நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC Current Affairs 16, 17 February 2020

தமிழ்நாடு

  • 16 எண்கள் கொண்ட பழைய வாக்காளா் அட்டைக்குப் பதில் 10 எண்கள் கொண்ட புதிய வாக்காளா் அட்டைகள் வழங்கப்படவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
  • தமிழகத்தின் மகப்பேறு இறப்பு வீதம் (Maternal Mortality Ratio (MMR)) 2019 ஆம் ஆண்டில் 57 (ஒரு இலட்சம் பிறப்புகளில்) ஆக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  2015-2017 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை  63 ஆகவும்  2018 ஆம் ஆண்டில் 60 ஆகவும்  இருந்தது குறிப்பிடத்தக்கது.
  • மோட்டாா் வாகனச் சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தத்தின்படி பழைய வாகனங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தகுதிச் சான்று வாங்கினால் போதும் என்று தமிழக அரசின் போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.
  • சென்னையில் 2-வது விமான நிலையமாக அமைய உள்ள காஞ்சீபுரம் மாவட்டம் பரந்தூர் விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக அமையவுள்ளது.   காஞ்சீபுரம் மாவட்டம் பரந்தூரில் 4 ஆயிரத்து 500 ஏக்கர் நிலப்பரப்பில் 2-வது விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது.

இந்தியா

  • தில்லி முதல்வராக மூன்றாவது முறையாக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரான அரவிந்த் கேஜரிவால் 16-2-2020 அன்று பதவியேற்றார்.
  • தேசிய கனிம உணவுத் திருவிழா (National Organic Food festival ) 21-23 பிப்ரவரி 2020 தினங்களில் புது தில்லியில் நடைபெற்றது.
  • 2019 ஆம் ஆண்டில் , உலகளவில் இராணுவத்திற்காக அதிகம் செலவிட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா  5 வது இடத்தைப் (60.5 பில்லியன் அமெரிக்க டாலர்)  பெற்றுள்ளது.   International Institute for Strategic Studies (IISS) என்ற அமைப்பு வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் முதல் நான்கு இடங்களை முறையே  அமெரிக்க்கா, சீனா, சவுதி அரேபியா மற்றும் ரஷியா நாடுகள் பெற்றுள்ளன.
  • இந்தியாவின் இரண்டாவது பெரிய பணக்காரராக டிமார்ட்  சூப்பர் மார்க்கெட் நிறுவனத்தின்  தலைவர் ராதாகிஷன் தமானி (Radhakishan Damani)  உருவாகியுள்ளார்.  முதலிடத்தில்  முகேஷ் அம்பானி உள்ளது குறிப்பிடத்தக்கது.
  • ”புலம்பெயர்ந்த உயிரினங்கள் தொடர்பான ஐ.நா. மாநாட்டிற்கான கட்சிகளின் 13 வது மாநாடு” Conference of Parties to the Convention on Migratory Species (CMS COP 13)  17 பிப்ரவரி 2020 ல்  குஜராத் மாநிலத்திலுள்ள காந்திநகரில் ”புலம்பெயர்ந்த உயரினங்கள் உலகை இணைக்கின்றன - நாம் அவற்றை வரவேற்போம்’ Migratory Species connect the planet and together we welcome them home) எனும் மையக்கருத்துடன் நடைபெறுகிறது.
  • ”உயிரி - ஆசியா கூடுகை 2020’ (Bio-Asia Summit 2020) 17-19 பிப்ரவரி 2020 தினங்களில் ஹைதராபாத்தில் நடைபெறுகிறது.
    • கூ.தக. : இந்தியாவில் , ‘தேசிய உயிரி மருந்துகள் திட்டம்’ (National Biopharma mission) 2017 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச நிகழ்வுகள்

  • ஃபேஷ்புக் (Facebook)  ல் அதிகம் பேர் தொடரும் நபர்களின் பட்டியலில், அமெரிக்க அதிபர் டிரம்ப் முதல் இடத்திலும், பிரதமர் மோடி  2-வது இடத்திலும் உள்ளனர்.
  • சீனா மற்றும் வாடிகனின் வெளியுறவுத் துறை அமைச்சா்கள் முதல் முறையாக ஜொ்மனியின் மியூனிக் நகரில் 14-2-2020 அன்று சந்தித்துப் பேச்சுவாா்தை நடத்தினா்.

பொருளாதாரம்

  • இந்திய ரிசர்வ் வங்கியின் நிதியாண்டை (Financial year)  தற்போதுள்ள ஜூலை-ஜூன் என்பதிலிருந்து மாற்றம் செய்து அரசு கடைபிடித்து வரும், ஏப்ரல்-மார்ச் நிதியாண்டுடன் (Fiscal Year) இணைக்க ரிசர்வ் வங்கி இயக்குநர் குழு பரிந்துரை செய்துள்ளது.  தற்போது ரிசர்வ் வங்கியின் நிதியாண்டு  ஜீலை மற்றும் ஜீன் மாதங்களுக்கிடையிலும் மத்திய அரசின் நிதியாண்டு   ஏப்ரல் மற்றும் மார்ச் மாதஙக்ளுக்கிடையிலும்  உள்ளது குறிப்பிடத்தக்கது.
    • கூ.தக. : இது மாதிரி ஒரே நிதியாண்டாக மாற்றம் செய்வதற்கு விமல் ஜலான்  (Bimal Jalan) தலைமையிலான வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளது .

 விளையாட்டு

  • பிலிப்பின்ஸ் தலைநகா் மணிலாவில் நடைபெற்ற ஆசிய அணிகள் பாட்மிண்டன் போட்டி ஆடவா் பிரிவில் இந்திய அணி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது.
  • தேசிய சீனியா் ஸ்குவாஷ் போட்டியில் தமிழகத்தின் ஜோஷ்னா சின்னப்பா, சௌரவ் கோஷல் ஆகியோா் மீண்டும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினா்.

உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!