொத்தம் 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு  அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 • டில்லியில் நடந்த, குடியரசு தின அணிவகுப்பில், கடலோர காவல் படைக்கு, தாராபுரத்தைச் சேர்ந்த பெண் அதிகாரி தேவிகா தலைமை வகித்து, தமிழகத்துக்கு பெருமை சேர்த்து உள்ளார்.
 • தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில் குடமுழுக்கு, ஆகம விதிகள்படி தமிழ், சமஸ்கிருதத்தில் நடத்தப்படும்' என தமிழக அறநிலைய அறிவித்துள்ளது.  மன்னர் ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில், 1003 மற்றும் 1010ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டது.   தஞ்சாவூர் பெரிய கோவிலில் இதற்கு முன்னர் 1980 மற்றும் 1997ல் பாரம்பரிய நடைமுறைப்படி குடமுழுக்கு நடந்தது. தற்போது  5-2-2020 ல்   குடமுழுக்கு நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியா

 • இந்தியாவின் முதல் நீருக்கடியிலான மெட்ரோ திட்டமான “கல்கத்தா மெட்ரோ (‘Kolkata metro’) திட்டம்  (ஹீக்ளி ஆற்றின் கீழ் வழித்தடம் அமைக்கப்படவுள்ளது)  மார்ச்  2022 ல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 • அஸ்ஸாம் மாநிலத்தின் ‘ஜல் சக்தி திட்டம் தொடர்பான காட்சிபடுத்துதல் (  tableaux )   2020 ஆம் ஆண்டின்  சிறந்த குடியரசுத் தின அணிவகுப்பு காட்சிப்படுத்தலாகத்  தேர்வு செய்யப்பட்டுள்ளது.
 • 2019 ஆம் ஆண்டின், 'ஆக்ஸ்போர்டு' ஹிந்தி வார்த்தையாக, (Oxford Hindi Word of the Year for 2019 ) 'சம்விதான்' (Samvidhaan) தேர்வு செய்யப்பட்டுள்ளது' என, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அச்சகம் அறிவித்துள்ளது.
 • மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்பு : டிஸ்கவரி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல சாகச நிகழ்ச்சி - மேன் வெர்சஸ் வைல்டு.  இந்த நிகழ்ச்சியை பியர் கிரில்ஸ் என்பவர் தொகுத்து வழங்குகிறார்.  மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்கவுள்ளார். கர்நாடகத்திலுள்ள பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தில்  இந்நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. ரஜினிக்குத் துணையாக அவருடைய இளைய மகள் செளந்தர்யாவும் சென்றுள்ளார்.
  • கூ.தக. : மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில் கடந்த 2016-ஆம் ஆண்டு அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா பங்குபெற்றார். பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2019 ஆம் ஆண்டில் பங்கேற்றார். உத்தரகண்டில் உள்ள ஜிம் கார்பெட் தேசிய பூங்காவில் பியர் கிரில்ஸும், பிரதமர் மோடியும் பங்கேற்ற நிகழ்ச்சியின் படப்பிடிப்பு நடைபெற்றது.  இந்தச் சிறப்பு நிகழ்ச்சி உலகம் முழுவதும் 180-க்கும் மேற்பட்ட நாடுகளில் டிஸ்கவரி தொலைக்காட்சியில் ஆகஸ்ட் 12-ஆம் தேதி ஒளிபரப்பானது.

சர்வதேச நிகழ்வுகள்

 • 13 வது சர்வதேச் குழந்தைகள் திரைப்பட விழா (International Children’s Film Festival ) வங்காளதேச தலைநகர்  டாக்காவில்  24-31 ஜனவரி 2020 தினங்களில் ’உலகிற்கு கீழே’ (‘Under The World’) எனும் தலைப்பில் நடைபெறுகிறது.
 • இங்கிலாந்து நாட்டிற்கான முதலாவது ஐரோப்பிய ஒன்றியத்தின்  தூதராக ஜோ வாலே டி அல்மெய்டா (Joao Vale de Almeida) நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து நாடு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து சமீபத்தில் விலகியதையொட்டி இந்த நியமனம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
 • இங்கிலாந்து நாடு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய (Brexit) நிகழ்வை நினைவு கூரும் வகையில் அந்நாட்டில்  50 பென்ஸ் மதிப்பிலான நாணயம் (50 pence coin) வெளியிடப்பட்டுள்ளது.
 • மியான்மரிலிருந்து அடைக்கலம் தேடி வந்துள்ள ரோஹிங்கயா அகதிகளின் குழந்தைகளுக்கு தங்கள் நாட்டு பாடத் திட்டத்தின் கீழ் கல்வி வழங்க வங்கதேச அரசு முடிவு செய்துள்ளது.
  • கூ.தக. : மியான்மரின் ராக்கைன் மாகாணத்தில் ரோஹிங்கயா சிறுபான்மையித்தவருக்கு எதிராக ராணுவம் கடந்த 2017-ஆம் ஆண்டு வன்முறையில் ஈடுபட்டது. அந்த வன்முறைக்கு அஞ்சி லட்சக்கணக்கான ரோஹிங்கயாக்கள் அண்டை நாடான வங்கதேசத்தில் தஞ்சமடைந்துள்ளனா்.

நியமனங்கள்

 • அமெரிக்காவுக்கான இந்திய தூதராக தரன்ஜித் சிங் சந்து நியமிக்கப்பட்டுள்ளாா்.

விளையாட்டு

 • முதல் தர அறிமுக போட்டியின் முதல் ஓவரில் 'ஹாட்ரிக்' விக்கெட் சாய்த்து மத்திய பிரதேச மாநில அணி வீரர் ரவி யாதவ் உலக சாதனை படைத்துள்ளார். தற்போது நடைபெற்று வரும்  ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.

புத்தகங்கள்

 • Relentless’ என்ற பெயரிலான  முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சிங்கா - வின்   சுயசரிதை நூல் வெளியிடப்பட்டுள்ளது.
TNPSC குரூப் 1, 2/2A 2020 (New Syllabus) Test Batch  
30 Tests | 200 Questions Per Tests | Tamil & English Mediums
ADMISSION GOING ON !!!
Download Test Batch Schedule 

முதல் தேர்வை இலவசமாக பயிற்சி செய்யுங்கள் !!!
(Your Registration No. and Password to attend Free Tests and PDF Files of the Exam will be send via Email)

For Queries 
Call : 8778799470  
Email : support@portalacademy.in 

No comments:

Post a comment

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Subscribe To Get All The Latest Updates!

email updates
Email:

Post Bottom ads